July 2026 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

July 2026 தொடர்கள்

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: திரு. ‘அண்டர்வூட்’ மணிவாசகம் அவர்களின் கடிதம்

16 நிமிட வாசிப்பு

(1982இல் காலஞ்சென்ற திரு. அண்டர்வூட் மணிவாசகம் அவர்கள், காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்கு எழுதிய திறந்த மடல் – செப்டம்பர் 01. 1982)  மாண்புமிகு ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள்,  ஜனாதிபதி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு, கொழும்பு. மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே,   1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) 1. இலங்கை தேசிய தமிழர் விவகாரங்களுக்கான நிறுவனம் (Ceylon Institute of National and Tamil […]

மேலும் பார்க்க

தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகளின் நம்பகத்தன்மையும் நிலவியல், சமுத்திரவியல் சான்றுகளும் – பகுதி 2

26 நிமிட வாசிப்பு

நிலஅமைப்பியல் ஆய்வுகள் (Geological Surveys) இந்து சமுத்திரத்தில், இந்தியாவிற்குத் தெற்கே, சமுத்திரத்தின் பெரும் பகுதியை நிறைத்துக்கொண்டு லெமூரியா என்றொரு நிலப்பரப்பு இருந்திருப்பது சாத்தியமா? சில தீவுகள் கடலினுள் அமிழ்ந்து போவது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். அதுபோன்று ஒரு பெரிய கண்டம் கடலினுள் மூழ்கிப் போகுமா? இதற்குரிய விடைகளை அறிந்து கொள்வதற்கு நில அமைப்பியல் பற்றிய ஓர் அடிப்படை அறிவு அவசியமாகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை நமது பூமியைச் சூழ்ந்திருக்கும் […]

மேலும் பார்க்க

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்கவின் பாராளுமன்ற உரை

12 நிமிட வாசிப்பு

(1979 ஜூலை 19 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், “பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் (தற்காலிக ஏற்பாடுகள்)” மீதான விவாதத்தின்போது, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் [SLFP] அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சரான மைத்திரிபால சேனநாயக்க ஆற்றிய உரை இது.) இடையூறு ஏதுமின்றி இருந்தால், நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். ‘பயங்கரவாதத் தடைச் சட்ட (தற்காலிக ஏற்பாடுகள்) மசோதா’வின் நகல் ஒன்று இன்று காலைதான் எங்களுக்குக் கிடைத்தது. இம்மசோதாவை இன்று […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் குறைவிருத்தி: சார்புக் கோட்பாடு நோக்கிலான சில குறிப்புகள்

19 நிமிட வாசிப்பு

அறிமுகம் சார்புக் கோட்பாடு (Dependency Theory) என்னும் பொருளியல் கோட்பாட்டின் நோக்கில் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரப் பின்னடைவையும் குறைவிருத்தியையும் (Under-development) விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சார்புக் கோட்பாட்டின் பிரதானமான எண்ணக்கரு ‘சார்பு நிலை’ (Dependency) என்பதாகும். சார்பு நிலை என்பதை தங்கியிருத்தல் எனவும் தமிழில் கூறலாம். உலக முதலாளித்துவப் பொருளாதார முறைமையில் மையம் (Centre), சார்பு மண்டலம் (Periphery) என இருவகை நாடுகள் உள்ளன. இவ்விருவகை நாடுகளுக்குமிடையில் சமத்துவமற்ற […]

மேலும் பார்க்க

மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் சடங்குகளும்

16 நிமிட வாசிப்பு

அறிமுகம் சக்தி வழிபாடு மனித நாகரிகத்தின் ஆதிகாலம் தொட்டே நிலவி வரும் ஒரு தொன்மையான வழிபாட்டு முறையாகும். பெண்வழிச் சமுதாய அமைப்பின் தொடர்ச்சியாகத் தோன்றிய இத்தாய் தெய்வ வழிபாட்டின் முதன்மையான வடிவமாக மாரியம்மன் வழிபாடு திகழ்கிறது. பிராமணீய சம்பிரதாயங்களோ, வேத மந்திரங்களோ இன்றி எளிய மக்களின் தாயாக, இயற்கையின் பிரதிபிம்பமாக விளங்குவதால் மாரியம்மனை ‘திராவிட தெய்வம்’ என்றும் அழைப்பர். பிரித்தானியப் பேரரசுக் காலத்தில் தமிழக மக்கள் உலகின் பல நாடுகளுக்குப் […]

மேலும் பார்க்க

ஆன்மிக நாத்திக வெளிப்பாட்டுத்தளம்

15 நிமிட வாசிப்பு

ஐரோப்பிய நாடுகள் நிலப்பிரபுத்துவச் சமூக முறைமையைத் தகர்த்தபடி தம்மைத் தேசங்களாகக் கட்டமைத்துக் கொண்டே உலகப் பந்தின் ஏனைய நிலப்பரப்புகளைக் காலனிகளாக்கி ஆட்சிபுரிந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் எமக்குரிய ஆளுமையாக முகிழ்ந்தவர் ஆறுமுக நாவலர். அவர் பற்றிப் பேசுகிற போது அவரது சமகாலத்தின் ஏனைய ஆளுமைகள் செயற்பட்ட பாங்கு குறித்தும் கவனம் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். ஈழத்தமிழ்ப்புலத்தின் இலக்கியம், மொழி, மதம் எனும் பன்முகத் தளங்களில் நாவலரின் செயற்பாடுகளே முனைப்புடையதாய் அமைந்திருந்தன. அவருடன் […]

மேலும் பார்க்க

இலங்கையில் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சிக்கான பின்னணி

17 நிமிட வாசிப்பு

இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்திடையே 1906, 1912, 1950ஆம் ஆண்டுகளில் முக்கியமான பல நிகழ்வுகள் இடம்பெற்றன. 1906ஆம் ஆண்டு மாட்டு வண்டிக்காரர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசியல், மதரீதியான கொதிநிலைகள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கம் கொழும்பு நகரப் பாட்டாளிகளிடையே ஆழமாக வேரூன்றியது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் இயக்கம் ஒன்று காணப்படவில்லை. மதரீதியான அமைதியின்மை, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அரசின் அநேக செயற்பாடுகள் விமர்சனங்களுக்குள்ளாகின. அரசியல் முறைமையானது 1833ஆம் […]

மேலும் பார்க்க

மன்னார்க் கூத்து மரபு: ஈழத்தமிழ்க் கூத்து மரபில் ஒரு புதிய கிளை – பகுதி 2

25 நிமிட வாசிப்பு

இந்தக் கட்டுரையில் பின்வரும் விடயங்கள் சுருக்கமாக விவரிக்கப்படுகின்றன: 1. தமிழ் மரபில் காவியம், கூத்து ஆகியவற்றின் கதைக்கருக்களின் ஊற்றுக்கண் பேராசிரியர் வையாபுரி பிள்ளை அவர்கள் ‘தமிழ் இலக்கியத்தில் காவிய காலம்’ என்று ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதிலே அவர் தமிழில் காவியங்களுக்கான தோற்றம் பற்றிக் கூறுகையில், காவியங்களின் உருவாக்கத்திற்கு அற்புதக் கதைகள் வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். கதைகள் இல்லாமல் காவியம் இல்லை. அதேபோலத்தான் கதைகள் இல்லாமல் கூத்துகள் […]

மேலும் பார்க்க

தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகளின் நம்பகத்தன்மையும் நிலவியல், சமுத்திரவியல் சான்றுகளும் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

புராதன தமிழகத்தின் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சேர்ந்து நடனமாடும் காட்சி பாறை ஓவியமாக ஆண்டிப்பட்டி மலைக்குன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களோடு பழக்கப்பட்ட (Domesticated) ஆடும் காணப்படுகிறது. இந்த ஓவியத்தின் காலம் இற்றைக்கு 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்படுகிறது. நன்றி – Indian Express, March 4, 2013. தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகள் தமிழ் மொழியைப் பாரம்பரியமாகப் பேசும் மக்கள் ‘தமிழர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். இந்தத் தமிழ் மொழி […]

மேலும் பார்க்க

மலையக வாழ்வியலில் ஒப்பாரிப் பாடல்கள் 

14 நிமிட வாசிப்பு

கலை, இலக்கியங்கள் மக்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். மக்கள் உருவாக்கிய இக்கலைகளில் அவர்களின் வாழ்க்கைச் செய்திகள் வெளிப்படுவது இயல்பாகும். கலை, இலக்கியங்கள் மக்களின் பண்பாட்டு நிலைகளை உள்ளடக்கியவைகளாக உள்ளன. தமிழரின் இசை மரபு நீண்ட காலப் பாரம்பரியத்தைக் கொண்டது. தமிழரின் இசை அம்மானை, ஊஞ்சல் போன்ற தொழில்முறைப் பாடல்களாகவும், மங்கல வாழ்த்து போன்ற விழாப் பாடல்களாகவும், பல சடங்குப் பாடல்களாகவும் ஆரம்ப காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இவற்றில் தாலாட்டு, கும்மி, ஒப்பாரி […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்