திக்குகள் எட்டும் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

திக்குகள் எட்டும்

மாலதி எழுதிய ‘எனது தேசத்தில் கடந்துபோன ஒரு தருணம்’ – தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசின் இறுதி ஆண்டுகள் – பகுதி 2

23 நிமிட வாசிப்பு

இந்நூலின் முதல் எட்டு அத்தியாயங்களையும் திக்குகள் எட்டு தொடரின் கடந்த பாகத்திற் பார்த்திருந்தோம். இப்பாகம் அந்நூலின் மீதமுள்ள அத்தியாயங்கள் மீது கவனம் செலுத்துகின்றது. புலிகளின் நிழல் அரசின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் நிலவிய சமூக, அரசியல், வாழ்வியல் மற்றும் வரலாற்றுச் சூழல்களையும் போரின் விளைவாக அங்கு ஏற்பட்ட மாற்றங்களையும் இந்த அத்தியாயங்கள் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் விவரிக்கின்றன. போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் போருக்கு இட்டுச்சென்ற காரணிகள் முதல் முள்ளிவாய்க்கால் […]

மேலும் பார்க்க

மாலதி எழுதிய ‘எனது தேசத்தில் கடந்துபோன ஒரு தருணம்’ – தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசின் இறுதி ஆண்டுகள் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

இந்த நூல் N. மாலதி எழுதி, 2012 இல் வெளிவந்ததாகும். மாலதி அவர்கள் நியூசிலாந்து நாட்டினை வதிவிடமாகக் கொண்ட ஈழத்தமிழ் டயஸ்போறா சமூகத்தைச் சேர்ந்தவர். கணினித் தொழில்நுட்பத்துறையில் கலாநிதி ஆய்வுக்கல்வியை (PhD) நியூசிலாந்துப் (University of Canterbury) பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தவர். அத்துறையில் ஆய்வாளராகவும் புரோக்கிராமராகவும் பணியாற்றியவர். முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது, அரசுசாரா ஆயுதப் போராட்டங்களின் வரலாற்றில் (History of Armed Struggles by Non-state Actors) முக்கியமான அம்சமாகும்; […]

மேலும் பார்க்க

தமிழர்களும் தேசமும்: இந்திய – இலங்கைத் தமிழர்களின் தேசிய அடையாள அரசியல் மீதான ஒப்பீட்டு ஆய்வு – பகுதி 3

24 நிமிட வாசிப்பு

“இலங்கை இனமுரண்பாட்டில் மேற்கின் சமாதான அணுகுமுறை, பனிப்போர் காலகட்டத்தின் சமாதானத் தலையீடுகளை ஒத்த ஓர் ஊடுருவும் தன்மையின் தொடக்கம் என உணர முடிகிறது. இந்தியா, அதன் தோல்வியடைந்த இராணுவத் தலையீட்டினை அடுத்து, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னணியில், அடிப்படையாக மாற்றியமைக்கப்பட்ட புவியியல் சூழலுக்குள் அகப்பட்டுக்கொண்டது. இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டில் நேரடியாக ஈடுபடுவதை விலக்கிக்கொண்டது. இலங்கையை ஓர் இனத்துவ இணைவாக்கம்கொண்ட சந்தை ஜனநாயகமாக மாற்றும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக […]

மேலும் பார்க்க

தமிழர்களும் தேசமும்: இந்திய – இலங்கைத் தமிழர்களின் தேசிய அடையாள அரசியல் மீதான ஒப்பீட்டு ஆய்வு – பகுதி 2

24 நிமிட வாசிப்பு

இப்பகுதி ‘தமிழர்களும் தேசமும்’ எனும் மாதுரிகா இராசரத்தினம் அவர்களின் ஒப்பீட்டு ஆய்வுநூலின் நான்காவதும், ஐந்தாவதுமான அத்தியாயங்கள்மீது பார்வையைச் செலுத்துகின்றது. அவை முறையே ‘பின்-சுதந்திர இந்தியாவில் தேசத்திற்குள் தமிழர்கள்’, ‘தேசத்திற்கு அப்பால்: பின்-சுதந்திர இலங்கையில் சிங்களவரும் தமிழரும்’ எனும் தலைப்புகளைக் கொண்டுள்ளன. நான்காவது அத்தியாயம் பின்-கொலனித்துவ யுகத்தில் தமிழக அரசியல் இயக்கங்களின் பரிணாமங்களுக்கும், இந்தியத் தேசிய அடையாளத்திற்குமிடையிலான தொடர்பு குறித்துப் பேசுகிறது. முதலில், இந்திய அரசியலமைப்பில் உள்ளீடாகவுள்ள இந்தியத் தேசிய அடையாளம் […]

மேலும் பார்க்க

தமிழர்களும் தேசமும் : இந்திய – இலங்கைத் தமிழர்களின் தேசிய அடையாள அரசியல் மீதான ஒப்பீட்டு ஆய்வு – பகுதி 1

29 நிமிட வாசிப்பு

இந்த நூல் இந்தியா மற்றும் இலங்கையில் தமிழ் தேசியவாதத்தின் பரிணாம வளர்ச்சியை பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் இறுதிப் பகுதியில் இருந்து சமகாலம் வரை விரிவாக ஒப்பிடுகிறது. தமிழ்த் தேசிய இனத்திற்கும் இலங்கை – இந்திய மைய அரசுகளுக்கும் இடையே நிலவிய முரண்பாட்டுச் சூழலில் இரண்டு நாடுகளிலும் தமிழர்கள் தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைத்த வரலாறு உள்ளது. ஆனால், இந்தியா மற்றும் இலங்கையில் மேலாதிக்க அரசுகளின் தேசிய இனங்களுடனான உறவு சார்ந்து […]

மேலும் பார்க்க

நிலமும் நாங்களும்: பின் – போர்க்கால வட பகுதியின் நில விவகாரங்களைப் புரிந்துகொள்ளல்

17 நிமிட வாசிப்பு

உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புப் போர்களில் நிலம், நில உரிமை என்பன மோசமாகப் பாதிக்கப்படும் அம்சங்களில் ஒன்று. இதற்கு ஆகப்பெரிய உதாரணங்களாக இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்கள், சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்ட்ட தமிழர் பிரதேசங்கள் விளங்குகின்றன. பலஸ்தீனம் யூதர்களுக்காக வாக்களிக்கப்பட்ட பூமி என்ற நம்பிக்கையை, தமது நில அபகரிப்புக்கான நியாயப்பாடாக இஸ்ரேல் எடுத்துக்கொண்டது. அதேபோல் இலங்கைத் தீவு முழுவதும் பவுத்தத்தைக் காப்பதற்காகச் சிங்களவர்களுக்கு புத்தரால் அருளப்பட்டது என்பது […]

மேலும் பார்க்க

இன அழிப்பிற்கெதிரான ஐ.நா சாசனத்தினை முன்வைத்து ‘தமிழினப் படுகொலைகள் : 1956 – 2008’ நூலின் ஆவணப் பெறுமதியும் உள்ளடக்கமும்  

20 நிமிட வாசிப்பு

பௌத்த சிங்கள பேரினவாத அரச இயந்திரத்தின் தமிழர் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை நேரடிச் சாட்சியங்களுடனும், நேர்த்தியான தரவுகளுடனும் ஆவணப்படுத்தி, பதிவு செய்த நூலாக ‘தமிழினப் படுகொலைகள்: 1956 – 2008’ ஆவணம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் மையம் (North East Secretariat On Human Rights – NESOHR) இந்நூலினை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் ‘மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் […]

மேலும் பார்க்க

சுதந்திர நாளில் ஒரு வெள்ளைக் கொடி : எரிக் சூல்ஹைமின் சமாதான முன்னெடுப்பு அனுபவப் பதிவு

24 நிமிட வாசிப்பு

‘வேட்கை கொள்வது அரசியல்’ (நோர்வேஜிய மொழியில் : Politikk er å ville) எனும் தலைப்பிலான நூல் எரிக் சூல்ஹைம் எழுதி 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது. அவர் தனது அரசியல் அனுபவங்களை முழுமையாக இந்நூலில் விபரிக்கின்றார். ஒரு வகையில் அவருடைய அரசியற் செயற்பாடுகள் குறித்த ஒரு சுயசரிதை நூல் இது. நோர்வே அரசியலில் ஈடுபட்ட நீண்ட கால அரசியற் செயற்பாட்டு அனுபவம் கொண்டவர் எரிக் சூல்ஹைம். 1970 களின் […]

மேலும் பார்க்க

‘இலங்கையின் போரும் சமாதானமும்’ : நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள் – நோர்வேஜியப் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதிய நூல் – பகுதி 2

28 நிமிட வாசிப்பு

‘திக்குகள் எட்டும்’ தொடரின் கடந்த பாகம் நோர்வேஜியப் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதி 2019 இல் வெளிவந்த ‘இலங்கையின் போரும் சமாதானமும் – நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள்’ நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களின் அறிமுகமாக அமைந்தது. அது, இலங்கைத் தீவின் புவியியல் அமைவிலிருந்து அதன் மொழி, இன, கலாசார, சமூக, பொருளாதாரக் கூறுகளை வரலாற்று ரீதியாகவும் தகவல், தரவுகள் ரீதியாகவும் முன்வைக்கின்றன. சிங்களத் தேசியவாதத்தின் தோற்றத்திலிருந்து அதன் போக்கு, […]

மேலும் பார்க்க

‘இலங்கையின் போரும் சமாதானமும்’ : நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள் – நோர்வேஜியப் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதிய நூல் – பகுதி 1

25 நிமிட வாசிப்பு

இலங்கைத் தீவின் அரசியலை அதன் கொலனித்துவக் காலத்திலிருந்து, சிங்களப் பெருந்தேசியவாதத்தின் எழுச்சி, இன முரண்பாடு, தமிழர்களின் விடுதலைப் போராட்டம், போர்கள், சமாதான முயற்சிகள், போருக்குப் பின்னான நிலைமைகள், சமகாலம் என பெரும் பரப்பினை இந்நூல் பேசுகின்றது. இலங்கைத்தீவின் இன முரண்பாடுடன் தொடர்புடைய உள்நாட்டுத்தரப்புகள், பிராந்திய சக்திகள், தமிழ் டயஸ்போறா, நோர்வே உட்பட்ட சர்வதேச சக்திகள் என அனைத்துத் தரப்பினரைப் பற்றியதும் நோக்கியதுமான விமர்சனங்களும் கணிசமாக உள்ளன.  நூலாசிரியர்: ஒய்வின்ட் புக்லறூட் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்