ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் தாபகர் வரலாறு ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் (13.6.1905 – 04.11.1989), 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சியின்போது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் மானிப்பாயில் செல்வாக்குடன் இருந்த ஒரு கிறிஸ்தவ தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் பண்டத்தரிப்பையும், தாயார் மானிப்பாயையும் சேர்ந்தவர்கள். ருவைற் (Dwight), தப்பான் (Tappan), கார்டினர் (Gardiner) குடும்பத்தினர் இவரது உறவினர்களாவர். தனது ஒன்பதாவது வயதில் தாயை இழந்த ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள், […]