மருத்துவர் கிறீனது 2 ஆவது வருகை மருத்துவர் கிறீன் 1862 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் திகதி பிறதேசங்களுக்கு மிஷனரிகளை அனுப்பும் அமெரிக்க மிஷன் சங்கத்துக்கு (ABCFM) எழுதிய கடிதத்தில் தான் யாழ்ப்பாணம் புறப்படுவதற்குத் தயாராகி இருந்தமையைத் தெரிவித்திருந்தார். கப்பல் புறப்படுவதற்காக 5 மாதங்கள் வரை கிறீன் காத்திருக்க வேண்டியிருந்தது. நியூயோர்க்கிலிருந்த கிறீன், 82 வயதான தந்தையிடம் இறுதி பிரியாவிடை பெறுவதற்காக கிறீன் கில்லிற்குச் (Green Hill) […]