முதலாளித்துவ யுகத்தில் ஐரோப்பியர்களின் எழுச்சிக்கும் தெற்குலகின் வீழ்ச்சிக்குமான காரணங்களை பின்வருமாறு சுருக்கலாம்: 1) விஞ்ஞானம், மனித குல, பொருளாதார, நாகரிக வளர்ச்சி என்பன ஒரு நாட்டுக்கோ ஒரு கண்டத்துக்கோ ஓர் இனத்துக்கோ சொந்தமானதல்ல. அவை மனித குலம் தோன்றிய காலம் முதல், ஆதிக்குடிகளாகவும், பின்னர் கோத்திரங்களாகவும், அரசுகளாகவும், தேசங்களாகவும் அது பரிணாமம் அடைந்து காலங்காலமாக, சிறுகச்சிறுக, ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு படிப்படியாக வளர்க்கப்பட்ட திரட்சியேயாகும். இவ் வளர்ச்சியில் […]