கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா - Page 16 of 16
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

சாதிகளுக்கிடையிலான இடையூடாட்டத்தின் இருவேறு மாதிரிகள் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு | 15691 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் பகுதி 1 இல் நான் ஒரு குறிப்பிட்ட வகைச் சமூகச் செயல் பற்றிக் குறிப்பிட்டேன். இது புவி வெளியை Space ஒழுங்கமைத்துக் கொள்வது பற்றியது. இப்பகுதியில் சாதிகளுக்கிடையிலான நடத்தை நடைபெறும் இரு மாதிரிகளை  modes of intercaste canduct) விளக்குவேன். இம்மாதிரிகள் இருவகைப்படும்.                     1. கட்டுண்ட சாதிகளின் நடத்தை அல்லது உறவு                     2. கட்டுப்படாத சாதிகளின் நடத்தை விவசாயக் கிராமம், […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் சாதி குடியிருப்புக்களின் இட ஒழுங்கமைவும் நியமத் திட்டமும் – பகுதி 1

10 நிமிட வாசிப்பு | 31863 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் வட இலங்கையின் யாழ்ப்பாணத் தீபகற்பம் – அறிமுகம் ஆட்சேர்ப்பு (Recruitment) நேரம் /காலம் (Time புவிவெளி அல்லது இடவெளி(Space) வாடிக்கையாளர் (Clientele) விலைப்பொறிமுறை (Price Mechanism) சூழமைவு (Context) சமச்சீர் – சமச்சீர் இன்மை இருவேறு சாதி இடையூடாட்ட முறைகளிலும் செயலிகள் (Actors) தமது செயல்களை ஒன்றுக்கொன்று எதிரான நியமத்திட்டங்களின்படி (Normative Schemes) அமைத்துக் கொள்வர். ஒவ்வொரு நியமத்திட்டமும் குறிப்பிட்ட வகைக் குறியீடுகளுடனும் […]

மேலும் பார்க்க

மறைந்திருக்கும் சக்தி

10 நிமிட வாசிப்பு | 16263 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட் யாழ்ப்பாணத்தில் பெண்களைப் பற்றிய பண்பாடு, சமூகம், பொருளாதாரம் என்பனவற்றின் நோக்கிலான ஒரு விபரிப்பு யாழ்ப்பாணத்துப் பெண்களின் சமூகநிலை அவர்களைப் பற்றிய பண்பாட்டு வெளிப்படுத்தல்கள் என்ற இரு பிரச்சினைகளே இக்கட்டுரையின் பிரதான விடயப் பொருளாகும். இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியின் தமிழ்ப் பெண்கள் வெவ்வேறு பருவங்களில் எதிர்கொள்ளும் வாழ்வு, அவற்றோடு தொடர்புடைய சடங்குகள் என்பன கட்டுரையின் முற்பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளன. இவ்வாழ்க்கை வட்டத்தூடே பயணிக்கும் பெண்கள் வெவ்வேறுபட்ட […]

மேலும் பார்க்க

20 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சாதி

10 நிமிட வாசிப்பு | 31616 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : க. அருமைநாயகம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினை மிகத் தெளிவாக வெளிப்பட்டது. படித்த முற்போக்குச் சிந்தனையுடைய உயர்சாதி இந்துக்கள் சிலரும், தாழ்ந்த சாதியினர் எனப்படுவோரும் சாதிய நடைமுறைகளையும், அதன் தீங்கான  அம்சங்களையும் ஒழிக்க வேண்டும் என்று முயற்சித்ததைக் காண்கிறோம். ஒடுக்கப்பட்டோர் சமத்துவ உரிமைகளையும் சலுகைகளையும் கோரிநின்றனர். மரணச் சடங்கின் போது மேளமடித்தல், பாடசாலைகளில் தம் பிள்ளைகளிற்குச் சம ஆசனம், கோயில்களில் உள்மண்டபத்திற்குள் […]

மேலும் பார்க்க

19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சாதி

10 நிமிட வாசிப்பு | 39949 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை: க. அருமைநாயகம் யாழ்ப்பாண மக்களின் பொருளாதார சமூக, சமய வாழ்க்கையில் சாதிமுறை முக்கிய பங்கினைப் பெற்றிருந்தது. அங்கு சாதிப் பிரிவுகள் பலவாக இருந்தன. உயர் சாதியான வேளாளர் முக்கிய வகிபாகத்தை பெற்றிருந்தனர். கோவியர், பள்ளர், நளவர் என்பன அடிமைச் சாதிகள் எனவும், அம்பட்டர், வண்ணார், கொல்லர், தச்சர், பறையர் ஆகியன குடிமைச்சாதிகள் எனவும் கருதப்பட்டன. சாதிகள்  அகமணக் குழுக்களாகும். ஒரு சாதியினர் பிறசாதிகளுடன் சமபந்திபோசனம் வைத்துக்கொள்வதோ, விவாக […]

மேலும் பார்க்க

பொருளாதார மாற்றங்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் – பகுதி 4

10 நிமிட வாசிப்பு | 15561 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர்   இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வேளாளர்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை சாதி அந்தஸ்தில் குறைந்தவர்கள் என்ற  நிலையில் இருந்து உயரவிடாது தடுத்தமைக்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் மலிவான கூலி தடையின்றித் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற தேவை. இரண்டாவது வேளாளரின் சாதி அந்தஸ்து தர அடுக்கில் தமது குடும்பத்தின் நிலையைத் தாழ்ந்து போகாது பாதுகாத்தல் (வேளாளர் சாதிக்குள் நூற்றுக்கணக்கான உபசாதிகள் உள்ளன). […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணமும் சாதிப்பழமை வாதமும் – பகுதி 3

10 நிமிட வாசிப்பு | 12402 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர் தோட்டப் பொருளாதாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட அடக்குமுறையானது தொடர்ந்து சடங்கியல் இழிவுப்படுத்தல் மூலம் நகர்த்தப்பட்டது . இதன்மூலம்  அந்தஸ்துநிலை வேளாளர்களையும், தாழ்த்தப்பட்டோரையும் பிரிக்கும் எல்லைக்கோடுகள், வெளித்தலையீடுகளால் தாக்கப்படும் நிலையில் இருந்தன. இந்தவிடயம் விக்டோரியா காலத்தில் (19 ஆம் நூற்றாண்டில்) வேளாளருக்கு உணர்த்தப்பட்டது. தாராளவாதக்கொள்கை கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் ஒரு மனதோடு பழமைவாத சாதிக்கட்டுப்பாட்டு  அடிமைத்தனத்தில் இருந்து தமது காலனித்துவ குடிகளை விடுவிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்களால் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் சாதி உறவுகளும் சாதி மோதல்களும் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு | 23049 பார்வைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர்          நில உடைமை, மூலதனச் சொத்துக்கள், வர்த்தகம், நிர்வாகப் பதவிகள், அரசியல் தலைமைத்துவப் பதவிகள் என்ற யாவற்றையும் ஒரே ஒரு மேலாதிக்கச்சாதி தனது தனியுரிமையாக்கிக் கொண்டு ஆதிக்கம் செய்வது தென்னாசியப் பிராந்தியத்தில் பரவலாகக் காணப்படும் விடயம் (Srinivas 1955, 1959,  Raheja 1988). இவ்வாறான ஒரு நிலைமைக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது யாழ்ப்பாணம் ஆகும். யாழ் குடாநாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகையை […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடபகுதியில் 1968 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆலயப்பிரவேச நெருக்கடி – பகுதி 1

9 நிமிட வாசிப்பு

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர் 1968 ஆம் ஆண்டு பரிஸ் நகரில் மாணவர்கள் வீதிகளில் மறியல் செய்து பெரும் கிளர்ச்சி நடத்திய அதேஆண்டில் இலங்கையின் தமிழ் கலாசாரத்தின் மத்தியான யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குள் இன்னொருவகையான சிவில் குழப்பம் நிகழ்ந்தது. இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சியின் பீக்கிங் பிரிவுடன் (Peking wing) தொடர்புடைய செயற்பாட்டாளரின் வழிநடத்தலில் நூற்றுக்கணக்கான தீண்டத்தகாதவர்கள் என்று மரபு வழியில் ஒதுக்கப்பட்ட பள்ளர், நளவர் சாதியினர் யாழ்ப்பாணத்தின் பழமைவாத நடைமுறைகளைக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்