உரிமை மீறல்கள், சித்திரவதைக் குற்றங்கள் என்பவற்றுக்கான சர்வதேச சட்டவரம்பின் நியாயாதிக்கத்தில் நிலவும் சிக்கல்கள் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
74 நிமிட வாசிப்பு

உரிமை மீறல்கள், சித்திரவதைக் குற்றங்கள் என்பவற்றுக்கான சர்வதேச சட்டவரம்பின் நியாயாதிக்கத்தில் நிலவும் சிக்கல்கள் – பகுதி 2

April 27, 2026 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

ஆங்கில மூலம்: நீதியரசர் கலாநிதி சந்திரதாச நாணயக்கார


“இந்த நாட்டிலும் கூட நீதித்துறையானது, வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைகள் தொடர்பாக, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, சந்தர்ப்பம் தேவைப்படும் போதெல்லாம், முறையான சிவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஒரு துடிப்பானதும் வலுவானதுமான தனது அணுகுமுறையை வெளிப்படுத்த முடியும்.” என்ற, கடந்த இதழில் வெளியான இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளின் தொடர்ச்சியாக வாசகர்கள் இந்தப் பகுதி 2 இனைத் தொடர்ந்து வாசிக்கலாம்.

ஆயினும், பொதுவாக இது, குடிவரவு தொடர்பானதும், பல்வேறு பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பானதுமான நடவடிக்கைகளை மையமாகக் கொண்டிருந்த போதும், எளிதில் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு கொள்கையாகவே இருக்கிறது என்பது தெளிவாகிறது. ஏனெனில், முக்கியமான தமது அரச பணிகளைப் பாதுகாப்பதை விடவும், இது வெளிநாட்டு அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்காக எளிதில் கையாளப்படக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. இருந்தபோதும் கூட, வெளிநாடுகளின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரான குற்றங்களைக் கையாள்வதற்குப் போதுமான உள்நாட்டுச் சட்டங்கள் எதுவும் இல்லாத நிலை காரணமாகத் தான் இது ஓரளவில் நடைமுறையில் இருந்து வருகிறது1.

நாஜிகளின் ஆதரவுப் பிரசாரகரான ‘லோர்ட் ஹா-ஹா’ சம்பந்தப்பட்ட, ‘ஜாய்ஸ் எதிர் அரசதரப்பு பிரதான வழக்குத் தொடுநர் (Director of Public Prosecutions)’2 என்ற வழக்கில் இது பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அவப்புகழ் பெற்ற நாஜி ஆதரவுப் பிரசாரகரான ‘லோர்ட் ஹா-ஹா’ சம்பந்தப்பட்ட ஜாய்ஸ் என்பவர் அமெரிக்காவில் பிறந்தவர். ஆனால் தான் 1933இல் அயர்லாந்தில் பிறந்ததாகக் கூறி மோசடி செய்து, அவர் ஒரு பிரிட்டிஷ் கடவுச்சீட்டைப் பெற்றிருந்தார். 1939இல், அவர் பிரிட்டனை விட்டு வெளியேறி, ஜேர்மன் வானொலியில் பணியாற்றத் தொடங்கினார். அடுத்த ஆண்டு, அவர் ஜேர்மன் குடியுரிமையைப் பெற்றதாகக் கூறினார். போருக்குப் பிறகு, தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் அவரை விசாரிப்பதற்கு பிரிட்டிஷ் நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு உள்ளதா என்பது தொடர்பாகவே இந்த வழக்கு அமைந்தது. இந்த வழக்கில் அதிகார வரம்பு உள்ளது என்று பிரபுக்கள் சபை தீர்ப்பளித்தது. ஜாய்ஸ், தன்னை ஒரு பிரிட்டிஷ் குடிமகனாகக் காட்டிக்கொண்டு, ஒரு பிரிட்டிஷ் கடவுச்சீட்டின் பாதுகாப்பையும் (மோசடியாக இருந்தாலும்) பெற்றுக்கொண்டார். அதன்படி, அவர் பிரிட்டிஷ் முடியாட்சிக்கு விசுவாசமாக இருக்கக் கடமைப்பட்டவராகவும், அந்தக் கடமையை மீறியதற்காகப் பொறுப்பேற்க வேண்டியவராகவும் கருதப்பட்டார். அந்தத் தேசத்துரோகம் ஐக்கிய இராச்சியத்தின் எல்லைக்கு வெளியேதான் நிகழ்ந்தது என்பது, கணக்கெடுக்கப்படக் கூடிய ஒரு விடயமாக இருக்கவில்லை. ஏனெனில் அரசுகள் தங்கள் எல்லைக்கு வெளியே தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் தேசத்துரோகக் குற்றத்தைப் புறக்கணிக்க வேண்டிய (சட்ட ரீதியான) கட்டாயத்தில் இல்லை. ஜாய்ஸ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, தனது செயல்களுக்கான தண்டனையை அனுபவித்தார்3. பலதரப்பட்ட அதிகார வரம்புகளுக்கு வழிவகுக்கும் உடன்படிக்கைகளில், குறிப்பிட்ட சில குற்றங்கள் தொடர்பாக இந்தப் பாதுகாப்புக் கோட்பாடு அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது4.

உலகளாவிய கோட்பாடு5 

இந்தக் கோட்பாட்டின் கீழ், ஒவ்வொரு அரசுக்கும் குறிப்பிட்ட குற்றங்களை விசாரிக்கும் அதிகார வரம்பு உள்ளது. இதற்கான அடிப்படை என்னவென்றால், குறிப்பாக சம்பந்தப்பட்ட குற்றங்கள் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினதும் ஆட்சேபனைக்குரியவையாகக் கருதப்படுகின்றன என்பதுதான். உலகளாவிய அதிகார வரம்பின் கீழ், தெளிவாகத் தெரியும் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று கடற்கொள்ளை; மற்றது போர்க்குற்றம். இருப்பினும், சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம், ஒப்பந்தத் தரப்பினரின் அதிகார வரம்பிற்குள் உட்படுத்தப்படக்கூடிய குற்றங்கள் மற்றும் உலகளாவிய அதிகார வரம்பு என்ற கருத்துடன் நெருங்கிய தொடர்புடைய, ஒரு தனித்துவமான வகையை உருவாக்குகின்ற பிற குற்றங்கள் ஆகிய இரண்டு வகைக் குற்றங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்தே வருகின்றன.

போர்க்குற்றங்களும், சமாதானத்துக்கு எதிரான குற்றங்களும், மனிதகுலத்திற்கு எதிரான பிற குற்றங்களும்

போர்க்குற்றங்கள் இப்போது பெரும்பாலான அதிகாரிகளால் உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், நிச்சயமாக இதில் சம்பந்தப்பட்ட சில சிக்கல்கள் மிகவும் உணர்திறன் வாய்ந்தவையும், அதிகளவில் அரசியற் தன்மை6 கொண்டவையுமாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான போர்க்குற்றத் தீர்ப்புகளின் சட்டபூர்வத்தன்மை, அவற்றின் கோட்பாடுகள் என்பவை குறித்துப் பெரிய அளவிலான சந்தேகங்கள் எதுவும் இல்லை என்றாலும், வியட்நாம்7 போருடன் தொடர்புடைய அமெரிக்கப் பணியாளர்கள் மற்றும் 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் போரில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது.

1945ஆம் ஆண்டின் சர்வதேச இராணுவத் தீர்ப்பாயத்தின் சாசனத்தின் 6ஆவது பிரிவு, அமைதிக்கு எதிரான குற்றங்கள், போரின் சட்டம் மற்றும் மரபுகளை மீறுதல், மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை ஒரு தீர்ப்பாயத்தின் நீதி அதிகார வரம்பிற்குட்பட்ட குற்றங்களாகவும், அவற்றுக்குத் தனிப்பட்ட ரீதியிலான பொறுப்பு8 ஏற்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டது. இந்தப் பிரிவு இப்போது சர்வதேசச் சட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படலாம். 1946ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தில், நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் சாசனம் மற்றும் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு9 ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசச் சட்டக் கோட்பாடுகள் வெளிப்படையாக உறுதிப்படுத்தப்பட்டன. 1968இல் பொதுச் சபை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சட்டப்பூர்வ வரம்புகள் பொருந்தாது என்பது குறித்த ஓர் உடன்படிக்கையை10 ஏற்றுக்கொண்டது. இது, போர்க்குற்றங்கள் சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஒரு தனித்துவமான வகையைச் சேர்ந்தவை என்றும், அவை உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்றும் இருந்த பொதுவான நம்பிக்கையை வலுப்படுத்தியது. அதே நேரத்தில், 1949ஆம் ஆண்டின் நான்கு ஜெனீவா செஞ்சிலுவைச் சங்க உடன்படிக்கைகளும்11 கடுமையான மீறல்களுக்கு உலகளாவிய அதிகார வரம்புகளைக் கொண்ட விதிகளைக் கொண்டிருந்தன. அத்தகைய கடுமையான மீறல்களில் வேண்டுமென்றே கொல்லுதல், சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல், பாதுகாக்கப்பட்ட நபர்களை சட்டவிரோதமாக நாடு கடத்துதல் மற்றும் குதிரை வண்டிகளைக் கைப்பற்றுதல் ஆகியவை அடங்கும். 1977ஆம் ஆண்டின் நெறிமுறை12 I இல், 1949ஆம் ஆண்டு உடன்படிக்கைகளின் இந்தப் பட்டியல், உதாரணமாக, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவற்றை உள்ளடக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டது.

இந்த உலகளாவிய கொள்கை, 1961இல் ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் மற்றும் இஸ்ரேலின் உச்ச நீதிமன்றத்தின் முன் நடந்த ஐக்மன் (Eichmann Case)13 வழக்கில் ஓரளவிற்குப் பயன்படுத்தப்பட்டது. ஐக்மன் மீது 1951ஆம் ஆண்டின் இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்கள், யூத மக்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இத்தகைய குற்றங்கள் தொடர்பாக நாடுகளின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாட்டினதும் சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய அமைப்புகளும் அவற்றின் குற்றத் தடை உத்தரவுகளைச் செயற்படுத்தி, குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற சர்வதேசச் சட்டம் உண்மையில் அவசியமாகிறது என மாவட்ட நீதிமன்றம் அறிவித்தது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு நிறுவப்படுவதற்கு முன்னரே குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தன என்ற உண்மை, சர்வதேசச் சட்டத்தின் கீழ் உள்ள உலகளாவிய அதிகார வரம்பின்படி, அதன் அதிகாரங்களைச் சரியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை. இஸ்ரேலின் உள்நாட்டுச் சட்டம், சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள குற்றங்களை மட்டுமே வெறுமனே பிரதிபலித்தது.

அமைதிக்கு எதிரான குற்றங்கள் என்பவை, ஒரு நாட்டினது அதிகாரிகளால் செய்யப்படும் குற்றச் செயல்களையும் தம்முள் உள்ளடக்கியிருக்கின்றன என்பதை நியூரம்பெர்க் (Nuremberg Practice) நடைமுறை நிரூபிக்கிறது. கோட்பாட்டளவில் இது சர்ச்சைக்குரிய ஒன்றல்ல என்றபோதும், நடைமுறை சார்ந்து இந்தக் கட்டமைப்புக்குள் உலகளாவிய நீதிக்கான எல்லைகள் தொடர்பான கடுமையான சிக்கல்கள் எழுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, ‘சர்வதேச பயங்கரவாதத்திற்கான ஆதரவு’ என்பதையும் (இக் குற்றங்களுக்குள்) உள்ளடக்கும் வகையில் இந்தப் பிரிவை விரிவுபடுத்த முடியுமா என்பது கேள்விக்குரியது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் எல்லாம், இனப்படுகொலை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் என்பவற்றை தெளிவாக உள்ளடக்குகின்றன என்பது உண்மைதான் என்றபோதும், ஒரு சர்வதேச ஆயுதமேந்திய யுத்தத்தின் சூழலுக்கு அப்பாற்பட்டும் கூட—நேரடியான போர்க்குற்றங்களிலிருந்து அவை வேறுபடுகின்றன என்றபோதும்—இவை (‘சர்வதேச பயங்கரவாதத்திற்கான ஆதரவு’) பொருந்தும் என்பதால், அவையும் அடிப்படையில் அதே சாராம்சமான குற்றங்களை உள்ளடக்குகின்றன என்றே கொள்ளவேண்டும்14.

முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான15 ஒரு சர்வதேச தீர்ப்பாயத்தை16 (International Tribunal) நிறுவுவது குறித்த ஐ.நா. பொதுச் செயலாளரின் அறிக்கை, (தீர்ப்பாயத்தின் சட்ட விதியாக மாறிய 5ஆவது பிரிவின் விளக்கவுரையில்) மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் எந்தவொரு குடிமக்கள் தொகையையும் குறிவைக்கின்றன என்றும், அவை ஓர் ஆயுத மோதலில், சர்வதேச அல்லது உள்நாட்டளவில் செய்யப்பட்டாலும் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும், அவை ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ என்பது தேசிய, அரசியல், இன, அல்லது மத அடிப்படையில் எந்தவொரு குடிமக்கள் தொகையினருக்கும் எதிரான, பரவலான அல்லது திட்டமிட்ட தாக்குதலின் ஒரு பகுதியாகச் செய்யப்படுகின்ற, வேண்டுமென்றே கொல்லுதல், சித்திரவதை அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற மிகவும் கடுமையான மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்தல் என்பவற்றைக் குறிக்கின்றன17 என்றும் குறிப்பிட்டது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான 1998 ரோம் சட்டத்தின்படி, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு போன்ற ‘சர்வதேச சமூகத்திற்கு ஒட்டுமொத்தமாகக் கவலையளிக்கின்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கு’18 மட்டுமே இந்த அதிகார வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் ஒரு குற்றத்தைச் செய்யும் நபர், சட்டத்தின்படி, ‘தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார் என்பதுடன் தண்டனைக்கு உட்படுவார்’19 என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்ட ஆணையம் 1996இல்20 மனிதகுலத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு எதிரான குற்றங்களுக்கான வரைவு சட்டத் தொகுப்பை ஏற்றுக்கொண்டது. அதன் பிரிவு 8 இன்படி, ஒவ்வொரு உறுப்பு நாடும் அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் மீது தனது அதிகார வரம்பை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், பிரிவு 9 இன்படி, மனிதகுலத்தின் அமைதி, பாதுகாப்பு என்பவற்றுக்கு எதிரான குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படும் ஒரு தனிநபர் எந்த நாட்டின் எந்தப் பிரதேசத்தில் இருந்தாலும், அந்த நாடு அந்த நபரை ஒப்படைக்க வேண்டும், அல்லது அவர் மீது வழக்குத் தொடர வேண்டும். இந்தச் சரத்துக்கான விளக்கவுரை, உறுப்பு நாடுகளின் தேசிய நீதிமன்றங்கள் ‘சாத்தியமான மிக விரிவான அதிகார வரம்பைச்’ செயற்படுத்த உரிமை பெற்றிருக்கும் என்று அறிவிக்கிறது21.

தனிப்பட்ட பொறுப்பைக் கொண்ட, மனிதகுலத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு எதிரான குற்றங்கள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியுள்ளன: ஆக்கிரமிப்பு (சரத்து 16)22, இனப்படுகொலை (சரத்து 17), மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் (சரத்து 18), ஐ.நா. மற்றும் அதனுடன் தொடர்புடைய பணியாளர்களுக்கு எதிரான குற்றங்கள் (சரத்து 19), மற்றும் போர்க்குற்றங்கள் (சரத்து 20)23.

ஒரு குறிப்பிட்ட செயற்பாடு என்பது சர்வதேசக் குற்றமாகக் கருதப்படலாம் என்பது மட்டுமே ஓர் உலகளாவிய அதிகார வரம்பை நிறுவி விடுவதில்லை. அத்துடன், அத்தகைய அதிகார வரம்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் வகையில், அரசுகளின் நடைமுறையானது போர்க்குற்றங்கள், அமைதிக்கு எதிரான குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றைத் தாண்டிச் சென்றதாகத் தெரியவில்லை. குறிப்பாக, 1991ஆம் ஆண்டு வரைவில் குறிப்பிடப்பட்டிருந்த இன ஒதுக்கல், கூலிப்படையினராகச் செயற்படல், மற்றும் சுற்றுச்சூழல் குற்றங்கள் போன்ற குறிப்புகள், 1996இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவுச் சட்டத்தில் தவிர்க்கப்பட்டிருப்பது, சட்டப்படி தவிர்க்கப்பட்டதாகவே (De lege ferenda) கருதப்பட வேண்டும்.

அதிகார வரம்பை வழங்கும் உடன்படிக்கைகள்

கடற்கொள்ளையர்கள், போர்க்குற்றவாளிகள் போன்றோரைக் கைது செய்து விசாரிப்பதற்கென ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய சட்ட அதிகார வரம்புகளை மீறுதல், நீருக்குக் கீழான மின்தொடர்பு, தொலைத்தொடர்பு போன்றவற்றுக்கான வலையமைப்புகளை (Cable Network) அழிப்பது முதல் போதைப்பொருள் கடத்தல், அடிமைகளைப்24 பிடித்தல் வரையிலான பல்வேறு நடவடிக்கைகளை சர்வதேச ரீதியாக இல்லாதொழிப்பதற்கு வசதி செய்யும் பல உடன்படிக்கைகள் உள்ளன. இந்த உடன்படிக்கைகள் அரசுகள் தமது அதிகார வரம்பைப் பயன்படுத்துவதற்கான வழிவகைகளைச் செய்கின்றன. ஆனால் இவையெல்லாமே உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று சொல்ல முடியாது.

ஆயினும், சில உடன்படிக்கைகள், பரந்த அளவிலான உறுப்பு நாடுகளின் அரசுகளால் பல்வேறு அடிப்படைகளில், அவற்றின் அதிகார வரம்பை முடிந்தவரை பயன்படுத்துவதற்கு வழிவகை செய்வதன் மூலம், ஏறக்குறைய அது ஓர் ‘உலகளாவிய ரீதியான நீதி அதிகார வரம்பு’ (Universal Jurisdiction) என அழைக்கப்படக்கூடிய ‘அதிகார நிலை’ ஒன்றை நிறுவுகின்றன25. முடிந்தவரை கட்சிகளுடன், உறுப்பு நாடுகள் உள்நாட்டுச் சட்டத்தில் அத்தகைய அதிகார வரம்பை நிறுவுவதற்கான கடப்பாடும் இணைக்கப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட இந்த எல்லையானது ‘கட்டாய சட்ட விதி’26 (Jus cogens) ஆக அமையும். சில சமயங்களில், இந்தக் ‘கட்டாய சட்ட விதி’ என்ற நெறிமுறை இருக்கும் இடங்களில், குறிப்பாக குற்றம் மிகவும் கடுமையானதாகக் கருதப்படும் இடங்களில், ஓர் உலகளாவிய நீதி அதிகார வரம்பு உருவாக்கப்படலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது: அதாவது, அத்தகைய சூழ்நிலைகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, உள்நாட்டுச் சட்ட அமைப்புகளிலும் அது செல்லுபடியாகும் வகையிலான அதிகார வரம்பு நிறுவப்பட்டு, அதைச் செயற்படுத்த முடியும் என்பதை சர்வதேச சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்பதும், அதுதான் மிகவும் சரியான அணுகுமுறை என்பதும் ஆகும்.

அத்தகைய சூழ்நிலைகளில், குற்றம் சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்ட நாட்டில் இருக்க வேண்டும் என்பதும் அடங்குகிறது. அத்துடன் இந்த வழியில், இது உலகளாவிய அதிகார வரம்பிலிருந்து வேறுபடுத்தப்படவும் கூடும். அத்தகைய சூழ்நிலைகளில் உள்ள அதிகார வரம்பை, உண்மையாக உலகளாவியது என்று விவரிக்க முடியாது; மாறாக அது ஒரு பகுதி அளவிலான உலகளாவிய (Universal Jurisdiction) ஒன்றாகவே விவரிக்கப்படுகிறது.

கொங்கோ எதிர் பெல்ஜியம் (Congo Vs Belgium) வழக்கில் நீதிபதிகள் ஹிக்கிங்ஸ், கூய்ஜ்மான்ஸ், பியூர்ஜெந்தால் (Higgins, Kooijmans and Buergenthal) ஆகியோர் தங்களால் கூட்டாக வழங்கப்பட்ட தனிப்பட்ட தீர்ப்பில், இந்தச் சூழ்நிலையை உண்மையான உலகளாவிய அதிகார வரம்பாகக் குறிப்பிடாமல்27, ‘நபர்கள் மீதான கட்டாயப் பிராந்திய அதிகார வரம்பு’ அல்லது ‘பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளுக்காக, சம்பந்தப்பட்டவர்கள் மீது பிராந்தியத்தின் அதிகார வரம்பை நிறுவுவதற்கான அதிகார வரம்பு’ என்று குறிப்பிட்டனர்.

பெரும்பாலான உள்நாட்டுச் சட்ட அமைப்புகள் இந்த அணுகுமுறையைப் பின்பற்றி வந்தாலும், ஒன்று அல்லது இரண்டு நாடுகள் சில குற்றங்களை—முக்கியமாக போர்க்குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை—விசாரிக்க உள்நாட்டு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளன. வெளிநாடுகளில் நிகழ்த்தப்படும் குற்றங்களைப் பொறுத்தவரை, குற்றவாளிகளோ அல்லது பாதிக்கப்பட்டவர்களோ அந்த நாட்டவராக இல்லாத இடங்களில் மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவர் சட்ட அதிகார வரம்பிற்குள் இல்லாத இடங்களிலும் கூட இது பொருந்தும்28.

இந்த உலகளாவிய மாதிரியை ஓரளவுக்குப் பின்பற்றுகின்ற பல ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருக்கின்றன; அவை உறுப்பு நாடுகளின் உள்நாட்டு உத்தரவுகளுக்கமைய, சில வரையறுக்கப்பட்ட குற்றங்களை குற்றவியல் குற்றங்களாக ஏற்றுக்கொள்வதற்கான வழிவகைகளைச் செய்கின்றன. அத்துடன், தேசிய எல்லைகளுக்குள் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதையும் ஒரு கடமையாக அவை ஏற்றுக்கொள்கின்றன; பின்னர், (ஒருவருக்கு இருக்கும்) அந்தப் பிராந்தியத்திற்கான உரிமை முதல் அவரது தேசியம், செயலாற்றும் ஆற்றல் அல்லது ஆற்றலின்மை போன்ற பல்வேறு வகையான அதிகார வரம்புக்குரிய காரணங்களின் அடிப்படையில், அந்த நபரை நாடு கடத்துதல் அல்லது வழக்குத் தொடருதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இத்தகைய உடன்படிக்கை ஒப்பந்தங்கள், பொதுவாக பரஸ்பர உதவிக்கும், சம்பந்தப்பட்ட குற்றங்கள் உறுப்பு நாடுகளுக்கிடையே செய்யப்படும் ஒப்படைப்பு உடன்படிக்கையில் ஒப்படைக்கத் தக்கவையாகக் கருதப்படுவதற்கும் வழிவகை செய்கின்றன; மேலும் அங்கத்துவ நாடுகளுக்கு இடையே செய்யப்படும் எந்தவொரு ஒப்படைத்தல் உடன்படிக்கைகளிலும், சம்பந்தப்பட்ட இக்குற்றங்கள் நாடு கடத்தப்படக்கூடிய குற்றங்களாகக் கருதப்படுவதற்கும், அத்தகைய ஒப்பந்தங்கள் பொதுவாக நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உதவிக்கும் ஒத்துழைப்புக்கும் வழிவகை செய்கின்றன.

கேள்விக்குட்படுத்தப்படும் இந்த ஒப்பந்தங்களுள், உதாரணமாக, ஐ.நா. சித்திரவதை மாநாடு 198429, பணயக்கைதிகளைப் பிடித்தல், கள்ளநோட்டு அச்சிடுதல், விமானக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவை தொடர்பான உடன்படிக்கைகளும் அடங்கும். இத்தகைய ஒப்பந்தங்கள் பின்னர் பொதுவாக தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன30.

சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான சட்டவரைவு, பலதரப்பட்ட ‘ஒப்பந்தக் குற்றங்கள்’31 தொடர்பாகச் சில நிபந்தனைகளின் கீழ் நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இருக்கும் என்று முன்மொழிந்தது என்பது கவனிக்கத்தக்கது. ஆயினும், இந்தப் பரிந்துரையானது பிற்கால விவாதங்களில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுடன், இது 1998 ரோம் சட்டத்தில் இடம்பெறவும் இல்லை. இந்த ஒப்பந்தங்களில் சிலவற்றை இவ்விடத்தில் பார்ப்பது உதவியாக இருக்கும்.

1984 ஆம் ஆண்டின் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை, ஒவ்வொரு உறுப்பு நாடும் சித்திரவதையின் அனைத்துச் செயல்களும் உள்நாட்டுக் குற்றவியல் சட்டத்தின்32 கீழ் குற்றங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட எந்தவொரு பிரதேசத்திலோ, அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் பதிவு செய்யப்பட்ட கப்பலிலோ அல்லது விமானத்திலோ சித்திரவதைக் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டாலோ, அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் (அவற்றில்) ஒரு நாட்டவராக இருந்தாலோ, அல்லது பாதிக்கப்பட்டவர் (அவற்றில்) ஒரு நாட்டவராக இருந்தாலோ, அந்த நாடு பொருத்தமானது என்று கருதினால்33, அத்தகைய குற்றங்கள் மீது தனது அதிகார வரம்பை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. அத்துடன், ஒவ்வொரு உறுப்பு நாடும், உறுப்பு நாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்படைத்தல் ஒப்பந்தங்களின் அடிப்படையில், இக்குற்றங்கள் ஒப்படைக்கப்படக் கூடிய குற்றங்களாக அமைகின்றன என்பதை ஒப்புக்கொண்டு34, குற்றம் சாட்டப்பட்டவரை ஒப்படைக்கவோ அல்லது அவர் மீது வழக்குத் தொடரவோ ஒப்புக்கொள்கின்றன35.

இந்த உடன்படிக்கை ‘எக்ஸ் பார்டே பினோஷே’ வழக்கில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது (எண். 3). இதில், 198836 ஆம் ஆண்டு குற்றவியல் நீதிச் சட்டத்தின் பிரிவு 134ஆல் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையின் விதிகள் செயற்படுத்தப்படும் வரை, ஐக்கிய இராச்சியத்திற்கு வெளியே செய்யப்படும் சித்திரவதை, ஐக்கிய இராச்சிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றம் அல்ல என்று பிரபுக்கள் சபையின் பெரும்பான்மையினர் தீர்ப்பளித்தனர். இருப்பினும், லோர்ட் மில்லெட் (Lord Millett), சித்திரவதை என்பது உலகளாவிய அதிகார வரம்பைக் கொண்ட சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றம் என்றும், வழக்காற்றுச் சர்வதேசச் சட்டம் பொதுச் சட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால்37, ஆங்கில நீதிமன்றங்கள் ‘வழக்காற்றுச் சர்வதேசச் சட்டத்தின் கீழ், அதன் உலகளாவிய அதிகார வரம்பைப் பொறுத்து, பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட குற்றவியல் அதிகார வரம்பைக் கொண்டிருப்பதுடன், எப்போதும் அதைக் கொண்டிருந்தன’38 என்றும் கருதினார்.

தூதரக முகவர்கள் உட்பட, சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் மற்றும் தண்டித்தல் தொடர்பான உடன்படிக்கை, 1973ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1977ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இது, ஒப்பந்தம் செய்துகொள்ளும் நாடுகள், அத்தகைய நபர்களின் உடல், வளாகம் மற்றும் போக்குவரத்து மீதான தாக்குதல்கள் போன்ற செயல்களைத் தங்கள் உள்நாட்டுச் சட்டத்தின்39 கீழ் ஒரு குற்றமாக ஆக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. இதற்கு தற்போதுள்ள தண்டனைச் சட்டங்களில் பெரிய அளவில் திருத்தம் எதுவும் தேவைப்படாது.

ஒவ்வொரு நாடும், தனது பிரதேசத்தில் அல்லது தனது பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் அல்லது விமானங்களில் இந்தக் குற்றங்கள் நிகழும் போது, அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு நாட்டவராக இருக்கும் போது, அல்லது அந்த நாட்டின் சார்பாகச் செயற்படும் சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட ஒரு நபருக்கு எதிராகக் குற்றங்கள் இழைக்கப்படும் போது, அதன் மீதான தனது அதிகார வரம்பை நிறுவ வேண்டும்40. ஒரு நபர், ஒரு நாட்டின் அல்லது அரசாங்கத்தின் தலைவராகவோ, அல்லது வெளிநாட்டில் உள்ள வெளியுறவு அமைச்சராகவோ, அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் நாட்டுப் பிரதிநிதியாகவோ அல்லது அதிகாரியாகவோ இருக்கும் போது, அவர் சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்டவராகக் கருதப்படுகிறார்41.

பணயக் கைதிகளைப் பிடிப்பதற்கு எதிரான சர்வதேச (1979) உடன்படிக்கை, 1983ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இது, சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர்களுக்கான உடன்படிக்கை ஒப்பந்தத்தைப் போலவே, ஒவ்வொரு உறுப்பு நாடும் இந்தக் குற்றத்தை தேசிய சட்டத்தின்42 கீழ் தண்டனைக்குரியதாக ஆக்க வேண்டும் என்று கோருகிறது. மேலும், இத் தேசிய சட்டத்தின் கீழ், உறுப்பு நாடுகள் தங்கள் பிரதேசத்தில் காணப்படும் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை ஒப்படைக்க வேண்டும் அல்லது அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும், பணயக்கைதிகளைப் பிடிக்கும் குற்றத்தை தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள ஒப்படைப்பு ஒப்பந்தங்களில் இணைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

அதாவது, ஒரு நாடு, அதன் குடிமக்கள் மூலமாகவோ, அல்லது அது பொருத்தமானது என்று தான் கருதும் பட்சத்தில் தன் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்தில் வழக்கமாக வசிக்கும் நாடற்ற நபர்கள் மூலமாகவோ, அந்த நாட்டில் ஏதேனும் ஒரு செயலைச் செய்யவோ அல்லது செய்யப்படாமல் தடுப்பதையோ கட்டாயப்படுத்துவதற்கும், அல்லது அந்த நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒரு பணயக்கைதி தொடர்பாக, தான் பொருத்தமானது என்று கருதியதைச் செயற்படுத்துவதற்கும் உரித்துடையதாக இருக்கும்.

1994 ஆம் ஆண்டின், ஐக்கிய நாடுகளதும், அதனுடன் தொடர்புடைய பணியாளர்களினதும் பாதுகாப்பு மீதான உடன்படிக்கையானது, ஐ.நா. அல்லது அதனுடன் தொடர்புடைய பணியாளர்கள் அல்லது அவர்களது சொத்துகள் மீதான தாக்குதல்களை, ஒவ்வொரு உறுப்பு நாடும் தேசிய சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக வரையறுக்க வேண்டும் என்றும், அத்தகைய குற்றங்கள் அந்த நாட்டின் எல்லைக்குள் அல்லது அந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு கப்பல் அல்லது விமானத்தில் செய்யப்படும் போது அல்லது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த நாட்டின் குடிமகனாக இருக்கும் போது, அத்தகைய குற்றங்கள் தொடர்பான அதிகார வரம்பு நிறுவப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. சம்பந்தப்பட்ட நாட்டில் வழக்கமாக வசிக்கும் ஒரு நாடற்ற நபரால், அல்லது அந்த நாட்டின் ஒரு குடிமகன் தொடர்பாக அல்லது அந்த நாட்டை ஏதேனும் ஒரு செயலைச் செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ கட்டாயப்படுத்தும் முயற்சியில் குற்றங்கள் செய்யப்படும் போது, உறுப்பு நாடுகள் அத்தகைய குற்றங்கள் மீது தங்கள் அதிகார வரம்பை நிறுவலாம். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும் நாடு, அந்த நபரின் மீது வழக்குத் தொடர வேண்டும் அல்லது அவரை ஒப்படைக்க வேண்டும்45.

விமானங்களைக் கடத்துதல், அவற்றுடன் தொடர்புடைய பிற சட்டவிரோதச் செயல்கள் போன்றவை செய்யப்படுவதைப் பொறுத்தவரை, 1963ஆம் ஆண்டின் ரோக்கியோ (Tokyo) விமானங்களில் செய்யப்படும் குற்றங்களுக்கும் வேறு சில செயல்களுக்குமான உடன்படிக்கை, 1970ஆம் ஆண்டின் விமானங்களைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்கான ஹேக் (Hague) நகர உடன்படிக்கை மற்றும் 1971ஆம் ஆண்டின் பொது விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பிற்கு எதிரான சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான மொண்ட்ரியல் (Montreal) நகர உடன்படிக்கை ஆகியவை இவை தொடர்பான முக்கியமான உடன்படிக்கைகளாகும். இதிலுள்ள பிந்தைய இரண்டு உடன்படிக்கைகளும் 1960களின் பிற்பகுதியில் நிகழ்ந்த விமானக் கடத்தல், பொது விமானங்கள் மீதான தாக்குதல்கள் என்று எழுந்த தாக்குதல் அலைகளின் விளைவாக உருவானவை. அத்துடன், அவை அத்தகைய செயல்களைச் செய்பவர்களை எவ்வாறு கைது செய்து தண்டிப்பது என்ற சிக்கல்களையும் கையாள முயன்றன.

ரோக்கியோ உடன்படிக்கையானது, பொதுவான குற்றங்களுக்கு மட்டுமன்றி, குற்றங்களாக வரையறை செய்யப்பட்டிருக்காத, ஆனால் விமானத்தின் அல்லது அதில் உள்ள பயணிகள் அல்லது சொத்துகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அல்லது விளைவிக்கின்ற செயல்கள், அல்லது விமானப்பயணத்தின் போதான ஒழுங்குமுறை, கட்டுப்பாடு போன்றவற்றுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் ஆகிய இருவகைச் செயற்பாடுகளுக்கும் கூடப் பொருந்துவதாக உள்ளது. இது, ஒப்பந்தம் செய்துகொண்ட நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு விமானம் பறக்கும்போது, அல்லது ஆழ்கடலின் மேற்பரப்பில் அல்லது எந்தவொரு நாட்டினதும் எல்லைக்கு வெளியே உள்ள வேறு எந்தப் பகுதியிலும் இருக்கும் போது, அது அந்த நாட்டின் அதிகார வரம்பிற்குட்பட்டதாக இருப்பதற்கு வழிவகை செய்கிறது.

அத்தகைய சூழ்நிலைகளில், அத்தகைய ஒரு விமானத்தின் மீது நகராட்சிச் சட்டத்தின் மூலம் அதிகார வரம்பை நிறுவத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒப்பந்தம் செய்துகொண்ட நாடுகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிரவும், பதிவு செய்யப்பட்ட நாடாக இல்லாத, ஆனால் ஒப்பந்தம் செய்துகொண்ட நாடுகள், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் விமானத்தில் செய்யப்படும் ஒரு குற்றத்தின் மீது குற்றவியல் அதிகார வரம்பை நிறுவுவதற்காக, பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் தலையிட இந்த உடன்படிக்கை அனுமதிக்கிறது.

அதாவது, இத்தகைய ‘குறிப்பிடப்பட்ட’ சூழ்நிலைகள் என்னவென்றால் அவை, செய்யப்படும் குற்றம் அந்த நாட்டின் எல்லைக்குள் தாக்கத்தை ஏற்படுத்துவது; அந்த நாட்டின் ஒரு பிரஜை அல்லது ஒரு நிரந்தரக் குடியிருப்பாளர் செய்த அல்லது அவருக்கு எதிராகச் செய்யப்பட்டிருக்கும் ஒரு செயல், அந்த நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரானது போன்ற ‘பலதரப்பு சர்வதேச ஒப்பந்தத்தின்’46 கீழ் அத்தகைய நாட்டிற்குரிய எந்தவொரு கடமைகளையும் அது கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய, அதற்கான அதிகார வரம்பைப் பயன்படுத்துதல் அவசியமாகப்படும் போது, நடைமுறையில் உள்ள விமானங்களின் பறத்தல் அல்லது இயக்குதல் தொடர்பாக இருக்கும் விதிகளையோ அல்லது ஒழுங்குமுறைகளையோ மீறுவதை உள்ளடக்கியவையாகும் என்பதுதான்; அதாவது, அவற்றைப் பேணுவதற்கான எத்தகைய கடப்பாட்டையும் அது கொண்டிருக்கவில்லை என்பதுதான்.

இந்தக் ‘ஹேக்’ உடன்படிக்கையின்படி, பறந்துகொண்டிருக்கும் ஒரு விமானத்தில் இருக்கும் எந்தவொரு நபரும், அந்த விமானத்தைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதில் ஈடுபட்டாலோ (அல்லது அவ்வாறு செய்ய முயன்றாலோ), அவர் ஒரு குற்றத்தைச் செய்கிறார்; அக்குற்றத்திற்கு ஒப்பந்த நாடுகள் கடுமையான தண்டனைகளை விதிக்க உறுதியளிக்கின்றன. ஒவ்வொரு ஒப்பந்த நாடும், அக்குற்றம் அந்தந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு விமானத்தில் நிகழும்போது, அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் விமானத்தில் இருக்கும் போதே அந்த விமானம் அதன் எல்லைக்குள் தரையிறங்கும் போது, அல்லது பணியாளர்கள் இல்லாமல் குத்தகைக்கு விடப்பட்ட ஒரு விமானத்தில், குத்தகைதாரரின் பிரதான வணிக இடம் அந்த நாட்டில் இருக்கும் போது, அல்லது குத்தகைதாரருக்கு அத்தகைய வணிக இடம் இல்லையென்றால், அவர் அந்த நாட்டில் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டிருக்கும் போது, அக்குற்றம் அல்லது அது தொடர்பான வன்முறைச் செயல்கள் மீது தனது அதிகார வரம்பை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; அதுமட்டுமன்றி, குற்றம் சாட்டப்பட்டவர் எந்த ஒப்பந்த நாட்டின் எல்லைக்குள் காணப்படுகிறாரோ, அந்த ஒப்பந்த நாடுகள் அவரை (சம்பந்தப்பட்ட நாட்டிடம்) ஒப்படைக்க வேண்டும் அல்லது அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் அந்த உடன்படிக்கை குறிப்பிடுகிறது.

மொன்ட்ரியல் உடன்படிக்கையானது, இந்த ‘ஹேக்’ உடன்படிக்கையைப் போலவே அதிகார வரம்பு, ஒப்படைப்புகள் என்பவை தொடர்பாக ஒரே மாதிரியான விதிகளைக் கொண்டிருந்தாலும், விமானக் கடத்தலை நேரடியாகக் கையாள்வதை விட, பறந்து கொண்டிருக்கும் அல்லது தரையில் இருக்கின்ற பயணிகளுக்கோ விமானங்களுக்கோ எதிரான தாக்குதல்களை அல்லது அது போன்ற பிற நாச வேலைகளை கட்டுப்படுத்துவதையும் தண்டிப்பதையும் தனது நோக்கமாகக்47 கொண்டுள்ளது. மொன்ட்ரியல் உடன்படிக்கைக்கான ஒரு நெறிமுறை 1988இல் கையெழுத்திடப்பட்டது. இது, சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை வழங்கும் விமான நிலையங்களில், கடுமையான காயத்தை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தக்கூடிய சட்டவிரோத வன்முறைச் செயல்களையும், சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை வழங்கும் விமான நிலையத்தின் வசதிகளையோ அல்லது அங்கு நிறுத்தப்பட்டுள்ள சேவையில் இல்லாத விமானங்களையோ அழிக்கும் அல்லது கடுமையாகச் சேதப்படுத்தும் அல்லது விமான நிலையத்தின் சேவையைச் சீர்குலைக்கும் வன்முறைச் செயல்களையும் ஒடுக்குவதற்கு வழிவகை செய்கிறது48.

பரந்த அளவிலான நீதி அதிகார வரம்பின் அடிப்படைகள் கவனிக்கப்பட வேண்டியவை என்ற போதும், இதில் ஓர் உலகளாவிய தன்மை இணைக்கப்படவில்லை. இருப்பினும், இந்த வகையான நடவடிக்கைகள் தொடர்பாகப் பரவலான எதிர்ப்புக்குரல்கள் உள்ளதுடன், நடைமுறையில் விமானக் கடத்தல் என்பது, ஏறக்குறைய உலகளாவிய ரீதியிலான அதிகார வரம்பைக் கொண்ட ஒரு சர்வதேசக் குற்றமாக49 மாறியிருப்பதற்கான வாய்ப்பு நிலவவே செய்கிறது. அத்துடன், காலப்போக்கில், சர்வதேச பயங்கரவாதம் என்பது, உலகளாவிய நீதியதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு குற்றமாகக்50 கருதப்படுவதற்கான வாய்ப்பு நிலவவே செய்கிறது.

மேற்கூறிய உடன்படிக்கைகளின் கீழ் உள்ள தங்கள் கடமைகளை நாடுகள் மதிக்கத் தவறும் போதோ, அல்லது அவை உடன்படிக்கைகளில் உறுப்பினர்களாக இல்லாத பட்சத்திலோ, கடத்தலை ஒரு சட்டவிரோதச்51 செயலாக தற்போதைய அரசு நடைமுறை அங்கீகரிக்கிறது என்ற நியாயமான அனுமானத்தின் அடிப்படையில், வழக்கமான நடைமுறைகளை மதிக்கத் தவறும் போது, சட்ட அமுலாக்கம் தொடர்பான கேள்விகள் நிச்சயமாக எழக்கூடும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தொடர்புடைய சர்வதேச விமான அமைப்புகளை52 நாடுவதைத் தவிர, வேறு பல சாத்தியக்கூறுகளும் உள்ளன.

ஒத்த கருத்துடைய நாடுகள், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நாடுகள் மீது தடைகளை விதிக்க முற்படலாம். உதாரணமாக, 1978 ஆம் ஆண்டின் (Bonn Declaration) ‘பொண் பிரகடனமானது’, ஒரு நாடு விமானத்தைக் கடத்தியவர்களை ஒப்படைக்கவோ அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடரவோ மறுத்தாலோ அல்லது அந்த விமானத்தைத் திருப்பிக் கொடுக்கத் தவறினாலோ, அந்த நாட்டிற்கும் அதன் விமான நிறுவனங்களுக்கும் இடையேயான அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒப்புக்கொண்டது53.

கடத்தல்காரர்களைத் திருப்பி அனுப்புவதற்கோ அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கோ வழிவகை செய்யும் இருதரப்பு ஏற்பாடுகளும் செய்யப்படலாம்54. நாடுகள், நிச்சயமாக தங்கள் பிரதேசத்தில் காணப்படும் குற்றம் சாட்டப்பட்ட கடத்தல்காரர்கள் மீது வழக்குத் தொடரவோ அல்லது பொதுவாக பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவோ தங்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை இயற்றலாம்55. உதாரணமாக, 1984ஆம் ஆண்டின் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அமெரிக்கச் சட்டம், முதன்மையாக (முழுமையாக இல்லாவிட்டாலும்) அமெரிக்காவின் பிராந்திய அதிகார வரம்பிற்குள் நிகழும் பரந்த அளவிலான பயங்கரவாதச் செயல்கள் குறித்த தகவல்களுக்கு வெகுமதிகளை வழங்குகிறது56.

வேறு பல பொதுவான சுய-உதவிக்கான செயல்களும் கையாளப்பட்டுள்ளன. உதாரணமாக, 1973ஆம் ஆண்டில், கடத்தப்பட்ட விமானங்களில் இருந்த பொதுமக்களைக் கொன்றதற்குப் பொறுப்பான கொரில்லாத் தலைவர் ஒருவரைக் கைது செய்ய முனைந்து தோல்வியுற்ற முயற்சியின் போது, லெபனான் வான்வெளியில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் ஒரு பயணிகள் விமானத்தைத் தடுத்திருந்தன. இதற்காக இஸ்ரேல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்57, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு58 என்பவற்றின் கண்டனத்துக்கு உள்ளானது.

1985 ஒக்டோபர் 10–11 இரவு, ‘அச்சிலோ லாரோ’ (Achille Lauro) என்ற இத்தாலிய உல்லாசக் கப்பலைக் கடத்திச் சென்றவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு எகிப்தியப் பயணிகள் விமானம், மத்திய தரைக்கடலுக்கு மேலே அமெரிக்க கடற்படைப் போர் விமானங்களால் வழிமறிக்கப்பட்டு, சிசிலியில் தரையிறங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டது. பொதுவாக, சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமானதே என்று குறிப்பிட்டு, அமெரிக்கா தனது இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியது. ஆயினும், விமானக் கடத்தல், பணயக்கைதிகளைப் பிடித்தல் என்பவை தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதே பொருத்தமானது59 என்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் அப்போது குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த உடன்படிக்கைகளில் உள்ள எதுவும், ஆழ்கடலிலோ அல்லது வழிமறிக்கும் நாட்டின் பிரதேசம் அல்லாத வேறெந்தப் பகுதியிலோ, குறிப்பிட்ட எந்தக் காரணங்களுக்காகவும் பயணிகளுக்கான விமானங்கள் வழிமறிக்கப்படுவதை நியாயப்படுத்துபவையாகத் தெரியவில்லை. பயங்கரவாதிகளைக் கைது செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பது சரிதான் என்றாலும், அதற்கான வழிமுறைகள் சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும்.

1986 பெப்ரவரி 4 அன்று, இஸ்ரேலிய விமானப்படை, பயங்கரவாதிகளைப் பிடிக்கும் முயற்சியில், லிபியாவிலிருந்து சிரியாவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு லிபிய பயணிகள் விமானத்தை வழிமறித்தது; தற்காப்பு என்ற அடிப்படையில் கேள்விக்குரிய அந்த விமான வழிமறிப்பு நியாயப்படுத்தப்படக்கூடியதே என்று வாதிட்டது.

எவ்வாறாயினும், சட்டவிரோதமான கடத்தல் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஓர் அரசால் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள், தற்பாதுகாப்பு61 என்ற அடிப்படையில் நியாயப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலைகளும் இருக்கலாம்.

சட்டவிரோதமான கைதுகளும் அதற்கான நீதி அதிகார வரம்பை பயன்படுத்தலும்62 

மற்றொரு நாட்டின் பிரதேசத்தில் செயற்படும் அரச பிரதிநிதிகளால், ஒரு சந்தேக நபர் சட்டவிரோதமாகக் கைது செய்யப்படுவது, நீதிஅதிகார வரம்பைப் பயன்படுத்துவதற்கு ஒரு தடையாக இருக்காது என்று தோன்றுகிறது. அத்தகைய கைது நடவடிக்கை, நிச்சயமாக சர்வதேச சட்டத்தையும், அரச பொறுப்புடன் கூடிய தலையிடாமை நெறிமுறையையும் மீறுவதாகவே அமையும்63. சர்வதேச சட்டத்தை மீறும் இந்தக் கைப்பற்றல், தற்காப்பு உரிமையைக் கோரக்கூடிய சூழ்நிலைகள் இருந்தாலன்றி64 கடத்தலை மேற்கொள்ளும் நாட்டுக்கு அதற்கான அதிகார வரம்பைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் மேலும் சிக்கலடையும் என்று விவாதிக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த சர்வதேச நடைமுறையோ இதற்கு எதிர்மறையான விளைவுகளையே காட்டுகிறது66.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கைது செய்வதற்கும் வழக்குத் தொடர்வதற்கான அதிகார வரம்புக்கும் இடையே, ஒரு வேறுபாடு தெளிவாக வரையறுக்கப்படுகிறது. அதாவது, ஆழ்கடலில் அல்லது அதற்கு அப்பால் ஒரு கைது நடவடிக்கை நடைபெற்ற சூழ்நிலையையும், வேறொரு நாட்டின் பிரதேசத்தில் அனுமதியின்றி நடைபெற்ற ஒரு கைது நடவடிக்கை நிகழ்வையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதாகும். அத்துடன், கைது செய்யும் நாடு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டம், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நிபந்தனைகளை நிர்வகிக்கும் ‘ஒப்படைப்பு ஒப்பந்தத்தைக்’ கொண்டுள்ள ஒரு நாட்டிலிருந்து கடத்தல் நடைபெற்றிருக்கும் சூழ்நிலைகள் தொடர்பாக மேலும் ஒரு வேறுபாடும் செய்யப்பட்டுள்ளது. அதாவது, குற்றவாளி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களின் வகையைப் பொறுத்து, வழக்குகளுக்கு இடையில் ஓர் இறுதி வேறுபாடு வரையறுக்கப்படலாம் என்பதுவே அது.

ஆகவே, கைது நடவடிக்கையின் தன்மையானது, அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் சுமத்தப்படும் வழக்கு விசாரணைகளின் போது67, அவர்களுக்கு ஒரு தடையாக அமையும் அளவுக்கு முக்கியத்துவமற்ற ஒரு பிரச்சினையாகக் கருதப்படலாம். நிச்சயமாக, அத்தகைய எந்தவொரு கைது நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட நபரின் மனித உரிமைகளை மீறுவதாக அமையும் என்ற போதும், அது நீதியின் அதிகார வரம்பின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதே இங்குள்ள முக்கியமான கேள்வி.

இது தொடர்பான அணுகுமுறைகளில், நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. ‘அமெரிக்கா எதிர் டோஸ்கானினோ’ (US vs Toscanino) வழக்கில், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம்68, பிரதிவாதியின் நிலைப்பாடு பலவந்தமாகவோ அல்லது மோசடியாகவோ பெறப்பட்டிருந்தால், ‘சட்டவிரோதக் கைது நடவடிக்கையால் அதிகார வரம்பு பாதிக்கப்படாது’69 என்ற விதியைப் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் இந்த அணுகுமுறை பெருமளவில் சிதைந்துவிட்டதாகத் தெரிகிறது.

அமெரிக்கா சார்பாக ‘லூஜன் எதிர் ஜெங்லர்’ (Lujan vs Gengler)70 வழக்கில், டோஸ்கானினோ வழக்கில் உள்ள விதி, சித்திரவதை, கொடூரம் மற்றும் அதுபோன்ற அக்கிரமமான நடத்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு மட்டுமே71 வரையறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டது. இந்த விவகாரம், அமெரிக்கா எதிர் ‘அல்வாரெஸ்-மச்சாயின்’ (US vs Alvarez-Machain)72 வழக்கில் அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் முன் வந்தது. அதில், இந்த விவகாரம் அடிப்படையில் மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்புடைய (குற்றவாளிகளை) ‘ஒப்படைத்தல் ஒப்பந்தத்தின்’ (Extradition Treaty) கடுமையான விளக்கத்தைச் சுற்றியே அமைந்துள்ளது என்ற பார்வை எடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையே நடைமுறையில் உள்ள ‘ஒப்படைத்தல் ஒப்பந்தத்தின்’ விதிமுறைகள் கடத்தலைத் தடை செய்தால், அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியாது. இல்லையெனில், ‘கெர்’ (Ker vs Illinois?) வழக்கில் உள்ள விதி பொருந்துவதுடன், வழக்கு விசாரணை தொடரும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

அந்த வகையில், இந்த வழக்குகளுக்கு இடையே சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், இது பயன்பாட்டுக்குப் பொருத்தமாக இருந்தது. அதாவது, ‘கெர்’ வழக்கில் உள்ள சூழ்நிலையைப் போலல்லாமல், அமெரிக்க அரசாங்கம் கடத்தலில் ஈடுபட்டிருந்தது மட்டுமன்றி, எந்த நாட்டின் பிரதேசத்திலிருந்து கைது நடந்ததோ அந்த நாடும்73 எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

இங்கிலாந்தில், இந்த அணுகுமுறை ஓரளவு மாறியிருப்பதாகத் தெரிகிறது. ஆர் எதிர் பிளைமவுத் ஜஸ்டிசஸ், எக்ஸ் பார்டே டிரைவர் (R vs Plymouth Justices, ex parte Driver)74 வழக்கில், ஒரு நபர் அதிகார வரம்பிற்குள் சட்டபூர்வ காவலில் வைக்கப்பட்டிருந்தால், அவர் எந்தச் சூழ்நிலைகளில் அதிகார வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டார் என்பதை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்று குறிப்பிடப்பட்டது.

இருப்பினும், ‘ஆர் எதிர் ஹார்ஸ்ஃபெர்ரி வீதி நீதவான் நீதிமன்றம், எக்ஸ் பார்டே பென்னட்’ (R vs Horseferry Road Magistrates’ Court, ex parte Bennett)75 என்ற மறுதரப்பில்லா வழக்கில், பிரபுக்கள் சபை பின்வருமாறு அறிவித்தது: ‘குற்றம் சாட்டப்பட்டவரைத் திருப்பி அனுப்பக்கூடிய ஓர் ஒப்படைப்பு ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட நாட்டுடன் இருக்கும் பட்சத்தில், நமது சொந்தக் காவல்துறை, வழக்குரைஞர் அல்லது பிற நிர்வாக அதிகாரிகள் அறிந்தே ஒரு தரப்பாக இருந்த ஒரு செயல்முறையின் மூலம், அந்த நடைமுறைகளைப் புறக்கணித்து அவர் நமது அதிகார வரம்பிற்குள் பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டிருந்தால், நமது நீதிமன்றங்கள் அவரை விசாரிக்க மறுத்துவிடும்’76.

இந்த வழக்கில் பின்பற்றப்பட்ட அணுகுமுறை, ஆர் எதிர் லத்தீஃப் (R vs Latif) வழக்கில் பொறிவைத்துப் பிடிக்கும் அணுகுமுறையையும்77 உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தம்மீது சுமத்தப்பட்ட நாடு கடத்தும் (Extradition Request) தீர்மானத்தை எதிர்த்து அதை இல்லாமல் செய்வதற்காகச் சட்ட நடவடிக்கை எடுக்கும் போது, அவர் ஏமாற்றப்பட்டு அந்த (உள்நாட்டு) அதிகார வரம்பிற்குள் ஈர்க்கப்பட்டுள்ளார் என்ற உண்மை, அத்தகைய நாடு கடத்தும் நடவடிக்கைகளை செல்லுபடி அற்றதாக்குவதற்குப் போதுமானதாக இருக்காது. ஏனென்றால், ‘Home Secretary’யின் (இலங்கையில் பொது நிர்வாக மாகாணசபை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் என்று அழைக்கப்படும் பதவி) விருப்புரிமையின் அடிப்படையிலும், ஒப்படைக்கப்படவிருந்த நாட்டின் சட்டத்தின் கீழும் முறையான சட்ட நடைமுறைக்கான பாதுகாப்புகள் இருந்தன78.

மேலும், ‘வெஸ்ட்ஃபோலன் ஒருதலைப்பட்ச’ (Ex parte Westfallen) வழக்கில், சட்டவிரோதம், அதிகார துஷ்பிரயோகம் அல்லது சர்வதேசச் சட்டம் அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாடுகளின் உள்நாட்டுச் சட்டத்தை மீறுதல் போன்றவை இல்லாத பட்சத்தில், சவாலுக்குட்படுத்தப்பட்ட முடிவைக் கேள்விக்குட்படுத்தவோ அல்லது அதைத் தொடர்ந்த குற்றவியல் நடவடிக்கைகளை செல்லாததாக்கவோ முடியாது என்று உயர் நீதிமன்றம் கருதியது79.

அமெரிக்க அயல்நாட்டு சிவில் தவறுகளுக்கான உரிமைகோரல் சட்டம்80

இந்தச் சட்டத்தின் கீழ், ‘சர்வதேசச் சட்டம்’ அல்லது ‘அமெரிக்காவின் உடன்படிக்கையை’81 மீறிச் செய்யப்பட்ட ஒரு சிவில் தவறுக்காக ஓர் அயல்நாட்டவர் தொடரும் அனைத்து வழக்குகளுக்கும் மூல மாவட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பை முதல் காங்கிரஸ் நிறுவியது. ‘ஃபிலார்டிகா எதிர் பெனா-இராலா’ (Filartiga v Pena-Irala)82 வழக்கில், அமெரிக்காவின் இரண்டாவது வட்டார மேல்முறையீட்டு நீதிமன்றம், ஒரு பராகுவே (Paraguay) நாட்டவர், அந்த நாட்டில் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைச் செயல்களுக்காக ஒரு பராகுவே காவல்துறை அதிகாரிக்கு எதிராகத் தொடுத்த தனிப்பட்ட ‘சிவில்’ தவறுகளுக்கான வழக்கில், அதற்கான அதிகார வரம்பை வரையறுக்கும் வகையில் இந்த விதியை விளக்கியது; ஏனெனில், ஓர் அரசு அதிகாரியால் செய்யப்படும் சித்திரவதை, சர்வதேசச் சட்டத்தை மீறுவதாகும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இத்தீர்ப்பு, அத்தகைய நீதிமன்றத் தகுதியை அனுமதிக்கும் ஓர் உள்நாட்டுச் சட்டத்தை தெளிவாக அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சர்வதேச மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான அதிகார வரம்பைப் பயன்படுத்தும் முயற்சியில் ஒரு கவனத்துக்குரிய நகர்வாக அமைந்தது. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய சிக்கல்கள், குறிப்பிட்ட வழக்குகளில் ‘தேசங்களின் சட்டம்’ என்பதன் வரையறையைப் பொறுத்து அமையும்83.

இருப்பினும், டெல்-ஓரன் எதிர் லிபிய அரபுக் குடியரசு (Tell-Oren vs Libyan Arab Republic)84 வழக்கில், 1978இல் இஸ்ரேலியப் பேருந்து மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பிரதிநிதிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களால், அதே சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை, ‘பொருள்சார் அதிகார வரம்பு இல்லாத’ காரணத்தால் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மூன்று நீதிபதிகளும் தங்கள் வாதங்களில் வேறுபட்டனர். பி.எல்.ஓ போன்ற அரசு சாரா அமைப்புகளுக்கு, தேசங்களின் சட்டங்கள் எத்தகைய பொறுப்பையும் விதிக்கவில்லை என்று நீதிபதி எட்வர்ட்ஸ் கருதினார். ஃபிலார்டிகா கொள்கைகளிலிருந்து (Filartiga Principles) மாறுபட்டு, நீதிபதி போர்க், ‘ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில், ஒரு தனிநபர் சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை அமுல்படுத்த அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக, வழக்காடுவதற்கு வெளிப்படையான ஒரு காரணம் இருக்க வேண்டும்’ என்று அறிவித்தார்85. அதே நேரத்தில், மூத்த நீதிபதி ராப், அரசியல் கேள்வி, கோட்பாடு என்பவற்றால் இந்த வழக்கு நியாயப்படுத்த முடியாததாகிவிட்டது என்று கருதினார்.

ஃபிலார்டிக்கா கொள்கைகளின் மீதான மேலும் பல கட்டுப்பாடுகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, ‘அயல்நாட்டு சிவில் உரிமைக் கோரிக்கைகள் சட்டம்’ (Alien Tort Claims Act), இறையாண்மைப் பாதுகாப்புக் கொள்கைக்கு ஒரு விதிவிலக்காக அமையாது86 என்றும், அதனால் அச்சட்டத்தின் கீழ் சர்வதேசச் சட்ட மீறல்களுக்காக ஒரு வெளிநாட்டு அரசின் மீது வழக்குத் தொடர முடியாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது87.

அதே சமயம், ‘சான்செஸ்-எஸ்பினோசா எதிர் ரீகன்’ (Sanchez-Espinoza vs Reagan)88 வழக்கில், நிகரகுவா அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் ‘கான்ட்ரா’ கொரில்லாக்களுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவு தொடர்பாக, உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சட்டங்களை மீறியதற்காக தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் பலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. வழக்கில் அந்நியர் இழப்பீட்டுக் கோரிக்கைச் சட்டம் மேற்கோள் காட்டப்பட்ட போதும், மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்தச் சட்டம் ஓர் உடன்படிக்கை அல்லது வழக்கமான சர்வதேசச் சட்டத்தை மீறும் தனியார்களின், அரசு சாரா செயல்களை மட்டுமே உள்ளடக்கியது என்று வாதிட்டது.

தவிரவும், டெல்-ஓரன் வழக்கை உதாரணமாகக் காட்டி, வழக்கமான சர்வதேசச் சட்டம் ‘இந்த வகையான’89 தனியார் நடத்தைகளை உள்ளடக்கவில்லை என்று சுட்டிக்காட்டியது. இதனால், பிரதிவாதிகள் உத்தியோகபூர்வ தகுதியில் செயற்பட்ட அளவிற்கு மட்டுமே இழப்பீட்டுக் கோரிக்கையை நிலைநிறுத்த முடியும். மேலும், அந்நியர் இழப்பீட்டுக் கோரிக்கைச் சட்டம் உத்தியோகபூர்வ அரசுச் செயல்களுக்குப் பொருந்தினாலும், உள்நாட்டு இறையாண்மை விலக்குரிமைக் கோட்பாடு (Domestic Sovereign Immunity) அந்தக் கோரிக்கையைத் தடுத்தது.

காடி எதிர் கார்டிஸ் (Kadi vs Kardiz)90 வழக்கில், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், ‘வழக்கமான சர்வதேசச் சட்டத்தின் சில மீறல்களுக்குத் தனியார் நபர்களின் பொறுப்பு’ மற்றும் அத்தகைய மீறலைச் சரிசெய்ய ‘அந்நியர் இழப்பீட்டுச் சட்டம்’ (Alien Tort Claims Act) ஆகியவற்றை வலியுறுத்தியது91. அது மேலும், குறிப்பாக, இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் பிற மீறல்கள் மீதான தடை என்பது, அரச மற்றும் அரசு சாரா அமைப்புகள் இரண்டிற்கும் பொருந்தும் என்றும், சித்திரவதை மற்றும் (இனப்படுகொலை அல்லது போர்க்குற்றங்களின் போது செய்யப்படாத) உடனடி மரணதண்டனை ஆகியவை அரசு அதிகாரிகளால் அல்லது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் போது மட்டுமே அவை சர்வதேசச் சட்டத்தால் தடை செய்யப்படுகின்றன92 என்றும் குறிப்பிட்டது.

இந்த வழக்கிலும் கூட, தேவைப்பட்டதெல்லாம், சர்வதேசச் சட்டத்தின்93 முறையான அளவுகோல்களின் கீழ் ஒரு நாட்டின் நிலையை நிறுவுவதை விட, ‘உத்தியோகபூர்வமானதாகக் காட்டும் ஒரு தோற்றப்பாடு’ (Semblance of Official Authority) மட்டுமே.

மேலும், ‘ஏதேனுமொரு வெளிநாட்டின் உண்மையான அல்லது வெளித் தோற்றத்திலான அதிகாரத்தின் கீழோ, அல்லது சட்டத்தின் பெயராலோ’, ஒரு தனிநபர் செய்யும் ‘சித்திரவதைக்கும் நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்ட கொலைகளுக்கும்’ எதிராக வழக்குத் தொடர வழிவகுக்கின்ற 1992 ஆம் ஆண்டின் ‘சித்திரவதையால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புச் சட்டம்’ என்பது, தன்னளவில் ஓர் அதிகார வரம்புச் சட்டம் அல்ல என்றும், அது ‘அயல் நாட்டுச் சித்திரவதைச் சட்டத்தின் கீழோ, அல்லது பொதுவான கூட்டாட்சி அதிகார வரம்பின் பிரிவு 133194 இன் கீழோ’ அதற்கான அதிகார வரம்பு நிறுவப்படுவதைப் பொறுத்த ஒரு சட்டம்தான் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஃபோக்லாந்து போரின் போது, ஆர்ஜென்டினாவால் சர்வதேச கடல் பகுதியில் ஒரு கப்பல் மீது குண்டு வீசப்பட்டது தொடர்பான ‘அமெராடா ஹெஸ்’ வழக்கில் ‘அந்நியர் சித்திரவதைச் சட்டம்’ மீண்டும் பயன்படுத்தப்பட்டது. அதில், அச்சட்டத்தின் கீழ் கூட்டாட்சி நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பு இருப்பதாகத் தெரிக்கப்பட்டது.

ஆயினும், கருத்து ரீதியாகத் தம்முள் பிளவுபட்டிருந்த மேல்முறையீட்டு95 நீதிமன்றம், அச்சட்டம் சர்வதேசச் சட்ட மீறல்களுக்காக அந்நியர்கள் வெளிநாட்டு இறையாண்மைகளுக்கு எதிராகத் தொடுக்கும் வழக்குகளின் மீது கூட்டாட்சி அரசானது பொருள்-சார்ந்த அதிகார வரம்பை வழங்குகிறது என்றும், வெளிநாட்டு இறையாண்மை விலக்குரிமைச் சட்டம்96 அதனைத் தடுக்கவில்லை என்றும் தீர்ப்பளித்தது.

இருப்பினும், உச்ச நீதிமன்றம்97 ஒருமனதாக இதை ஏற்கவில்லை; அச்சட்டம் வெளிநாட்டு அரசுகளுக்கு எதிரான வழக்குகளை வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை என்றும், வெளிநாட்டு இறையாண்மை விலக்குரிமைச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தைய 1789 ஆம் ஆண்டுச் சட்டம் ஒரு வெளிநாட்டு அரசுக்கு எதிரான வழக்கிற்கான அதிகார வரம்பைப் பற்றிய அடிப்படையை ஒருபோதும் வழங்கியதில்லை98 என்றும் குறிப்பிடப்பட்டது.

‘வெளிநாட்டு இறையாண்மைப் பாதுகாப்புச் சட்டத்தில்’ (Foreign Sovereign Immunities Act) இறையாண்மைக்கான பாதுகாப்பை விரிவாகக் கையாள்வதற்குக் காங்கிரஸ் முடிவு செய்திருந்ததால், இந்தச் சட்டம் மட்டுமே வெளிநாட்டு அரசுகளின் மீதான கூட்டாட்சியின் நீதியதிகார வரம்பிற்கு அடிப்படையாக அமைந்தது என்பது தெளிவாகத் தெரிந்ததுடன், இந்த அடிப்படையானது பிரத்தியேகமான ஒன்றாகவும் இருந்தது.

ஆயினும், அரசுசாராத பிரதிவாதிகளைப் பொறுத்தவரை, இந்த வெளிநாட்டு இறையாண்மைப் பாதுகாப்புச் சட்டத்தால் அயல்நாட்டுத் தீங்குக் கோரிக்கைகள் சட்டம் (Alien Tort Claims Act) பாதிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது99.

மேலும், மேலே குறிப்பிடப்பட்ட இந்த ‘அல்வாரெஸ்-மச்சாயின் எதிர் அமெரிக்கா’ (Alvarez-Machain vs United States) வழக்கில்100, குற்றம் சாட்டப்பட்டவர் தனது விடுதலையைத் தொடர்ந்து அந்தச் சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி ஒரு வழக்கைத் தொடர்ந்தார்.

மீறப்பட்ட சர்வதேசச் சட்டக் கொள்கையானது, மீறமுடியாத (Jus cogens) நெறிமுறையாகவும் அமைய வேண்டும் என்று அந்தச் சட்டம் கோருகிறது என்ற கோரிக்கையை ஒன்பதாவது வட்டாரத்திற்கான மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், தனது கடத்தலில் மறைமுகமாக உள்ள மெக்சிகோ இறையாண்மை மீறலுக்காக மனுதாரர் வழக்குத் தொடரலாம் என்ற வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இருப்பினும், மனுதாரரின் நடமாடும் சுதந்திரம், தன் நாட்டில் தங்கியிருக்கும் உரிமை மற்றும் தனி நபரின் பாதுகாப்பு ஆகிய உரிமைகள் (‘தேசங்களின் சட்டத்தின்’ ஒரு பகுதியானவை) மீறப்பட்டதாகவும், மெக்சிகன் பிடியாணையின்படி இல்லாததால் அவரது தடுப்புக்காவல் தன்னிச்சையானது என்றும் அது உறுதிப்படுத்தியது. அதன்படி, சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரலாம்101.

ஒப்படைப்பு நடைமுறை 102

ஒப்படைப்பு நடைமுறையானது, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற, சந்தேகிக்கப்படுகின்ற அல்லது தண்டனை பெற்ற குற்றவாளிகளை ஒரு நாடு மற்றொரு நாட்டிடம் ஒப்படைக்க உதவுகிறது. இது, ‘இருதரப்பு ஒப்பந்தச் சட்டத்தை’ அடிப்படையாகக் கொண்டது மட்டுமேயன்றி, வழக்காற்றுச் சட்டத்தின் அடிப்படையில் நாடுகளின் மீதுள்ள ஒரு கடப்பாடாக இல்லை103. இவ்விடயம் தொடர்பாக, தற்போது உள்ள ஒப்பந்தங்களிலிருந்து சில பொதுவான கொள்கைகளைப் பெறுவது வழக்கம். உதாரணமாக, ‘இரட்டைக் குற்றத்தன்மை’ என்பது குறிப்பிடப்படுகின்ற ஒரு குற்றம் சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளிலும் அது ஒரு குற்றமாக இருக்க வேண்டும் என்பதாகும்104. ‘சிறப்புத்தன்மை’ என்பது, சரணாகதி அடைந்த ஒரு நபர், ஒப்படைப்புக் கோரப்பட்டு வழங்கப்பட்ட குற்றத்திற்காக மட்டுமே விசாரிக்கப்படவோ தண்டிக்கப்படவோ முடியும் என்பதாகும்105. பொதுவாக, அரசியல் தன்மை கொண்ட குற்றங்கள் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன106 என்றபோதும், அந்த விலக்கல்கள் பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்குப் பொருத்தமற்றவையாகும்.

அடிக்குறிப்புகள்

1. பார்க்க: e.g. Rocha v. US 288 F.2d 545 (1961); 32 ILR, P. 112; US v Pizzarusso 62 AJIL, 1968. p.975,  Us v. Rodriguez 182 F.Supp. 479 (1960). கூடவே இந்த ‘The Italian South Tyrol Terrorism case, 71 ILR, p.242’ ஐயும் பார்க்கவும்.

2. (1946) AC 347; 15 AD, p.91.

3. அமெரிக்க நடைமுறை தொடர்பாக இதையும் பார்க்கவும்: Rocha V. United States 182 F. Supp. 479 (1960); United States v. Pizzarusso 388 F20 8 (1968) and United States v. Layton 509 F.Supp. 212 (1981). அத்துடன் இதையும்: Third US Restatement of Foreign Relations Law, vol. I, Act 1986. PP.237 ff. and Omnibus Diplomatic Security and Anti-Terrorism

4. பார்க்க: Hostages Convention, 1979; the aircraft hijacking conventions and the Safety of United Nations and Associated Personnel Convention, 1994: கூடவே, pp. 600-2. ஐயும் பார்க்கவும்

5. பார்க்க: உ-ம்: Akehurst, ‘Jurisdiction’, pp. 160-6; Bowett, ‘Jurisdiction”, pp. 11-14; Harvard Research, pp. 563-92; Jennings, ‘Extraterritorial Jurisdiction’, p. 156; Gilbert, ‘Crimes’, p.423, and K.C. Randall, ‘Universal Jurisdiction under International Law’, 66 Texas Law Review, 1988, p.785. See also M.C. Bassiouni, Crime Against Humanity in International Criminal Law, Dordrecht, 1992; L.

Reydams, Universal Jurisdiction, Oxford, 2003; A.H. Butler, The Doctrine of Universal Jurisdiction; A Review of the Literature, 11 Criminal Law Forum, 2001, p.353; M. Henzelin, Le Principe der Universite en Droit Penal International, Brussels, 2000; L.Benvenides. The Universal Jurisdiction Principle; Nature and Scope’, Anuario Mexicano de Derecho Internacional, 2001, p.58, and the Princeton Principles on Universal Jurisdiction, Princeton, 2001. கூடவே இதையும் கவனிக்க: H. Kissinger, The Pitfalls of Universal Jurisdic-tion, Foreign Affairs, July/August 2001.

6. பார்க்க: e.g. Akehurst, ‘Jurisdiction, p. 160; A. Cowles, ‘Universality of Jurisdiction over War Crimes’, 33 California Law Review, 1945, p. 177; Brownlie Principles, pp. 304-5; Bowett, ‘Jurisdiction’, p.12; Higgins, பக்:. 56; Mann, ‘Doctrine of Juns-diction’, பக்.93, and Bassiouni, Crimes against Humanity, p. 510. அத்துடன், See also the Eichmann case, 36 ILR, pp. 5 and 277 and the UN War Crimes Commission, 15 Lal Reports of Trials of War Criminals, 1949, p. 26. ஐயும் பார்க்கவும்.  இருப்பினும், Judge Guillaume Congo v. Belgium, ICJ Reports, 2002, para. வழக்கின் பிரத்தியேக அறிக்கையையும், அதிலுள்ள 12 (Restriction Universal Jurisdiction to Piracy) and the Joint Separate Opinion, ibid, para. 51 (Universal jurisdiction may possibly exist with regard to the Geneva Conventions of 1949 on war crimes, போன்றவை.) ஐயும் chapter 5, p.234 ஐயும் பார்க்கவும்.

7. See e.g. Calley v. Calloway 382 F. Supp. 650 (1974), revd 51g 2d 184 (1975), Cert. denied 425 Us 911 (1976).

8. இந்தக் கட்டுரையின் 228 ஆவது Treaty of Versailles, 1919; மேலே உள்ள அத்தியாயம் 5, பக்.233 ஐயும் பார்க்கவும்

9. Resolution 95 (1) ஐயும் Yearbook of the ILC, 1950, vol. Il, p. ஐயும் பார்க்கவும். கூடவே, 195; 253 HL Deb., col. 831, 2 December 1963; The British Manual of Military Law, Part III, 1958, para. 637; Brownells, Principles, p. 562, and P. Weiss, Time Limits for the Prosecution of Crimes என்பவற்றையும் பார்க்கவும்.

10. பார்க்க: e.g. Weiss, Time Limits against International Law’, 53 BYIL, 1982, pp.163, 188.

11. பார்க்க: Article: 49 of the First Geneva Convention; article 50 of the Second Geneva Convention; article 129 of the Third Geneva Convention and article 146 of the Fourth Geneva Convention, See also e.g. GI.A.D Draper, The Red Cross Conventions, London,1958, p. 105, Ct, Bowett, ‘Jurisdiction’, p.12.

12. See further above, chapter 5, p.236.

13. 36 ILR, pp.5 and 277. See also the Barbie cases, 78 ILR, pp. 78,125, 136 and Demjanjuk v. Perovsky 776 F.2d 571 (1985); 79 ILR, p.534. See also Keesing’s Record of World Events, p.36189 regarding the Demjanjuk case in Israel.

14. பார்க்க e.g. Brownlie, Principles, p.562; L.C. Green, The Contemporary Law of Armed Conflict, 2nd edn, Manchester, 2000, chapter 18; E. Schwelb, ‘Crimes Against Humanity; 23 BYIL, 1946, p. 178. கூடவே இதையும் பார்க்கவும்: The commentary to article 20 of the draft statute for an International criminal court which refers to the concept as a term of art, report of the international law commission, A/49/10, 1994 p.75. ஒரு குறிப்பிட்ட உள்நாட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பைப் பயன்படுத்துவதற்கு, குற்றம் சாட்டப்பட்டவரின் முன்னிலை அவசியமா என்பது உள்நாட்டுச் சட்டத்தைப் பொறுத்த விஷயமாகும். வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாளுகின்றன. பெல்ஜிய மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது of 12 February 2003 க்கான HSA et al. v. SA et al. வழக்குக்கான தீர்ப்பில் (1982ஆம் ஆண்டில் லெபனானில் உள்ள Ariel Sharon, Amos Yaron ஆகிய முகாம்களில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக, பிரதிவாதிகளான ஏரியல் ஷரோன், அமோஸ் யாரோன் மற்றும் பிறர் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கைத் தொடர்புறுத்தி)  No. P. 02. 1139, F/1, இல் மன்னிக்கப்பட்டவரின் முன்னிலைப்படுத்தல் அவசியமற்றது என்ற கருத்தை ஏற்றுக்கொண்டது. இருப்பினும், குவாட்டமாலா இனப்படுகொலை வழக்கில், 25 பிப்ரவரி 2003 அன்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எண் 327/2003 இல், ஸ்பானிய தேசம் பாதிக்கப்பட்ட இனப்படுகொலைச் செயல்களுக்கு மட்டுமே, அந்த அதிகார வரம்பு பொருந்தும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட அதிகார வரம்பை நீட்டிப்பதைச் சட்டபூர்வமாக்குவதற்கு, உள்நாட்டு நடவடிக்கைகளுக்கும் கூறப்படும் குற்றத்திற்கும் இடையே ஏதேனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டது.

15. S/257/704, 1993, at paragraphs 47-8.

16. Article 25.

17. பார்க்க: Article 3 of the statute of the international tribunal for the Barbie casem 100 ILR, p. 330 and the Touvier case, ibid, p 337.

18. Article 5

19. Article 25

20. சர்வதேச சட்ட ஆணைக்குழு, A/51/10, 1996, p.9.

இது 1982 வரை பரிசீலனையில் இருந்தது, பார்க்க: General Assembly resolution 36/106 of December 1981. 1954இல் ILC இனால் ஒரு வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்டு ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது; ஆக்கிரமிப்புக்கான ஒரு வரையறை உருவாக்கப்படும் வரை அதன் பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது: தீர்மானம் 897 (IX). இது 1974இல் நிறைவேற்றப்பட்டது; பார்க்க: தீர்மானம் 3314 (XXIX). ஒரு வரைவுச் சட்டம் 1991இல் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; பிரிவு A 46/10, ILM, 1991, பக். 1584. கூடவே அத்: 5, p.237 ஐயும் பார்க்கவும்.

21. சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் அறிக்கை: A/51/10, 1996, p.51. 26ஆவது சரத்தின் பிரிவு 8, இது ஆக்கிரமிப்புக் குற்றத்திற்குப் பொருந்தாது என்றும் தனி நபர்கள் தொடர்பான அதிகார வரம்பு ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இருக்கும் என்றும் குறிப்பிடுகிறது.

22. 1991 ஆம் ஆண்டு வரைபில் குறிப்பிடப்பட்ட மேலதிக குற்றங்களில், கூலிப்படையினரை ஆட்சேர்ப்புச் செய்தல், பயன்படுத்துதல், அவர்களுக்கு நிதியளித்தல், பயிற்சி அளித்தல் என்பவையும், சர்வதேச பயங்கரவாதம், சட்டவிரோத போதை மருந்து கடத்தல், சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதம் விளைவித்தல் ஆகியவையும் அடங்குகின்றன.

23. பார்க்க: e.g. ‘Akehurst’ Jurisdiction, pp. 160-1

24. பார்க்க: e.g. Millett LJ in Ex parte Pinochet (No.3) (2000) | AC147, 275. இவற்றையும் பார்க்க: R. Van Alebeek, ‘The Pinochet Case: International Human Rights Law on Trial, 71 BYIL, 2000, p.29.

25. ‘நிபந்தனைக்குட்பட்ட உலகளாவிய அதிகார வரம்பு’ என்ற சொற்றொடரும் முன்மொழியப்பட்டுள்ளது: பார்க்க, A. Cassese, ‘சர்வதேச குற்றங்களுக்காக மூத்த அரசு அதிகாரிகள் எப்போது விசாரிக்கப்படலாம், 13E JIL, 2022, pp.853, 856.

26. ICJ அறிக்கைகள், 2002, பந்திகள், 41, 42. தேசிய எல்லைக்குள் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படாத குற்றவாளிகளை விசாரிப்பதற்கு வழிவகை செய்யும் சர்வதேச உடன்படிக்கைகளைக் குறிப்பிடுவதற்கு ‘Subsidiary Universal Jurisdiction’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் நீதிபதி கில்லாமினது தனிப்பட்ட கருத்தையும் காண்க: பந்தி 12-ஐப் பார்க்கவும்.

27. பார்க்க உ-ம்: The Belgian Laws of 16 June 1993, and February 1999. இருப்பினும், 7 மே 2003 அன்று, சர்வதேச தீர்ப்பாயங்கள், அல்லது குற்றம் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பிராந்திய அல்லது தேசிய அளவிலான தொடர்பு கொண்ட தீர்ப்பாயங்களின் முன், இந்த விடயம்  கொண்டுவரப்பட்டால், அத்தகைய வழக்குத் தொடர்வதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் இது திருத்தப்பட்டது. 22 ஜூன் 2003 அன்று செய்யப்பட்ட ஒரு மேலதிக திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவர் பெல்ஜியக் குடிமகனாவோ அல்லது குறைந்தது மூன்று ஆண்டுகள் அங்கு வசிப்பவராகவோ இருக்க வேண்டும் (30 ஜூன் 2003 முதல் நடைமுறையில் உள்ள சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்களுக்கான ஜெர்மன் சட்டத் தொகுப்பையும் பார்க்கவும்). அரசு அதிகாரிகளுக்கு வழக்குத் தொடரப்படுவதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான பிரச்சினை கீழே, அத்தியாயம் 13, பக்கம் 621இல் கையாளப்பட்டுள்ளது.

28. மேலதிக விவரங்களுக்கு பார்க்க: Chapter 6, p. 303.

29. பார்க்க e.g. ‘The UK taking of hostages Act 1982’.

30. அதாவது, 1949 ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கையும் அதன் நெறிமுறையும்; 1970 ஆம் ஆண்டின் ஹேக் உடன்படிக்கை; 1971 ஆம் ஆண்டின் மான்ட்ரீல் உடன்படிக்கை; 1973 ஆம் ஆண்டின் நிறவெறி உடன்படிக்கை; 1973 ஆம் ஆண்டின் சர்வதேச பாதுகாக்கப்பட்ட நபர்கள் உடன்படிக்கை; 1979 ஆம் ஆண்டின் பணயக்கைதிகள் உடன்படிக்கை; 1984 ஆம் ஆண்டின் சித்திரவதை உடன்படிக்கை; 1988 ஆம் ஆண்டின் கடல்வழிப் போக்குவரத்துப் பாதுகாப்பு உடன்படிக்கைகளும் நெறிமுறைகளும்; மற்றும் 1988 ஆம் ஆண்டின் போதை மருந்துகள், மனோவியல்சார் உந்துதல் நடவடிக்கைகளுக்கான பொருட்களின் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான உடன்படிக்கை ஆகியவற்றிலிருந்து உருவானவை; சர்வதேச சட்ட ஆணையத்தின் அறிக்கை A/49/10, 1994 இன் பக்கம் 141 ஐயும் அதைத் தொடரும் பக்கங்களையும் பார்க்கவும்.

31. Article 4

32. Article 5

33. Article 7

34. Article 8.

35. (200)/ AC 147,148, 159-60, 188-90, 202, 218-19 and 233; 119 ILR.

36. See above, chapter 4, p.128. And see above, chapter 4, p.128.

37. (2000) | AC 147, 276; 119 ILR, p.135. See also e.g. R.O’Keefe, Customary International Crimes in English Court’, 72 BYIL, 2001, P.293.

38. Article 2. See e.g. UK Internationally Protracted Persons Act 1978.

39. Article 3.

40. Article 1.

41. See e.g. The UK taking of hostages act 1982

42. Article 9.

43. Article 10.

44. Article 14.

45. Article 4.  பார்க்க: S. Shuber – ‘விமானத்தில் நடக்கும் குற்றங்கள் மீதான சட்ட அதிகார வரம்பு’, The Hague 1973; N.D. Joyner இனது ‘வான்வழிக் கடத்தல், ஒரு சர்வதேசக் குற்றமாக..’, Dobbs Ferry 1974, மற்றும். E. Mc Winney இன் ‘வான்வழிக் கடற்கொள்ளையும், சர்வதேசப் பயங்கரவாதமும்’ நூலின் 2 ஆம் பதிப்பு, Dordrecht 1987 ஆகியவற்றையும், மேலும், 1974 ஆம் ஆண்டின் அமெரிக்கக் கடத்தல் தடுப்புச் சட்டத்தையும், மேலேயுள்ள அத்தியாயம் 10, பக்கம் 472 ஐயும் பார்க்கவும்.  

46. இராணுவ, சுங்க அல்லது காவல் சேவைகளில் பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு ‘டோக்கியோ’ அல்லது ‘ஹேக்’ உடன்படிக்கைகள் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பார்க்க: Article 1 (4) and 3 (2) respectively.

47. ‘Hindawi Episode’ சம்பவத்தைக் கவனிக்கவும். இதில் ஐக்கிய இராச்சியத்தில் நடந்த ஒரு நீதிமன்ற வழக்கின் போது, சிரியா உளவுத்துறையை அணுக முயற்சித்தது என்பது தெரியவந்த சூழ்நிலையில், ஐரோப்பிய சமூகம் சிரியா மீது தடைகளை விதித்தது: பார்க்க: கீசிங்கின் ‘சமகால சாதனைகள்’, பக்கங்கள் 34771-2 மற்றும் 34883-4.

48. பார்க்க: US v. Yunis (No.2) 681 F.Supp. 896, 900-1 (1988); 82 ILR, pp.344, 348. See also US v. Yunis (No.3) 924 F.2d 1086, 1091 (1991); 88 ILR, pp. 176, 181.

49. கவனிக்க: இந்த ‘ஃபிளாட்டோவ் எதிர் ஈரான் இஸ்லாமியக் குடியரசு’ வழக்கில், அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், ‘சர்வதேச பயங்கரவாதம் உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டது’ என்று கூறியது, 999 F.Supp. 1,14 (1998); 121 ILR, ப. 618.

50. உதாரணமாக, பொதுச் சபை தீர்மானம் 2645 (XXV) மற்றும் பாதுகாப்புக் குழு தீர்மானம் (1970) ஆகியவற்றைக் காண்க.

51. மேலுள்ள அத். 10 ஐப் பார்க்கவும்., p.472.

52. பார்க்க ‘UKMIL, 49 BYIL’, 1978, p.423. பிரகடனத்தை வெளியிட்ட அரசுகள், Japan, UK, France, US, Canada, West Germany, Italy and Japan ஆகியவையாகும்.

53. பார்க்க: உதாரணம்: The US-Cuban Memorandum of Understanding on Hijacking of Aircraft and Vessels and Other Offences, 1973.

54. பார்க்க: உதாரணம்: The US Anti-Hijacking Act of 1974 and the UK Civil Aviation Act 1982 S/92 and the Aviation Security Act 1982.

55. மேலும், சர்வதேச பயங்கரவாதம் தொடர்பாக பார்க்க, அத்தியாயம் 20 இன் கீழ் பக்கம் 1048.

56. Resolution 337 (1973).

57. ICAO Doc. 9050-LC/169-1, at p. 196 (1973).

58. See Keesing’s Contemporary Archives, p. 34078 and The Times, 6 February 1986, p.4. இந்தச் சூழலில், 1985 ஜூன் மாதம் ‘TWA பயணிகள் விமானம்’ கடத்தப்பட்டதையும், ஒரு பயணி கொலை செய்யப்பட்டதையும், எஞ்சிய பயணிகளும் விமான ஊழியர்களும் லெபனானில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  பார்க்க: Keesing’s Contemporary Archives, p. 34130. கூடவே,  A. Cassese, Violence and Law in the Modern Age, Cambridge, 1988 இன் Chapter 4 ஐயும் பார்க்கவும்.

59. பார்க்க: The Times, 5 February 1986, p. 1.

60. பார்க்க: உதாரணமாக, 1976 Entebbe Incident தொடர்பாக, Chapter 20 இன் கீழ், p. 1033.

61. பார்க்க: உ-ம்: F. Morgenstern ‘Jurisdiction in Seizures Effected in Violation of International Law’, 29 BYIL, 1952, p. 256; P. O’Higgins ‘Unlawful Seizure and Irregular Extradition’, 36 BYIL, 1960, p.279.

A. Lowenfeld, ‘US Law Enforcement Abroad: The Constitution and International Law’, 83 AJIL, 1989, p. 880; Lowenfeld, ‘US Law Enforcement Abroad: The Constitution and International Law, Continued’, 84 AJIL, 1990, p. 444; Lowenfeld, ‘Kidnapping by Government Order: A Follow-Up.’ 84 AJIL, 1990, p. 712, and Lowenfeld, ‘Still More on Kidnapping.’ 85 AJIL, 1991, p. 655. See also F.A. Mann, ‘Reflection on the Prosecution of Persons Abducted in Breach of International Law’ in International Law at a Time of Perplexity (ed. Y. Dinstein), Dordrecht, 1989, p. 407, and Higgins, Problems and Process, p. 69.

62. See e.g. Article 2 (4) of the United Nations Charter and Nicaragua v. US, ICJ Reports, 1986, p. 110; 76 ILR, p. 349. மேலும், Chapter 20.

63. குறிப்பாக, செல்லுபடியாகக் கூடிய தற்காப்பு வாதத்தை அனுமதிக்கின்ற சூழ்நிலைகளில், சர்வதேச சட்டம் ‘எல்லைக்கு அப்பாற்பட்ட கைதுகளை’ அனுமதித்தாலும், எந்தவொரு எல்லைக்கு அப்பாற்பட்ட கைது குறித்த முடிவும், அமெரிக்கப் பணியாளர்கள், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடனான நமது உறவுகள் என்பவை தொடர்பான கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது என்ற அமெரிக்க வெளியுறவுத் துறையின் சட்ட ஆலோசகரது கருத்தையும் கவனிக்கவும், 84 AJIL, 1990, பக். 725-727.

64. பார்க்க:  Mann, Jurisdiction, p. 415.

65. See e.g. The Eichmann case, 36 ILR, pp. 5 and 277.

66. பார்க்க: Higgins, ‘Problems and Process’, p. 69.

67. 55 F.2d 267 (1974); 61 ILR, p. 190.

68. பார்க்க: குறிப்பாக, Ker v. Illinois, 119 US 436 (1886) and Frisbie v. reference to the Ker-Frisbie doctrine, Collins 342 US 519 (1952). இந்த வழக்குகள்  ‘Ker-Frisbie’ கோட்பாட்டின் பயன்பாட்டுக்கு வழிவகுத்தன.

69. 510 F.2d 62 (1975); 61 ILR, p. 206. See also US v. Lira 515 F.2d.

68 (1975); Lowenfeld, ‘Kidnapping’, p. 712; Afsaneh v. Attorney-General 10 AD, p. 327, and Re Argoud 45 ILR, p. 90.

70. இந்த அணுகுமுறை, US v. Yunis என்ற வழக்கில் மாவட்ட நீதிமன்றாலும், (681 F.Supp. 909, 918-21 (1988) மேல்முறையீட்டு நீதிமன்றத்தாலும் (30 ILM, 1991, pp. 403,408-9.) பயன்படுத்தப்பட்டது.

71. 119 L Ed 2d 441 (1992); 95 ILR, P. 355. பின்வருபவற்றையும் பார்க்கவும்: M. Halberstam, In Defence of the Supreme Court Decision in Alvarez-Machain, 86 AJIL, 1992, p. 736, and M.J. Glennon.

‘State-Sponsored Abduction: A comment on United States v. Alvarez-Machain’, ibid, p. 746.

72. 119 L.Ed.2d 451; 95 ILR, p. 363. அத்துடன், கடத்தல் உண்மையில் சர்வதேச சட்டத்தையும் ஒப்படைத்தல் ஒப்பந்தத்தையும் மீறியுள்ளது என்ற கருத்தைக் கொண்டிருந்த மாற்றுக்கருத்தையும் காண்க:

119 ILR, pp. 369-79. குற்றம் சாட்டப்பட்டவர் இறுதியில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டு மெக்சிகோவிற்குத் திரும்பினார்: 107 F.3d 696, 699 (9th Cir. 1996). அவர் இழப்பீடு கோரி ஒரு வழக்கையும் தொடங்கினார். அந்த வழக்கில், ஒன்பதாவது வட்டாரத்திற்கான அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மீறப்பட்டிருந்ததால், அவரது கடத்தல் சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகும் என்று குறிப்பிட்டது. பார்க்க: Alvarez-Machain v. United States 41 ILM, 2002, pp. 130, 133.

73. [1986] | QB 95; 77 ILR, p. 351. See also Ex parte Susannah Scott.

(1829) 9 B & C 446; Sinclair v. HM Advocate (1890) 17 R (J) 38 and Rv. Officer Commanding Depot Battalion ex parte Mackerson (1981) 75 CrApp R 24.

74. [1993] 3 WLR 90; 95 ILR, P. 380.

75. [1993] 3 WLR 105;95 ILR, p. 393, per Lord Griffiths. See also Lord Bridge. 1993] 3 WLR 110;95 IR, p.399 and Lord Steyn, (1903) 3 WLR 125; 95 ILA, P. 416. சுவிற்சர்லாந்தில் இருந்து அரசு அதிகாரிகளால் ஒருவர், சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டதன் விளைவாக, தென்னாபிரிக்க நீதிமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையும் தீர்ப்பும், ரத்து செய்யப்பட்ட ‘State v Ibrahim’ (95 ILR, 417) வழக்கில், தென்னாபிரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பாலும் பிரபுக்கள் சபை பாதிக்கப்பட்டது. இந்தக் கண்ணோட்டம், ரோமன்-டச்சு மற்றும் தென்னாபிரிக்கப் பொதுச் சட்டம், சர்வதேச சட்டம் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

76. [1996] / WLR 104, see Lord Steyn, at 112-13, See also Rv. Muller [1999] 2 Cr App R 143.

77. See In re Schmidt [1995] | AC 339; 111 ILR, p. 548 (House of Lords).

78. [1998] / WLR 652, 665-7, See also C. Warbrick, Judicial Jurisdiction and Abuse of Process’. 49 ICLQ, 2000, p. 489.

79. 28 USC, 1350 (1982), Originally enacted as part of the judiciary Act of 1789. See also 28 USC, para. 1331, and above, Chapter 4, p. 145.

80. இந்தச் சட்டத்தின் கீழ் கோரப்படும் விரிவான, உரிமைசார் அதிகார வரம்பை மற்ற மாநிலங்கள் எதுவும் சவால் செய்யாமல் இருக்கும் போது, மூத்த அரச அதிகாரிகள் எப்போது அதைச் செய்யப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் கசேசி (Cassese), பக்.889.

81. 630 F.2d 876 (2d Cir. 1980); 77 ILR, p. 169. இதையும் பார்க்கவும்:  577 F.Supp.860 (1984);  ILR, பக்: 185, ‘தண்டனைக்கான இழப்பீடுகளை வழங்குதல்’. 

82. ‘தேசங்களின் சட்டத்தின் உள்ளடக்கத்தை நிறுவுகின்ற போது, இன்று நடைமுறையில் உள்ள சர்வதேச சட்டத்தை  விளக்குவது என்பது நீதிமன்றங்களால் அவசியம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். 630 F. 2d 876, 881 (1980); 77 ILR, pp. 169, 175

83. 726 F.2d 774 (1984); 77 ILR, p. 204. See also ‘Agora’, 79 AJIL, 1985, pp. 92 ff. for a discussion of the case.

84. 726 F.2d 801; 77 ILR, p. 230.

85. Siderman v. Republic of Argentina, 965 F.2d 699 (1992).

86. Handel v. Artukovic 601 F.Supp. 1421 (1.985); 79 ILR, p. 397.

87. 770 F.2d 202 (1985); 80 ILR, p.586.

88. 770 F.2d 206-7; 80 ILR, pp. 590-1.

89. 34 ILM, 1995, p. 1592.

90. Ibid, p. 1600.

91. Ibid, pp. 1602-6

92. Ibid, p. 1607.

93. Ibid, pp. 1607-8.  குறிப்பு:  இருப்பினும், ‘வெளிநாட்டு இறையாண்மை விலக்குரிமை’ச் சட்டத்தைத் திருத்திய 1996 ஆம் ஆண்டின் ‘பயங்கரவாத எதிர்ப்பும் பயனுள்ள மரண தண்டனையும்’ என்ற சட்டத்தின்படி, அமெரிக்கக் குடிமகனின் மரணம் அல்லது தனிப்பட்ட காயத்திற்கு வழிவகுக்கும் ஒரு பயங்கரவாதச் செயலை, அல்லது அதையொத்த ஒரு செயலைச் செய்த ஒரு தனிநபருக்கு அல்லது அமைப்புக்கு, பொருளாதார ஆதரவையும் வளங்களையும் வழங்கிய, பயங்கரவாத நாடுகள் என அமெரிக்க வெளியுறவுத் துறையால், குறிப்பிடப்படும் நாடுகளுக்கு, இந்த விலக்குரிமையிலிருந்து ஒரு விதிவிலக்கு உருவாக்கப்பட்டுள்ளது (அல்லது அந்த உரிமை மறுக்கப்படுகிறது) என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

94. Amerada Hess Shipping Corp. v. Argentine Republic 830 F.2d 421 (1987); 79 ILR, p.8.

95. See below, chapter 13, p. 630.

96. Argentine Republic v. Amerada Hess Shipping Corp. 109 S. Ct. 683 (1989); 81 ILR, p. 658.

97. 109 S. Ct. 689; 81 ILR, pp. 664-5.

98. 109 S. Ct. 690. See also Smith v. Libya 101 F.3d 239 (1996); 113 ILR, p. 534.

99. see p.605.

100. 41 ILM, 2002, p. 130 See also the decision of 3 June 2003.

101. உதாரணமாக: I.A Shearer இன் ‘சர்வதேச சட்டத்தில் நாடுகடத்தல்’, Leiden 1971; M.C. Bassiouni இன், ‘சர்வதேச நாடுகடத்தலும் உலகப் பொது ஒழுங்கும்’, Leiden 1974; I. Standbrook, C. Standbrook, ஆகியோரின் ‘நாடுகடத்தலின் சட்டமும் நடைமுறையும்’, Chichester, 1980; M, Forde இன் ‘ஐக்கிய இராச்சியத்தில் நாடுகடத்தல் சட்டம்’, லண்டன், 1995; A.Jones இன் ‘நாடுகடத்தல் குறித்த ஜோனின் பார்வை’, லண்டன், 1995; G. Gilbert இன் நாடுகடத்தல் சட்டத்தின் அம்சங்கள், Dordrecht, 1991, மற்றும் Gilbert, சர்வதேச சட்டத்தில் நாடுகடந்த தப்பியோடிய குற்றவாளிகள்; நாடுகடத்தல் மற்றும் பிற வழிமுறைகள், The Hague, 1998; Henkin உம் மற்றும் பலரும், சர்வதேச சட்ட வழக்குகள், ஆவணங்கள், பக்கம். 1111 மற்றும் Oppenheim இன் சர்வதேச சட்டம், பக்: 958. இருதரப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான அரசுகளின் வாரிசுரிமை குறித்த செயலகத்தின் ஆய்வையும் பார்க்கவும், ILC ஆண்டுப் புத்தகம், 1970, தொகுதி II, பக்கங்கள் 102, 105.

102. எடுத்துக்காட்டாக, நீதிபதிகள் Evensen, Tarasov, Guillaume, Aguilera Maudsley ஆகியோரின் கூட்டுப் பிரகடனம், ‘லாக்கர்பி வழக்கு’, ICJ அறிக்கை, 1992, பக்கம் 38; 94 ILR, பக்கம் 521 ஆகியவற்றைக் காண்க.

103. ஆனால் இப்போது, Government of  Denmark  v Neilson [1984] 2 All ER 81; 74 ILR, பக்கம் 458 மற்றும் அமெரிக்க அரசு எதிர் மெக்காலரி (1984) 2 AlI ER 570 ஆகிய வழக்குகளின் பிரபுக்கள் சபையின் தீர்ப்புகளைப் பார்க்கவும்.

104. See e.g. Oppenheim’s International Law, p. 961.

105. Ibid, p. 962.

106. பார்க்க: உதாரணம்: 1977 ஆம் ஆண்டின் பயங்கரவாத ஒடுக்குமுறை தொடர்பான  ஐரோப்பிய மாநாட்டின் பிரிவு 1, அரசியல் குற்றங்களாகவோ அல்லது அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்டவையாகவோ கருதப்படாத குற்றங்களின் பட்டியலை வழங்குகிறது. இந்த அணுகுமுறை, 1997 ஆம் ஆண்டின் ‘பயங்கரவாத குண்டுவெடிப்பு’களை அடக்குவதற்கான மாநாட்டின் பிரிவு II இலும் பின்பற்றப்படுகிறது. மேலும் Mc Mullen case P. 435; Re Piperno, ibid, ப. 683 மற்றும் US v. Mackin 668 F.2d 122 (1981); 79 ILR, ப. 459. சர்வதேச ஒப்படைப்புக் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல் ஒன்று அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்டது (Times, 25 ஜூன் 1985, ப.1). அதில் இருந்த, வன்முறைக் குற்றங்களுக்குப் பொருந்தக்கூடிய அரசியல் குற்றங்களுக்கான ‘ஓட்டை’ என்பது, ‘நீதியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு, அதே உயர் மதிப்பைப் பகிர்ந்து கொள்வதும், அதையொத்த சுதந்திரமான நீதி அமைப்புகளை இயக்குவதும்’ என்ற, ஜனநாயக நாடுகளுக்கு இடையே நிலவும் ஒப்படைத்தல் ஏற்பாடுகளுக்குப் பொருத்தமானதல்ல என்று கூறப்பட்டது. ஒப்படைத்தல் தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் சட்டம், இப்போது 1989 ஆம் ஆண்டின் ஒப்படைத்தல் சட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும், இவற்றையும் பார்க்கவும்:  1. Government of Belgium v. Postlethwaite [1987] 2 AlIER 985, 2. Rv.Chief Metropolitan Magistrate, ex parte Secretary of State for the Home Department [1988].



About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்