வளரும் வடக்கு Archives - Page 2 of 3 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

வளரும் வடக்கு

இயக்கச்சி முதல் நியூயோர்க் வரை: அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் தெங்குப் பொருட்கள்

13 நிமிட வாசிப்பு

தமிழில்: த. சிவதாசன் ராஜ் ஜனனின் தந்தையார் முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் வெற்றிகரமான ஆலை அதிபர். அலுமினியத் தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, தனியார் மருத்துவமனை, செய்திப் பத்திரிகை எனப் பல தொழில்களையும் நடாத்தியவர். அப்போது ஜனனுக்கு 11 வயது மட்டுமே. 1971 இல் நடைபெற்ற ஜே.வி.பி ஆயுதக் கலகம் சிறுவன் ஜனனின் அரும்பும் காலங்களைக் குழப்பிவிட்டது. கலகத்தின் விளைவாக குடும்பம் பிரிய நேரிட்டது. தாயும் சகோதரியும் கொழும்பில் மாட்டிக்கொள்ள தந்தையுடனும் […]

மேலும் பார்க்க

அம்மாச்சி உணவகம் : தொழில் முனைவோருக்கான முன்னுதாரணம் 

13 நிமிட வாசிப்பு

தமிழில் : த. சிவதாசன் 2015 இல் நான் யாழ்ப்பாணத்திற்குக் குடிபெயர்ந்ததிலிருந்து அங்கு போர் விதவைகளால் நடாத்தப்படும் உணவகம் பற்றி பல வதந்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். கொழும்பிலிருந்து வடக்கே வரும் நண்பர்கள் கிளிநொச்சிக்கு அருகே, A9 வீதியில் இது இருப்பதாகச் சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து ஒன்றரை மணித்தியால வாகன ஓட்டத்தில் (சிலர் இதை ஒரு மணித்தியாலத்தில் கடந்துவிடுவார்கள்) கிளிநொச்சிக்கு அருகே இருக்கும் இவ்விடத்தைத் தரிசிக்க எனக்கு ஒரு வருடம் பிடித்தது. பின்னர் தான் […]

மேலும் பார்க்க

யாழ். மூளாய் மருத்துவமனை : பிறப்பு – இறப்பு – மறுபிறப்பு

15 நிமிட வாசிப்பு

காரைநகர் தீவை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் இணைப்புத் தெருவின் வடமேற்கு மூலையில் இருக்கிறது மூளாய் என்னும் ஒரு சிறு கிராமம். பிரபலமான கசூரினா கடற்கரை மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி அமைந்திருக்கும் வட்டுக்கோட்டை ஆகியவற்றை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் முக்கிய கிராமமும் இதுவே. மூளாய் கூட்டுறவு மருத்துவமனை இல்லாவிட்டால் இக்கிராமம் இவ்வளவு பிரபலமாகியிருக்க முடியாது. பிரித்தானிய மலாயாவிலிருந்து தாயகம் திரும்பும் தமிழரது சேமிப்பையும் ஓய்வூதியத்தையும் மூலதனமாகக் கொண்டு 1935 இல் ஆரம்பிக்கப்படது இந்த மருத்துவமனை. […]

மேலும் பார்க்க

வடக்கின் பொருளாதார மறுமலர்ச்சி : அரசு, தனியார், புலம்பெயர்ந்தோரின் போதாமை 

16 நிமிட வாசிப்பு

பல தசாப்தங்களைக் காவுகொண்டு 2009 இல் முடிவுக்கு வந்த இனப்போர் முடிந்து 7 வருடங்களாகியும் வடக்கின் பணியுருவாக்க முயற்சிகள் இன்னும் விவசாயம் மற்றும் பாரம்பரியத் தொழில்களோடு மட்டுமே நின்றுவிடுகின்றன. இது சிலருக்கு  “ஏதோ எம் பங்கிற்கு செய்கிறோம்” என்ற எண்ணத்தையும்; இன்னும் சிலருக்கோ போருக்கு முன்னான இலட்சியக் கற்பனா பூமியைத் தாம் நிறுவிவிடப் போகிறோம் என்ற துடிப்பையும் கொடுக்கலாம். என்ன இருந்தாலும் விவசாயம், கைத்தொழில்கள் மட்டும் போதாது. இலட்சிய பூமி […]

மேலும் பார்க்க

நூலக நிறுவனம் : எதிர்காலத்திற்கான டிஜிட்டல் ஆவணகம்

17 நிமிட வாசிப்பு

தமிழில்: த. சிவதாசன் புதுமையின் பிரகாசத்தால் குருடாக்கப்பட்டு சில வேளைகளில் நாம் பழைமையின் செங்கதிர்களைப் பார்க்கத்தவறிவிடுவதுண்டு. பிரகாசமான எதிர்காலம் கொண்டுவந்து குவிக்கப்போகிறது எனக் கருதி புதையல்களையும் செல்வத்தையும் நம்பி காலக்குழிகளில் மங்கிக்கிடக்கும் எமது ஆபரணங்களை மறந்துவிடுகிறோம். எல்லோரும் இத்தவறுகளை இழைக்கிறார்கள் என நான் கூறவரவில்லை. 1990 களில் பல அமெரிக்க நிறுவனங்கள் நமது வேம்பினதும் மஞ்சளினதும் மகிமைகளை அறிந்து அவற்றினால் கொள்ளை இலாபமீட்டுவதற்காக அவற்றின் மீது காப்புரிமைகளைப் (Patent Rights) […]

மேலும் பார்க்க

வடக்கு மாகாணத்திற்கு மருத்துவப் பணிகளைக் கொண்டுவரும் யாழ்ப்பாணத்தின் மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையம்

14 நிமிட வாசிப்பு

2020 கோவிட் – 19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது தான் எங்கள் மருத்துவப் பணியாளர்களின் அருமை எங்களுக்குத் தெரிந்தது. கோவிட் – 19 எவரையும் விட்டுவைக்கவில்லை என்பதால் இவர்களை நாம் நேசிக்கத் தள்ளப்பட்டோம். அது நோய்த் தொற்றின் காரணமாக அல்ல; மாறாக ஊர் முடக்கங்கள், வியாபார நிலையங்கள் இழுத்து மூடப்படுதல், சமூகச் சந்திப்புகளுக்குத் தடை, வருமான இழப்பு, பொருளாதாரச் சீரழிவு மற்றும் வீடுகளுக்குள் உறவுகளுடன் வைத்துப் பூட்டப்படுவதால் ஏற்படும் மன […]

மேலும் பார்க்க

சிவன் அருள் இல்லம் : உலகம் முழுவதும் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் வட மாகாண நிறுவனம்

15 நிமிட வாசிப்பு

“தொண்டு, வீட்டில் ஆரம்பிக்கிறது” என்பார்கள். வடமாகாணத்தைத் தளமாகக் கொண்ட சிவனருள் இல்லம் என்னும் தொண்டு நிறுவனம் ஒரு குழந்தைகள் அனாதை இல்லமாகத்தான் ஆரம்பமானது. 2004 ஆழிப்பேரலையால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை எடுத்து அது பராமரித்தது. தானமாகக் கிடைத்த பணத்தில் ஆரம்பித்த இவ்வில்லம் இப்போது வருமானமீட்டும் ஒரு பெரிய நிறுவனமாக வட மாகாணமெங்கும் பரந்து நிற்கிறது. அதன் குழந்தைகள் வளர்ந்து முதியவர்களாகும்போது அவர்களுக்கும், வடக்கு-கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட இதர மக்களுக்கும், நிலையான வருமானம் […]

மேலும் பார்க்க

வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்தல் : பொருளாதார முன்னேற்றமும் சமூகப் பொறுப்பும் 

15 நிமிட வாசிப்பு

தமிழில் : த. சிவதாசன் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றின் பிரதான பணிப்பாளர் ஒருவருடன் பேசக் கிடைத்தது. ஓய்வு வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் அந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெரியவரிடம் “போர் முடிந்து பலவருடங்களாயினும் ஏன் அந்நிறுவனம் வடக்கில் முதலீடு செய்யவில்லை” எனக் கேட்டேன். “வடக்கை விட இலகுவாக இலாபமீட்டக்கூடிய இதர இடங்கள் இருக்கின்றன” என அவர் சாவதானமாகக் கூறினார். அதில் எந்தவிதத் தவறுமில்லை. பங்குச்சந்தை முதலீட்டை நம்பியிருக்கும் […]

மேலும் பார்க்க

NurtureLeap : யாழ்ப்பாணத்தின் திறன்வளம் கொண்டோரை வல்லுநர்களாக்கும் நிறுவனம்

17 நிமிட வாசிப்பு

தமிழில் : த. சிவதாசன் கோவிட் – 19 பெருந்தொற்றின் பேரழிவு கொண்டுவந்த பொதுமுடக்கம் சில காரியங்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. முதல் தடவையாக, மேற்கு மாகாணத்துக்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த நகரங்கள் விழித்தெழ ஆரம்பித்தன. கொழும்பில் பணிபுரிந்த பலர் சொந்த ஊர்களுக்குக் குடிபெயர்க்கப்பட்டு அங்கு தமது குடும்பங்களுடன் வீடுகளுக்குள் முடக்கப்படலாயினர். துர்ப்பாக்கியமாகச் சிலர் வேலைகளை இழக்கவேண்டி ஏற்பட்டதும் உண்மை தான். உடலுழைப்பு அவசியமான பணிகளைச் செய்தவர்கள் நகர் முடக்கம் காரணமாகவும், பொதுவான […]

மேலும் பார்க்க

பல்கலைக்கழக – வணிக இணைப்பு : கல்வி முனைப்புகள் மூலம் சந்தைகளை விரிவுபடுத்தல்

17 நிமிட வாசிப்பு

தமிழில் : த. சிவதாசன் தொழில் முனைவோர் தமது எண்ணங்களை வணிகப்படுத்தி பணம் பண்ணுகிறார்கள். அள்ளப்படும் குப்பைகள் பெறுமதிமிக்க கட்டிடப் பொருட்களாகவும் எரிபொருட்களாகவும் மாற்றப்படுகின்றன. மைக்குறோவேவ் உலைகளும், தீக்குச்சிகளும் இன்னோரன்ன தற்செயலான கண்டுபிடிப்புகளும் மிகப்பெரிய தொழிற்கூடங்களை உருவாக்கிவிட்டன. உபத்திரவமெனக் கருதப்பட்ட பசையை யாரோ ‘சுப்பர் குளூ’ (superglue) என விற்கத் தொடங்கிவிட்டார்கள். ஒட்டவில்லை என விலக்கிவைத்த பசையை இன்னொருவர் ‘போஸ்ற் இற்’ (Post-It) குறிப்புக் கட்டுகளாக விற்கிறார். தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்