யாழ்ப்பாண பௌத்தம் கி.மு. 100 – கி.பி. 1200 – பகுதி 2
31 நிமிட வாசிப்பு
(3) பெருங்கற் பண்பாடும் பௌத்தமும் இணைந்த சமரசப் பண்பு (The Syncretism of Buddhism with Megalithism) கந்தரோடைக் கிராமத்தின் தெற்குப் பக்கத்தில் பனந்தோப்புப் பகுதியிலிருந்த மண்மேடுகளை 1917ஆம் ஆண்டில் கவனித்த போல் பீரிஸ் அவை பௌத்த தாதுகோபங்களிருந்த மேடுகளாக இருக்கலாம் என எண்ணினார். ஆனால் அந்த இடமெல்லாம் பற்றையும் பறகும் மூடப்பட்டுக் காடாக இருந்தபடியினால் அங்கே அகழாய்வு எதையும் அவர் மேற்கொள்ளவில்லை (Pieris, P.E. 1917: 24). 1966-1967 […]
மேலும் பார்க்க
உரிமை மீறல்கள், சித்திரவதைக் குற்றங்கள் என்பவற்றுக்கான சர்வதேச சட்டவரம்பின் நியாயாதிக்கத்தில் நிலவும் சிக்கல்கள் – பகுதி 1
26 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: நீதியரசர் கலாநிதி சந்திரதாச நாணயக்கார ஓர் அரசு, சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளை மீறும் வகையில் செயற்படும்போது, அதற்கான முழுப் பொறுப்புகளும் அந்த அரசைச் சார்ந்தவையாகின்றன. ஆனால் அந்த அரசின் நிறுவனங்களால் இத்தகைய செயல்கள் செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களின் போது அதற்கான பொறுப்பு, பெரும்பாலும் ‘அரசுப் பொறுப்பு’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், அரசுடன் இணைக்கப்பட்டுள்ள நீதித்துறைச் சட்டங்களின் அடிப்படையில், அத்தகைய குற்றங்களுக்கு அரசு பொறுப்பேற்கத்தான் வேண்டும் என்று […]
மேலும் பார்க்க
இலங்கையில் 1956 ஆம் ஆண்டின் தேர்தல் புரட்சி
25 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: சி. அரசரத்தினம் இலங்கையின் நவீனகால வரலாற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள் சிலவற்றை எழுதிய சின்னப்பா அரசரத்தினம் முதன்மையிடத்தைப் பெறுகின்ற வரலாற்றுப் புலமையாளர்களில் ஒருவராவார். ‘Ceylon’ என்ற தலைப்பில் 1964ஆம் ஆண்டில் இவர் ஒரு முன்னோடியான நூலை எழுதினார். அந்நூல் ‘The Modern Nations in Historical Perspective’ (வரலாற்றுப் பார்வையில் நவீன தேசங்கள்) என்ற நூல்வரிசையில் ‘Prentice Hall Inco.’ என்னும் பதிப்பகத்தின் வெளியீடாகப் பிரசுரமாயிற்று. இந்நூல் […]
மேலும் பார்க்க
வறண்ட மண்டல நீர்வளங்களின் இருப்பும் பேண்தகு பயன்பாடும்: வடக்கு – கிழக்குப் பிரதேசங்கள், இலங்கை
25 நிமிட வாசிப்பு
6.1 அறிமுகம் பாரம்பரிய நீர்வள மேலாண்மை அணுகுமுறை பெரும்பாலும் நீர் வழங்கல் (Irrigation/ Supply) மேம்பாட்டில் கவனம் செலுத்தி வந்துள்ளது. இந்த அணுகுமுறையில், மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் ஒருவருக்கு தேவையான நீர் அளவு போன்ற தேவைக் கோட்பாடுகள் நிலையானதாகக் கருதப்பட்டு, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நீர் வழங்கல் வளங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இன்றைய நிலவரத்தில் நீர் வளங்களின் குறைபாடு, காலநிலை மாற்றம், மற்றும் அதிகரிக்கும் பயன்பாடு ஆகிய […]
மேலும் பார்க்க
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – நாவற்குழி
12 நிமிட வாசிப்பு
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள சாவகச்சேரிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அதே பிரிவில் உள்ள நாவற்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம். நாவற்குழிக் கோவிற்பற்றில் நாவற்குழி, நுணாவில், கோயிலாக்கண்டி ஆகிய மூன்று துணைப் பிரிவுகளை நிலப்படம் காட்டுகிறது (படம்-1). எல்லைகள் லெயுசிக்காமின் நிலப்படம் நாவற்குழிக் கோவிற்பற்றை மூன்று […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாண பௌத்தம்: கி.மு. 100 – கி.பி. 1200 – பகுதி 1
34 நிமிட வாசிப்பு
கந்தரோடை ஸ்தூபிகள். Source: Sri Lanka Guardian. முன்னுரை பௌத்த மரபுக் கதைகளின்படி புத்த பிரான் தனது வாழ்நாட்களில் வருகை தந்த இடங்களில் நாகதீபமும் (நாகதீவு – நாகநாடு) ஒன்றாகக் கூறப்படுகிறது. புத்த பிரானின் காலத்தில் இலங்கையில் நாகர்கள் ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் நாகதீபமும், மேற்குக் கரையிலிருந்த கல்யாணியும் முக்கியமான இடங்கள் என இலங்கையின் பௌத்த நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நூலில் கூறப்படும் ஒரு […]
மேலும் பார்க்க
மார்க்சிய சமூகவியலாளர் கலாநிதி நியூட்டன் குணசிங்க: 1946 – 1988
30 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட கலாநிதி நியூட்டன் குணசிங்க 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி நாவலப்பிட்டியில் பிறந்தார். அவர் தமது இரண்டாம் நிலைக் கல்வியை கம்பளை விக்கிரமபாகு மத்திய கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 1963ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அங்கு அவர் சமூகவியலை சிறப்புப் பாடமாகக் கற்று 1968ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தார். பேராசிரியர் ரால்ப் பீரிஸ், கணநாத் ஒபயசேகர, லக்சிறி ஜயசூரிய ஆகியோர் பேராதனையில் இவரது […]
மேலும் பார்க்க
1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 2
29 நிமிட வாசிப்பு
குமுதினிப் படகுப் படுகொலைகள் குமுதினிப் படகுப் படுகொலைகள், 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கிறது. நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். […]
மேலும் பார்க்க
நவீன இலங்கை வரலாற்றின் போக்கினை நிர்ணயித்த 1920கள்
15 நிமிட வாசிப்பு
மகாத்மா காந்தி இலங்கைக்கு 1927 நவம்பர் 12 இல் வந்தார். மறுநாள், நவம்பர் 13 இல், லண்டனில் இருந்து டொனமூர் ஆணைக்குழுவினர் வந்திறங்கினர். இந்த இரண்டு நிகழ்வுகளும் இலங்கையின் எதிர்கால அரசியல் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய வலுவைப் பெற்றிருந்தன. ஆனால், ஒன்று, குறுகிய கால விளைவுகளை மட்டும் ஒரு குறுகிய பிரதேசத்தில் உண்டுபண்ணி வலுவிழந்து மறக்கப்பட்டது. மற்றது, அரசியல் வரலாற்றின் போக்கினைத் திசை திருப்பியது. மறக்கப்பட்ட நிகழ்வு மகாத்மாவின் […]
மேலும் பார்க்க