
‘பழங்குடிச் சமூகங்களும், விளிம்புநிலை இலக்கியங்களும்’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற 53ஆவது இலக்கியச் சந்திப்பில், எழுநா வெளியீடாகிய திரு. க. பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள் – கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ நூல் அறிமுக நிகழ்வு 04.07.2026 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு திருகோணமலை, சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையாற்றிய தமிழூராள் அனுஷ்திக்கா அவர்கள் “இலங்கையின் பழங்குடிச் சமூகமென்றால் மகியங்கணை மட்டுமே நினைவிற்கு வரும். ஆனால் அதற்கு அப்பாற்பட்டதாக கிழக்கிலங்கை தமிழ்க் கரையோர வேடர்களின் வாழ்வியலை இந்நூல் ஆவணப்படுத்துகிறது. கரையோரப் பழங்குடி மக்களின் ‘உத்தியாக்கள்’ சடங்கை மையமாகக் கொண்ட இந்நூல், அவர்களின் பண்பாட்டையும் வேர்களையும் தேட வேண்டிய வரலாற்றுப் பொறுப்பை நமக்கு உணர்த்துகிறது” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள், மாணவர்கள், பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
படங்கள் – இணையம்
