யாழ்ப்பாணத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுதல் : திட்டங்களும் பரிந்துரைகளும்
14 நிமிட வாசிப்பு
தமிழில் : த. சிவதாசன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகத்தை நான் விமர்சிப்பதற்கு முன் அதற்கு எனது வாழ்த்தைத் தெரிவிக்க வேண்டும். எனது ‘ஜூன் 2018 லங்கா பிஸினெஸ் ஒன்லைன்’ கட்டுரையில் சுற்றுலா அபிவிருத்தி நிர்வாகத்தின் வரைபடத்தில் வடமாகாணம் வெறுமனே வறண்ட பிரதேசமாகவே காட்டப்படுகிறது எனவும், யாழ்ப்பாண விமான நிலையத்தைத் தவிர வேறெந்தச் சுற்றுலாத்தலங்களும் அங்கில்லை என்பது போலக் காட்டப்பட்டிருக்கிறது எனவும் விமர்சித்திருந்தேன். ஆனால் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்ட […]
மேலும் பார்க்க
வடக்கு மாகாணத்தின் காலநிலை தொடர்பான பரிந்துரைகள்
10 நிமிட வாசிப்பு
இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் காலநிலை தொடர்பான ஆய்வுகளுக்காக துல்லியமான காலநிலைத் தரவுகளைப் பெறுவது பிரதான பிரச்சினையாக இருக்கின்றது. 1985 இற்கு முன்னர் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் வானிலை மூலக்கூறுகளை அவதானித்து அளவிடும் பல வானிலை மற்றும் மழை அளவீட்டு நிலையங்கள் இருந்தன. ஆனால் முப்பது வருட உள்நாட்டு மோதல் காரணமாக அவற்றில் பல இன்று செயற்படவில்லை. 13 மழைவீழ்ச்சி நிலையங்கள் மட்டுமே வட பிராந்தியத்தின் 1992 முதல் 2022 வரையிலான […]
மேலும் பார்க்க
ஆங்கிலக் கல்வியும் நவீன நிர்வாக முறையும் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்
21 நிமிட வாசிப்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் இலங்கையில் நவீன சமூகம் உருவானது. அது பெருந்தோட்டத்தின் தோற்றத்தோடு ஆரம்பமானது. ஆனால் ஆரம்பத்தில் ஆளும் வெள்ளையர்களுக்கும் ஆளப்படும் இலங்கையர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருந்தது. அதற்குப் பலகாரணங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று மொழி, கலாசார இடைவெளி; இரண்டாவது அப்போது பிரித்தானியாவில் மேலோங்கியிருந்த ‘வெள்ளையரே உயர்ந்த இனம், அவர்களே ஆளப்பிறந்தவர்கள்’ என்ற இனவாதக் கருத்தின் தாக்கம்; மூன்றாவது கண்டிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்களை – அங்கு வெடித்த […]
மேலும் பார்க்க
எக்ஸ்பிரஸ் பேர்ள் : பேரிடரின் சிறுதுளி
24 நிமிட வாசிப்பு
தொடக்கக் குறிப்புகள் 2021 மே மாதம் இலங்கையின் கடற்பரப்பில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரியும் காட்சியைத் தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் ஒளிபரப்பிய போது நாம் எல்லோரும் திகிலுடன் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். குறித்த கப்பலில் இருந்தவர்கள் உயிராபத்தின்றி மீட்கப்பட்டார்கள் என்ற செய்தி ஆறுதலைத் தந்தாலும் கப்பல் ஏன் தீப்பிடித்து எரிகிறது, அக்கப்பல் எவ்வகையான பொருட்களைத் தாங்கியிருந்தது போன்ற வினாக்களுக்கான பதில் உடனடியாக எமக்குக் கிடைக்கவில்லை. இலங்கைத் துறைமுகத்தை தனது பயண […]
மேலும் பார்க்க
நாகர் பற்றிக் குறிப்பிடும் முத்துக்கல் மலைக் கல்வெட்டுகள்
10 நிமிட வாசிப்பு
பொலநறுவை மாவட்டத்தில் மொத்தமாக 80 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை 17 இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 52 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 18 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் அடங்குகின்றன. இக்கல்வெட்டுகளில் தமிழரின் சிவ வழிபாடு, நாக வழிபாடு தொடர்பான கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் நாகர் தொடர்பான 15 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை பற்றிய விவரங்களைப் பார்க்கலாம். பொலநறுவை நகரில் இருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள மன்னம்பிட்டி சந்திக்கு […]
மேலும் பார்க்க
சமஷ்டி முறைகளை ஒப்பிடுதல் – பகுதி 3
16 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ் மலேசியா றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் ஒப்பீட்டு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியா பற்றி அடுத்து நோக்குவோம். மலேசியாவின் சமஷ்டி பற்றி இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறைப் பேராசிரியர் M.O.A. டி சில்வா அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அவரது கட்டுரை ‘Power Sharing the International Experience’ என்னும் நூலில் (2011) […]
மேலும் பார்க்க
நிலமும் நாங்களும்: பின் – போர்க்கால வட பகுதியின் நில விவகாரங்களைப் புரிந்துகொள்ளல்
17 நிமிட வாசிப்பு
உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புப் போர்களில் நிலம், நில உரிமை என்பன மோசமாகப் பாதிக்கப்படும் அம்சங்களில் ஒன்று. இதற்கு ஆகப்பெரிய உதாரணங்களாக இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்கள், சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்ட்ட தமிழர் பிரதேசங்கள் விளங்குகின்றன. பலஸ்தீனம் யூதர்களுக்காக வாக்களிக்கப்பட்ட பூமி என்ற நம்பிக்கையை, தமது நில அபகரிப்புக்கான நியாயப்பாடாக இஸ்ரேல் எடுத்துக்கொண்டது. அதேபோல் இலங்கைத் தீவு முழுவதும் பவுத்தத்தைக் காப்பதற்காகச் சிங்களவர்களுக்கு புத்தரால் அருளப்பட்டது என்பது […]
மேலும் பார்க்க
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியில் சுகாதாரத் துறையின் முதலீடு
10 நிமிட வாசிப்பு
பொருளாதார அபிவிருத்தி துறையில் பங்கு கொள்ளும் துறைகளை நாம் பொருளாதார உட்கட்டமைப்புத் துறைகள், உற்பத்தி உட்கட்டமைப்புத் துறைகள், சமூக உட்கட்டமைப்புத் துறைகள் என மூன்று துறைகளாக பிரித்து வகையீடு செய்யலாம். உற்பத்தி உட்கட்டமைப்பு துறையினுள் விவசாயம், கால்நடை, கடற்றொழில், வனவளம், கைத்தொழில், சனத்தொகை போன்ற துறைகளும்; பொருளாதார உட்கட்டமைப்புத் துறையினுள் மின்சாரம், சக்தி வளம், நீர்வழங்கல், நீர்ப்பாசனம், போக்குவரத்து, தபால், தொலைத்தொடர்புகள், வங்கிகள் போன்ற துறைகளும்; சமூக உட்கட்டமைப்புத் துறையினுள் […]
மேலும் பார்க்க
பாராளுமன்ற அரசாங்க முறையும் ஜனாதிபதி அரசாங்க முறையும் – பகுதி 2
10 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம் : V.K. நாணயக்கார 4. பாதி – ஜனாதிபதிமுறை அரசாங்கமுறை பாராளுமன்றமுறை, ஜனாதிபதிமுறை என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கக்கூடிய இருவகை அரசாங்க முறைகள் பற்றி மேலே விபரித்தோம். பாராளுமன்ற முறையென்றோ அல்லது ஜனாதிபதி முறையென்றோ தெளிவாக அடையாளம் காண முடியாத அரசாங்க முறைகைளைக் கலப்பு முறை (Hybrid System) எனச் சில ஆய்வாளர்கள் அழைத்தனர். Duverges என்ற பிரஞ்சு தேசத்து அறிஞர் முதலில் ‘பாதி – ஜனாதிபதி அரசாங்க […]
மேலும் பார்க்க
மழைக் காலமும் கால்நடை வளர்ப்பும்
10 நிமிட வாசிப்பு
சில வருடங்களுக்கு முன் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அதிகளவில் பெய்த மழையினால் ஏற்பட்ட குளிருடன் கூடிய காலநிலையில் சிக்கி ஏராளமான கால்நடைகள் இறந்திருந்தன. இந்த நிலையை குளிர் அழுத்தம்/ அயர்ச்சி (Cold Stress) என்பார்கள். அன்றைய நாட்களில் சூழல் வெப்பநிலை 16 பாகை செல்சியஸ் வரை குறைந்திருந்தது. அந்த வருடம் வடக்கின் மேற்படி மாவட்டங்களில் வருடம் முழுவதும் பெரிதாக மழை கிடைத்திருக்கவில்லை என்பதனால் ஒரு வறட்சியான காலநிலையே […]
மேலும் பார்க்க