கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா - Page 3 of 16
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

மட்டக்களப்பின் நிலப்பிரபுத்துவப் பொருளாதாரமும் சமூக உறவுகளும் 

13 நிமிட வாசிப்பு

மார்க். பி. விற்றேக்கர் (Mark. P. Whitaker) எனும் மானிடவியலாளர் 1980களின் முற்பகுதியில் மட்டக்களப்பின் மண்டூர் என்ற கிராமத்தில் தங்கியிருந்து அப்பகுதியில் கள ஆய்வு நிகழ்த்தினார். அவர் மண்டூர் கந்தசுவாமி கோவிலின் நிர்வாகம் தொடர்பாக, அவ்வூரின் வேளாளர்கள், சீர்பாதர் என்னும் இரு சமூகக்குழுக்களுக்கிடையே எழுந்த பிணக்குப் பற்றிய நுண்ணாய்வு ஒன்றை மேற்கொண்டார். நியுஜெர்சி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு 1986 ஆம் ஆண்டில் அவர் சமர்ப்பித்த ஆய்வேடு குறித்த விவரம் பின்வருமாறு: ‘Divinity […]

மேலும் பார்க்க

உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 3

14 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: கலன சேனரத்தின மூன்றாம் உலக நாடுகள் அரசியல் விடுதலையைப் பெற்ற பின்னர் அரசியல் சுயநிர்ணயமும் சுதந்திரமும் (Political Self – Determination and Independence) மட்டும் காலனியத்தில் இருந்து விடுதலையை வழங்க மாட்டாது என்பதை விரைவில் உணர்ந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அரசியல் விடுதலையைப் பெற்ற போதும் மேற்கு நாடுகளின் அரசியல், பொருளாதார, சட்ட ஒழுங்கமைப்புகளுக்குக் கட்டுப்பட்டனவாக இருப்பதை மூன்றாம் உலக நாடுகள் விரைவிலேயே உணர்ந்து […]

மேலும் பார்க்க

நூல் அறிமுகம்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் கல்வியின் ஒரு நூற்றாண்டு வரலாறு

17 நிமிட வாசிப்பு

இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் இரு நூல் தொகுப்புகளை வெளியிட்டது. இந்நூல் தொகுப்புகளின் தலைப்பு ஆங்கிலத்தில் வருமாறு: Beyond Boundaries: One Hundred Years of Humanities and Social Sciences in Sri Lankan Universities. ‘எல்லைகளுக்கு அப்பால்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வி’ என மேற்படி […]

மேலும் பார்க்க

உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: கலன சேனரத்தின ஐரோப்பாவின் 35 நாடுகள் ஒன்று கூடி 1975 ஆம் ஆண்டில் ஹெல்சிங்கி நகரில் ‘Helsinki Final Act’ எனப்படும் ஆவணத்தை இயற்றின. ஐரோப்பாவின் பாதுகாப்பும் கூட்டுறவும் பற்றிய (Conference on Security and Cooperation in Europe) அம்மாநாடு ‘CSCE’ என்ற சுருக்க எழுத்தால் அழைக்கப்படும். ‘CSCE’ இயற்றிய மேற்படி ஆவணம் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சாசனத்தில் கூறப்பட்ட ‘Peoples’ என்ற சொல்லை உபயோகித்ததோடு, […]

மேலும் பார்க்க

உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 1

13 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: கலாநிதி கலன சேனரத்தின பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவராக விளங்கும் கலாநிதி கலன சேனரத்தின ‘Internal Self-determination in International Law History, Theory and Practice’ என்னும் விடயப் பொருள் குறித்து ஆய்வு நூல் ஒன்றை 2021 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். இந்நூல் அறிமுகம், முடிவுரை ஆகியன உட்பட 9 அத்தியாயங்களைக் கொண்டது. 2014 ஆம் ஆண்டு ஹொங்கொங் பல்கலைக்கழகத்திற்கு கலன சேனரத்தின அவர்கள் […]

மேலும் பார்க்க

ஸ்டான்லி ஜே. தம்பையா அவர்களின் ‘பௌத்தத்திற்குத் துரோகம்? இலங்கையில் சமயமும், அரசியலும், வன்முறையும்’ என்னும் நூல்

14 நிமிட வாசிப்பு

மானிடவியலாளர் ஸ்டான்லி ஜே. தம்பையா அவர்கள் 1990 ஆம் ஆண்டில் ‘Buddhism Betrayed? Religion, Politics and Violence in Sri Lanka’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலின் தலைப்பையே மேலே தமிழில் தந்துள்ளோம். பௌத்த நாடான இலங்கையில் 1970க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வன்முறைக் கிளர்ச்சிகளும், கலகங்களும் ஏற்பட்டன. 1971 இல் ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்றது. இக்கிளர்ச்சியை இலங்கை அரசாங்கம் கொடிய முறையில் அடக்கியது. […]

மேலும் பார்க்க

இலங்கையின் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதங்கள்: அரசியல் விஞ்ஞானத்துறை ஆய்வாளர்களுக்கான கையேடு – பகுதி 2

13 நிமிட வாசிப்பு

1948 இல் இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பிற்பட்ட காலத்தில் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதம் (State Reform) ஒற்றையாட்சி – சமஷ்டி (Unitary – Federal), சிங்களவர் – தமிழர் என்ற எதிர் இணைகளின் அடிப்படையில் துருவமயப்படுத்தப்பட்டதை (Polarisation) இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக்காட்டினோம். அமெரிக்க அரசியல் விஞ்ஞானிகளான றொபர்ட் என். கெயர்ணி (Robert N. Kerney) என்பவரும், இலங்கையரான ஏ.ஜே. வில்சனும் அரசமைப்பைத் திருத்தும் விவாதம் இனத்துவத் தேசியவாதங்களின் அடிப்படையில் திசை […]

மேலும் பார்க்க

இலங்கையின் அரசமைப்புத் திருத்தம் பற்றிய விவாதங்கள்: அரசியல் விஞ்ஞானத்துறை ஆய்வாளர்களுக்கான கையேடு – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

இலங்கையின் அரசமைப்பைத் திருத்துதல் அல்லது சீர்திருத்தம் செய்தல் என்னும் விடயம் ஆங்கிலத்தில் ‘State Reform’ என்ற தொடரால் குறிப்பிடப்படுகிறது. ‘ஸ்டேட் றிபோம்’ என்ற சொற்தொடர் அரசுக்கட்டமைப்பை மாற்றம் செய்தல், அரசமைப்பு ஒன்றின் அங்கங்களுக்கிடையிலான உறவுகளையும், அதிகாரப்பகுப்பையும், மறுகட்டமைப்புச் செய்தல் (Restructuring the State) என்ற விரிந்த பொருள் உடையதுமாகும். அரசமைப்புத் திருத்தம் என்ற தொடரை ‘Amendment to the Constitution’ என்ற குறுகிய பொருளில் இல்லாது அரசுக்கட்டமைப்பைத் திருத்தம் செய்தல் […]

மேலும் பார்க்க

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வி: ஆராய்ச்சியும், அறிவு உற்பத்தியும், நூல் வெளியீடும் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஏ.எம். நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட லக்சிறி பெர்ணான்டோ பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் அவர்களின் மாணவராக கனடாவின் நியு பிரண்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பின்பட்டப் படிப்பை மேற்கொண்ட இன்னொருவர் பேராசிரியர் லக்சிறி பெர்ணான்டோ (Laksiri Fernando) ஆவார். அவர் வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் விரிவுரையாளராக தனது கல்விப் பணியை ஆரம்பித்தார் (இப்பல்கலைக்கழகம் பின்னர் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது). லக்சிறி பெர்ணான்டோ […]

மேலும் பார்க்க

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வி: ஆராய்ச்சியும், அறிவு உற்பத்தியும், நூல் வெளியீடும் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஏ.எம். நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட சமூக விஞ்ஞானங்களில் ஒன்றான ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற கல்வித்துறை 1921 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் 80 ஆண்டுகளுக்கு மேலாக, பல்கலைக்கழக நிலையில் ஒரு கற்கைத் துறையாக வளர்ச்சியுற்ற வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக்கூறும் ‘இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞான கல்வியின் வரலாறு’ என்ற தலைப்பிலான கட்டுரை ‘எழுநா’ செப்டெம்பர் இதழில் பிரசுரிக்கப்பட்டது. அக்கட்டுரை ஏ.எம். நவரட்ண பண்டார, […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்