April 2026 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

April 2026 தொடர்கள்

இறையாண்மை இல்லாத பிரதேசம்: நிலம் எனும் களத்திலே – பகுதி 2

29 நிமிட வாசிப்பு

மீள்குடியேற்றம்: மீட்சி இல்லாத உள்ளடக்கல் மீள்குடியேற்றம் என்பது பெரும்பாலும் இடப்பெயர்வின் தார்மீக, அரசியல் ரீதியான முடிவாக முன்வைக்கப்படுகிறது. கொள்கை விவாதத்தில், இது வேரோடு பிடுங்கப்பட்டவர்கள் தங்கள் உரிமையான இடத்திற்குத் திரும்பும் தருணத்தைக் குறிக்கிறது. இது மீட்சி, இயல்புநிலை, வாழ்வின் மீட்சிக்கு ஒரு சமிக்ஞையாக அமைகிறது. இலங்கையில், 2009க்குப் பிந்தைய மீள்குடியேற்றம் துல்லியமாக இதே சொற்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனிதாபிமான, அபிவிருத்தி வெற்றியாகவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் கட்டியெழுப்பி […]

மேலும் பார்க்க

இறையாண்மை இல்லாத பிரதேசம்: நிலம் எனும் களத்திலே – பகுதி 1 

44 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் 2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்த காலம் பெரும்பாலும் ஒரு காலப்பிளவாக – வன்முறைக்கும் அமைதிக்கும், அழிவுக்கும் புனரமைப்புக்கும், மோதலுக்கும் மீட்சிக்கும் இடையிலான ஒரு தீர்க்கமான முறிவாக – விவரிக்கப்படுகிறது. ஆயினும், இத்தகைய விவரிப்புகள் போருக்குப் பிந்தைய நிலையின் ஒரு முக்கியமான பரிமாணத்தை மறைக்கின்றன. அதாவது, வெளியின் வழியாகப் போர் எவ்வாறு நிகழ்காலத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கிறது என்பதே அந்தப் பரிமாணம். வடக்குக் கிழக்கின் நிலப்பரப்புகள் […]

மேலும் பார்க்க

கண்டியின் சமூக உருவாக்கம் – பகுதி 2

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க உற்பத்தி மேன்மிகையின் சுரண்டல் மாதிரிகள் கண்டியின் நிலமானிய முறையில் நெல் உற்பத்தி பிரதான இடத்தைப் பெற்றது. காணிகளின் உடைமையாளர்களான நிலப்பிரபுக்களின் காணிகளைப் பயிரிடும் குடியான் விவசாயிகளின் உழைப்பின் மேன்மிகை (Surplus) ஆறு வடிவங்களில் அறவிடப்பட்டது. மேன்மிகையினை அறவிடும் இந்த வடிவங்களை நியூட்டன் குணசிங்க அவர்கள் ‘மேன்மிகையைச் சுரண்டும் மாதிரிகள் (Patterns of Surplus Extraction) என்ற தொடரால் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ஆறு மாதிரிகள் […]

மேலும் பார்க்க

உரிமை மீறல்கள், சித்திரவதைக் குற்றங்கள் என்பவற்றுக்கான சர்வதேச சட்டவரம்பின் நியாயாதிக்கத்தில் நிலவும் சிக்கல்கள் – பகுதி 2

74 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நீதியரசர் கலாநிதி சந்திரதாச நாணயக்கார “இந்த நாட்டிலும் கூட நீதித்துறையானது, வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைகள் தொடர்பாக, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, சந்தர்ப்பம் தேவைப்படும் போதெல்லாம், முறையான சிவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஒரு துடிப்பானதும் வலுவானதுமான தனது அணுகுமுறையை வெளிப்படுத்த முடியும்.” என்ற, கடந்த இதழில் வெளியான இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளின் தொடர்ச்சியாக வாசகர்கள் இந்தப் பகுதி 2 இனைத் தொடர்ந்து வாசிக்கலாம். […]

மேலும் பார்க்க

இலங்கையில் தமிழர்கள் மத்தியில் கண்ணகி வழிபாடு

18 நிமிட வாசிப்பு

இலங்கையின் வடக்குப் பகுதியில் கண்ணகி வழிபாடு  கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எடுத்த விழாவில் கலந்துகொண்ட இலங்கை வேந்தன் கயபாகு மீளும் போது ஜம்புகோளப்பட்டினம் என்ற சம்பில் துறையிலே வந்திறங்கினான் என்று கருதப்படுகின்றது. கயபாகு வேந்தன் கந்தரோடையிலுள்ள அங்கணாமக்கடவையில் பத்தினிக்குக் கோயில் அமைத்துத் தனது உருவச் சிலையையும் கோயில் முன்றலில் நிறுவியிருக்கலாம் என்பர்.1 அடையாளம் காணமுடியாத நிலையிலுள்ள அங்கணாமைக்கடவைக் கண்ணகி கோவில் கந்தரோடையிலுள்ள கதிரமலைக்கு அருகாமையில் இருந்ததாக இன்றைய ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.2 […]

மேலும் பார்க்க

1990களின் பின்னர் மலையகத் தமிழ் மக்களின் கல்வி, தொழில் மற்றும் பண்பாடுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

10 நிமிட வாசிப்பு

முன்னர் மலையக மக்களின் கல்வி வளர்ச்சி குறித்து மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, 1990களுக்குப் பின்னரான காலப்பகுதியில் மலையகக் கல்வி வளர்ச்சிக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும், அதன் விளைவாக உருவான சமூகத் தாக்கங்களையும் இக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது. அத்துடன், மலையக மக்களின் மரபு ரீதியான தொழில்களிலும், அவர்களது தனித்துவமான பாரம்பரியப் பண்பாட்டுக் கோலங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் இக்கட்டுரை விரிவாக விளக்குகின்றது. தேசிய கல்வி முறைக்குள் உள்வாங்கப்பட்ட மலையகத் […]

மேலும் பார்க்க

கண்டியின் சமூக உருவாக்கம் – பகுதி 1

10 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க நியூட்டன் குணசிங்க அவர்கள் எழுதிய ‘Changing Socio – Economic Relations in the Kandyan Countryside’ என்னும் நூல் கண்டியின் நிலமானிய சமூகத்தில் பிரித்தானிய காலனிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மாற்றங்களை ஆய்வு செய்யும் நூலாகும். இந்நூலின் இரண்டாவது அத்தியாயம் ‘The Kandyan Social Formation’ (கண்டியின் சமூக உருவாக்கம்) என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இவ்விரண்டாவது அத்தியாயத்தின் (பக். 21 […]

மேலும் பார்க்க

பாடலாசிரியர் எம்.பி. வேல்சாமி தாஸனின் சமூக விழிப்புணர்வும் ஆன்மிக கருத்துகளும்

15 நிமிட வாசிப்பு

ஐம்பதுகளின் இறுதி முதல் இரண்டாயிரமாம் ஆண்டு வரையில் பாடலாசிரியர் வேல்சாமி தாஸனின் செயற்பாடுகள் மலையக சமூக அசைவியக்கத்தினுள் அவதானிப்பிற்குரியதாக அமைந்திருந்தன. தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பங்குடி தொகுதியின் மைலன்கோன்பட்டி கிராமத்தை பூர்விகமாகக் கொண்டதன் அடையாளமாக ‘மெய்லாங்கோன்பட்டி எம்.பி. வேல்சாமி தாஸன்’ என தன்னைத் தனது பாடல் நூல்களில் அடையாளப்படுத்தியுள்ளார். இலங்கையில் கண்டி, தெல்தோட்டை, பட்டியாகம தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்த நிலையிலேயே தனது எண்ண உணர்வுகளை இவர் பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளார். […]

மேலும் பார்க்க

ஈழத்தின் வடமேற்கில் அன்றிருந்த தமிழ்க் கூத்து மரபு – பகுதி 2

21 நிமிட வாசிப்பு

முன்னுரை ஈழத்தின் வடமேற்குப் பகுதியில் உடப்பு எனும் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலும் மற்றும் அங்குள்ள பெண் தெய்வக் கோவில்களும் ஆகமம் சாராத மக்கள் வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தன. அவற்றை விரிவாக நோக்குவோம். உடப்பு கிராமத்தின் தனித்துவம் உடப்பு என்பது இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் சிலாபம் அருகில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியத் தமிழ்க் கிராமம். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் இந்துத் தமிழர்கள் ஆவர். இது ஒரு கடற்கரை […]

மேலும் பார்க்க

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வர்க்க இனத்துவ உணர்வு நிலை – பகுதி 2

27 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன இலங்கையில் அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் வரலாறு அந்நியர் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இலங்கையில் மேற்கிளம்பின. அந்நியக் கிளர்ச்சிகள் சில சந்தர்ப்பங்களில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளாகவும் அமைந்தன. பௌத்த பிக்குகள் இத்தகைய கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கியதையும், அக்கிளர்ச்சிகளில் பங்கு பற்றியதையும் காண முடிகிறது. இதன் பின்னணியில் பௌத்த பிக்குகள் பௌத்த சமயத்தைத் தூய்மைப்படுத்துவதிலும், பௌத்த மறுமலர்ச்சியிலும் தமது பங்களிப்பை […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்