சக்கரவியூகத்தில் சிக்குண்டுள்ள நானும் எனது வீடும்: காண்பியக் கலைஞர் தா. சனாதனனுடனான நேர்காணல் – பகுதி 1
61 நிமிட வாசிப்பு
அறிமுகம் இலங்கைத் தமிழரிடையில் உலகளவில் கவனம்பெற்ற முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர் தாமோதரம்பிள்ளை சனாதனன். தன் படைப்பாக்கத்தினாலும் பண்பாட்டுப் பங்களிப்பினாலும் விமர்சனபூர்வமான அணுகுமுறையாலும் கல்வியூட்டல் செயற்பாடுகளினூடும் காண்பியப் படைப்பாளிகளுக்குரிய வெளியை தமிழ்ச்சூழலிற்குள் மோதித்திறந்தவர். ஒரு கற்கைமுறையாகவும் கலையாகவும் காண்பியக்கலையைப் பெரும்படைப்பாளுமை மிக்க முன்னோடிகளில்லாத சூழலில் வளர்த்து விரித்தெடுத்திருக்கிறார். அவருடைய கலைமனம், அது பண்பாட்டின் புள்ளிகளில் நெய்யப்பட்ட முறை, அவரது படைப்புகள், அவை சமூக பண்பாட்டின் மீது கொண்டுவரும் தாக்கம் என ஆழமான, […]
மேலும் பார்க்க
போருக்குப் பிந்தைய உளவியல் சவால்கள்: மன அதிர்ச்சியும் தார்மீகக் காயமும் – பகுதி 1
57 நிமிட வாசிப்பு
தொடக்கக் குறிப்புகள் போரின் விளைவுகள் ‘மன அதிர்ச்சி’ (Trauma) என்று பெயரிடப்படுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, அது ஒருவரின் உளவியல் வாழ்க்கைக்குள் நுழைந்துவிடுகிறது. தூக்கமற்ற இரவுகள், பருவ வயதுடைய பிள்ளையைத் தனியாக விட்டுச் செல்லத் தயங்கும் தாய், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் வழியாகப் பயணிக்க மறுக்கும் முதியவர், உடலியல் ரீதியாகப் போதுமான விளக்கம் கிடைக்காத தொடர் உடல் வலி, கடன் தொடர்பான தம்பதியினரிடையேயான வாக்குவாதங்கள், காணாமல் போனவர்கள் குறித்த கனவுகள், ஒரு […]
மேலும் பார்க்க
வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 6
22 நிமிட வாசிப்பு
2.2.1.5 மலிகைக் குளம் (Malikai Kulam) மலிகைக் குளம் (Malikai Kulam) கனகராயன் ஆற்றுப் படுகையின் கீழ் அமைந்துள்ள முக்கியமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இக்குளம் வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மலிகை கிராமத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி வடக்கு வறண்ட வலயத்தின் நீர்வள மேலாண்மை, வேளாண்மை மற்றும் கிராமிய வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். மலிகைக் குளத்தை அடைவதற்கு A9 பிரதான வீதியில் ஓமந்தைச் […]
மேலும் பார்க்க
ஈழத்து தமிழ்க்கூத்து மரபில் முல்லைத்தீவுக் கோவலன் கூத்து
23 நிமிட வாசிப்பு
1 அறிமுகம் இந்தக் கட்டுரை வன்னி நாட்டின் கிராமமான முல்லைத்தீவில் இன்றும் செல்வாக்குடன் ஒரு வகையில் நாடகமாகவும், இன்னொரு வகையில் சமயச் சடங்கு, சமய நம்பிக்கையுடன் இணைந்து பிரதேசப் பண்பு கொண்ட வாழும் கலையாக இருக்கும் முல்லைத்தீவுக் கோவலன் கூத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சி ஆகும். ஈழத் தமிழ்க் கூத்தின் பிரிவுகளும் பாணிகளும் ஈழத்துக் கூத்து மரபு பின்வரும் சில பிரிவுகளையும் பாணிகளையும் கொண்டுள்ளது. இந்த மரபு ஆட்ட மரபு, பாட்டு […]
மேலும் பார்க்க
நவீன மனிதனின் தென்னாசிய வருகையும் திராவிட மக்களின் மூதாதையர்களும் – பகுதி 1
20 நிமிட வாசிப்பு
இற்றைக்கு 35,000 ஆண்டுகளுக்கு முன்னர் M20 மரபணுக் குறியீடு கொண்டோரின் இந்திய-இலங்கை வருகை. Picture Courtesy: Genographic Project. அறிமுகம் மரபணுவியல் அறிவியலாளர்கள் மரபணுக்களின் வரிசைக் கிரமத்தை இயக்கினார்கள்; அவர்கள் மரபணுத் தொகைகளை வரைவு செய்தார்கள்; அவர்கள் இந்தியா முழுவதிலும், இலங்கையிலும், ஏனைய தென்கிழக்காசிய நாடுகளிலும், பண்டைய உலக நாடுகளிலும் வாழும் மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான மரபணுக்களை ஒப்பிட்டார்கள். அவர்கள் பெற்றுக்கொண்ட முடிவுகள் வியப்பூட்டுவதாக இருந்தன. தமிழ்மொழி பேசும் மக்களின் […]
மேலும் பார்க்க
கடல் கழுவிய வாழ்வுகள்: வடக்கு இலங்கையின் பெண் கடல்பாசி விவசாயிகளும் காலநிலை நீதியும்
38 நிமிட வாசிப்பு
சுருக்கம் (Abstract) இக்கட்டுரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில், குறிப்பாகக் கிளிநொச்சி மாவட்டத்தின் வலைப்பாடு பகுதியில் வாழும் பெண் கடல்பாசி விவசாயிகளின் சமகால நெருக்கடியை விவரிக்கிறது. முப்பது ஆண்டுகால ஆயுத மோதல் விட்டுச்சென்ற சமூகச் சிதைவுடன், கடல் வெப்பநிலை அதிகரிப்பால் தீவிரமடைந்து வரும் காலநிலை நெருக்கடியும் இணைந்து, இப்பகுதிப் பெண்களை இரட்டை ஓரங்கட்டலுக்கு உள்ளாக்கியுள்ளன. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கையின் 14ஆம் பிரிவு (CEDAW Article 14), […]
மேலும் பார்க்க
1991 – 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் – பகுதி 4
20 நிமிட வாசிப்பு
உதவி வழங்கும் நாடுகளின் ஒஸ்லோ மாநாடு சமாதான முயற்சிக்கு உலக ஆதரவைப் பெறவும் சர்வதேச சமூகத்திடம் இருந்து அவசர நிதியுதவி திரட்டும் நோக்கத்துடனும் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு ஒன்றை நோர்வே அரசு கூட்டியது. இம்மாநாடு 2002 நவம்பர் 25ஆம் நாள் அன்று ஒஸ்லோவில் உள்ள ‘ஹால்மன்கோமன் பார்க்’ விடுதியில் இடம்பெற்றது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசிய-பசிபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த 37 நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து […]
மேலும் பார்க்க
நாடு பிளவுபட்ட நாற்பதுகள் – 2
17 நிமிட வாசிப்பு
தமிழ்த் தலைவர்களின் பதில் சேனாநாயக்கவும் பிற சிங்கள மத்திய வகுப்பு அரசியல் தலைவர்களும் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைப்பதை எதிர்பார்த்துப் பல நடவடிக்கைகளில் ஈடுபட, தமிழர் தரப்பில் வேறுபட்ட செயல்பாடுகள் இடம்பெற்றன. அரசியல் சீர்திருத்தத்தின் விளைவாகவும் சுதந்திரத்தின் பலனாகவும் பெரும்பான்மையினராகிய சிங்களத் தலைவர்கள் ஆதிக்கம் பெறுவர் என்ற உணர்வும் தமிழ் மத்திய வகுப்பினர் அனுபவிக்கும் பொருளியல் நன்மைகளை இழக்க நேரிடும் என்ற ஏக்கமும் தமிழ் அரசியல் தலைவர்களிடையே அச்சத்தை உண்டுபண்ணின. நாட்டில் […]
மேலும் பார்க்க