Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

தொடர்கள்

இலங்கை ஒரு வெப்பமண்டலத் தீவு நாடாகும். இது வட அரைக்கோளத்தில் 5°55’ முதல் 9°51’ வரையான வட அகலங்களுக்கும் 79°41’ முதல் 81°53’ வரையான கிழக்கு நீளங்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. புவியியல் வரலாற்றில் நீண்டகால மாற்றங்களின் விளைவாக இலங்கை இன்றைய நிலைப்பாட்டை அடைந்துள்ளது. ப்ரீகேம்பிரியன் காலத்திலிருந்து ஹோலோசீன் காலம் வரை நிகழ்ந்த நிலத்தட்டு இயக்கங்கள் மற்றும் புவிச்சரிவு மாற்றங்கள் தீவின் புவியியல் அமைப்பை உருவாக்கியுள்ளன. இலங்கைத் தீவின் பெரும்பாலான பகுதி […]

சிலப்பதிகாரம் என்பது தமிழர் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்ற ஓர் இலக்கியமாகும். சிலம்பில் கண்ணகி ஒரு வழிபாட்டுத் தெய்வமுமாகிய நிலையில் இலக்கிய வாழ்விற்கான தளமும் வாய்ப்பாகின்றது. தமிழ்ச் சூழலில் சிலப்பதிகாரம் என்ற சொல்லாடல் மூன்று நிலைகளில் நிலைபெற்று நிற்கின்றது. முதலாவது அதனுடைய காவியத்தன்மை, இரண்டாவது அதனுடைய பொதுமக்கள் மயப்பாடு, மூன்றாவது அது சடங்காசாரத்துடன் இணைந்த நிலை. இந்த மூன்று நிலைகளையும் தாண்டி இன்னொரு தளமும் அதற்குண்டு. அது தமிழர்கள், மலையாளிகள், சிங்களவர்கள் ஆகிய […]

ஆய்வுக்கதை 11: மீள்குடியேற்றத்தில் இடஞ்சார்ந்த பாகுபாடு கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மீள்குடியேற்றத்தில் புதிய வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தச் செயல்முறை அதிகாரபூர்வமாக நியாயமானது என்று விவரிக்கப்பட்டாலும், நிலம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பதில் குடியிருப்பாளர்கள் சில முறைகளைக் கவனித்தனர். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கினார்: “இது தற்செயலானது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும். சில குடும்பங்களுக்குச் சாலைக்கு […]

முன்னர் மலையக மக்களின் கல்வி வளர்ச்சி குறித்து மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, 1990களுக்குப் பின்னரான காலப்பகுதியில் மலையகக் கல்வி வளர்ச்சிக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும், அதன் விளைவாக உருவான சமூகத் தாக்கங்களையும் இக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது. அத்துடன், மலையக மக்களின் மரபு ரீதியான தொழில்களிலும், அவர்களது தனித்துவமான பாரம்பரியப் பண்பாட்டுக் கோலங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் இக்கட்டுரை விரிவாக விளக்குகின்றது. தேசிய கல்வி முறைக்குள் உள்வாங்கப்பட்ட மலையகத் […]

மலையகத்தில் நிகழ்த்தப்படும் பல்வேறு சடங்கு முறைகளில், நோய் தீர்த்தல் பொருட்டு செய்யப்படும் சடங்குகள் மிக முக்கியமான இடத்தினைப் பெறுகின்றன. மலையக மக்கள் இலங்கைக்கு வந்து குடியேறிய காலத்தில் நீண்டதூர ஆபத்தான பயணம், கள்வர் பயம், காடுகளுக்கூடாகப் பயணம் செய்யும் போதும், பெருந்தோட்டங்களை அமைப்பதற்காகக் காடுகளை அழிக்கும்போதும் ஏற்பட்ட விபத்துகள், கொடிய மிருகங்கள், ஜந்துகள் என்பவற்றிலிருந்து பாதுகாப்பு, வெளியுலகத் தொடர்புகள் குறைவான தனிமையான வாழ்க்கை, மழை, வறட்சி, குளிர், கடுங்காற்று, வெள்ளம், […]

இலங்கையின் பொருளாதாரத்துக்கு மைய சக்தியாக விளங்குவது பெருந்தோட்டத் துறையாகும். பிரித்தானியக் காலனித்துவம் உருவாக்கிய இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் இலங்கை அரசு முழுமையாகத் தவிர்த்து மேலெழ முடியாத அளவுக்கு அதன் தாக்கம் நிலைபெற்றிருக்கிறது. பிரித்தானியக் காலனித்துவம் உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பொருளாதாரக் கட்டுமானங்களை வடிவமைத்தது. கைத்தொழில் புரட்சியின் பின்னர் தங்கள் நாட்டிற்கு தேவையான மூலவளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கும் பிரித்தானியர் வளமிக்க நாடுகளை […]

இந்தியாவும் காலனித்துவமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்ட இந்தியாவின் தென்னாடும், மொகலாயப் பேரரசுகளால் ஆளப்பட்ட வடநாடும் படிப்படியாக வலுவிழந்து போயின. 1498 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமா இந்தியாவின் மேற்குகரையில் உள்ள கோழிக்கோடு (Calicut) துறைமுகத்தை வந்தடைந்தார். இவரது வருகையோடு பரவிய போர்த்துக்கேயரின் ஆட்சி 1600 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையோடு வீழ்ச்சியுற்றது. பட்டு, வாசனைத் திரவியங்களின் வாணிபத்திற்காக வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி படிப்படியாக […]

ஆங்கில மூலம்: நீதியரசர் கலாநிதி சந்திரதாச நாணயக்கார ஓர் அரசு, சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளை மீறும் வகையில் செயற்படும்போது, அதற்கான முழுப் பொறுப்புகளும் அந்த அரசைச் சார்ந்தவையாகின்றன. ஆனால் அந்த அரசின் நிறுவனங்களால் இத்தகைய செயல்கள் செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களின் போது அதற்கான பொறுப்பு, பெரும்பாலும் ‘அரசுப் பொறுப்பு’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், அரசுடன் இணைக்கப்பட்டுள்ள நீதித்துறைச் சட்டங்களின் அடிப்படையில், அத்தகைய குற்றங்களுக்கு அரசு பொறுப்பேற்கத்தான் வேண்டும் என்று […]

செயல்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலைமைத்துவத்தின் முடிவும், டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தன. ஒரு நூற்றாண்டு கால இராமநாதன் வம்சத்தின் கொழும்புத் தமிழ்த் தலைமைத்துவத்தின் அரசியலுக்குப் பதிலாக, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் அரசியல் 1920களின் இறுதியில் எழுச்சிபெறத் தொடங்கியது. ஆயினும், இது தமிழ்த் தேசிய அரசியல் இயக்கமல்ல. அது இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தால் கவரப்பட்ட காந்திய இயக்கச் […]

ஆங்கில மூலம்: நியூட்டன் குணசிங்க நியூட்டன் குணசிங்க அவர்கள் எழுதிய ‘Changing Socio – Economic Relations in the Kandyan Countryside’ என்னும் நூல் கண்டியின் நிலமானிய சமூகத்தில் பிரித்தானிய காலனிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மாற்றங்களை ஆய்வு செய்யும் நூலாகும். இந்நூலின் இரண்டாவது அத்தியாயம் ‘The Kandyan Social Formation’ (கண்டியின் சமூக உருவாக்கம்) என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இவ்விரண்டாவது அத்தியாயத்தின் (பக். 21 […]

ஐம்பதுகளின் இறுதி முதல் இரண்டாயிரமாம் ஆண்டு வரையில் பாடலாசிரியர் வேல்சாமி தாஸனின் செயற்பாடுகள் மலையக சமூக அசைவியக்கத்தினுள் அவதானிப்பிற்குரியதாக அமைந்திருந்தன. தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பங்குடி தொகுதியின் மைலன்கோன்பட்டி கிராமத்தை பூர்விகமாகக் கொண்டதன் அடையாளமாக ‘மெய்லாங்கோன்பட்டி எம்.பி. வேல்சாமி தாஸன்’ என தன்னைத் தனது பாடல் நூல்களில் அடையாளப்படுத்தியுள்ளார். இலங்கையில் கண்டி, தெல்தோட்டை, பட்டியாகம தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்த நிலையிலேயே தனது எண்ண உணர்வுகளை இவர் பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளார். […]

ஈழத்துப் பதிப்பாசிரியர்களில் பதிப்பு நெறிமுறைகளை அவர்களின் பதிப்பு நூல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஆராய்வதாக இத்தொடர் கட்டுரைகள் அமையவிருப்பதினை முன்னரே கூறியுள்ளோம். அவ்வகையில் ஈழத்துப் பதிப்பாசிரியர்களில் மிகவும் இன்றியமையாதவர் ஆறுமுக நாவலர் ஆவார். நாவலர் காலகட்ட சமுதாய நிலையினைக் குறித்தும் அவரது நன்னூல் பதிப்பு முறைகள் குறித்தும் காணலாம்.  ஆறுமுக நாவலர்  19 ஆம் நூற்றாண்டில் தமிழுக்குத்தொண்டு செய்த மிகப்பெரும் தமிழறிஞருள் தலையானவர் ஆறுமுக நாவலர். இலங்கையில், யாழ்ப்பாணம், நல்லூரில் வாழ்ந்த […]

சுதுமலை பிரகடனம் – 1987 விடுதலைப் புலிகளின் அரசியற் திட்டம் பற்றியும், இந்திய அரசுடனான உறவு பற்றியும், இலங்கை – இந்தியா ஒப்பந்தம் பற்றிய நிலைப்பாட்டையும் மக்களுக்கு விளக்க 1987 ஆகஸ்ட் 4 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோயில் மைதானத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட மக்களுக்கான தெளிவுபடுத்தலே சுதுமலை பிரகடனமாகும். இப்பிரகடனத்தில் அவர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எதையும் அடைய முடியாத வண்ணம் இலங்கை […]

மதங்களால் மனித மனங்களும் சமூகக் கட்டமைப்பும் வடிவமைக்கப்பட்டிருந்த மத்திய காலத்தின் அடிப்படைப் பண்புகள் சில இன்றும் தாக்குறவுடன் உள்ளன. அனைத்து மதங்களும் தத்தமது பரப்புரைகளை இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தும் ஊடகமாகத் திகழ்ந்த தமிழ், மதச்சார்பின்மைப் பண்பெனும் தனக்குரிய தனித்துவத்தை இழந்து, சைவத் தமிழ் என்ற அடைமொழி ஏற்புடன் வலம் வருவதில் உள்ள முரண் கவனிப்புக்கு உரியது. பக்திப் பேரியக்கத்தில் தேவார – திருவாசகப் பாசுரங்கள் பரவலாக மேலெழுந்து வந்ததுடன் மட்டுமன்றி, […]

பால்தேயஸ் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்பு, இலங்கைத் தமிழர்கள் இன்னும் முப்பது ஆண்டுகள் இன்னுமொரு தமிழ் வேதத் திருப்புதலுக்கு (மொழிபெயர்ப்பிற்கு) காத்திருக்க வேண்டியிருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் காலனிய யாழ்ப்பாணத்தில், கிறிஸ்தவத் திருமறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் தமிழ்மொழி வடிவம் பெற்றன. இந்த முயற்சிக்கு வழிவகுத்த இரண்டு நபர்களும் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள்; இருவரும் இந்தியாவில் பிறந்து பின்னர் யாழ்ப்பாணத்திற்குக் குடியேறியவர்கள். அவர்களில் ஒருவர் டச்சு – தமிழ்க் கலப்பின சமூகத்தினரான அட்ரியன் […]

நாணயத் தொடர் 6 சங்ககால சேர, சோழ நாணயங்கள்: கி.மு. 200 – கி.பி. 300. யாழ்ப்பாண மையங்களில் பாண்டிய நாட்டு நாணயங்களைப் போல பழைய சேர, சோழ நாணயங்கள் அதிக அளவில் காணப்படுவதில்லை. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் அனைத்தும் சதுர வடிவிலேயே காணப்படுகின்றன. இவற்றில் சேர நாணயங்களில் முன்பக்கம் யானையும், மறுபக்கம் சேர அரச இலச்சினையான அம்பு-வில்லும் காணப்படுகின்றன. சோழ நாணயங்களிலும் ஒரு பக்கம் யானையும், மறுபக்கம் […]

ஐரோப்பியப் பேரரசுவாதம் (European Imperialism) ஆசியாவில் படரத் தொடங்கிய காலத்தில் ஆசியச் சமூகங்கள் அதனை எதிர்நோக்கத் தயாராக இருக்கவில்லை. படைபலத்தாலும் அறிவியல் வளர்ச்சியாலும் ஆதிக்கம் பெற்றிருந்த ஐரோப்பிய வல்லரசுகளின் வருகை ஒரு பெரும் சவாலாக நின்றது. ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு வழிகளில் அச்சவாலுக்குப் பதிலளிக்க முயன்றது. பல தோல்வி கண்டன, சில வெற்றிபெற்றன. இவற்றை இங்கு கூறுவது என் நோக்கம் அல்ல. எனினும் இரண்டொரு எடுத்துக்காட்டுகள் இலங்கையர் பதிலை நாம் […]

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட தாராண்மை மறுப்பு அரசு இலங்கையில் பின்காலனித்துவ அரசு ஒன்று தாபிக்கப்பட்டு 64 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த அரசு பயணித்த பாதையினையும், அதன் பயணத்தின் வெவ்வேறு முக்கிய கட்டங்களையும் திரும்பிப் பார்ப்பதற்கும், பரிசீலனை செய்வதற்கும் இந்த நீண்ட இடைவெளி எமக்குப் பயனுடையதாக உள்ளது. நாம் ஒரு காலப்பகுப்பு ஒன்றைச் செய்து கொள்ளலாம். வெவ்வேறு காலக்கட்டங்களில் இப் பின்காலனித்துவ அரசை நிர்வகித்த அரசாங்கங்கள் எவை? அவற்றின் […]

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட அதிகாரம் அதிகாரம் (Power) என்னும் கருத்தாக்கம் அரசியல் கோட்பாடுகள் பற்றிய ஆய்வில் முதன்மையான ஆய்வுப் பொருளாக அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் ஹொப்ஸ் முதல் 19 ஆம் நூற்றாண்டினரான கார்ல் மார்க்ஸ், 20 ஆம் நூற்றாண்டின் அரசியல் சிந்தனையாளர்களான மக்ஸ் வெபர், றொபர்ட் டால் (Robert Dahl), ஹன்னா அரன்ட் (Hannah Arendt) வரை பலர் அதிகாரம் பற்றிய ஆழமான ஆய்வுகளைச் […]

முன்னுரை ஈழத்தின் வடமேற்குப் பகுதியில் உடப்பு எனும் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலும் மற்றும் அங்குள்ள பெண் தெய்வக் கோவில்களும் ஆகமம் சாராத மக்கள் வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தன. அவற்றை விரிவாக நோக்குவோம். உடப்பு கிராமத்தின் தனித்துவம் உடப்பு என்பது இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் சிலாபம் அருகில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியத் தமிழ்க் கிராமம். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் இந்துத் தமிழர்கள் ஆவர். இது ஒரு கடற்கரை […]

விக்டர் டி மங்க் (Victor de Munck) மற்றும் கிறிஸ்தோபர் மனோகரன் (Christopher Manoharan) ஆகிய ஆய்வாளர்கள் குடாலிக் கிராமத்தில் மேற்கொண்ட தங்களது களப்பணி மூலமான ஆய்வான “Accessing the Interiority of Others: Sufism in Sri Lanka“ இல், மேலும் பல விடயங்களை இலங்கையில் சூஃபித்துவம் சார்ந்து பகிர்ந்துகொள்கின்றனர். குடாலியில் உள்ள வயது வந்த ஆண்களில் கிட்டதட்ட முந்நூறு பேர் காதரி வரிசையுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். […]

1 சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலேயே தோட்டத் தொழிலாளரின் ஊதியப் பிரச்சினை முதன்முதல் பரந்தளவிலான கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. அக்காலத்தில்தான் சேர்.பொன். அருணாசலம் தோட்டத் தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்; கருமுத்து தியாகராஜச் செட்டியார் தோட்டத் தொழிலாளரின் பிற்படுத்தப்பட்ட வாழ்க்கை நிலைமையை விரிவான சான்றுகளுடன் விவரித்து, அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டிய தேவையை வலுவாக எடுத்துரைத்தார். இதன் தொடர்ச்சியில், இந்திய அரசு தோட்டத் தொழிலாளர் வாழ்வை மேம்படுத்தும் […]

முன்னுரை 1990 களில் மேற்குலகச் சிந்தனைப் பரப்பில் அங்கீகரித்தலின் அரசியல் பற்றிய சிந்தனையின் மீள்வாசிப்பை அறிமுகப்படுத்துகின்ற செல்நெறியை ரெய்லர் (1992), ஹோனரத் (1992), (f) பிறசேர் (1995 – 1997) போன்றோர் முன்னெடுத்திருந்தனர். இவர்களின் கருத்தியல் கட்டமைப்பு ரீதியான பங்களிப்பு மறுக்கப்பட முடியாதது. பின் – காலனித்துவ அரசியல் வரலாற்று வெளியில் சிறு குழுமங்கள், இனங்கள் தாராளவாத சனநாயக பண்பாட்டு நாகரிக முறைமைக்குள் உள்ளீர்க்கப்பட்டு தமது தனித்துவ அடையாளங்களை இழந்து […]

ஈழ நாட்டில் காணப்படும் கண்ணகி வழிபாட்டுத் தலங்களை இரு பிரிவுகளாக வகைமை செய்து கொள்ளலாம். தமிழர்கள் வழிபடும், தமிழரின் தாயகப் பகுதியில் காணப்படும் கண்ணகை அம்மன் கோயில்கள், சிங்கள மக்களால் வழிபடப்படும் பத்தினி தெய்வக் கோயில்கள் என்பனவாம் அவை. கண்ணகி வழிபாட்டின் தொன்மையினை இலக்கியங்களின் வழியும் அவ்வழிபாட்டுச் சடங்குகளின் வழியும் அறியலாம். கண்ணகி வழக்குரை, சிலம்பு கூறல், கோவலன் கதை என்பன கண்ணகி வரலாறு தொடர்பான பக்தி நிலையில் எழுந்த […]

ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன இலங்கையில் அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் வரலாறு அந்நியர் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இலங்கையில் மேற்கிளம்பின. அந்நியக் கிளர்ச்சிகள் சில சந்தர்ப்பங்களில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளாகவும் அமைந்தன. பௌத்த பிக்குகள் இத்தகைய கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கியதையும், அக்கிளர்ச்சிகளில் பங்கு பற்றியதையும் காண முடிகிறது. இதன் பின்னணியில் பௌத்த பிக்குகள் பௌத்த சமயத்தைத் தூய்மைப்படுத்துவதிலும், பௌத்த மறுமலர்ச்சியிலும் தமது பங்களிப்பை […]

“சமூகத்திடமிருந்து ஒருவர் பண்பாட்டைக் கற்கும் போது தன் சுய படைப்புத் திறன் மூலம் அறியாமல், கடந்த காலத்தின் மரபுத் தொடர்ச்சியாக, முறைசார் – முறைசாராக் கல்விகள் மூலமாகவே அறிகிறார்” என்று பண்பாட்டின் தொடர்ச்சி பற்றி ராபர்ட் ஹெலூவி கூறுகின்றார். ஒரு சமூகத்தின் அல்லது குழுமத்தின் தனித்துவத்தை அடையாளங்களினூடாக இனங்காண்பதிலும், அவற்றின் பாரம்பரியங்களை அறிந்து கொள்வதிலும் பண்பாட்டம்சங்கள் பெறுமானமுடையவையாகக் காணப்படுகின்றன. பண்பாட்டம்சங்கள் சமூகத்தின் ஒவ்வோர் துணுக்குகளிலும் அல்லது அதைவிட நுணுக்கமாக சமூகத்தின் […]

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள சாவகச்சேரிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அதே பிரிவில் உள்ள நாவற்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம்.  நாவற்குழிக் கோவிற்பற்றில் நாவற்குழி, நுணாவில், கோயிலாக்கண்டி ஆகிய மூன்று துணைப் பிரிவுகளை நிலப்படம் காட்டுகிறது (படம்-1). எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படம் நாவற்குழிக் கோவிற்பற்றை மூன்று […]

தமிழ்ச் சூழலில் குயர் மக்களுடைய பிரதிநிதித்துவப்படுத்தலில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கிருக்கின்றது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழலில் பால், பால்நிலை மற்றும் பாலியல்பு சார்ந்த மீள்வருவார்ப்புகளைக் (Stereotype) கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்காற்றுகின்றன. குயர் மக்கள் பற்றிய மீள்வருவார்ப்புகள் பல்வேறு வடிவங்களில் கட்டமைக்கப்படுவதை அவதானிக்கலாம். மீள்வருவார்ப்புகள் எந்த வடிவங்களில் இருந்தாலும் அவை சமூகத்தில் பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும். பால், பால்நிலை அசமத்துவமானது பல்வேறு ஒடுக்குமுறைகளை ஏற்படுத்துகின்றது. பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான […]

இலங்கையின் முதலாவது மதமறுமலர்ச்சிக் காலகட்டத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய அம்சம் ஒன்றுள்ளது. தமிழர்கள் மத்தியில் உருவாகி இருந்த மதமறுமலர்ச்சி இயக்கம், ஆறுமுக நாவலர் என்று அறியப்படும், கந்தப்பிள்ளை ஆறுமுகப்பிள்ளை என்ற ஆளுமைமிக்க, ஒருவரின் பெயரோடு பின்னிப்பிணைந்தது. அது ஒரு மக்கள் இயக்கமாக அன்றி, ஆறுமுக நாவலரினதும் அவரது சகாக்களினதும் செயற்பாடுகளின் தொகுப்பாகவே அமைந்தது. ஆனால் சைவ மதத்துக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், தமிழுக்கும் வழங்கப்பட்டதால் மொழிசார்ந்த தேசியவாதம் இங்கு உருவானது. 1879 இல், […]

திரட்டுகள்

பலதரப்பட்ட மதங்களைப் பின்பற்றிய மக்களின் கலைரசனைக்குரிய பொருளாக இருப்பது புத்தர் சிலைகளாகும். இவை பௌத்த மதத்தின் வழிபாட்டுப் பொருளாக மட்டுமன்றி, சிற்பக் கலையின் முக்கிய  கவின்கலைப் பொருளாகவும் காணப்படுகிறது. இலங்கையில் இச்சிலைகள் இருக்கும் நிலையிலும், நிற்கும் நிலையிலும், கிடக்கும் நிலையிலும் காணப்படுகின்றன. ஆந்திராவில் மகாயான பௌத்த மதம் அடைந்த வளர்ச்சியைத் தொடர்ந்து கி.பி. 1 ஆம் 2 ஆம் நூற்றாண்டுகளில் இச்சிற்பங்களை ஆக்கும் மரபு தோற்றம் பெற்றாலும் இலங்கையில் இதன் […]

ஆங்கிலம் மூலம் : குமாரி ஜெயவர்த்தன (சேர்.பொன். அருணாசலத்தின் குடும்பப் பின்னணியையும், அவரது மாமன் சேர். முத்துக்குமார சுவாமி, அவரது தமையன் சேர்.பொன். இராமநாதன் என்போர் பற்றியும், இலங்கையின் சிவில் சேவை உத்தியோகத்தராகவும் பின்னர் தமிழர்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய சேர்.பொன் அருணாசலம் பற்றியும் விமர்சன நோக்கில் எழுதப்பட்ட இக்கட்டுரையை இத்தொடரின் முதலாவது கட்டுரையாக தருகின்றோம். குமாரி ஜெயவர்த்தன அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை […]

பதிவுகள்

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் […]

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் […]

மலையகத்தின் கூத்துக் கலைகள் பொன்னர் – சங்கர்  மலையகத் தமிழர்களிடையே மட்டுமே நிகழ்த்தப்படும் ‘பொன்னர் – சங்கர்’ கூத்தின் மையக் கருவாக, குண்ணுடையான், தாமரை நாச்சி ஆகியோரின் மரணமும், அவரது குழந்தைகளான பொன்னர், சங்கர், தங்காள் ஆகியோரின் சோகமும் துயரமும் அமைந்துள்ளன. இக்கூத்து, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தோட்டங்களிலும், குறிப்பாக நோர்வூட், போற்றி, சீனக்கொல்லை, வீரட் தோட்டங்கள், மஸ்கெலிய, காட்மோர், அரசித் தோட்டம், புளூம்பில்ட், […]

அறிமுகம் இலங்கை மலையகத் தமிழர்கள் என்பவர்கள் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான சுமார் 125 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், தென்னிந்தியக் கிராமங்களில் இருந்து பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, தென் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மேல் மாகாணம் ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் ஆறு முதல் எட்டு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களாவர். 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர் […]

ஆவணப்படங்கள்

இந்தியா உட்பட பலநாடுகளில் தடைசெய்யப்பட்ட கடலட்டை வளர்ப்பு மற்றும் ஏற்றுமதியானது, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தமிழர் தேசத்தின் வடக்கு – கிழக்கு கடற்பரப்புக்கள் மீது கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. மக்களிடம் இருந்த பொருண்மியத் (Economy) தேவைகளைக் குறிவைத்து இங்குள்ள கடல் வளத்தை அழிக்க வேண்டுமென்ற பின்புலத்தோடு கொண்டுவரப்பட்டதாகவே பல சமூக ஆர்வலர்கள் மற்றும் கடல்வள ஆராய்ச்சியாளர்களது கருத்தாக உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட […]

‘நீதிக்காக நீண்ட காத்திருப்பு’ ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின் போதும், அதன் பின்னும் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கதைகளை ஆராய்கிறது. அவர்களது உறவுகளது வலிமிகுந்த போராட்டங்களும் கண்ணீரும் கோபமும் ஏக்கமும் இதன் மூலம் உலகிற்கு எடுத்துரைக்கப்படுகின்றன. நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை இது வலியுறுத்துகின்றது, பொறுப்புக்கூற மறுக்கும் அதிகாரசக்திகளின் இயல்பாகிவிட்ட அலட்சியத்தை கேள்விக்குட்படுத்துகிறது. இந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் அமரர் அ. சேகுவேராவால் (இசைப்பிரியன்) அவர்களது மறைவால் காலதாமதமாக வெளிவந்தாலும் […]

வடக்கு மாகாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தண்ணீர் (குடிநீர்) பேராபத்து பற்றிய எழுநாவின் விழிப்புணர்வு விவரணப்படம்! இது தண்ணீர் பற்றிய உலகளாவிய அரசியல் மற்றும் உலகமயமாதலின் விளைவுகள் பற்றிப்பேசும் அதேவேளை, வடக்கு மாகாணத்தின் நீர் மூலங்கள், நீர் ஆதாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக சுண்ணக்கற்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் பற்றியே இந்த விவரணப்படம் அதிகம் கரிசனை கொள்கிறது. அருகி வரும் நிலத்தடி நீர் வளம், நன்னீரின் அத்தியாவசியம், […]

காணொலிகள்

சித்த வைத்திய கூட்டுறவுச் சங்கம் 1992இல் ஆரம்பிக்கப்பட்டது. மூலிகைத் தாவரங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் வளங்களை சரிவர பயன்படுத்த முடியாதுள்ளது. காரைநகரிலுள்ள கடுக்காய் பற்றி அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. தற்போது நாங்கள் அது தொடர்பில் விழிப்பூட்டி அங்கிருந்து மருந்துக்கு தேவையான கடுக்காயைப் பெற்றுவருகின்றோம். நிதிப் பிரச்சினையால் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமாகவுள்ளது. மூலிகை மருந்து உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் […]

மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அல்லது அரச ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளில் உத்வேகத்தோடு மக்களை இணைத்துக்கொண்டு போராடுவதில் பல சவால்கள் உள்ளன. ஆண்களின் மேலாதிக்க அரசியல், பொருளாதார சிந்தனை சரியான, முழுமையான சிவில் சமூக செயற்பாட்டிற்கு பொருத்தமானதாக இல்லை. மட்டக்களப்பில் இருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் இரு கருத்தியல்கள் உள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஏன் பிணை அவசியம், பிணை தொடர்பில் மக்கள் மத்தியிலுள்ள இரட்டை நிலைப்பாடுகள், எவ்வாறான சந்தர்ப்பங்களில் பிணை மறுக்கப்படலாம், இலங்கையில் குற்றவியல் வழக்குகளிலுள்ள பலவீனங்கள் போன்ற பல விடயங்களை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் இந்தக் காணொலியில் விளக்கியுள்ளார்.

உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை. உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளது. அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி […]

நூல்கள்

சஞ்சிகைகள்

குறுநூல்கள்

கருத்துரைகள்

இளங்கோ யாழ்ப்பாணத்தில் அம்பனையில் பிறந்து தனது பதினாறாவது வயதில் புலம்பெயர்ந்தவர்; தற்போது கனடாவில் வசிக்கிறார். இதுவரை கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இது அவரது பத்தாவது புத்தகம். ‘ஈழ யுத்தத்தில் அநியாயமாகப் பலியான அனைவரிற்குமாக’ படையல் செய்யப்பட்டுள்ள இந்நூல் 112 பக்கங்களில் எழுநாவால் அழகான, கைக்கடக்கமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இளங்கோவின், யுத்தத்தால் சிதைவடைந்த வீட்டின் எஞ்சிய பகுதியும், அதனைச் சுற்றிப் படரும் கொடிகளும் பூக்களும் […]

‘உத்தியாக்கள்’ என்பது ‘முன்னோர்கள்’ எனப் பொருள்படும். அதாவது வேடர்கள் தமது முன்னோர்களை அவர்களது மொழியில் ‘உத்தியாக்கள்’ என அழைப்பது வழக்கம். பேராசிரியர் மௌனகுரு அவர்கள் தனது அணிந்துரையில், திராவிட மொழியில் ‘உத்தி’ என்பது ‘மேலே’ என்பதைக் குறிக்கும் என்கிறார். அப்படியானால் மேலே சென்றவர்களை, அதாவது முன்னோர்களைக் குறிக்கும் என்கிறார். இந்நூலானது அணிந்துரை தொடக்கம் பதினொரு அத்தியாயங்களுடன் பின்னணைப்புகள் ஈறாக 176 பக்கங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. வேடர் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் […]

பேத்தாளை பொது நூலகத்தில் இடம்பெற்ற ‘நிலா முற்றம்’ நிகழ்ச்சியில் கமலநாதன் பத்திநாதன் அவர்களுடைய ‘உத்தியாக்கள்’ நூல் மீதான என்னுடைய வாசிப்பு அனுபவ உரையினை உலக ஆதிவாசிகள் தினமான இன்று (2025.08.09) பகிர்ந்து கொள்கின்றேன். தான் வாழ்ந்த சமூகத்தைப் பற்றி, அதுவும் காலந்தோறும் ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் தன் சமூகம் குறித்து, அவர்களது வாழ்வியல், பண்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்து முறைப்படுத்தி ஒரு நூலாக வெளியிட்டிருப்பது, அந்த சமூகத்திற்கு அவர் […]

நூல்: யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும் தொகுப்பும் தமிழாக்கமும் : கந்தையா சண்முகலிங்கம் பதிப்பகம்: எழுநா ஆண்டு: 2025 பக்கங்கள்: 268 விலை: 1, 500 இலங்கை ரூபா ஈழத் தமிழ்ச் சமூகம் நீண்ட நெடிய வரலாற்றின் ஊடாகக் கட்டமைந்த ஒன்று. இந்த வரலாறு என்றுமே உறைபனியல்ல. அது ஓடும் ஜீவநதி. அதனால்தான் இந்தியத் தமிழ்ச் சமூகத்தைக் காட்டிலும் ஈழச் சமூகம் மாறுபட்ட தொன்மை, தொடர்ச்சி, அசைவியக்கங்களைக் கொண்டுள்ளது. […]

நிகழ்வுகள்

நிமிர் விடுதலை இயக்கத்தினால் 'காணி உரிமைகளும் மலையகப் பெண்களும்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி…

எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுகமும் கலந்துரையாடலும், 'PILLARS' அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் வீதி, புத்தளத்தில் அமைந்துள்ள…

எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு, 28.02.2026 (சனிக்கிழமை) அன்று, காலை 10.00 மணிக்கு - 238, பிரதான வீதி,…

எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 25.02.2026 (புதன்கிழமை)…

எழுநா பற்றி

எழுநா, ஈழமும் ஈழம் சார்ந்த ஆய்வும் இடைவெட்டும் பரப்பை 'ஈழக்கற்கைகள்' (Eelam Studies) என்று வரையறுத்துக் கொண்டு, ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், பொருளாதாரம், சூழலியல், அபிவிருத்தி, சட்டம் போன்ற தளங்களில் ஆய்வுகளை உருவாக்குவதையும் பரவலாக்குவதையும் முதன்மைப் பணியாகக் கொண்டு இயங்குகின்ற இலாப நோக்கற்ற அமைப்பாகும்.