கூட்டுறவு, ஒரு பலமான சமூக – பொருளாதார அடித்தளத்தையும் சமூக மூலதனத்தையும் சம அளவில் உள்வாங்கி, பல மட்டங்களில் (கிராம, பிரதேச, மாவட்ட மற்றும் மாகாணச் சம்மேளனங்களாக) கிளைவிட்டுத் தழைக்கும் ஒரு அமைப்பு ஆகும். இலங்கையில், மிகவும் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மற்றும் மலையக நிர்வாக நிலப்பரப்பில் கூட்டுறவின் அசைவியக்கம் ஒரு தேங்கு நிலைக்குச் சென்றுள்ளது. அண்மையில் கூட, இது பற்றிய கரிசனை பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. தற்போதைய கூட்டுறவின் […]