இலங்கையின் வடபகுதியில் 1968 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆலயப்பிரவேச நெருக்கடி – பகுதி 1
9 நிமிட வாசிப்பு
மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர் 1968 ஆம் ஆண்டு பரிஸ் நகரில் மாணவர்கள் வீதிகளில் மறியல் செய்து பெரும் கிளர்ச்சி நடத்திய அதேஆண்டில் இலங்கையின் தமிழ் கலாசாரத்தின் மத்தியான யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குள் இன்னொருவகையான சிவில் குழப்பம் நிகழ்ந்தது. இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சியின் பீக்கிங் பிரிவுடன் (Peking wing) தொடர்புடைய செயற்பாட்டாளரின் வழிநடத்தலில் நூற்றுக்கணக்கான தீண்டத்தகாதவர்கள் என்று மரபு வழியில் ஒதுக்கப்பட்ட பள்ளர், நளவர் சாதியினர் யாழ்ப்பாணத்தின் பழமைவாத நடைமுறைகளைக் […]
மேலும் பார்க்க
புதிதாகச் சிந்தித்தல்: தமிழர்களும் நினைவுச் சின்னங்களும்
7 நிமிட வாசிப்பு
எம் இதயங்களில் அச்சொல் புனிதமாய் இருக்கட்டும் சாம்பலைப் போல காற்று அதனையும் அள்ளிச் செல்ல விட வேண்டாம் சுகப்படுத்த முடியாத காயமாக… – மஹமூட் தர்வீஷ் (பலஸ்தீனக் கவிதைகள். (மொ+ர்) எம்.ஏ. நுஃமான், இ. முருகையன்) பண்பாட்டு மரபுரிமையின் மிக முக்கியமான பகுதியாக நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. நினைவுச் சின்னம் (monuments) என்பது ‘உலகளாவிய ரீதியில் பெறுமதிமிக்கதும் வரலாறு, அழகியல், இனவியல் அல்லது மானுடவியல் ரீதியாக முதன்மை […]
மேலும் பார்க்க
இலங்கையில் அகழ்வாய்வு ஒரு அறிவியல் ஒழுக்கமா?
8 நிமிட வாசிப்பு
நேற்றோ இன்றோ அல்ல, ஐரோப்பிய காலனிய ஆட்சியின் கீழிருந்து விடுதலை பெற்ற காலத்திலிருந்தே தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் அகழ்வாய்வு என்பது திட்டவட்டமான ஓர் அரசியற் கருவியாக மாறியுள்ளது. அத்துடன் இரத்த ஆறுகளைத் தேசங்கள்தோறும் திறந்துவிடும், கண்ணுக்குத் தெரியாத படைக்கலமும் ஆகும். தேசத்தை நிர்மாணஞ் செய்யும் அதிகாரப் பொறிமுறைக்கான பெருங்கதையாடல்களைக் கட்டமைப்பதற்கான அறிவியலாடை தரித்த தந்திரோபாயமாகவே அகழ்வாராய்ச்சி நடைமுறைகள் பெருமளவிற் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பின்னணியில், பெரும்பாலும் இலங்கை போன்ற நாடுகளில் […]
மேலும் பார்க்க
வடக்கின் விருட்சங்கள்: தொலையாது காப்போம்! – மரங்களின்றி மனிதனேது?
10 நிமிட வாசிப்பு
சுதேச மரங்கள் மனித வாழ்வியலோடு ஒன்றிப்போனவை. மனித நாகரிகத்தின் சாட்சியாக நிற்பவை என்றெல்லாம் நாம் பார்த்தோம். அவை எதற்கெல்லாம் பயன்படுகின்றன என நாம் சிந்தித்துப் பார்த்திருப்போமா? நாம் அறிந்த பயன்களுக்கப்பால் நாம் அறியாத பயன்களையும் இம்மரங்கள் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது மரங்களை எப்படியெல்லாம் எமது தேவைகளுக்கு நாம் பயன்படுத்தலாம் என்ற சிந்தனை தான் எமக்குள் எழும். ஆயினும் அவற்றையும் தாண்டி இம்மரங்கள் ஆற்றும் தொழிற்பாடுகள் […]
மேலும் பார்க்க
வடக்கின் விருட்சங்கள் : தொலையாது காப்போம்!-வரலாறு சொல்லும் வானுயர்ந்த சோலைகள்
10 நிமிட வாசிப்பு
இலங்கையிலேயே அதிகளவு இயற்கைக்காடுகளைக் கொண்ட பிராந்தியங்களுள் வடமாகாணமும் ஒன்று. வடமாகாணத்திலே வன்னிப்பிராந்தியத்தின் கணிசமான நிலப்பரப்பு இயற்கையான காடுகளைக் கொண்டிருக்கிறது. பல தசாப்தங்கள் நிலைத்து ஓய்ந்து போன யுத்தத்தைக் கூட சளைக்காமல் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்ற வானுயர்ந்த சோலைகள் இன்று என்றுமில்லாதவாறு பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. பெருகி வரும் சனத்தொகையும் காணிகளுக்கான தேவையும் மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் இலகுவாய் வருமானம் பெறும் நோக்கங்களும் எனப் பலதும் பத்துமாய் மனித மையக் காரணிகள் […]
மேலும் பார்க்க
வடக்கின் விருட்சங்கள் : தொலையாது காப்போம்!-மானிட வாழ்வியலில் மரங்களின் முக்கியத்துவம்
10 நிமிட வாசிப்பு
சிந்தனையின்றிய செயற்பாடுகளால் இழந்து போகும் நன்மைகள் “ மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான் ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு..” என்று ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தி பாடியிருக்கிறார். கிடைத்த வளங்களின் உச்சப்பயனைப் பெறும் ஈழத்து விவசாயியை மிக அழகாக […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாணமும் முஸ்லிம்களும் – பிரித்தானியருக்கு முற்பட்ட காலம்
5 நிமிட வாசிப்பு
கி.பி. 8 ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதியில் இந்துப் பெருங்கடற் பகுதியில் முஸ்லிம்களான அராபிய வணிகர்களின் செல்வாக்கு இருந்துள்ளது. இக்காலப் பகுதியில் தென்னிந்தியக் கரையோரங்களை அண்டி இவ்வணிகர்களின் குடியிருப்புக்களும், வணிக நிலைகளும் உருவாகின. அக்காலத்தில் யாழ்ப்பாணத்துத் துறைமுகங்களுடனும் அவர்களுக்கு வணிகத் தொடர்புகள் இருந்திருக்கும் என ஊகிக்கலாம். காலப்போக்கில் யாழ்ப்பாணத்திலும் துறைமுகங்களை அண்டி அவர்களுடைய குடியிருப்புக்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். எனினும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் இருப்புக் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் […]
மேலும் பார்க்க
ஒல்லாந்தர் காலமும் கத்தோலிக்கத் தேவாலயங்களும்
10 நிமிட வாசிப்பு
1619 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் ஆண்ட 39 ஆண்டுகாலம், முன்னர் வழக்கிலிருந்த பிற மதங்களை ஒடுக்கிக் கத்தோலிக்க மதத்துக்குத் தனியுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமானதும் இந்த நிலை முற்றாக மாறியது. கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டது, கத்தோலிக்கக் குருமார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இராச்சியத்திலிருந்த எல்லாக் கத்தோலிக்கத் தேவாலயங்களையும் தமதாக்கிய ஒல்லாந்தர் அவற்றைத் தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத் தேவாலயங்களாக மாற்றினர். 138 ஆண்டுகால […]
மேலும் பார்க்க
ஒல்லாந்தர் காலமும் இந்துக் கோயில்களும்
10 நிமிட வாசிப்பு
போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களும் அழிக்கப்பட்டன. தமது மதமான கத்தோலிக்கம் தவிர்ந்த ஏனைய மதங்களைப் போர்த்துக்கேயர் ஒடுக்கினர். பல இடங்களில் இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் உருவாகின. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் கத்தோலிக்க மதத்தையும் தடை செய்து, தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்கு முயன்றனர். இலங்கையிலிருந்த ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி அரசாங்கம் சீர்திருத்தக் கிறித்த மதத்துக்கான தனியுரிமையைக் […]
மேலும் பார்க்க
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் காலக் கல்வியும், பாடசாலைகளும்
10 நிமிட வாசிப்பு
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு கோயிற்பற்றுப் பிரிவுகளில் காணப்பட்ட கிறித்தவ தேவாலயங்களுடன் இணைந்ததாகப் பாடசாலைகள் இருந்தன. வலிகாமப் பிரிவில் தெல்லிப்பழை, மல்லாகம், மயிலிட்டி, அச்சுவேலி, உடுவில், வட்டுக்கோட்டை, நல்லூர், பண்டத்தரிப்பு, சங்கானை, மானிப்பாய், வண்ணார்பண்ணை, சுண்டிக்குழி, கோப்பாய், புத்தூர் ஆகிய 14 இடங்களிலும், தென்மராட்சியில் நாவற்குழி, சாவகச்சேரி, கைதடி, வரணி, எழுதுமட்டுவாள் ஆகிய 5 இடங்களிலும், வடமராட்சியில் பருத்தித்துறை, உடுப்பிட்டி, கட்டைவேலி ஆகிய 3 இடங்களிலும், பச்சிலைப்பள்ளிப் பிரிவில் […]
மேலும் பார்க்க