March 2026 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

March 2026 தொடர்கள்

‘ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் செயற்பாட்டாளர்’ ஏ.எம். இராமையாவும், ‘தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயற்பாட்டாளர்’ எம்.ஏ. இராகவனும்

17 நிமிட வாசிப்பு

ஏ.எம். இராமையா அவர்களின் வீதிப்பாடல்கள் பல்வேறு தளங்களில் மலையக வீதிப்பாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன. கோவிந்தசாமி தேவரின் தோழராக இருந்து பாடல்களை வழங்கியவர்களில் முக்கியத்துவம் பெறுபவராக ஏ.எம். இராமையா தேவரை அடையாளம் காண முடிகிறது. எட்டியாந்தோட்டையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவராகவே கோவிந்தசாமி அடையாளங் காணப்பட்டிருந்தார். ஆனால் ஏ.எம். இராமையா தேவரின் வாழிடம் தொடர்பில் உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. அவரும் எட்டியாந்தோட்டையில் வாழ்ந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. அதேவேளை, […]

மேலும் பார்க்க

இலங்கையில் கண்ணகி வழிபாட்டுத் தலங்களும் சடங்குகளும்

32 நிமிட வாசிப்பு

ஈழ நாட்டில் காணப்படும் கண்ணகி வழிபாட்டுத் தலங்களை இரு பிரிவுகளாக வகைமை செய்து கொள்ளலாம். தமிழர்கள் வழிபடும், தமிழரின் தாயகப் பகுதியில் காணப்படும் கண்ணகை அம்மன் கோயில்கள், சிங்கள மக்களால் வழிபடப்படும் பத்தினி தெய்வக் கோயில்கள் என்பனவாம் அவை. கண்ணகி வழிபாட்டின் தொன்மையினை இலக்கியங்களின் வழியும் அவ்வழிபாட்டுச் சடங்குகளின் வழியும் அறியலாம். கண்ணகி வழக்குரை, சிலம்பு கூறல், கோவலன் கதை என்பன கண்ணகி வரலாறு தொடர்பான பக்தி நிலையில் எழுந்த […]

மேலும் பார்க்க

போருக்குப் பிந்தைய சீரற்ற மீட்பு: சமத்துவமின்மையும் சமூகப் பழுதும் – பகுதி 2

39 நிமிட வாசிப்பு

ஆய்வுக்கதை 11: மீள்குடியேற்றத்தில் இடஞ்சார்ந்த பாகுபாடு கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மீள்குடியேற்றத்தில் புதிய வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தச் செயல்முறை அதிகாரபூர்வமாக நியாயமானது என்று விவரிக்கப்பட்டாலும், நிலம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பதில் குடியிருப்பாளர்கள் சில முறைகளைக் கவனித்தனர். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கினார்: “இது தற்செயலானது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும். சில குடும்பங்களுக்குச் சாலைக்கு […]

மேலும் பார்க்க

போருக்குப் பிந்தைய சீரற்ற மீட்பு: சமத்துவமின்மையும் சமூகப் பழுதும் – பகுதி 1

39 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் 2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, வடக்குக் கிழக்கின் பொருளாதார, நிறுவனக் கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உடனடியான, விரிவான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சாலைகள் புதுப்பிக்கப்பட்டன, ரயில் பாதைகள் மீண்டும் இணைக்கப்பட்டன, நிர்வாக அலுவலகங்கள் மீண்டும் செயற்படத் தொடங்கின, அபிவிருத்தித் திட்டங்கள் விரைவாகச் செயற்படுத்தப்பட்டன. அதிகாரபூர்வ உரையாடலில், இந்த மாற்றங்கள் ஒரு வெற்றிகரமான மாற்றத்திற்கான சான்றுகளாகக் காட்டப்பட்டன. மோதலில் இருந்து அமைதிக்கும், அழிவில் இருந்து […]

மேலும் பார்க்க

இலங்கையில் கண்ணகி வழிபாடு புகுந்த முறை

12 நிமிட வாசிப்பு

சிலப்பதிகாரம் என்பது தமிழர் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்ற ஓர் இலக்கியமாகும். சிலம்பில் கண்ணகி ஒரு வழிபாட்டுத் தெய்வமுமாகிய நிலையில் இலக்கிய வாழ்விற்கான தளமும் வாய்ப்பாகின்றது. தமிழ்ச் சூழலில் சிலப்பதிகாரம் என்ற சொல்லாடல் மூன்று நிலைகளில் நிலைபெற்று நிற்கின்றது. முதலாவது அதனுடைய காவியத்தன்மை, இரண்டாவது அதனுடைய பொதுமக்கள் மயப்பாடு, மூன்றாவது அது சடங்காசாரத்துடன் இணைந்த நிலை. இந்த மூன்று நிலைகளையும் தாண்டி இன்னொரு தளமும் அதற்குண்டு. அது தமிழர்கள், மலையாளிகள், சிங்களவர்கள் ஆகிய […]

மேலும் பார்க்க

மலையக வாய்மொழிப் பாடல்களில் வெளிப்படும் துரைமார்களின் அதிகாரம்

15 நிமிட வாசிப்பு

இலங்கையின் பொருளாதாரத்துக்கு மைய சக்தியாக விளங்குவது பெருந்தோட்டத் துறையாகும். பிரித்தானியக் காலனித்துவம் உருவாக்கிய இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் இலங்கை அரசு முழுமையாகத் தவிர்த்து மேலெழ முடியாத அளவுக்கு அதன் தாக்கம் நிலைபெற்றிருக்கிறது. பிரித்தானியக் காலனித்துவம் உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பொருளாதாரக் கட்டுமானங்களை வடிவமைத்தது. கைத்தொழில் புரட்சியின் பின்னர் தங்கள் நாட்டிற்கு தேவையான மூலவளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கும் பிரித்தானியர் வளமிக்க நாடுகளை […]

மேலும் பார்க்க

சைவசித்தாந்தம்: ஆறுமுக நாவலரும் வ.உ. சிதம்பரனாரும்

18 நிமிட வாசிப்பு

மதங்களால் மனித மனங்களும் சமூகக் கட்டமைப்பும் வடிவமைக்கப்பட்டிருந்த மத்திய காலத்தின் அடிப்படைப் பண்புகள் சில இன்றும் தாக்குறவுடன் உள்ளன. அனைத்து மதங்களும் தத்தமது பரப்புரைகளை இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தும் ஊடகமாகத் திகழ்ந்த தமிழ், மதச்சார்பின்மைப் பண்பெனும் தனக்குரிய தனித்துவத்தை இழந்து, சைவத் தமிழ் என்ற அடைமொழி ஏற்புடன் வலம் வருவதில் உள்ள முரண் கவனிப்புக்கு உரியது. பக்திப் பேரியக்கத்தில் தேவார – திருவாசகப் பாசுரங்கள் பரவலாக மேலெழுந்து வந்ததுடன் மட்டுமன்றி, […]

மேலும் பார்க்க

ஈழத்தின் வடமேற்கில் அன்றிருந்த தமிழ்க் கூத்து மரபு – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

முன்னுரை ஈழத்து தமிழ்க் கூத்துகள் பற்றிய தேடலும் ஆய்வும் கடந்த 65 வருடங்களாக நடந்து வருகின்றன. 1960களிலே கூத்துகளின் அறிமுகமாக ஆரம்பித்த இவ்வாய்வு, 1970களிலே ஆழம் பெறத் தொடங்கியது. 1980களில் இது பல்கலைக்கழக ஆய்வுப் பொருளாக வளர்ச்சி கண்டது. அக்காலங்களிலும் பின்னரும் இது பிரதேச ஆய்வுகளாகவும் நுணுக்க ஆய்வுகளாகவும் மலர்ந்து, இப்போது அது விமர்சன ஆய்வாக வளர்ந்து செல்வதைக் காணுகிறோம். இந்த 65 வருட கால ஆய்விலேயே ஈழத்தில் கூத்து […]

மேலும் பார்க்க

அதிகாரம்: ஓர் அரசியல் மெய்யியல் விளக்கம் 

27 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட அதிகாரம் அதிகாரம் (Power) என்னும் கருத்தாக்கம் அரசியல் கோட்பாடுகள் பற்றிய ஆய்வில் முதன்மையான ஆய்வுப் பொருளாக அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் ஹொப்ஸ் முதல் 19 ஆம் நூற்றாண்டினரான கார்ல் மார்க்ஸ், 20 ஆம் நூற்றாண்டின் அரசியல் சிந்தனையாளர்களான மக்ஸ் வெபர், றொபர்ட் டால் (Robert Dahl), ஹன்னா அரன்ட் (Hannah Arendt) வரை பலர் அதிகாரம் பற்றிய ஆழமான ஆய்வுகளைச் […]

மேலும் பார்க்க

இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 4

22 நிமிட வாசிப்பு

வீட்டுக்கு அழைத்தலும் திவசமும் மனித நாகரிகத்தின் தோற்றத்திலிருந்தே, வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் செயல்முறை நிகழ்ந்து வந்ததை காண முடிகின்றது. இதன் ஒரு பாலமாக மூதாதையர் வழிபாடு இருந்து வருகிறது. இது வெறும் சடங்கு ரீதியான மரபு என்பதைத் தாண்டி, ஒரு சமூகத்தின் வரலாறு, அறநெறி மற்றும் உளவியல் கட்டமைப்பின் அடித்தளமாகத் திகழ்கிறது. குறிப்பாக தமிழகத்தில் ‘தென்புலத்தார்’ என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கான கடமைகளை ஆற்றுவது இல்லறத் தர்மத்தின் தலையாயக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்