கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

மேன்மக்கள் சரித்திரம்: கொழும்பு நகரின் தமிழ் உயர்குழாம் பற்றி சு. இரத்தினசாமி ஐயர் 1930ஆம் ஆண்டு எழுதிய நூல் பற்றிய அறிமுகம்

22 நிமிட வாசிப்பு

கொழும்பு, கொம்பனித்தெரு, அரசினர் புதிய பாடசாலைத் தமிழ் பண்டிதர் சு. இரத்தினசாமி ஐயர் 1930ஆம் ஆண்டில் ‘மேன்மக்கள் சரித்திரம்’ என்னும் நூலை வெளியிட்டார். இந்நூல் கொழும்பு மீனாம்பாள் அச்சியந்திர சாலையினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு 2008ஆம் ஆண்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது. இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் சமூக, பொருளாதார மாற்றங்களின் பயனாக பல்வேறு இன, மத, சாதிப் பிரிவுகளைச் சேர்ந்த சமூகப்பிரிவினர்களில் இருந்து […]

மேலும் பார்க்க

இலங்கையில் அதிகாரப் பகிர்வு: 1926 – 2008 காலத்தில் வெளியிடப்பட்ட அரசியல் யாப்பு ஆவணங்களின் தொகுப்பு – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல அரசுக்கட்டமைப்புகள் அதிகாரப் பகிர்வுக்கு உதவக்கூடிய அரசுக்கட்டமைப்புகளை உருவாக்குதல் 1990க்குப் பிற்பட்ட காலத்து விவாதங்களில் முக்கிய பேசுபொருளாக அமைந்தன. முக்கியமாக இரு நிறுவனங்கள் தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள் எமது கவனிப்புக்குரியவை: இவ்விரு நிறுவனங்களில் செனற் நிறுவனத்தின் பயன் குறித்த விவாதத்தை முதலில் நோக்குவோம். செனற் சபை சோல்பரி அரசியல் யாப்பு இருசபைகளைக் கொண்ட பாராளுமன்றத்தைக் கொண்டிருந்தது. மேற்சபையான […]

மேலும் பார்க்க

இலங்கையின் மேற்கு மாகாணத்தின் முதலியார்கள்

15 நிமிட வாசிப்பு

பற்றிக் பீபிள்ஸ் (Patrick Peebles) என்ற ஆய்வாளர் ‘Social Change In Nineteenth Century Ceylon (1995)’ என்ற நூலை எழுதினார். 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தோற்றம் பெற்ற முதலியார்கள் என்ற உயர் சமூகக் குழு (Social Elites) பற்றி பற்றிக் பீபிள்ஸ் இந்நூலில் விரிவாக ஆராய்கிறார். இக்கட்டுரை, பற்றிக் பீபிள்ஸ் அவர்கள் மேற்கு மாகாணத்தின் முதலியார்கள் வகுப்பு பற்றிக் கூறியிருப்பவற்றைத் தமிழில் அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது. உயர்குழாம் […]

மேலும் பார்க்க

இலங்கையில் அதிகாரப் பகிர்வு: 1926 – 2008 காலத்தில் வெளியிடப்பட்ட அரசியல் யாப்பு ஆவணங்களின் தொகுப்பு – பகுதி 1

24 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல அறிமுகம்  இலங்கையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை அரசியல் யாப்புச் சீர்திருத்தம் (Constitutional Reform) மூலம் தீர்வு செய்யும் முயற்சிகள் 1920களில் ஆரம்பித்தன. சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு (Power Sharing) எனும் முன்மொழிவு 1926 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. அவ்வாண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ‘அதிகாரப் பகிர்வு’ எனும் விடயப்பொருள் குறித்த ஆவணங்கள் […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் குறைவிருத்தி: சார்புக் கோட்பாடு நோக்கிலான சில குறிப்புகள்

19 நிமிட வாசிப்பு

அறிமுகம் சார்புக் கோட்பாடு (Dependency Theory) என்னும் பொருளியல் கோட்பாட்டின் நோக்கில் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரப் பின்னடைவையும் குறைவிருத்தியையும் (Under-development) விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சார்புக் கோட்பாட்டின் பிரதானமான எண்ணக்கரு ‘சார்பு நிலை’ (Dependency) என்பதாகும். சார்பு நிலை என்பதை தங்கியிருத்தல் எனவும் தமிழில் கூறலாம். உலக முதலாளித்துவப் பொருளாதார முறைமையில் மையம் (Centre), சார்பு மண்டலம் (Periphery) என இருவகை நாடுகள் உள்ளன. இவ்விருவகை நாடுகளுக்குமிடையில் சமத்துவமற்ற […]

மேலும் பார்க்க

இலங்கையின் அரசியல் யாப்புத்திருத்தம் எனும் செயல்முறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 1931இன் டொனமூர் அரசியல் யாப்பு

30 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல Power Sharing in Sri Lanka Constitutional and Political Documents 1926 – 2008 எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு நூலை மேற்குறித்த சட்டத்துறை அறிஞர்களான றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல ஆகியோர் இணைந்து பதிப்பித்து வெளியிட்டனர். இந்நூலில் அதிகாரப் பகிர்வு (Power Sharing) தொடர்பாக 1926 தொடக்கம் […]

மேலும் பார்க்க

சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 2

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இலங்கையின் இன்றைய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு இந்திய அரசின் அழுத்தம் காரணமாக 1987 ஆம் ஆண்டு இந்திய–இலங்கை உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் விளைவாக அதிகாரப் பகிர்வு (Devolution) என்ற கருத்து இலங்கையின் அரசியல் யாப்பினுள் புகுந்தது. 13 ஆவது அரசியல் திருத்தம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறை உண்மையான அதிகாரப் பகிர்வை வழங்கத் தவறியது. மாகாண சட்டசபைகள் […]

மேலும் பார்க்க

சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 1

23 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இக்கட்டுரை ஆங்கிலத்தில் றொகான் எதிரிசிங்க அவர்கள் ‘Federalism: Myths and Realities’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் எளிமைப்படுத்தப்பட்ட தழுவலாக்கமாகும். மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனத்தின் (CPA) ‘Essays on Federalism’ (2016) என்ற கட்டுரைத் தொகுப்பு நூலின் நான்காவது அத்தியாயமாக இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. இன்றைய பொருத்தம் கருதி இத் தழுவலாக்கத்தைத் தந்துள்ளோம். 2002ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஓர் உடன்பாடு […]

மேலும் பார்க்க

உலக முதலாளித்துவ அமைப்பின் சமத்துவமற்ற விருத்தி: சமீர் அமின் கோட்பாடு பற்றிய ஓர் அறிமுகம்

14 நிமிட வாசிப்பு

சமீர் அமின் (1931 – 2018) 2018ஆம் ஆண்டில் 86 வயதில் காலமான பொருளியலாளர் சமீர் அமின் எகிப்து நாட்டில் பிறந்தவர். 1947இல் கல்வி கற்பதற்காகப் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகருக்குச் சென்ற அவர், பரிஸ் நகரிலேயே இறுதிவரை வாழ்ந்து வந்தார். 1957ஆம் ஆண்டில் ‘The Structural Effects of the International Integration of Pre-Capitalist Economies’ என்னும் தலைப்பிலான ஆய்வேட்டைச் சமர்ப்பித்து Ph.D. பட்டத்தை இவர் பெற்றுக்கொண்டார். […]

மேலும் பார்க்க

பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் ‘இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்’ என்னும் நூலின் அறிமுகம் 

15 நிமிட வாசிப்பு

ஆக்கியோன்: பேராசிரியர் சி. பத்மநாதன் இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும் என்னும் நூல் குமரன் புத்தக இல்லத்தினால் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 383 பக்கங்களுடைய இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 2017 ஆம் ஆண்டு வெளியாயிற்று. இதன் பிரதி ஒன்றின் விலை இலங்கை ரூபா 950 ஆகும். பெறுமதி மிக்க இந்நூல் இலங்கைத் தமிழர்களின் வழமைச் சட்டங்களையும் (Customary Laws), அம்மக்கள் சமூகத்தின் சமூக வரலாறு, பொருளாதாரம், […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்