இலங்கையில் வரலாற்றுப் பழமை வாய்ந்த பிராந்தியங்களில் வன்னிப்பிராந்தியமும் ஒன்றாகும். பிரித்தானியர் ஆட்சியில் இந்தப்பிராந்தியத்தில் அரச அதிகாரிகளாகக் கடமையாற்றிய லுயிஸ், பாக்கர் போன்ற அறிஞர்கள் தமது நிர்வாக நடவடிக்கைகளின் போது கண்டறிந்த, அழிவடைந்து காணப்பட்ட அரச மாளிகைகள், ஆலயங்கள், வழிபாட்டுச் சின்னங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் கல்வெட்டுக்கள், நாணயங்கள் முதலான வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடங்களைக் கட்டுரைகள், நூல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். அவற்றுள் செட்டிகுளம், கட்டுக்கரைக்குளம், பனங்காமம், அரசபுரம், கனகராயன்குளம், […]