வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்

தமிழ்பேசும் குயர் மக்களும் ஊடகங்களும்

10 நிமிட வாசிப்பு

தமிழ்ச் சூழலில் குயர் மக்களுடைய பிரதிநிதித்துவப்படுத்தலில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கிருக்கின்றது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழலில் பால், பால்நிலை மற்றும் பாலியல்பு சார்ந்த மீள்வருவார்ப்புகளைக் (Stereotype) கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்காற்றுகின்றன. குயர் மக்கள் பற்றிய மீள்வருவார்ப்புகள் பல்வேறு வடிவங்களில் கட்டமைக்கப்படுவதை அவதானிக்கலாம். மீள்வருவார்ப்புகள் எந்த வடிவங்களில் இருந்தாலும் அவை சமூகத்தில் பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும். பால், பால்நிலை அசமத்துவமானது பல்வேறு ஒடுக்குமுறைகளை ஏற்படுத்துகின்றது. பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான […]

மேலும் பார்க்க

இலங்கையில் குயர் மக்கள் தொடர்பான சட்டங்களும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் 

10 நிமிட வாசிப்பு

“சட்டத்தின் முன்பாக அனைத்து நபர்களும் சமமானவர்கள்.”  இலங்கை அரசியலமைப்பின் 12 ஆவது உறுப்புரையானது இனம், மதம், மொழி, பால், அரசியல், பிறந்த இடம், கருத்து போன்ற எதன் அடிப்படையிலும் மனிதர்கள் சமமானவர்கள் ஆவர் எனக் குறிப்பிடுகின்றது. ஆனால் இலங்கையில் குயர் மக்கள் இரண்டாந்தரமான அணுகுமுறைகளையே எதிர்கொள்கிறார்கள். இலங்கையில் குயர் மக்களைப் பாதிக்கும் சட்டங்கள் காலமாற்றங்களுக்கு ஏற்ப மாற்றமடையாமலே காணப்படுகின்றன. குயர் மக்கள் கொலனித்துவகாலச் சட்டங்களாலும் சமூகத்தில் காலங்காலமாகக் கடத்தப்பட்டுவரும் பிற்போக்குத்தனமான […]

மேலும் பார்க்க

குயர் வெறுப்பும் குயர் சமூகத்தின் மீதான ஓரங்கட்டல்களும்

9 நிமிட வாசிப்பு

இந்த உலகில் பிறந்த அனைவரும் மனிதர்களாக மதிக்கப்படுவதற்கும், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கும் உரித்துடையவர்கள். ஆனாலும் குயர்மக்கள் அவ்வாறு வாழ்வதற்குப் பல போராட்டங்களைக் குயர் சமூகமும், செயற்பாட்டாளர்களும் முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இவர்கள் நாள்தோறும் அன்றாட வாழ்க்கையின் அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவதூறுகளையும், துன்புறுத்தல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. குயர் வெறுப்பு நேரடியாக மாத்திரமல்லாமல், ஊடகங்களின் வாயிலாகவும் வெறுப்புப் பேச்சாக வெளிப்படுத்தப்படுகின்றது. அண்மைக்காலங்களில் சமூக ஊடகங்களில் பாரியளவில் வெறுப்புப் பேச்சை அவதானிக்க முடிகிறது. வெகுசன […]

மேலும் பார்க்க

இலங்கையில் தமிழ்க்குயர் சமூகத்தால் எதிர்கொள்ளப்படும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள்

11 நிமிட வாசிப்பு

இலங்கையில் தமிழ்க்குயர் சமூகத்தினர் பல்வேறுபட்ட மருத்துவ மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இப்பிரச்சினைகளுக்கு அடிப்படையாகச் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுக் காரணிகள் முக்கிய பங்குகளை வகிக்கின்றன. குயர்மக்கள் மருத்துவமனைகளை நாடும்போது பாலின அடையாளத்தைக் கேட்கும் மருத்துவர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அவர்களை மரியாதையின்றி அணுகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. “குயர் மக்கள் வைத்தியசாலைகளை நாடும்போது வெளிநோயாளர் பிரிவில் இருந்து பல்வேறு தரப்பினராலும் பாரபட்சங்களை எதிர்கொள்கிறார்கள்” எனச் செயற்பாட்டாளரான வரதாஸ் […]

மேலும் பார்க்க

குயர் மக்களும் தேர்தல் கால நடவடிக்கைகளும்

15 நிமிட வாசிப்பு

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்ற நிலையில், பத்தாவது பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் 8821 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் 396 வேட்பாளர்களும் வன்னித் தேர்தல் தொகுதியில் 423 வேட்பாளர்களும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இலங்கை அரசியலானது பெரும்பாலும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு துறையாகவே இருந்து வருகிறது. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமானது குறைந்தளவிலேயே உள்ளது. இந் நிலையில் இலங்கையின் 16 […]

மேலும் பார்க்க

குயர் மக்கள் தொடர்பான அசைவியக்கங்களும் சமூக ஊடகங்கள் மூலமான வலுப்படுத்தலும்

18 நிமிட வாசிப்பு

சமூகச் செயற்பாடுகள் பல்வேறு வழிகளிலும் வடிவங்களிலும் இடம்பெறுகின்றன. பால்நிலை ரீதியில்  ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான சமூகச் செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் அதிகம் இடம்பெறுவதனை அவதானிக்க முடிகிறது. இலங்கை மக்களிடையே 2010 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் உள்ளடங்கலான இணையவழி ஊடகங்களின் பாவனையானது அதிகரித்தது எனலாம். இணையவழி ஊடகங்கள் குயர் மக்களுடைய செயற்பாடுகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன. நாளாந்த வாழ்வில் ஏராளமான குயர் மக்கள் இணையவழி ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அண்மைக்காலங்களில் […]

மேலும் பார்க்க

குயர் மக்களும் இணையவெளியும்

8 நிமிட வாசிப்பு

உலகில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேண, இணையவழி ஊடகங்கள் வழிகோலின. இணைய வழி ஊடகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்று அவை இன்றியமையாதவையாக மாறி வருகின்றன. முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் பெண்கள் மற்றும் குயர் மக்களுக்கெதிரான வன்முறைகள் புதிய ஊடகங்கள் மூலம் நவீன வடிவம் பெறுகின்றன. குறிப்பாகச் சமூக ஊடகங்கள் மூலமாக அதிக அளவில் இணைய ரீதியான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றமையை அவதானிக்க […]

மேலும் பார்க்க

குயர் மக்களும் மதங்களும்

10 நிமிட வாசிப்பு

இலங்கை, வேறுபட்ட மதங்களையும் தந்தையாதிக்கக் கருத்தியல்களையும் தன்னகத்தே கொண்டு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியமான பண்பாடுகளைப் பின்பற்றக்கூடிய பெரும்பாலான மக்களைக் கொண்ட ஒரு நாடு. இது பௌத்தர்கள் மற்றும் சைவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கிறது. வடபுலத்தில் இருக்கக்கூடிய மக்கள் அதிகமாக சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இங்கு தென்னிந்திய இந்துப் பண்பாட்டின் செல்வாக்குகளை அதிகம் காணலாம். “தன்பாலீர்ப்பு இயற்கைக்கு மாறானது. அது எங்களுடைய சமயத்துக்கும் கலாசாரத்திற்கும் எதிரானது. […]

மேலும் பார்க்க

வடபுல சமூகமும் திருநர்களும்

7 நிமிட வாசிப்பு

வடபுல சமூகத்தளத்தில் தன்பாலீர்ப்பை விலக்கப்பட்ட(Taboo) ஒரு விடயமாகப் பார்க்கும் பெரும்பாலானவர்கள் திருநர்களை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் திருநர்களைப் பற்றிய தெளிவு பெரும்பாலானவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது எனலாம். இருந்தாலும் கூட எவ்வாறு, தந்தையாதிக்கச் சமூகங்களில் பெண் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்கிறாளோ அதே போல் திருநங்கைகளும் திருநம்பிகளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். குடும்பத்தால் புறக்கணிக்கப்படுவதாலேயே பெரும்பாலான திருநர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. “அன்று என் தந்தை வார்த்தையாலும் பிரம்பாலும் என்னைத் […]

மேலும் பார்க்க

காதல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது எனின், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டதா?

5 நிமிட வாசிப்பு

தன்பாலீர்ப்பு என்பது வடபுல சமூகத்தளத்தில் பெரும்பாலானவர்களால் விலக்கப்பட்ட (Taboo) ஒரு விடயமாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக தன்பாலீர்ப்பாளர்கள் இந்த சமூகத்திற்குள் தம்மை வெளிப்படுத்த முடியாதவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். பல போராட்டங்களுக்கு மத்தியில் தம்மை வெளிப்படுத்தும் தன்பாலீர்ப்பினரை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வை மதிப்பிற்குரியதுதானா? தன்பாலீர்ப்பு (Homosexual) என்பது ஒருவர் தன்பாலினத்தை சேர்ந்த ஒருவர் மேல் காதல் கொள்ளுதல் எனலாம். இதில் பெண் தன்பாலீர்ப்பாளர்கள் (Lesbian) மற்றும் ஆண் தன்பாலீர்ப்பாளர்கள் (Gay) […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்