இலங்கைச் சோனகத் தலைமையானது, ஒரு தனித்துவமான இலங்கை-அரபு அடையாளத்தை (Ceylonese – Arab identity) வளர்ப்பதற்கான நோக்கில், இலங்கைச் சோனகர் மத்தியில் வளர்ந்துவந்த பொது விசுவாசத்தை புறக்கணித்தது. அமீர் அலி குறிப்பிட்டுள்ளபடி, இந்த நூற்றாண்டின் (இருபதாம்) தொடக்கப் பகுதியில், இலங்கைச் சோனக உயர் குழாத்தினர், எகிப்துக்குத் திரும்புவதற்கு ஏங்கிக் கொண்டிருந்த, நாடுகடத்தப்பட்ட அதிருப்தியாளரான அரபி பாஷாவின் மீது ஒருவித நாடக விசுவாசத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்தனர் (அசாத் 1993: 42-43). […]