September 2026 - Page 2 of 2 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

September 2026 தொடர்கள்

1991 – 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் – பகுதி 3

23 நிமிட வாசிப்பு

ஆனையிறவு முற்றுகைச் சமர் ஓயாத அலைகள் மூன்றில் நான்காவது கட்டமாக அமைந்த ஆனையிறவுச் சமரானது வன்னிப் பெருஞ்சமர்கள் எல்லாவற்றுக்கும் சிகரமாக அமைந்தது. இராணுவத்தினரின் ஆனையிறவுப் பெருந்தலத்தின் புவியியல் கட்டமைப்பு, அதன் படைவலு, ஆயுதவலு, அதன் கேந்திர முக்கியத்துவம் ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்து ஒரு நுட்பமான தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனையிறவுச் சமர் ஒரு முற்றுகைச் சமராகவே நெறிப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு அமைவாக ஓயாத அலைகள் மூன்றின் மூன்றாம் கட்டம் முடுக்கிவிடப்பட்டது. […]

மேலும் பார்க்க

வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 5

17 நிமிட வாசிப்பு

2.2.1.3 கனகராயன்குளம் 2.2.1.3.1. கனகராயன் குளத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் நீரியல் முக்கியத்துவம் வட மாகாணத்தின் தொன்மையான நீர்ப்பாசன மரபுகளில் முக்கிய இடம்பெறும் கனகராயன் குளம், வரலாறு, புவியியல் மற்றும் விவசாயப் பொருளாதாரம் ஆகிய மூன்று பரிமாணங்களிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. ‘கனகராயன்’ என்ற பெயர், வன்னிப் பிரதேசத்தில் ஒரு காலத்தில் செல்வாக்குடன் வாழ்ந்ததாகக் கருதப்படும் ‘ராயன்’ எனும் தலைமைக்குடி மக்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதேபோன்று […]

மேலும் பார்க்க

திட்டமிடாத துயரம்: வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சமூகங்களின் மீது வறட்சியின் தாக்கம் — பாலின நோக்கிலான ஓர் ஆய்வு

17 நிமிட வாசிப்பு
September 7, 2026 | அஸாம் ஷா

முன்னுரை: மழையை எதிர்பார்த்துக் காயும் நிலங்கள் யாழ்ப்பாணத்தின் வெளிச்சம் நிறைந்த வயல்வெளிகளில் நிற்கும் ஒரு பெண் விவசாயியின் கண்களில் தெரிவது வெறும் வறட்சி அல்ல — அது ஒரு முழு அமைப்பின் தோல்வி. வானத்தை நோக்கிய அவரது பார்வையில், தாமதமாகும் பருவமழை மட்டுமல்ல; தன்னை ‘விவசாயி’ என்று அங்கீகரிக்க மறுக்கும் அரசு பதிவேடுகளும், போரில் சிதைந்து இன்னும் முழுமையாக மீளக் கட்டப்படாத நீர்ப்பாசன அமைப்புகளும், காலநிலை மாற்றத்தின் சுமையை சமமற்ற […]

மேலும் பார்க்க

இலங்கையில் அதிகாரப் பகிர்வு: 1926 – 2008 காலத்தில் வெளியிடப்பட்ட அரசியல் யாப்பு ஆவணங்களின் தொகுப்பு – பகுதி 2

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல அரசுக்கட்டமைப்புகள் அதிகாரப் பகிர்வுக்கு உதவக்கூடிய அரசுக்கட்டமைப்புகளை உருவாக்குதல் 1990க்குப் பிற்பட்ட காலத்து விவாதங்களில் முக்கிய பேசுபொருளாக அமைந்தன. முக்கியமாக இரு நிறுவனங்கள் தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள் எமது கவனிப்புக்குரியவை: இவ்விரு நிறுவனங்களில் செனற் நிறுவனத்தின் பயன் குறித்த விவாதத்தை முதலில் நோக்குவோம். செனற் சபை சோல்பரி அரசியல் யாப்பு இருசபைகளைக் கொண்ட பாராளுமன்றத்தைக் கொண்டிருந்தது. மேற்சபையான […]

மேலும் பார்க்க

தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் – பகுதி 1

26 நிமிட வாசிப்பு

1. நிமிர்ந்த மனிதன் – ஹோமோ இரக்டஸ் (Homo Erectus) 2. நியண்டதால் மனிதன் – ஹோமோ நியண்டதாலென்ஸிஸ் (Neanderthal Man) 3. நவீன மனிதன் – ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens) மனித இனங்களின் படிநிலை வளர்ச்சி (The Evolution of Human Species) உலகில் தோன்றிய உயிரினங்களின் 380 கோடி (3.8 Billion) ஆண்டுகாலப் பரிணாம வளர்ச்சியில் பல இனங்கள் முற்றாக அழிந்து போக, மற்றும் பல […]

மேலும் பார்க்க

போருக்குப் பின் பேசுதல்: மொழியும் மௌனமும் அன்றாடப் பேச்சும் – பகுதி 3

36 நிமிட வாசிப்பு

அரசியல் வழிசெலுத்தலாக மொழிமாற்றம்: பன்மொழித்தன்மை, அடையாளம், அன்றாடப் பிழைப்பு மௌனம் அரசியல் பிழைப்பின் ஓர் இலக்கணமாக அமைந்தால், மொழிமாற்றம் மற்றொரு இலக்கணமாக அமைகிறது. போருக்குப் பிந்தைய இலங்கையில், மக்கள் தங்கள் மொழித் திறனை மட்டும் கொண்டு தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, மாறிவரும் சமூகச் சூழல்கள், நிறுவன அமைப்புகள் மற்றும் அரசியல் அபாயங்களுக்கு ஏற்ப, அவர்கள் மொழிகள், வட்டார வழக்குகள், சொற்களஞ்சியங்கள், உரையாடல் […]

மேலும் பார்க்க

நாடு பிளவுபட்ட நாற்பதுகள் – பகுதி 1

17 நிமிட வாசிப்பு

1920களில் இலங்கையின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள் இந்த வெடிப்பை மேலும் விரிவடையவிட்டனர். அது 1930களில் அகன்று சென்றது; அடுத்த தசாப்தத்தில், 1940களில், நிரப்ப முடியாத நிலப்பிளவாக விரிந்தது. ஆட்சியாளருடைய செயல்பாடுகளும் அகலச்சென்ற பிளவை ஒடுக்க உதவவில்லை. உண்மையில் ஆட்சியாளர் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர். பின்புலம் இருபதாம் நூற்றாண்டின் முதற்காலில் இந்தியத் தேசியவாதிகளுடைய கலைச்சொல் அகராதியில் ‘வகுப்புவாதம்’ (Communalism) என்ற பொருள் பொதிந்த சொல்லொன்று […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்