கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை

நடேசய்யரின் ‘Under Planter Raj – The Standard Wage in Ceylon: தோட்டத் தொழிலாளர் ஊதிய உயர்வுக்கான அறிவுசார் தலையீடு

27 நிமிட வாசிப்பு

1 சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலேயே தோட்டத் தொழிலாளரின் ஊதியப் பிரச்சினை முதன்முதல் பரந்தளவிலான கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. அக்காலத்தில்தான் சேர்.பொன். அருணாசலம் தோட்டத் தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்; கருமுத்து தியாகராஜச் செட்டியார் தோட்டத் தொழிலாளரின் பிற்படுத்தப்பட்ட வாழ்க்கை நிலைமையை விரிவான சான்றுகளுடன் விவரித்து, அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டிய தேவையை வலுவாக எடுத்துரைத்தார். இதன் தொடர்ச்சியில், இந்திய அரசு தோட்டத் தொழிலாளர் வாழ்வை மேம்படுத்தும் […]

மேலும் பார்க்க

ஆயில் என்ஜின்கள்: இயந்திரமயமாதலும் அறிவியல் தமிழும்

20 நிமிட வாசிப்பு

1 ஆங்கிலேயக் காலனிய ஆட்சி நடைமுறைகளாலும் அவற்றினால் விளைந்த சமூக பொருளாதார மாற்றங்களாலும் நவீன அறிவியலின் பரவல் தமிழ்ச் சூழலில் வேகம்பெறத் தொடங்கியது. நவீன இயந்திரங்களின் வருகையும் வளர்ச்சியும் இந்தியாவின் உற்பத்தியிலும் விநியோகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தின. சமுதாயத்தின் அடிக்கட்டுமானமும் மேற்கட்டுமான அம்சங்களும் அறிவியல் பயன்பாட்டை முதன்மையான உள்ளீடாகக் கொள்ளத் தொடங்கின. கல்வித் துறையில் அறிவியல் கற்கைகள் உள்வாங்கப்பட்டன. அவற்றுக்கான பாடநூலாக்க முயற்சிகள் இடம்பெற்றன. பாதிரிமார்கள் உள்ளடங்கலாக மேலைநாட்டவரும் உள்நாட்டவரும் அறிவியல் […]

மேலும் பார்க்க

கதிர்காமம்: தமிழ் நாட்டவர்க்கான யாத்திரை வழிகாட்டி

25 நிமிட வாசிப்பு

இலங்கையின் புராதன முருகன் ஆலயங்களுள் ஒன்றான கதிர்காமம் சைவர்களதும் பௌத்தர்களதும் பிரதான யாத்திரைத்தலமாக விளங்கி வருகின்றது. நாடு முழுவதுமிருந்து முருக பக்தர்கள் கதிர்காமத்துக்கு யாத்திரை செல்கின்றனர். இந்த யாத்திரையும் யாத்திரைக் காலத்து நடைமுறைகளும் இலங்கையின் கலாசார வாழ்வின் முக்கியமான கூறுகளாக விளங்குவதுடன் ஒவ்வொரு இனத்தினதும் பிராந்தியத்தினதும் வழமைகளுக்கு ஏற்ப, தனித்துவம்மிக்க உபபண்பாட்டுக் கூறுகளும் உருவாக்கம் பெற்றுள்ளன.  கதிர்காமத்தோடும் கதிர்காம யாத்திரையோடும் தொடர்புபட்ட வகையில் ஆலய உருவாக்கங்கள், ஆலய நடைமுறைகள் முதலானவை […]

மேலும் பார்க்க

ஒற்றன்: ஆங்கிலேய ஒற்றர் புகழும் இந்திய யதார்த்தமும்

20 நிமிட வாசிப்பு

முதலாம் உலக மகாயுத்தம் தொடங்குவதற்கு ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னரே உளவாளிகள் பற்றிய ஐயமும் அச்சமும் அபரிமிதமாகப் பெருகியுள்ளன. இங்கிலாந்துக்குள் ஜெர்மனிய உளவாளிகள் ஊடுருவி இரகசிய வலையமைப்பைக் கட்டமைத்துள்ளனர், அவர்களினால் பேரனர்த்தம் நிகழப்போகிறது முதலான கருத்துகள் சமூகத்துள் ஆழமாக விதைக்கப்பட்டு, விழிப்புடனிருக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. போருக்கான ஆயத்த நடவடிக்கைகளும் எதிர்ப் படைகளின் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற பதட்டமும் உளவுப் பீதியையும் உளவாளிகள் மீதான அச்சத்தையும் எல்லா மட்டங்களிலும் மிகுவித்தன. அவற்றைக் […]

மேலும் பார்க்க

வெற்றியுனதே: சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடம் பகுதி – 2

11 நிமிட வாசிப்பு

ஒருவன் தனது நினைப்புக்களை மேம்படுத்தினால் மாத்திரமே உயர்வும் வெற்றியும் காரியசித்தியும் பெறுதல் கூடும். தனது நினைப்புக்களை மேம்படுத்தாது பின்னிட்டால் அவன் பலஹீனமும் கீழ்மையும் தரித்திரமும் உற்றேயிருப்பான்” – (ஜேம்ஸ் ஆலன்). இளைஞர்களிடத்தில் தோன்றும் மயக்கங்களைக் களைந்து, அவர்களின் முன்னேற்றத்துக்கான வழித்தடத்தை, ‘நீ மயங்குவதேன்’ என்ற நூலின் மூலம் செப்பனிட முனைந்த நடேசய்யர், அதன் தொடர்ச்சியாக ‘வெற்றியுனதே’ என்ற நூலை 1934 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். கொழும்பு தினத்தபால் பிரஸ், ஹட்டன் […]

மேலும் பார்க்க

நீ மயங்குவதேன்: சுயமுன்னேற்றத்துக்கான வழித்தடம்

14 நிமிட வாசிப்பு

“எவன் குற்றமற்றவனாதற்குக் கற்கிறானோ எவன் தூய அகத்தினனாதற்கு முயல்கிறானோ எவன் சாந்தியும் ஞானமும் சான்றாக நோக்குந் தன்மையும் பொருந்திய மனதை அடைவதை இலக்ஷியமாகக் கொண்டிருக்கிறானோ அவன் மனிதர் செய்யக்கூடிய செயல்கள் எல்லாவற்றினும் மேலான செயலைச் செய்து கொண்டிருக்கிறான். அவனது அச்செயலின் பயன் ஒழுங்கும் இன்பமும் அழகும் வாய்ந்த ஒரு வாழ்க்கையாக அவன் பால் அமையும்.” (ஜேம்ஸ் ஆலன்) அகவிடுதலை இல்லாமல் புறவிடுதலை சாத்தியமில்லை. புறக்கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலைபெறுதல், அடக்கப்பட்ட வாழ்விலிருந்து வெளியேறுதல், […]

மேலும் பார்க்க

இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்: சமூக மாற்றத்துக்கான முன்னோடி அரங்க முயற்சி

26 நிமிட வாசிப்பு

பெருந்தோட்டங்களின் இருண்ட வாழ்வை வெளியுலகத்துக்கு வெளிச்சமிட்டுக்காட்டி, அவ்வாழ்வு பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் நடேசய்யரின் சமூக, அரசியல் இயக்கத்தின் முக்கியமான அங்கங்களுள் ஒன்றாக விளங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளரிடையே சீர்திருத்தச் சிந்தனைகளைப் பரப்பி, அவர்களைச் சமூக, அரசியல் சக்தியாகக் கட்டியெழுப்புவதும் இந்திய மக்களிடையே தோட்டத் தொழிலாளர்களின் யதார்த்த வாழ்வை எடுத்துரைத்து, இலங்கைக்குத் தொழிலாளர்களாகப் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும் அதன் அடிப்படை நோக்கங்களாக இருந்துள்ளன. மேற்படி நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக திட்டமிட்டவகையில் துண்டுப்பிரசுரங்கள், சட்டவழிகாட்டி […]

மேலும் பார்க்க

இந்தியா – இலங்கை ஒப்பந்தம்: தோல்வியடைந்த ஒப்பந்தமும் கற்றுக்கொள்ளாத பாடமும்

29 நிமிட வாசிப்பு

இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியலின் வெளிநாட்டு உறவில் இந்தியா தலையான இடத்தினை வகித்துள்ளது. இலங்கையில் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் குடியேறியிருந்த இந்தியரின் அந்தஸ்து மற்றும் உரிமைகள் தொடர்பான உரையாடல்கள் அதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தன. இலங்கையின் பெருந்தோட்டங்களிலும் அரச மற்றும் தனியார் துறைகளிலும் 19 ஆம் நூற்றாண்டு முதல் தொழில்புரிந்து வந்த இந்தியரின் சனத்தொகைப் பெருக்கமும் அரசியல் பங்குபற்றலும் சுதேசிய ஆட்சியாளர்களிடையே அதிருப்திகளைத் தோற்றுவித்தன. அதனால் அவ்வாறு குடியேறியவர்களை அந்நியராக அடையாளப்படுத்திய அவர்கள், […]

மேலும் பார்க்க

தொழிலாளர் சட்ட புஸ்தகம் : தோட்டத் தொழிலாளருக்கான கைநூல்

14 நிமிட வாசிப்பு

“நீங்கள் வேண்டுவது மனிதருக்குள்ள உரிமைதான், மிருகங்களைப்போல் நடத்தப்பெறாமல் மனிதர்களைப்போல் தலைநிமிர்ந்து நடக்க உங்களுக்கு உரிமை வேண்டும். அந்த உரிமையில்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? நீங்கள் இன்றே யோசியுங்கள். இப்புஸ்தகத்தில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் கவனித்து வாசியுங்கள். வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எல்லோரும் ஒன்றுகூடுங்கள். ஒற்றுமைப்படுங்கள். சங்கங்கூட்டுங்கள். அவ்விதம் நீங்கள் ஒற்றுமைப்பட்டுவிட்டதாகக் கண்டாலும் கேட்டாலும் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். பாரதமாதா சந்தோஷப்படுவாள். சுதந்திர வீரர்கள் கூத்தாடுவார்கள். உங்களை அடிமைகளாக வைத்து […]

மேலும் பார்க்க

இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் : தோட்டத் தொழிலாளர் விடுதலைக்கான வழிகாட்டி

13 நிமிட வாசிப்பு

தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்குப் பெருந்தோட்டக் கட்டமைப்பு, அரசியற்கொள்கை, தொழிலாளர் சட்ட ஏற்பாடுகள், ஊதியமுறை முதலானவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ள கோ. நடேசய்யர், அம்மேம்பாட்டுக்குத் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வையும் சமூக சீர்திருத்தத்தையும் ஏற்படுத்துதலும் இன்றியமையாதன என்பதைத் தன் கள அனுபவங்களூடே கண்டறிந்து, அவற்றை நிறைவு செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். அதனொரு வெளிப்பாடாகவே ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ என்ற சிறுநூல் அமைந்துள்ளது. ‘தொழிலாளர்கட்கு இன்னல் புரிகின்ற முதலாளி ஆட்சி […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்