பொன் பிரபாகரன், Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

பொன் பிரபாகரன்

இலங்கையில் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சிக்கான பின்னணி

17 நிமிட வாசிப்பு

இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்திடையே 1906, 1912, 1950ஆம் ஆண்டுகளில் முக்கியமான பல நிகழ்வுகள் இடம்பெற்றன. 1906ஆம் ஆண்டு மாட்டு வண்டிக்காரர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசியல், மதரீதியான கொதிநிலைகள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கம் கொழும்பு நகரப் பாட்டாளிகளிடையே ஆழமாக வேரூன்றியது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் இயக்கம் ஒன்று காணப்படவில்லை. மதரீதியான அமைதியின்மை, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அரசின் அநேக செயற்பாடுகள் விமர்சனங்களுக்குள்ளாகின. அரசியல் முறைமையானது 1833ஆம் […]

மேலும் பார்க்க

19ஆம் நூற்றாண்டில் பெருந்தோட்டச் சமூகம்: அடிமைத்தனமும் மீட்சியும்

10 நிமிட வாசிப்பு

18 ஆம் நுாற்றாண்டு காலப்பகுதியில் நாட்டின் மிகப்பெரும் வதிவிடத் தொழிலாளர் சமூகமாகத் தோட்டத் தொழிலாளர்களே விளங்கினர். தென்னிந்தியாவிலிருந்து நிலமற்ற ஏழைகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு விவசாயிகள் தேயிலை, கோப்பி, தென்னை மற்றும் இறப்பர் தோட்டப் பணிகளுக்காக பிரித்தானியப் பெருந்தோட்ட உரிமையாளர்களால் அழைத்து வரப்பட்டனர். இக்குடியேற்றத் தொழிலாளர்களினதும் அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்களினதும் எண்ணிக்கை 1891 இல் 2,35,000 ஆகவும், 1921 இல் 5,00,000 ஆகவும், பின்னர் 1931 ஆம் ஆண்டில் […]

மேலும் பார்க்க

18 ஆம் நூற்றாண்டின் காலனித்துவக் கால அடிமைக் குடியேற்றங்களும் மலையகத் தமிழர்களும்

11 நிமிட வாசிப்பு

இந்தியாவும் காலனித்துவமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்ட இந்தியாவின் தென்னாடும், மொகலாயப் பேரரசுகளால் ஆளப்பட்ட வடநாடும் படிப்படியாக வலுவிழந்து போயின. 1498 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமா இந்தியாவின் மேற்குகரையில் உள்ள கோழிக்கோடு (Calicut) துறைமுகத்தை வந்தடைந்தார். இவரது வருகையோடு பரவிய போர்த்துக்கேயரின் ஆட்சி 1600 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையோடு வீழ்ச்சியுற்றது. பட்டு, வாசனைத் திரவியங்களின் வாணிபத்திற்காக வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி படிப்படியாக […]

மேலும் பார்க்க

இலங்கை மலையகத் தமிழர் வரலாறு: ஓர் அறிமுகம்

24 நிமிட வாசிப்பு

மலையகம் என்பது கடல் மட்டத்திலிருந்து 1000 அடிக்கு மேற்பட்ட பகுதிகளை மட்டும் உள்ளடக்குவதில்லை. உண்மையில், கரையோரத்தில் அமைந்துள்ள தென் மாகாணப் பகுதிகளான காலி உடுகம மலைகள், மாத்தறை மாவட்டத்தின் தெனியாயப் பிரதேசம், பத்தேகமப் பிரதேசங்களில் வாழும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களையும், அண்சமவெளிப் பிரதேசங்களில் அமைந்துள்ள களுத்துறை, கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை மாவட்டத் தொழிலாளர்களையும், மத்திய மலைநாட்டில் 3000–5000 அடி உயரத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய பகுதிகளும் மலையகம் […]

மேலும் பார்க்க

இலங்கை மலையகத் தமிழர்களின் அடையாளப் பிரச்சினைகளும் அரசியல் அடையாளத்துக்கான போராட்டங்களும்

23 நிமிட வாசிப்பு

இலங்கையில் இன்று ‘மலையகத் தமிழர்கள்’ என அடையாளப்படுத்தப்படுகின்ற மக்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் தெற்காசியா முழுவதும் பரவியிருந்த மேலைத்தேயக் காலனித்துவத்தின் விளைவாகத் தோன்றியவர்கள் ஆவர். குறிப்பாக, பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் தவிர்க்க முடியாத ஒரு விளைவாக மலையகத்தில் குடியேற்றப்பட்டவர்கள். இம்மக்கள் தென்னிந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். வரலாற்றுத் தகவல்களின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து சுமார் 35% பேரும், சேலம் மாவட்டத்திலிருந்து 18% பேரும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 10% பேரும், மதுரையிலிருந்து […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்