இலங்கை, பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே இருந்து வந்திருக்கின்றது. 1956 தனிச் சிங்களச் சட்டம், இன்னொரு இனத்தின், மொழியின் மீதான வெறுப்பிற்கான மிகச் சிறந்த உதாரணமாகும். அதன் நீட்சியாக 1956, 1958 இல் தமிழர் மீதான படுகொலைகள் நடந்திருக்கின்றன. ஒரு சிறிய தீவு நாட்டின் அனைத்து இனங்களையும், அவர்களின் மொழி, கலாசாரங்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்பது அரச அதிகாரத்தை எடுத்துக் கொண்டவர்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான், பின்னரான […]