அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்

இந்தியச் சமஷ்டி முறை

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண உலக நாடுகளின் சமஷ்டி முறைகளில் இந்தியாவின் சமஷ்டி முறை தனித்துவம் மிக்கது. இந்தியாவின் சமஷ்டி முறை அரசியல் யாப்புகளை உருவாக்குதல் (Constitution Making) தொடர்பாகச் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான முன் உதாரணமாகத் திகழ்வது. சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண ‘Constitution Making in Multi – cultural Societies: Some International Experiences’ என்னும் கட்டுரையில் ‘Success in India’ என்னும் உப தலைப்பின் […]

மேலும் பார்க்க

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன் அரசுகள் தேசங்களாக (Nation) தம்மை மாற்றிக்கொள்ள முயல்கின்றன. அரசியல், பண்பாட்டு விருத்தி, நாட்டை புவியியல் ரீதியில் ஒன்றிணைத்தல், பொருளாதார விருத்தி, கல்வி விருத்தி என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்புதல் (Nation Building) என்ற தேவையை நோக்கியனவே. ஒரு தேசியக்கொடி, ஒரு தேசியகீதம், வரலாறு, பள்ளி மாணவர்களுக்கான தேசப்படப் புத்தகங்கள் என்பன யாவும் தேசத்தைக் கட்டி எழுப்பும் பணிக்காகவே நடைபெறுகின்றன. இத்தாலியை ஒன்றிணைத்த பின்னர் […]

மேலும் பார்க்க

நான்காம் உலகமும் அரசு இல்லாத தேசிய இனங்களும் – பகுதி 1

16 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பெர்னாட் நைட்ஸ்மன் ‘நான்காவது உலகம்’ (The Fourth world), அவ்வுலகிற்குள் சிறைப்பட்டிருக்கும் அரசு இல்லாத தேசிய இனங்கள் (Stateless Nations) என்ற இரு கருத்தாக்கங்கள் உலகின் புவி அரசியலை (Geo – Politics) புரட்சிகரமான புதிய கோணத்தில் நோக்குவதற்கு உதவிய எண்ணக்கருக்களாகும். மிக்சிக்கன் பல்கலைக்கழகம் (1970-1977), பேர்க்லி பல்கலைக்கழகம் (1977-2009) ஆகிய இரு பல்கலைக்கழகங்களிலும் புவியியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் பெர்னாட் நைட்ஸ்மன் (1941-2000) நான்காவது […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வும் தன்னாட்சியும்: சர்வதேச உதாரணங்கள் சில

13 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண உலகின் பெரும்பாலான நாடுகள் பன்மைப் பண்பாடுகளை உடைய சமூகங்களாக (Multi-cultural Societies) விளங்குகின்றன. ஒரு தேசிய இனம், ஒரு மொழி, ஒற்றைப் பண்பாடு என அழைக்கக் கூடிய நாடுகள் உலகில் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட சமூகங்களில் பெரும்பான்மையானவை ஆழமான பிளவுகளையுடைய சமூகங்கள் (Deeply Divided Societies) என அரசியல் விஞ்ஞானிகள் சிலர் குறிப்பிடுவர். ஆழமான பிளவுகளையுடைய சமூகங்களின் சிறுபான்மைத் தேசிய […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் : பகுதி 3

10 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகளை உருவாக்குதல் பற்றி இலங்கையின் 1978 அரசியல் யாப்பு, தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பு என்னும் இரு உதாரணங்கள் குறித்து லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் கருத்துகளை முன்னர் எடுத்துக்கூறி அறிமுகம் செய்தோம். அடுத்து இந்தியாவில் அதிகாரப் பகிர்வு (Devolution of Powers in India) என்னும் விடயம் பற்றி அவரது கருத்துகளை நோக்குவோம். இந்தியாவில் அதிகாரப் பகிர்வு […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் – பகுதி 2

18 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க அதிகாரப் பகிர்வுக்கான கொள்கையைத் தீர்மானித்தல், அதிகாரத்தைப் பெறும் அலகுகளைத் தீர்மானித்தல் என்ற முதலிரு படிநிலைகள் பற்றி இதுவரை எடுத்துக் கூறினோம். பெல்ஜியம், கனடா, அவுஸ்திரேலியா, நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளின் அனுபவங்களை உதாரணம் காட்டி இவ்விரு படிநிலைகளிலும் அதிகாரத்தைப் பகிர்வு செய்யும் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க எடுத்துக் கூறினார். இதற்கு அடுத்ததாக நாம் அதிகாரத்தை ஏற்பவர்களின் தேவைகளின் […]

மேலும் பார்க்க

அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் – பகுதி 1

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்  : லக்ஸ்மன் மாறசிங்க (Lakshman Marasinghe) பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க ‘A Survey of Structures for Power Devolution’ என்னும் தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரை ‘Institute for Constitutional Studies’ என்னும் ஆய்வு நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘Power Sharing : The International Experience’ என்னும் நூலின் இரண்டாவது அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்வதேச அனுபவங்கள் குறித்த பல […]

மேலும் பார்க்க

சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 3

16 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்  : றொனால்ட்.எல். வாட்ஸ் மலேசியா றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் ஒப்பீட்டு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியா பற்றி அடுத்து நோக்குவோம். மலேசியாவின் சமஷ்டி பற்றி இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறைப் பேராசிரியர் M.O.A. டி சில்வா அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அவரது கட்டுரை ‘Power Sharing the International Experience’ என்னும் நூலில் (2011) […]

மேலும் பார்க்க

சமஷ்டி அரசியல் முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான கனடா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் சிறப்புக் கூறுகளை இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக் கூறினோம். அடுத்து, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளாகவும் பன்மொழிச் சமூகங்களாகவும் அமையும் இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளின் சமஷ்டி முறைகளின் சிறப்புக் கூறுகளை நோக்குவோம். இந்தியா இந்தியாவின் சமஷ்டி பற்றிய எமது ஒப்பீடு பன்மொழி (சிங்களம், தமிழ், ஆங்கிலம்), பல்சமய (பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்), […]

மேலும் பார்க்க

சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 1

10 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் எழுதிய ‘Comparing Federal Systems’ என்னும் நூல் 12 நாடுகளின் சமஷ்டி முறைகளை ஒப்பிட்டு ஆராயும் நூலாகும். இந்நூலை கனடாவின் ‘Queen’s University’ வெளியிட்டுள்ளது. இந்நூலின் 2 ஆவது அத்தியாயம் ஒப்பீட்டு ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சமஷ்டி முறைகளின் சிறப்புக் கூறுகளை ஒப்பீட்டு முறையில் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வத்தியாயத்தில் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள் கூறியிருக்கும் கருத்துகளைத் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்