கந்தையா சண்முகலிங்கம், Author at Ezhuna | எழுநா - Page 11 of 16
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கந்தையா சண்முகலிங்கம்

மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி – பகுதி 3

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : G.B கீரவல்ல இலவசக் கல்வித் திட்டமும் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர்களும் இலங்கையின் இலவசக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவாகத் தோன்றிய கிராமப்புறத்தின் படித்த இளைஞர்களே, மக்கள் விடுதலை முன்னணியினைத் தோற்றுவித்தவர்கள் என்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இத்தொடர்பைச் சுட்டிக் காட்டியவர்கள் கல்வித் துறையில் ஏற்பட்ட இம்மாற்றங்களின் முக்கியத்துவத்தை சமூக வரலாற்று நோக்கு முறையில் விளக்குவதற்குத் தவறியுள்ளனர். இலங்கையில் கல்வி பரவலாக விரிவாக்கம் பெற்றமை […]

மேலும் பார்க்க

மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி – பகுதி 2

18 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : G.B கீரவல்ல கிராமத்துத் தொழிலாளர்களையும் விவசாயக் குடியான்களையும் விட உயர் வருமானத்தைப் பெறும் வர்க்கமான கிராமத்துக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், நகரத் தொழிலாளர் வர்க்கத்தோடு கொண்டுள்ள பிணைப்புகள் கிராம, நகர உறவுகளில் முக்கியத்துவம் பெற்றன. கிராமத்தில் சொத்துக்களை வைத்துக் கொண்டு நகரத்தில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு நிலை மட்டுப்பாடுடையதாக விளங்கியது. இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பகுதியினர் குட்டி முதலாளித்துவ உணர்வு நிலையை உடையவர்களாகக் […]

மேலும் பார்க்க

மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி – பகுதி 1

18 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : G.B கீரவல்ல வித்தியோதயாப் பல்கலைக்கழக வளாகத்தின் பிக்கு மாணவர் விடுதியில் 1971 ஏப்ரல் 2 ஆம் திகதி ‘ஜனதா விமுக்தி பெரமுன’ என்னும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் ‘பொலிட் பீரோ’வின் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் 1971 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பி.ப 11.30 மணிக்கு நாட்டில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்கள் மீதும் ஆயுதப் படைகளின் நிலைகள் மீதும் தாக்குதல் […]

மேலும் பார்க்க

போருக்குப் பின் சிங்கள பௌத்தர்களின் உணர்வு நிலை – நூல் அறிமுகம்

14 நிமிட வாசிப்பு

‘போருக்குப் பின் சிங்கள பௌத்தர்களின் உணர்வு நிலை’ (History After the War Historical Consciousness in the Collective Sinhala Buddhist Psyche in Post war Sri Lanka) என்ற தலைப்பிலான நூலை கலாநிதி. நிர்மால் ரஞ்சித் தேவசிறி வெளியிட்டார். இந் நூலை அவர் எழுத முன்னர், ‘போருக்குப் பின் வரலாறு : நல்லிணக்கத்திற்கு எதிரான சவால்’ எனும் கட்டுரையை ground views (groundviews.org) இணைய சஞ்சிகையில் […]

மேலும் பார்க்க

இந்தியக் குடியரசின் அரசியல் யாப்பு – பகுதி 2

16 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : ஜோர்ஜ் மத்தியு அண்மைக்கால அரசியல் இயங்கியலும் போக்குகளும் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்மையும் பேணுதல் முதன்மையான பணியாக இருந்தது. இந்திய அரசியல் யாப்பு இந்திய ஐக்கியத்திற்கான ஒரு கருவியாக உபயோகிக்கப்பட்டது. இந்தியா முழுமைக்குமான ஒரே சீரான நிர்வாகத்தை செயற்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நிர்வாகம், தேர்தல் மூலம் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நிறுவனங்கள் ஊடாக நடத்தப்படுதல் வேண்டும். இந்நிறுவனங்கள் […]

மேலும் பார்க்க

இந்தியக் குடியரசின் அரசியல் யாப்பு – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: ஜோர்ஜ் மத்தியு சமஷ்டி முறையின் வரலாறும் வளர்ச்சியும் இந்தியா 3.287 மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பளவை உடைய நாடு. இங்கு 1.098 பில்லியன் மக்கள் (2002) வாழ்கிறார்கள். இனத்துவ பன்மைத்துவமுடைய இப் பரந்த தேசத்தில் பல்வேறு இனத்துவக் குழுமங்களும், மொழிகளும், பண்பாடுகளும் காணப்படுகின்றன. இந்தியாவில் 28 மாநில அரசுகளும் 7 ஒன்றியப் பிரதேசங்களும் (Union Territories) உள்ளன (2002). ஒன்றியப் பிரதேசம் என்பதில் தேசியத் தலைநகரான […]

மேலும் பார்க்க

ஜேம்ஸ் மனர் எழுதிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாறு நூல் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன 1956 ஆம் ஆண்டின் தேர்தல் வெற்றி பண்டாரநாயக்கவிற்கு நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியது. தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பண்டாரநாயக்க செய்ய வேண்டிய சட்டப்படி நியாயமான (Legitimate) கடமைகள் பல இருந்தன. இவை அவசியமான கடமைகள் ஆகவும் இருந்தன. அவற்றைச் செய்யாமல் அப் பதவிக்குரிய பொறுப்புகளை அலட்சியமாகப் புறந்தள்ளும் அவரது நடத்தை மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின. நாம் இங்கு ஒவ்வொரு விடயத்தையும் விபரிக்க வேண்டியதில்லை. […]

மேலும் பார்க்க

இந்தியாவின் சமஷ்டி மாதிரி – பகுதி 2

12 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றேக்கா சாக்சன ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் தொடர்பான அசமத்துவம், இந்திய சமஷ்டியின் நான்காவது அசமத்துவம் எனலாம் (உறுப்புரை 370, 371 A, 371 G). இவற்றுள் ஜம்மு காஷ்மீர் ஆகக்கூடிய அசமத்துவம் கொண்ட பகுதியாக இருந்து வந்துள்ளது (அண்மையில் ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது – மொ-ர்). இந்தியாவின் அரசியல் யாப்பின் உறுப்புரை 370 ‘தற்காலிக ஏற்பாடுகள்’ (Temporary Provisions) எனக் […]

மேலும் பார்க்க

ஜேம்ஸ் மனர் எழுதிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாறு நூல் – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன ஜேம்ஸ் மனர் (James Manor) என்னும் பிரித்தானியரான அரசியல், வரலாற்று அறிஞர் ‘The Expedient utopian: Bandaranaike and Ceylon’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் பற்றிய விமர்சனக் கட்டுரையொன்றை காலம் சென்ற அறிஞர் றெஜி சிறிவர்த்தன எழுதினார். அவரது கட்டுரை ‘Thatched Patio’ என்ற ஆங்கில சஞ்சிகையில் 1990 ஜனவரி-பெப்ரவரி இதழில் பிரசுரமானது. அக் கட்டுரையைத் தழுவிய மொழிபெயர்ப்பை இங்கே […]

மேலும் பார்க்க

இந்தியாவின் சமஷ்டி மாதிரி – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : றேக்கா சாக்சன சமஷ்டி, பாராளுமன்ற முறை என்ற இரண்டும் இந்திய அரசியல் முறைமையின் அடிப்படையான கூறுகளாகும். ஒன்றுக்கொன்று முரண்பாடான இத் தத்துவங்களில் பாராளுமன்ற முறை (PARLIAMENTARISM ), பாராளுமன்றத்தின் அதியுயர் அதிகாரத்தை வலியுறுத்துவது. சமஷ்டி (FEDERALISM), அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படுவதை முதன்மைப்படுத்துவது. இவ்வாறாக மத்தியப்படுத்திய பாராளுமன்ற அதிகாரமும் அதிகாரப் பரவலாக்கமும் என்ற இரண்டு கூறுகளும் ஒன்றிணைந்து இருத்தல் இந்தியாவிற்கு அவசியத் தேவையாக இருந்தது. இந்தியாவின் பிரமாண்டமான […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்