இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்
‘வன்னி’ (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict): கிராபிக் நாவலை முன்வைத்து
10 நிமிட வாசிப்பு
‘வன்னி’ (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict) என்கின்ற கிராபிக் நாவல் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்தைப் பற்றிப் பேசுகின்றது. 2004 இல், செம்பியன்பற்றில் சுனாமியால் பாதிக்கப்படும் ஒரு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த அன்ரனிதான் இதில் முக்கிய பாத்திரம். அவரின் குடும்பத்தினரும், அயலவரான சுஜி/நளாயினி குடும்பத்தினரும் செம்பியன்பற்றில் இருந்து பரந்தன், கிளிநொச்சி, விசுவமடு, No Fire Zone 1, No Fire Zone 2 […]
மேலும் பார்க்க
சங்கரி சந்திரனின் ‘சூரியக்கடவுளின் பாடல்’ (Song of the Sun God)
10 நிமிட வாசிப்பு
இலக்கியம் கடந்த காலத்தை சாம்பல் புழுதிகளிலிருந்து வெளியே எடுத்துவரும் வல்லமை உடையது. ஆகவேதான் அதிகார வர்க்கம், எழுதுபவர்களை எப்போதும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஓர் இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால், அவர்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களை அழிக்கவேண்டுமென, அன்றைய பேரரசுகளிலிருந்து இன்றைய நவீன அரசுகள் வரை முயல்கின்றன. காலனித்துவத்திலிருந்து விடுபட்ட இலங்கையில், தமிழர்கள் தாம் ஒடுக்கப்படுவதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கியதை சிங்கள அதிகார வர்க்கம் நன்கு விளங்கிக்கொண்டதால்தான், அரிய நூல்களையும், ஓலைச்சுவடிகளையும், […]
மேலும் பார்க்க
‘தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்’ : ‘Tea Time With Terrorists’ நூலை முன்வைத்து
11 நிமிட வாசிப்பு
‘Tea Time With Terrorists’ என்கின்ற சுவாரசியமான தலைப்புடன் இருந்த ஈழம் பற்றிய நூலை அண்மையில் வாசித்தேன். 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு அமெரிக்கருக்கு ‘தீவிரவாதிகள்’ பற்றி அறியும் ஆவல் வருகின்றது. தீவிரவாதிகளை நேரடியாக அறிவதன் மூலம் ஏதேனும் ஒருவகையில் தீவிரவாதத்தை அறியவும், கட்டுப்படுத்தவும் முடியும் என அவர் நினைக்கின்றார். இத்தனைக்கும் அவர் இயந்திரவியலில் பணியாற்றிவர். ஒருவகையில் இன்றைய AI (Artificial Intelligence) பற்றி 25 […]
மேலும் பார்க்க
மலரவனின் ‘போர் உலா’ (War Journey)
10 நிமிட வாசிப்பு
‘போர் உலா’ 1990 களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த மலரவன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல். ஆங்கிலத்தில் இது ‘War Journey’ என மொழியாக்கம் செய்யப்பட்டு பெங்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 1990 ஆம் ஆண்டு மாங்குளத்தில் இருந்த சிங்கள இராணுவ முகாமைத் தகர்ப்பதற்காய் மணலாற்றிலிருந்து செல்கின்ற போராளி அணியின் கதையைச் சொல்கின்றது. மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் 2000 […]
மேலும் பார்க்க
கைதி #1056 : ரோய் ரத்தினவேல் அவர்களின் சுயசரிதை
13 நிமிட வாசிப்பு
மனவடுக்களின் காலம் ‘Prisoner #1056’ என்கின்ற இந்தச் சுயசரிதை நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது பகுதி, ரோய் ரத்தினவேல் என்பவர் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள் பற்றியது. இரண்டாவது பகுதி கனடாவில் அவர் பெறுகின்ற அனுபவங்கள் குறித்தது. இலங்கையில் பிறந்த ரோய் ரத்தினவேல் போரின் நிமித்தம் அனுபவித்தவை மிகுந்த துயரமானவை. ரோய் கொழும்பில் பிறந்தாலும், நாட்டு நிலைமைகளால் அவரது தாயாரோடும், தமையனோடும் பருத்தித்துறைக்கு அனுப்பப்படுகின்றார். தகப்பன் மட்டும் […]
மேலும் பார்க்க
சாரோன் பாலாவின் ‘படகு மக்கள்’
17 நிமிட வாசிப்பு
‘படகு மக்கள்’ (The Boat People), கனடாவில் கப்பலில் வந்து இறங்கிய ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசும் ஒரு புதினமாகும். ஐநூறுக்கு அதிகமான ஈழத் தமிழர்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக கடலில் பயணித்து கனடாவின் கிழக்குப் பகுதியில் வந்து சேர்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல் இதுவாகும். இந்நாவலில் மகிந்தன் என்பவனும், அவனது பத்து வயது மகனான செழியனும் முக்கிய பாத்திரங்களாகின்றனர். அவர்கள் கனடா வந்திறங்கியபின், அவர்களுக்காக […]
மேலும் பார்க்க
ஷியாம் செல்வதுரையின் ‘பசித்த பேய்கள்’ (The Hungry Ghosts)
12 நிமிட வாசிப்பு
’பசித்த பேய்கள்’ நாவல் 1983 இனக்கலவரத்தின் பின்னர் கனடாவிற்கு வந்து சேரும் சிவனின் கதையாகும். சிவன் தனது 19 ஆவது வயதில் இலங்கையில் உயர்தரப் பரீட்சை எடுத்த கையோடு கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். அது 1984 இல் நிகழ்கின்றது. சிங்களத் தாய்க்கும், தமிழ்த் தந்தைக்கும் பிறந்த சிவன், ‘83’ கலவரத்தால் அச்சுறுத்தப்பட்டாலும், அவர்களைச் சிங்களக் கலப்பின அடையாளம் காப்பாற்றுகின்றது. இக்கலவரம் நிகழ்வதற்கு முன், சிவன் அவரது தமிழ்த் தந்தையை இழந்துவிடுகின்றார். சிவனின் […]
மேலும் பார்க்க
அனுக் அருட்பிரகாசத்தின் ‘ஒரு குறுகிய திருமணத்தின் கதை’
17 நிமிட வாசிப்பு
1 நெடும் வருடங்கள் நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு நாளைப் பிரித்தெடுத்து நிதானமாய்ப் பார்த்தால் என்னவாகும்? உயிர் தப்பியதே அதிசயமாய்த் தோன்றுவது ஒருபுறமிருக்க, அந்த நாளொன்றில் இந்தளவு சம்பவங்கள் நிகழ்ந்ததா என்ற ஆச்சரியம் இன்னொருவகையில் ஒருவரைத் திகைக்க வைக்கக்கூடும். அனுக் அருட்பிரகாசம் எழுதிய ‘The Story of a Brief Marriage’ நாவல், எறிகணைத் தாக்குதலில் காயமடையும் ஆறுவயதுச் சிறுவனை, இளைஞனான தினேஷ் வைத்தியசாலைக்குள் தூக்கிக்கொண்டு வருவதோடு தொடங்குகின்றது. அதேபோல […]
மேலும் பார்க்க