Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 2

29 நிமிட வாசிப்பு

குமுதினிப் படகுப் படுகொலைகள் குமுதினிப் படகுப் படுகொலைகள், 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கிறது. நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். […]

மேலும் பார்க்க

நவீன இலங்கை வரலாற்றின் போக்கினை நிர்ணயித்த 1920கள்

15 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி இலங்கைக்கு 1927 நவம்பர் 12 இல் வந்தார். மறுநாள், நவம்பர் 13 இல், லண்டனில் இருந்து டொனமூர் ஆணைக்குழுவினர் வந்திறங்கினர். இந்த இரண்டு நிகழ்வுகளும் இலங்கையின் எதிர்கால அரசியல் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய வலுவைப் பெற்றிருந்தன. ஆனால், ஒன்று, குறுகிய கால விளைவுகளை மட்டும் ஒரு குறுகிய பிரதேசத்தில் உண்டுபண்ணி வலுவிழந்து மறக்கப்பட்டது. மற்றது, அரசியல் வரலாற்றின் போக்கினைத் திசை திருப்பியது. மறக்கப்பட்ட நிகழ்வு மகாத்மாவின் […]

மேலும் பார்க்க

நடேசய்யரின் ‘Under Planter Raj – The Standard Wage in Ceylon: தோட்டத் தொழிலாளர் ஊதிய உயர்வுக்கான அறிவுசார் தலையீடு

27 நிமிட வாசிப்பு

1 சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலேயே தோட்டத் தொழிலாளரின் ஊதியப் பிரச்சினை முதன்முதல் பரந்தளவிலான கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. அக்காலத்தில்தான் சேர்.பொன். அருணாசலம் தோட்டத் தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்; கருமுத்து தியாகராஜச் செட்டியார் தோட்டத் தொழிலாளரின் பிற்படுத்தப்பட்ட வாழ்க்கை நிலைமையை விரிவான சான்றுகளுடன் விவரித்து, அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டிய தேவையை வலுவாக எடுத்துரைத்தார். இதன் தொடர்ச்சியில், இந்திய அரசு தோட்டத் தொழிலாளர் வாழ்வை மேம்படுத்தும் […]

மேலும் பார்க்க

இலங்கையில் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான சர்வதேச விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்

33 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: அருட்தந்தை நோயல் டயஸ் இலங்கையில், சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு தனிநபருக்குரிய உரிமையைப் பாதுகாப்பதில் மிகவும் கடினமான பிரச்சினையாக இருப்பது, சர்வதேசரீதியான கடப்பாடுகளை அங்கு அமுல்படுத்துவதில் உள்ள சிக்கலாகும். இலங்கை முழுமையான இணக்கத்துடன் செய்துகொண்டுள்ள இரண்டு முக்கியமான ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்தன. இதில் முதலாவது, ‘சித்திரவதைகள், பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது மோசமான தாக்குதல்கள் அல்லது தண்டனைகள்’ என்பவற்றுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டின் (இனி இது இக்கட்டுரையில் CAT […]

மேலும் பார்க்க

இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 3

46 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட தாராண்மை மறுப்பு அரசு இலங்கையில் பின்காலனித்துவ அரசு ஒன்று தாபிக்கப்பட்டு 64 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த அரசு பயணித்த பாதையினையும், அதன் பயணத்தின் வெவ்வேறு முக்கிய கட்டங்களையும் திரும்பிப் பார்ப்பதற்கும், பரிசீலனை செய்வதற்கும் இந்த நீண்ட இடைவெளி எமக்குப் பயனுடையதாக உள்ளது. நாம் ஒரு காலப்பகுப்பு ஒன்றைச் செய்து கொள்ளலாம். வெவ்வேறு காலக்கட்டங்களில் இப் பின்காலனித்துவ அரசை நிர்வகித்த அரசாங்கங்கள் எவை? அவற்றின் […]

மேலும் பார்க்க

வி.எஸ். கோவிந்தசாமி: நாடற்றவர்களுக்காக ஒலித்த உரிமைக்குரல் 

22 நிமிட வாசிப்பு

தற்காலிக வதிவிட விசாவில் இலங்கை வந்த வி.எஸ். கோவிந்தசாமி தேவர், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் கொழும்பு பணிமனையில் கடமையாற்றி, எழுபதுகளில் தாயகம் திரும்பியுள்ளார். ஐம்பதுகள் முதல் நாடு திரும்பும் வரை பல பாடல் நூல்களை வெளியிட்டுள்ளார். ஏனையோரைப் போல் பிரஜாவுரிமை மறுப்பைப் பற்றிப் பாடியுள்ள இவர், தற்காலிக வதிவிட விசாவில் வந்த இந்தியத் தமிழர்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளைப் பற்றியும் எழுதியுள்ளார். வதிவிட விசாவில் வந்தவர்களின் பிரச்சினை பற்றி இவர் […]

மேலும் பார்க்க

இலங்கை மலையக மக்களின் வாழ்வியலில் சடங்குகள் – பகுதி 3

29 நிமிட வாசிப்பு

மரணச் சடங்குகள்  மரணச் சடங்குகள் என்பவை வெறும் உடல் சார்ந்த இறுதி நிகழ்வுகள் மட்டுமல்ல; அவை சமூகத்தின் ஆன்மிகம், தத்துவம், உறவுமுறை மற்றும் வாழ்வியல் விழுமியங்களின் ஆழமான வெளிப்பாடுகளாகும். பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் கடந்து வரும் பதினாறு நிலைகளில், இறுதிச் சடங்கு என்பது மிகவும் முக்கியமானது. மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல; மாறாக அது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்லும் மாறுதல் அல்லது இடப்பெயர்வு […]

மேலும் பார்க்க

இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 2

22 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட இலங்கை அரசைத் தாராண்மையற்றதாக மாற்றுதல் (De–liberalisation of Sri Lankan State) தலையிடாக் கொள்கையுடன் இணைந்த தாராண்மை வாதம் (Laissez–faire Liberalism) என்ற பண்பை இழந்து தலையிடும் அரசு (Interventionist State) என்ற இயல்புடையதாக இலங்கையின் அரசு 1956–1965 காலப்பகுதியில் உருமாற்றம் பெறலாயிற்று. இத்தலையிடும் அரசு, அரச முதலாளித்துவம் (State Capitalism), பாராளுமன்ற ஜனநாயகம் என்ற இரண்டினதும் சேர்க்கையாக அமைந்தது. மக்கள் ஐக்கிய […]

மேலும் பார்க்க

இராணுவமயமாக்கப்பட்ட அமைதியின் கீழ் அன்றாட வாழ்க்கை

40 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் இலங்கையின் உள்நாட்டுப் போர் முறையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், வடக்குக் கிழக்கில் ‘அமைதி’ என்பது எங்கும் நிறைந்த ஆனால் புரிந்துகொள்ள முடியாத ஒரு வார்த்தையாக மாறியுள்ளது. இது அரசாங்க விவாதங்களில், மேம்பாட்டுத் திட்டங்களில், அரசு சாரா நிறுவன அறிக்கைகள் மற்றும் சர்வதேச மதிப்பீடுகளில் ஓர் அடையப்பட்ட நிபந்தனையாகப் பரவுகிறது. வன்முறை முறியடிக்கப்பட்டு சாதாரண வாழ்க்கை மீட்டெடுக்கப்பட்டதற்கான சான்றாக இது காண்பிக்கப்படுகிறது. சாலைகள் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றன, சந்தைகள் […]

மேலும் பார்க்க

1983 – 1991: உச்சமடைந்த இனப் படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 1

26 நிமிட வாசிப்பு

இக்காலகட்டம் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவழிப்போடு ஆரம்பமாகி 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலையுடன் நிறைவடைகிறது. இக்காலகட்டத்தில் இலங்கை மட்டத்தில் இருந்த தமிழர்கள் பிரச்சினை பிராந்திய மட்டத்திற்குச் சென்றது. பனிப்போரின் தாக்கம் காரணமாக ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கு இந்தியா ஆயுத உதவிகளையும் ஆயுதப் பயிற்சிகளையும் பின்தள வசதிகளையும் செய்து கொடுத்தது. இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் அமெரிக்காவுடன் அதிகளவு நட்புக்கொண்டது. அமெரிக்காவின் ஆதிக்கம் இலங்கையில் வளர்வதற்கான களத்தையும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்