September 2026 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

September 2026 தொடர்கள்

1973 – 1976 காலப்பகுதியில் பெருந்தோட்டங்களை ஊடுருவிய பஞ்சமும் பட்டினியும்: சமூக விளைவுகளும் மீள் எழுச்சியும்

27 நிமிட வாசிப்பு

அறிமுகம் பஞ்சமும் பட்டினியும் போரும் ஒரு சமூகத்தைப் புரட்டிப் போடுகின்ற வல்லமைமிக்கதாகும். இதற்கு இலங்கையில் உள்ள பெருந்தோட்ட சமூகமும் விதிவிலக்கானது அல்ல. 1970ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அப்போது ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கமானது உணவுப் பொருட்களின் இறக்குமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. உள்நாட்டில் உணவு உற்பத்தியை மேற்கொண்டுவரும் கிராமியத் துறையானது நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது காணப்பட்ட நிலையில், உணவுப் பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளானது நேரடியாகப் பெருந்தோட்ட […]

மேலும் பார்க்க

போருக்குப் பின் பேசுதல்: மொழியும் மௌனமும் அன்றாடப் பேச்சும் – பகுதி 4

53 நிமிட வாசிப்பு

குழந்தைகள், நினைவுகள், அரசியல் மொழிசார் மரபு போரின் மிக நீண்டகால விளைவுகளில் ஒன்று, அது விட்டுச்செல்லும் அழிவு மட்டுமல்ல. போரை நேரடியாக அனுபவிக்காதவர்களுக்கு அது கடத்தும் சொற்களஞ்சியமும் ஆகும். போருக்குப் பிந்தைய இலங்கையில், தீவிர ஆயுத மோதல்கள் குறித்த நேரடி நினைவுகள் ஏதுமின்றி அல்லது மிகக் குறைந்த நினைவுகளுடன் ஒரு தலைமுறை வளர்ந்து பெரியவர்களாகியுள்ளது. இவர்களில் பலர் 2009க்குப் பிறகு பிறந்தவர்கள்; மற்றவர்கள் போரின் இறுதிக்கட்டத்தின் போது கைக்குழந்தைகளாக இருந்தவர்கள். […]

மேலும் பார்க்க

தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் – பகுதி 3

45 நிமிட வாசிப்பு

மத்திய பழங்கற்காலம் தொல்லியலாளர்கள் பொதுவாக மத்திய பழங்கற்காலம் கீழைப் பழங்கற்காலத்தின் வளர்ச்சியே எனக் கொண்டாலும், இக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், அவற்றை ஆக்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகள், பயன்பாடு ஆகியவற்றை நோக்குமிடத்து, கீழைப் பழங்கற்காலத்திலிருந்து மாறுபட்ட ஒரு சூழலிலே இக்கால மனிதன் வாழ்ந்திருந்தது புலனாகிறது. கீழைப் பழங்கற்காலக் கருவிகளை ஆக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பிரதான கல்லின வகையான குவாட்சயிட்டை விட மென்மையான கல்லின வகைகளான ஜஸ்பர் (Jasper), சேட் (Chert), அகேற் (Agate), சல்செடனி […]

மேலும் பார்க்க

மேன்மக்கள் சரித்திரம்: கொழும்பு நகரின் தமிழ் உயர்குழாம் பற்றி சு. இரத்தினசாமி ஐயர் 1930ஆம் ஆண்டு எழுதிய நூல் பற்றிய அறிமுகம்

22 நிமிட வாசிப்பு

கொழும்பு, கொம்பனித்தெரு, அரசினர் புதிய பாடசாலைத் தமிழ் பண்டிதர் சு. இரத்தினசாமி ஐயர் 1930ஆம் ஆண்டில் ‘மேன்மக்கள் சரித்திரம்’ என்னும் நூலை வெளியிட்டார். இந்நூல் கொழும்பு மீனாம்பாள் அச்சியந்திர சாலையினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு 2008ஆம் ஆண்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது. இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் சமூக, பொருளாதார மாற்றங்களின் பயனாக பல்வேறு இன, மத, சாதிப் பிரிவுகளைச் சேர்ந்த சமூகப்பிரிவினர்களில் இருந்து […]

மேலும் பார்க்க

மலையக வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்தும் பெருந்தோட்டத் தொழிலாளருக்கு எதிரான ஒடுக்குமுறை வடிவங்கள் 

19 நிமிட வாசிப்பு

இருபதாம் நூற்றாண்டில் ஆராய்ச்சியாளர்களும் மானிடவியலாளர்களும் மக்களின் வாழ்வியல் மரபுகளைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினர். இந்த ஆய்வுகள், அதுவரை மேல்தட்டு மக்களின் வாழ்க்கையையும் ஒருபக்கச் சார்புடைய இலக்கியப் பதிவுகளையும் மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கிய மரபுசார்ந்த ஆய்வு முறையை உடைத்தெறிந்தன. இக்காலக்கட்டத்தில் வெளிவந்த வாய்மொழிப் பாடல்கள், மரபுகள், நிகழ்த்து கலைகள் ஆகியவை ஒடுக்கப்பட்ட அடிமட்ட மக்களின் உள்ளக் கிடக்கையை வெளிக்கொணர்ந்தன. மேலும், இம்மக்களின் மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள், வழிபாடு, சடங்குகள் மற்றும் […]

மேலும் பார்க்க

இலங்கையில் சிங்கள மக்களிடையே காணப்படுகின்ற பத்தினி வழிபாட்டுடன் தொடர்புடைய அங்கெலிய விளையாட்டு

21 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கையில் சிங்கள மக்களின் சமய வாழ்வில் பத்தினி வழிபாடு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருக்கின்றது. சிங்கள மக்கள் பத்தினித் தெய்வத்தினைத் தொற்று நோய்களைத் தீர்க்கும் அதிதேவதையாகக் கொள்கின்றனர். மழைவளம் குன்றிப் பசியும் பிணியும் தோன்றுவதற்கும் அதனால் ஏற்படுகின்ற நோய்களுக்கும் பத்தினியின் சீற்றமே காரணம் என்பதனை மனதிலே கொண்டு, பத்தினி தெய்வத்தினைச் சாந்தி செய்வதற்காகப் பலவகையான சடங்குகளையும் நிகழ்த்துகலைகளையும் சிங்கள மக்கள் செய்துவருகின்றனர். சிங்களவர்கள் கம்மடுவ, அங்கெலிய, கிரியம்மா தானம், […]

மேலும் பார்க்க

தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் – பகுதி 2

30 நிமிட வாசிப்பு

மனித வரலாற்றுக் கற்கைப் பிரிவுகள் டென்மார்க்கில் தேசிய அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்த கிறிஸ்டியன் ஜே. தொம்ஸன் (Christian Jurgensen Thomsen) 1830களில் புராதன மனித இன வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக, அம்மனிதர்கள் விட்டுச்சென்ற செய்பொருட்களை ஆதாரமாகக்கொண்டு அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தை கற்காலம் (Stone Age), வெண்கலக் காலம் (Bronze Age), இரும்புக் காலம் (Iron Age) என மூன்றாகப் பிரித்தார். இது ‘மூன்று காலகட்ட முறை’ (The Three Age […]

மேலும் பார்க்க

மலையகத்தில் நிகழ்த்தப்படும் இராமர் பஜனை

26 நிமிட வாசிப்பு

சடங்கு என்பது மனித நாகரிகத் தொடக்கத்திலிருந்தே தனிமனிதனையும் சமூகத்தையும் ஒழுங்குபடுத்தவும், இயற்கையின் விபரீதங்களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் உருவாக்கப்பட்ட ஒரு குறியீட்டு நடத்தை அமைப்பாகும். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த ஆதி மனிதன் இடி, மின்னல், பெருமழை, கொடிய நோய்கள், கொடிய விலங்குகள் போன்ற தன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கண்டு அஞ்சிய வேளையில், அவற்றை ஆற்றுப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பாவனைகள் (Mimicry), சைகைகள், தாள அசைவுகள் மூலம் மேற்கொண்ட வழிபாட்டு முறைகளே […]

மேலும் பார்க்க

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட யாழ்ப்பாணத்து மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள்: ஆனைக்கோட்டை அகழ்வாய்வில் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் உண்மைகள்

10 நிமிட வாசிப்பு

1980ஆம் ஆண்டின் பின்னர் தென்னாசியத் தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்களையும் வரலாற்று ஆர்வலர்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த முக்கிய வரலாற்று நிகழ்வாக ஆனைக்கோட்டை கரையாம்பிட்டி தொல்லியல் அகழ்வாய்வு காணப்படுகின்றது. இதற்கு யாழ்ப்பாணத்தின் பூர்வீக மக்களின் இரு மனித எலும்புக்கூடுகளும், அவற்றில் ஓர் எலும்புக்கூட்டின் தலைமாட்டுப் பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துப் பொறிப்புடன் கூடிய முத்திரை மோதிரமும் இங்கு முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டமை முக்கிய காரணமாகும். இவ்விடம் யாழ்ப்பாண நகருக்கு […]

மேலும் பார்க்க

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யவும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் கோரும் ‘மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின்’ (CHRD) மகஜர் (2002)

5 நிமிட வாசிப்பு

மகஜர் மேலே குறிப்பிட்டுள்ள 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் – PTA (தற்காலிக ஏற்பாடுகள்) குறித்தும், நாட்டில் மனித உரிமைகள், நல்லாட்சி நெறிமுறைகள் மீறப்படுதல் போன்றவை தொடர்பாக இச்சட்டம் வகிக்கும் நேரடியான பாத்திரம் குறித்தும், அவை தொடர்பாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் காட்டிவரும் அலட்சியம் குறித்தும், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்கள், அக்கறையுள்ள குடிமக்கள் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்