கொம்புமுறி விளையாட்டு: இலங்கையில் கண்ணகி - பத்தினி வழிபாட்டின் எச்சம்
கண்ணகி வழிபாட்டில் கொம்புமுறி விளையாட்டு
28 நிமிட வாசிப்பு
கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குசார் நிகழ்த்துகலைகளுள் ஒன்றாகக் கொம்பு விளையாட்டு காணப்படுகின்றது. இவ்விளையாட்டு அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதியில் நிகழ்த்தப்படுவது வழக்கம். மழைவளம் குன்றி நாட்டில் வெப்ப மிகுதியால் அம்மை, வைசூரி, குக்கல், வெப்பு, செங்கமாரி, கண்ணோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்ற போது அம்மனின் சீற்றத்தினாலேயே அவை ஏற்படுகின்றன என்ற அசையாத நம்பிக்கையினாலும் அவ்வியாதிகளைத் தீர்க்கின்ற தெய்வம் என்று பாராட்டியும் பக்தர்கள் அம்மனிற்குச் சாந்தி செய்ய வேண்டி இக்கொம்பு விளையாட்டை நிகழ்த்துகின்றனர். […]
மேலும் பார்க்க
இலங்கையில் தமிழர்கள் மத்தியில் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குகளும் நிகழ்த்துகலைகளும்
19 நிமிட வாசிப்பு
பன்னெடுங்காலந்தொட்டுக் கோயில்கள் சமூக நிறுவனங்களாக இயங்கி வந்திருக்கின்றன. சமூகத்தைத் தன்னுடன் பிணைத்துக்கொள்ள, மனிதனின் அன்றாட வாழ்வியலுடன் தொடர்புபட்ட விடயங்களான நம்பிக்கை அடிப்படையிலான சடங்குகளும் அதனுடன் இணைந்த நிகழ்த்துகலைகளும் கோயில்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலே கோயில்களினூடாக முன்னெடுக்கப்பட்ட சடங்குகளும் நிகழ்த்துகலைகளும் சமூகத்தினரை ஒன்றுதிரட்டுகின்ற களமாக விளங்கி வந்திருக்கின்றன. வைகாசிக் குளிர்த்திச் சடங்கு கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடம் ஒருதடவை வைகாசி மாதத்தில் வருகின்ற பூரணையில் இடம்பெறுகின்ற சடங்கு குளிர்த்திச் […]
மேலும் பார்க்க
இலங்கையில் சிங்கள மக்களிடையே கண்ணகி வழிபாடு
8 நிமிட வாசிப்பு
ஈழத்தில் தமிழர் வாழும் இடங்களில் கண்ணகி வழிபாடு நிலைத்திருப்பது போல சிங்கள மக்கள் வாழும் இடங்களிலும் கண்ணகி வழிபாடு பத்தினி வழிபாடாக நிலைபெற்று வருகின்றது. கயபாகு மன்னன் அனுராதபுரியை தலைநகராகக் கொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆட்சிசெய்த போது, கண்ணகியின் காற்சிலம்பை யானை மேல் வைத்து ஊர்வலமாகச் சென்று பெருவிழாக் கொண்டாடினான். இவ்விழாவிற் கலந்துகொண்ட சிங்களக் குறுநில மன்னர்களும் தங்களது பிரதேசங்களிலே இவ்வழிபாட்டை நிலைநிறுத்தினர் என்பது வரலாற்றுக் குறிப்பாகும். […]
மேலும் பார்க்க
இலங்கையில் தமிழர்கள் மத்தியில் கண்ணகி வழிபாடு
18 நிமிட வாசிப்பு
இலங்கையின் வடக்குப் பகுதியில் கண்ணகி வழிபாடு கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எடுத்த விழாவில் கலந்துகொண்ட இலங்கை வேந்தன் கயபாகு மீளும் போது ஜம்புகோளப்பட்டினம் என்ற சம்பில் துறையிலே வந்திறங்கினான் என்று கருதப்படுகின்றது. கயபாகு வேந்தன் கந்தரோடையிலுள்ள அங்கணாமக்கடவையில் பத்தினிக்குக் கோயில் அமைத்துத் தனது உருவச் சிலையையும் கோயில் முன்றலில் நிறுவியிருக்கலாம் என்பர்.1 அடையாளம் காணமுடியாத நிலையிலுள்ள அங்கணாமைக்கடவைக் கண்ணகி கோவில் கந்தரோடையிலுள்ள கதிரமலைக்கு அருகாமையில் இருந்ததாக இன்றைய ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.2 […]
மேலும் பார்க்க
இலங்கையில் கண்ணகி வழிபாடு புகுந்த முறை
12 நிமிட வாசிப்பு
சிலப்பதிகாரம் என்பது தமிழர் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்ற ஓர் இலக்கியமாகும். சிலம்பில் கண்ணகி ஒரு வழிபாட்டுத் தெய்வமுமாகிய நிலையில் இலக்கிய வாழ்விற்கான தளமும் வாய்ப்பாகின்றது. தமிழ்ச் சூழலில் சிலப்பதிகாரம் என்ற சொல்லாடல் மூன்று நிலைகளில் நிலைபெற்று நிற்கின்றது. முதலாவது அதனுடைய காவியத்தன்மை, இரண்டாவது அதனுடைய பொதுமக்கள் மயப்பாடு, மூன்றாவது அது சடங்காசாரத்துடன் இணைந்த நிலை. இந்த மூன்று நிலைகளையும் தாண்டி இன்னொரு தளமும் அதற்குண்டு. அது தமிழர்கள், மலையாளிகள், சிங்களவர்கள் ஆகிய […]
மேலும் பார்க்க