திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ் மொழியின் படிமுறைத் தோற்றமும் Archives - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ் மொழியின் படிமுறைத் தோற்றமும்

நவீன மனிதனின் தென்னாசிய வருகையும் திராவிட மக்களின் மூதாதையர்களும் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

இற்றைக்கு 35,000 ஆண்டுகளுக்கு முன்னர் M20 மரபணுக் குறியீடு கொண்டோரின் இந்திய-இலங்கை வருகை. Picture Courtesy: Genographic Project. அறிமுகம் மரபணுவியல் அறிவியலாளர்கள் மரபணுக்களின் வரிசைக் கிரமத்தை இயக்கினார்கள்; அவர்கள் மரபணுத் தொகைகளை வரைவு செய்தார்கள்; அவர்கள் இந்தியா முழுவதிலும், இலங்கையிலும், ஏனைய தென்கிழக்காசிய நாடுகளிலும், பண்டைய உலக நாடுகளிலும் வாழும் மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான மரபணுக்களை ஒப்பிட்டார்கள். அவர்கள் பெற்றுக்கொண்ட முடிவுகள் வியப்பூட்டுவதாக இருந்தன. தமிழ்மொழி பேசும் மக்களின் […]

மேலும் பார்க்க

தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் – பகுதி 3

45 நிமிட வாசிப்பு

மத்திய பழங்கற்காலம் தொல்லியலாளர்கள் பொதுவாக மத்திய பழங்கற்காலம் கீழைப் பழங்கற்காலத்தின் வளர்ச்சியே எனக் கொண்டாலும், இக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், அவற்றை ஆக்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகள், பயன்பாடு ஆகியவற்றை நோக்குமிடத்து, கீழைப் பழங்கற்காலத்திலிருந்து மாறுபட்ட ஒரு சூழலிலே இக்கால மனிதன் வாழ்ந்திருந்தது புலனாகிறது. கீழைப் பழங்கற்காலக் கருவிகளை ஆக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பிரதான கல்லின வகையான குவாட்சயிட்டை விட மென்மையான கல்லின வகைகளான ஜஸ்பர் (Jasper), சேட் (Chert), அகேற் (Agate), சல்செடனி […]

மேலும் பார்க்க

தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் – பகுதி 2

30 நிமிட வாசிப்பு

மனித வரலாற்றுக் கற்கைப் பிரிவுகள் டென்மார்க்கில் தேசிய அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்த கிறிஸ்டியன் ஜே. தொம்ஸன் (Christian Jurgensen Thomsen) 1830களில் புராதன மனித இன வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக, அம்மனிதர்கள் விட்டுச்சென்ற செய்பொருட்களை ஆதாரமாகக்கொண்டு அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தை கற்காலம் (Stone Age), வெண்கலக் காலம் (Bronze Age), இரும்புக் காலம் (Iron Age) என மூன்றாகப் பிரித்தார். இது ‘மூன்று காலகட்ட முறை’ (The Three Age […]

மேலும் பார்க்க

தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் – பகுதி 1

26 நிமிட வாசிப்பு

1. நிமிர்ந்த மனிதன் – ஹோமோ இரக்டஸ் (Homo Erectus) 2. நியண்டதால் மனிதன் – ஹோமோ நியண்டதாலென்ஸிஸ் (Neanderthal Man) 3. நவீன மனிதன் – ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens) மனித இனங்களின் படிநிலை வளர்ச்சி (The Evolution of Human Species) உலகில் தோன்றிய உயிரினங்களின் 380 கோடி (3.8 Billion) ஆண்டுகாலப் பரிணாம வளர்ச்சியில் பல இனங்கள் முற்றாக அழிந்து போக, மற்றும் பல […]

மேலும் பார்க்க

தென்ஆசிய நிலவமைப்பியலும் நிலவியலும் – பகுதி 2

27 நிமிட வாசிப்பு

தீபகற்ப இந்தியா தீபகற்பமாக விளங்கும் இந்திய உபகண்டத்தின் தென்பகுதி – வடக்கே நிலத்தொடர்பாலும், மற்றைய மூன்று பக்கங்களிலும் – மேற்கே அரபுக் கடலாலும், தெற்கே இந்து மாகடலாலும், கிழக்கே வங்காளக் கடலாலும் சூழப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நிலம் தெற்கு நோக்கிச் செல்லச் செல்லச் சுருக்கமடைந்து தெற்கே குமரி முனையில் முடிகிறது. இந்தியத் தீபகற்பத்தின் வடக்கெல்லையான விந்திய மலைத்தொடர் கங்கைச் சமவெளியின் தென் எல்லையைத் தழுவிக்கொண்டு கிழக்கே பீகாரில் ராஜ்மஹால் குன்றுவரை பரந்திருக்கிறது. […]

மேலும் பார்க்க

தென்ஆசிய நிலவமைப்பியலும் நிலவியலும் – பகுதி 1

28 நிமிட வாசிப்பு

நிலவமைப்பியல் கால அளவு (The Geologic Time Scale) சகாப்தம் (Geologic Period)  ஆண்டுக் காலம் (Epoch)  காலவரிசை (Chronology)இ.மு: இற்றைக்கு முன்  Quaternary  பிளிஸ்ரொசீன் (Pleistocene)  இ.மு. 16,00,000 ஆண்டுகள் முதல்இ.மு. 12,000 ஆண்டுகள் வரை  Quaternary  ஹோலொசீன் (Holocene)  இ.மு. 12,000 ஆண்டுகள் முதல் இன்றுவரை  நிலவமைப்பியல் கால அளவானது பூமியின் வயதை அடிப்படையாகக் கொண்டு அதில் காலத்திற்குக் காலம் நடைபெற்ற நிகழ்வுகளைக் கூறுவதற்கு வசதியாக அகில உலக அடுக்கியற் […]

மேலும் பார்க்க

தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகளின் நம்பகத்தன்மையும் நிலவியல், சமுத்திரவியல் சான்றுகளும் – பகுதி 2

26 நிமிட வாசிப்பு

நிலஅமைப்பியல் ஆய்வுகள் (Geological Surveys) இந்து சமுத்திரத்தில், இந்தியாவிற்குத் தெற்கே, சமுத்திரத்தின் பெரும் பகுதியை நிறைத்துக்கொண்டு லெமூரியா என்றொரு நிலப்பரப்பு இருந்திருப்பது சாத்தியமா? சில தீவுகள் கடலினுள் அமிழ்ந்து போவது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். அதுபோன்று ஒரு பெரிய கண்டம் கடலினுள் மூழ்கிப் போகுமா? இதற்குரிய விடைகளை அறிந்து கொள்வதற்கு நில அமைப்பியல் பற்றிய ஓர் அடிப்படை அறிவு அவசியமாகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை நமது பூமியைச் சூழ்ந்திருக்கும் […]

மேலும் பார்க்க

தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகளின் நம்பகத்தன்மையும் நிலவியல், சமுத்திரவியல் சான்றுகளும் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

புராதன தமிழகத்தின் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சேர்ந்து நடனமாடும் காட்சி பாறை ஓவியமாக ஆண்டிப்பட்டி மலைக்குன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களோடு பழக்கப்பட்ட (Domesticated) ஆடும் காணப்படுகிறது. இந்த ஓவியத்தின் காலம் இற்றைக்கு 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்படுகிறது. நன்றி – Indian Express, March 4, 2013. தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகள் தமிழ் மொழியைப் பாரம்பரியமாகப் பேசும் மக்கள் ‘தமிழர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். இந்தத் தமிழ் மொழி […]

மேலும் பார்க்க

திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ்மொழியின் படிமுறைத் தோற்றமும் – அறிமுகம்

33 நிமிட வாசிப்பு

தமிழ்மொழி பேசும் மக்களின் வரலாற்றிற்கு அறிவியல் அடிப்படையில், தொல்லியல் அடிப்படையில், மரபியல் அடிப்படையில், மொழியியல் அடிப்படையில் நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்ட அறிவியல் பாரம்பரியம் உண்டு. இன்றைய உலக மொழிகளைப் பேசும் மக்களுள் இந்தப் பெருமை அனைத்தும் கொண்ட மக்கள், தமிழ்க்குடும்ப மொழிகளைப் பேசும் மக்களைத் தவிர வேறு பலர் இல்லை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். அறிவியல்பூர்வமான ஆதார அணுகுமுறை இல்லாத காலகட்டத்தில் நமது வரலாறு மட்டுமல்ல, உலகின் பல்வேறு […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்