அறிமுகம் இலங்கைத் தமிழரிடையில் உலகளவில் கவனம்பெற்ற முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர் தாமோதரம்பிள்ளை சனாதனன். தன் படைப்பாக்கத்தினாலும் பண்பாட்டுப் பங்களிப்பினாலும் விமர்சனபூர்வமான அணுகுமுறையாலும் கல்வியூட்டல் செயற்பாடுகளினூடும் காண்பியப் படைப்பாளிகளுக்குரிய வெளியை தமிழ்ச்சூழலிற்குள் மோதித்திறந்தவர். ஒரு கற்கைமுறையாகவும் கலையாகவும் காண்பியக்கலையைப் பெரும்படைப்பாளுமை மிக்க முன்னோடிகளில்லாத சூழலில் வளர்த்து விரித்தெடுத்திருக்கிறார். அவருடைய கலைமனம், அது பண்பாட்டின் புள்ளிகளில் நெய்யப்பட்ட முறை, அவரது படைப்புகள், அவை சமூக பண்பாட்டின் மீது கொண்டுவரும் தாக்கம் என ஆழமான, […]