யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள்
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – வரணி
10 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பிலுள்ள தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் நாவற்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் தென்மராட்சியின் இன்னொரு கோவிற்பற்றான வரணி தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம். வரணிக் கோவிற்பற்று வரணி, குடமியான், தாவளை-இயற்றாலை, மந்துவில், வரணி-இயற்றாலை ஆகிய ஐந்து துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதை நிலப்படத்தில் காணமுடிகிறது (படம்-1). எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி வரணிக் கோவிற்பற்றின் […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – நாவற்குழி
12 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள சாவகச்சேரிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அதே பிரிவில் உள்ள நாவற்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம். நாவற்குழிக் கோவிற்பற்றில் நாவற்குழி, நுணாவில், கோயிலாக்கண்டி ஆகிய மூன்று துணைப் பிரிவுகளை நிலப்படம் காட்டுகிறது (படம்-1). எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படம் நாவற்குழிக் கோவிற்பற்றை மூன்று […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – சாவகச்சேரி
10 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள கோவிற்பற்றுகள் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் முன்னைய சில கட்டுரைகளில் பார்த்தோம். இனி தென்மராட்சிப் பிரிவில் உள்ள கோவிற்பற்றுகள் தொடர்பாக மேற்படி நிலப்படம் தரும் தகவல்களைப் பார்க்கலாம். இந்தக் கட்டுரை தென்மராட்சிப் பிரிவின் சாவகச்சேரிக் கோவிற்பற்றைப் பற்றி ஆராய்கிறது. சாவகச்சேரிக் கோவிற்பற்றில் சாவகச்சேரி, சரசாலை, மட்டுவில், மீசாலை, தனங்கிளப்பு ஆகிய ஐந்து துணைப் பிரிவுகளை நிலப்படம் காட்டுகிறது […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வடமராட்சி – உடுப்பிட்டி
10 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் கட்டைவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரை உடுப்பிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் நிலப்படம் தரும் தகவல்களை விளக்குகிறது. உடுப்பிட்டிக் கோவிற்பற்றில் உடுப்பிட்டி, கரணவாய் ஆகிய இரண்டு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பிலிருந்தும் நிலப்படத்திலிருந்தும் அறியமுடிகிறது (படம்-1). எல்லைகள் உடுப்பிட்டிக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் பாக்கு நீரிணையும்; கிழக்கில் கட்டைவேலிக் […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வடமராட்சி – கட்டைவேலி
10 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் பருத்தித்துறைக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரை கட்டைவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் நிலப்படம் தரும் தகவல்களை விளக்குகிறது. கட்டைவேலிக் கோவிற்பற்றில் கரவெட்டி, அல்வாய், துன்னாலை, வல்லிபுரம் ஆகிய நான்கு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பிலிருந்தும் நிலப்படத்திலிருந்தும் அறியமுடிகிறது (படம்-1). பருத்தித்துறையைப் போலவே இக்கோவிற்பற்றுக்குப் பெயர் கொடுத்த கட்டைவேலிக் கிராமத்தின் […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வடமராட்சி – பருத்தித்துறை
14 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் அச்சுவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். அத்துடன், வலிகாமத்திலுள்ள 14 கோவிற்பற்றுகளைப் பற்றிய விவரங்களும் சென்ற கட்டுரையுடன் நிறைவடைந்தன. இந்தக் கட்டுரையில், வடமராட்சிப் பிரிவிலுள்ள கோவிற்பற்றுகளைப் பற்றிய விவரங்கள் தொடங்குகின்றன. வடமராட்சிப் பிரிவில் பருத்தித்துறை, கட்டுவேலி (கட்டைவேலி), உடுப்பிட்டி ஆகிய மூன்று கோவிற்பற்றுகள் உள்ளன. முதலில் பருத்தித்துறைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – புத்தூர்
10 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் அச்சுவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், புத்தூர்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். புத்தூர்க் கோவிற்பற்றில் புத்தூர், சிறுப்பிட்டி, அச்செழு, ஆவரங்கால் ஆகிய நான்கு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படம் காட்டுகிறது (படம்-1). எல்லைகள் புத்தூர்க் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் அச்சுவேலிக் கோவிற்பற்றும்; மேற்கில் மயிலிட்டி, மல்லாகம் ஆகிய கோவிற்பற்றுகளும்; […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – அச்சுவேலி
15 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் மயிலிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், அச்சுவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி அச்சுவேலிக் கோவிற்பற்றில் வடக்குப் புரொவீன் (Wadakoeprowene), தெற்குப் புரொவீன் (Tickoeprowene), நவக்கீரி, பத்தவேனி, கதிரிப்பாய், தம்பாலை, வளலாய் ஆகிய துணைப்பிரிவுகள் உள்ளன (படம்-1). இங்கே அச்சுவேலி என்ற பெயரில் துணைப்பிரிவுகள் எதுவும் […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – மயிலிட்டி
9 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் தெல்லிப்பழைக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், மயிலிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். (படம்-1) நிலப்படத்தில் உள்ளபடி மயிலிட்டிக் கோவிற்பற்று, ஏழு துணைப்பிரிவுகளை உள்ளடக்கியது. இவை மயிலிட்டி, பலாலி, வயாவிளான், வறுத்தலைவிளான், தையிட்டி, வீரமாணிக்கதேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை என்பன. எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி மயிலிட்டிக் கோவிற்பற்றின் வடக்கு […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – தெல்லிப்பழை
10 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் மல்லாகம் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், தெல்லிப்பழைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். தெல்லிப்பழைக் கோவிற்பற்று, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது தெல்லிப்பழை, மாவிட்டபுரம், பழை, வீமன்காமம், கட்டுவன் என ஐந்து துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கோவிற்பற்றின் வடக்குக் கரையோரமாகக் மேற்கிலிருந்து கிழக்காகத் தெல்லிப்பழை, மாவிட்டபுரம், பழை […]
மேலும் பார்க்க