கார்த்திகேசு இந்திரபாலா, Author at Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கார்த்திகேசு இந்திரபாலா

நாடு பிளவுபட்ட நாற்பதுகள் – பகுதி 1

17 நிமிட வாசிப்பு

1920களில் இலங்கையின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள் இந்த வெடிப்பை மேலும் விரிவடையவிட்டனர். அது 1930களில் அகன்று சென்றது; அடுத்த தசாப்தத்தில், 1940களில், நிரப்ப முடியாத நிலப்பிளவாக விரிந்தது. ஆட்சியாளருடைய செயல்பாடுகளும் அகலச்சென்ற பிளவை ஒடுக்க உதவவில்லை. உண்மையில் ஆட்சியாளர் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர். பின்புலம் இருபதாம் நூற்றாண்டின் முதற்காலில் இந்தியத் தேசியவாதிகளுடைய கலைச்சொல் அகராதியில் ‘வகுப்புவாதம்’ (Communalism) என்ற பொருள் பொதிந்த சொல்லொன்று […]

மேலும் பார்க்க

மார்க்சீய இளைஞர்களும் மாற்றமுறும் அரசியலும்

17 நிமிட வாசிப்பு

ஆசியாவில் மார்க்சீயம் ஆசியாவில் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை அச்சுறுத்தும் வகையில் 1930களில் மார்க்சீயச் சிந்தனைகள் இளைஞர்களால் பரப்பப்பட்டன. படிப்புக்காகவும் தொழிலுக்காகவும் பெருந்தொகையான ஆசிய இளைஞர்கள் 1920களில் ஐரோப்பாவுக்குச் சென்றனர். சீனாவில் இருந்தும் வியட்நாமில் இருந்தும் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று தொழிற்சாலைகளில் வேலை செய்தனர், படித்தனர். அதேபோல் ஒல்லாந்தர் ஆண்ட கிழக்கிந்தியத் தீவுகளில் (இந்தோனீசியா) இருந்து இளைஞர்கள் ஒல்லாந்துக்குச் சென்று வேலைசெய்தனர், அத்துடன் கல்விகற்றனர். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய தென்னாசிய நாடுகளில் […]

மேலும் பார்க்க

காலனித்துவ காலத்தின் கடைசிக்கட்டம்

17 நிமிட வாசிப்பு

உலக வரலாற்றில் ஒரு முக்கிய தசாப்தமாக 1940கள் இடம்பெறுவதை மறுக்க முடியாது. இத்தசாப்தம் விடிந்தபோது வரலாறு காணாத மிகப் பெரிய பேரரசாக எழுச்சி பெற்றிருந்த பிரித்தானியப் பேரரசு தன் ஆதிக்கத்தின் உச்சகட்டத்தில் நின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆறாம் ஜோர்ஜ் மன்னன் இந்தியாவின் பேரரசனாக (Emperor of India) முடிசூட்டப்பட்டிருந்தான். பிரித்தானியப் பேரரசின் வலுவுக்குச் சவால் கொடுக்கும் வகையில் 1940இல் ஜெர்மன் தலைவர் அடொல்வ் ஹிட்லர் போர் நடத்திக்கொண்டிருந்தான். இரண்டாவது […]

மேலும் பார்க்க

கட்சி அரசியலுக்கு முந்திய யாழ்ப்பாணம்

16 நிமிட வாசிப்பு

இலங்கையில் 1931இல் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு, நாட்டின் சட்டவாக்க சபைக்கு முதலாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்பொழுது அரசியல் கட்சிகள் இருக்கவில்லை. இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏ.ஈ. குணஸிங்ஹ தலைமையில் தொழில் கட்சி (Labour Party) என்ற பெயரால் ஒரு கட்சி நிறுவப்பட்டிருந்தது. வேறு கட்சிகள் 1935இன் பின்னர்தான் அமைக்கப்பட்டன. 1931இல் கட்சி அரசியல் (Party Politics) இருக்கவில்லை. ஓர் அரசியல் கட்சி என்பது குறிப்பிட்ட ஒரு […]

மேலும் பார்க்க

ஆங்கிலேயர் ஆட்சியின் அந்திப்பொழுது

16 நிமிட வாசிப்பு

முரண்பாடு முற்றிய முப்பதுகள் பதினேழாம் நூற்றாண்டில் மெதுவாக எழத் தொடங்கிய ஆங்கிலேயர் காலனியம் 20ஆம் நூற்றாண்டு உதயமாகிய போது உச்சநிலையடைந்த பேரரசாக உருவாகி, உலக ஆதிக்கம் பெற்றது. அப்பொழுது அது ஒருபோதும் அழியாது என்றென்றும் நிலைக்கும் தன்மை உடையது போன்று காணப்பட்டது. எழுச்சி, வளர்ச்சி, தளர்ச்சி, வீழ்ச்சி என்பவை வரலாற்றின் போக்கு. இதிலிருந்து எந்தப் பேரரசும் தப்பிக்கொள்ள முடியாது. ஆங்கிலேயப் பேரரசு 1930களில் தன் வாழ்க்கையின் அந்திப்பொழுதை அடைந்தது. இருபது […]

மேலும் பார்க்க

பின் நோக்கிய தேசியவாதம்

16 நிமிட வாசிப்பு

ஐரோப்பியப் பேரரசுவாதம் (European Imperialism) ஆசியாவில் படரத் தொடங்கிய காலத்தில் ஆசியச் சமூகங்கள் அதனை எதிர்நோக்கத் தயாராக இருக்கவில்லை. படைபலத்தாலும் அறிவியல் வளர்ச்சியாலும் ஆதிக்கம் பெற்றிருந்த ஐரோப்பிய வல்லரசுகளின் வருகை ஒரு பெரும் சவாலாக நின்றது. ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு வழிகளில் அச்சவாலுக்குப் பதிலளிக்க முயன்றது. பல தோல்வி கண்டன, சில வெற்றிபெற்றன. இவற்றை இங்கு கூறுவது என் நோக்கம் அல்ல. எனினும் இரண்டொரு எடுத்துக்காட்டுகள் இலங்கையர் பதிலை நாம் […]

மேலும் பார்க்க

நவீன இலங்கை வரலாற்றின் போக்கினை நிர்ணயித்த 1920கள்

15 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி இலங்கைக்கு 1927 நவம்பர் 12 இல் வந்தார். மறுநாள், நவம்பர் 13 இல், லண்டனில் இருந்து டொனமூர் ஆணைக்குழுவினர் வந்திறங்கினர். இந்த இரண்டு நிகழ்வுகளும் இலங்கையின் எதிர்கால அரசியல் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய வலுவைப் பெற்றிருந்தன. ஆனால், ஒன்று, குறுகிய கால விளைவுகளை மட்டும் ஒரு குறுகிய பிரதேசத்தில் உண்டுபண்ணி வலுவிழந்து மறக்கப்பட்டது. மற்றது, அரசியல் வரலாற்றின் போக்கினைத் திசை திருப்பியது. மறக்கப்பட்ட நிகழ்வு மகாத்மாவின் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தி

19 நிமிட வாசிப்பு

இந்திய விடுதலை இயக்கத்தில் திருப்பம் ஆங்கிலம் கற்ற இந்திய மத்திய வகுப்பைச் சேர்ந்த தேசியவாதத் தலைவர்கள் ஆங்கிலேயர் முன்மாதிரியாகக் காட்டிய அரச யாப்பு முறைப்படியான முயற்சிகள் மூலம் தமக்குக் கூடுதலான ஆட்சிப் பொறுப்பைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி தென் ஆபிரிக்காவில் இருந்து தாய்நாட்டுக்கு வந்தார். அவர் வருகை விடுதலை இயக்கத்தில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. மத்திய வகுப்பினர் செயற்பாடாக மந்த வேகத்தில் சென்றுகொண்டிருந்த […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் இலங்கையர் தேசியவாதம்

15 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி 1920 இல் இந்தியத் தேசிய இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் தலைவரானார். அனைவரையும் கவரும் ஆளுமையும், இறுக்கமான ஒழுக்கநெறியும், முழுமூச்சாக முன்னின்று இயக்கத்தை நடத்திச்செல்லும் ஆற்றலும் இந்தியாவில் மட்டுமல்ல வெளியேயும் அவருக்குப் பெருமதிப்பைக் கொடுத்தன. அயலில், ஆங்கிலேயர் ஆட்சியைத் தொல்லைகள் இல்லாது அனுபவித்துக்கொண்டிருந்த இலங்கையர் மீதும் அவருடைய எழுச்சியின் தாக்கம் ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குள், 1927 இல், யாழ்ப்பாண இளைஞர் அழைப்பை ஏற்று, மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு வந்து […]

மேலும் பார்க்க

இழந்த ஹெளமொழியும் இல்லாத இசைக்கலையும்

18 நிமிட வாசிப்பு

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நவீன இலங்கையின் வரலாற்றை நிர்ணயிக்கும் நிகழ்வுகள் பல இடம்பெற்ற காலம். இவை, அடுத்து வந்த இரண்டாம் காலில், அரசியலைப் பொறுத்து இலங்கையர் இன அடிப்படையில் பிளவுபட்டுப் பிரிந்து செல்ல வழிவகுத்தன. அரசியல் புலத்தில் மட்டுமல்லாது, பண்பாட்டுப் புலத்திலும் முக்கிய அபிவிருத்திகள் ஏற்பட்டு, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பண்பாடு, மொழி, மதம் ஆகியவை சங்கமித்துச் சிங்கள சமூகத்தில் ஒரு புரட்சியை உண்டுபண்ணின. பண்பாட்டு அடையாளத்தைத் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்