கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குசார் நிகழ்த்துகலைகளுள் ஒன்றாகக் கொம்பு விளையாட்டு காணப்படுகின்றது. இவ்விளையாட்டு அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதியில் நிகழ்த்தப்படுவது வழக்கம். மழைவளம் குன்றி நாட்டில் வெப்ப மிகுதியால் அம்மை, வைசூரி, குக்கல், வெப்பு, செங்கமாரி, கண்ணோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்ற போது அம்மனின் சீற்றத்தினாலேயே அவை ஏற்படுகின்றன என்ற அசையாத நம்பிக்கையினாலும் அவ்வியாதிகளைத் தீர்க்கின்ற தெய்வம் என்று பாராட்டியும் பக்தர்கள் அம்மனிற்குச் சாந்தி செய்ய வேண்டி இக்கொம்பு விளையாட்டை நிகழ்த்துகின்றனர். […]