தொல்லியலும் கடந்த காலத்தை ஆயுதமாக்குதலும் – பகுதி 2
74 நிமிட வாசிப்பு
மரபுடன் வாழ்தல்: சமூகம், நினைவகம், அன்றாடப் பேச்சுவார்த்தைகள் முந்தைய பகுதிகள் தொல்லியலை இறையாண்மை, தேசியம், அரசு உருவாக்கம் ஆகிய கண்ணோட்டங்களில் ஆராய்ந்திருந்தால், நிறுவனங்கள் மீது மட்டுமே பிரத்தியேகமாகக் கவனம் செலுத்துவது, போருக்குப் பிந்தைய மரபுசார் அரசியலைப் பற்றிய ஒரு முழுமையற்ற விவரத்தை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. தொல்லியல் அதிகாரம் ஒருபோதும் ஒரு வெற்று நிலப்பரப்பில் செயல்படுத்தப்படுவதில்லை. அது மரபுசார் இடங்களுக்குள் வாழும் மக்களால் எதிர்கொள்ளப்படுகிறது, விளக்கப்படுகிறது, பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது, சில […]
மேலும் பார்க்க
19ஆம் நூற்றாண்டில் பெருந்தோட்டச் சமூகம்: அடிமைத்தனமும் மீட்சியும்
10 நிமிட வாசிப்பு
18 ஆம் நுாற்றாண்டு காலப்பகுதியில் நாட்டின் மிகப்பெரும் வதிவிடத் தொழிலாளர் சமூகமாகத் தோட்டத் தொழிலாளர்களே விளங்கினர். தென்னிந்தியாவிலிருந்து நிலமற்ற ஏழைகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு விவசாயிகள் தேயிலை, கோப்பி, தென்னை மற்றும் இறப்பர் தோட்டப் பணிகளுக்காக பிரித்தானியப் பெருந்தோட்ட உரிமையாளர்களால் அழைத்து வரப்பட்டனர். இக்குடியேற்றத் தொழிலாளர்களினதும் அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்களினதும் எண்ணிக்கை 1891 இல் 2,35,000 ஆகவும், 1921 இல் 5,00,000 ஆகவும், பின்னர் 1931 ஆம் ஆண்டில் […]
மேலும் பார்க்க
தொல்லியலும் கடந்த காலத்தை ஆயுதமாக்குதலும் – பகுதி 1
65 நிமிட வாசிப்பு
தொடக்கக் குறிப்புகள் போர்கள் உயிர்களையும், சமூகங்களையும், நிலப்பரப்புகளையும் அழிக்கின்றன. அவை கடந்த காலத்துடனான உறவுகளையும் உருமாற்றுகின்றன. வன்முறைக்குப் பிறகு, சமூகங்கள் சாலைகள், பள்ளிகள், நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் மட்டும் அரிதாகவே கவனம் செலுத்துகின்றன. அவை வரலாற்றையே புனரமைக்கவும் முற்படுகின்றன. இந்த நிலத்திற்கு யார் சொந்தக்காரர்கள், யாருடைய துன்பம் நினைவுகூரப்பட வேண்டும், எந்தப் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும், எந்த வரலாற்று விவரிப்புகள் எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. […]
மேலும் பார்க்க
சமஷ்டி முறை: புனைவுகளும் உண்மைகளும் – பகுதி 2
19 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க இலங்கையின் இன்றைய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு இந்திய அரசின் அழுத்தம் காரணமாக 1987 ஆம் ஆண்டு இந்திய–இலங்கை உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் விளைவாக அதிகாரப் பகிர்வு (Devolution) என்ற கருத்து இலங்கையின் அரசியல் யாப்பினுள் புகுந்தது. 13 ஆவது அரசியல் திருத்தம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறை உண்மையான அதிகாரப் பகிர்வை வழங்கத் தவறியது. மாகாண சட்டசபைகள் […]
மேலும் பார்க்க
மலையக வீதிப்பாடல் இலக்கியம்: சப்ரகமுவ – தென் மாகாணங்களின் முன்னோடிகள்
18 நிமிட வாசிப்பு
சப்ரகமுவ மாகாணத்திலிருந்தும் சில வீதிப்பாடலாசிரியர்கள் தமது படைப்புகளைத் தந்துள்ளார்கள். குறிப்பாக, கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டைப் பிரதேசத்துடன் இவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர். இம்மாகாணத்தின் மற்றுமொரு அங்கமான இரத்தினபுரி மாவட்டத்திலும் பெருந்தோட்டப் பொருளாதாரக் கட்டமைப்பு நிலவுவதால், அங்கேயும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இம்மாவட்டத்தில் இவர்களது குடியேற்றம் ஆரம்பமாகியது. “இரத்தினங்களின் நகரம்” எனப் பொருள்படும் வகையில் இரத்தினபுரி என்று அழைக்கப்படும் இம்மாவட்டம், உலகப் புகழ்பெற்ற […]
மேலும் பார்க்க
பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், தேசிய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள்: ஒரு கண்ணோட்டம்
49 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், எண் 48, 1979இன் (இனிமேல் ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ என அழைக்கப்படும்) விளக்கக் குறிப்பும் அதன் முன்னுரையும், பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிவகுத்த பின்னணியைப் பின்வருமாறு விவரிக்கிறது: “இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கும், இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ உள்ள எந்தவொரு தனிநபர், தனிநபர்களின் குழு, சங்கம், அமைப்பு அல்லது ஆட்களது, குழுக்களது சட்டவிரோதச் செயல்பாடுகளைத் […]
மேலும் பார்க்க
இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்காலம் பற்றிய அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 5
26 நிமிட வாசிப்பு
முடிவுரை I நவீனகால கதிரியக்கக் காலக் கணிப்புகளின்படி (Radiometric Dating Methods) இற்றைக்கு 4,000–3,800 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே (கி.மு. 2033–கி.மு. 1895) கர்நாடக மாநிலத்தின் மாஸ்கி, தமிழகத்தின் பையம்பள்ளி ஆகிய மையங்களிலும், கி.மு. 1600 ஆண்டுகளுக்கு முன்னரிருந்து கர்நாடகத்தின் ஹல்லூர், தடகனஹள்ளி, குமரனஹள்ளி ஆகிய மையங்களிலும் இரும்புக்காலப் பெருங்கற் பண்பாடு ஆரம்பமாகி, அங்கிருந்து தமிழ்நாடு வழியாக கி.மு. 1200 ஆண்டளவில் இலங்கையை வந்தடைந்திருக்கிறது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கதிரியக்கக் காலக்கணிப்பு […]
மேலும் பார்க்க
மலையக நாட்டுப்புற வாழ்வியலில் அம்மை நோய் தொடர்பான சடங்கு
9 நிமிட வாசிப்பு
மனிதனுடைய ஒட்டுமொத்த சமூக வாழ்க்கையானது பலவகையான நிகழ்வுகளால் ஊடுருவப்பட்ட வலைப்பின்னலாக அமைந்துள்ளது. இந்நிலையில், அதன் பல்வேறு தாக்கங்களை வெளிப்படுத்தும் சமூக நடத்தைகளையும் கலை–இலக்கியங்களையும், அவற்றின் உட்சிக்கல் தன்மைக்கு ஏற்ப களஆய்வுக்கு உட்படுத்தி ஆராய்வது இன்றியமையாததாகும். எனவே, மலையக மக்களின் கலை மற்றும் சமூக அசைவியக்கங்களின் கருத்தாக்கங்களை ஆராய்வதற்கு பல்வேறு கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் நமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. இந்தக் கோட்பாடுகள் வெவ்வேறான இயல்புகளைக் கொண்டிருந்தாலும், அவற்றுக்கிடையிலான மாறுபாடுகளைக் காட்டிலும், […]
மேலும் பார்க்க
இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்காலம் பற்றிய அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 4
41 நிமிட வாசிப்பு
திருப்புமுனை எட்டு கலாநிதி றொபின் கொனிங்ஹாம்: அநுராதபுரமும் ஆதி இரும்புக்காலமும் CONINGHAM, R.A.E. (1995): ‘The Rise of Cities in Sri Lanka’ in F.R. Allchin: The Archaeology of Early Historic South Asia, Cambridge University Press. ALLCHIN, F.R. (1995): The Archaeology of Early Historic South Asia, Cambridge U.P. CONINGHAM, ROBIN (1999): Anuradhapura: The British – […]
மேலும் பார்க்க
மன்னார்க் கூத்து மரபு: ஈழத்தமிழ்க் கூத்து மரபில் ஒரு புதிய கிளை – பகுதி 1
13 நிமிட வாசிப்பு
மன்னார் மாவட்டம் – ஓர் அறிமுகம் இயற்கை அமைவு, மக்கள் மற்றும் தொழில்கள் மன்னார் மாவட்டம் இலங்கையின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய மாவட்டமாகும். இது வட இலங்கைக்குள் அடங்குகிறது. மன்னார் மாவட்டம் பொதுவாக பெருநிலப்பகுதி (மாதோட்டப் பகுதி) மற்றும் மன்னார் தீவு என்ற இரு இயற்கைப் பகுதிகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது மேற்குப் பகுதியில் மன்னார் வளைகுடா அமைந்துள்ளது. மாவட்டத்தின் பெரும்பகுதி சமவெளி நிலமாகவும் வறண்ட காலநிலையுடனும் காணப்படுகிறது. […]
மேலும் பார்க்க