வேந்தர் இல்லா வையகம் : இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம் Archives - Page 2 of 2 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

வேந்தர் இல்லா வையகம் : இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்

நாடு நலம் பெற நட்ட விதைகள்

15 நிமிட வாசிப்பு

ஐரோப்பாவில் தேசியவாதம் ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டு தேசியவாதம் எழுச்சி பெற்ற காலம். பல்வேறு பேரரசுகளுக்குள் அடங்கிக் கிடந்த பல்லினச் சமூகங்கள் தனிநாடுகளாகப் பிரிந்து சென்றதன் விளைவே இன்று நாம் காணும் ஐரோப்பிய நாடுகள். இத்தேசியவாதப் போக்கு அண்மைக்காலம் வரை நீடித்தது. ஐரோப்பாவில் எழுந்த தேசியவாத நிகழ்வுகளுள் இரண்டு முக்கியமானவை. இவை இத்தாலியையும் ஜெர்மனியையும் உருவாக்கிய இயக்கங்கள். பல சிறு அரசுகளாகப் பிரிந்து காணப்பட்ட இத்தாலியத் தீபகற்பத்தின் கூறுகள் 1861இல் இணைந்தபோது […]

மேலும் பார்க்க

தேசியத் தரு தழைக்க உதவிய உரம்

12 நிமிட வாசிப்பு

ஆங்கிலக் கல்வியும் அறிஞர் ஆய்வுகளும் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலம் தென் ஆசியாவின் எதிர்கால அரசியல் அமைப்புகளை உருவாக்க உழைத்த சக்திகள் எழுந்த காலம். இவற்றுள் எவை பெருவெற்றி பெற்று மேலோங்கும் என்பது இரண்டாம் உலகப் போரின் பின் நிர்ணயிக்கப்பட்டது. இப்படியான சக்திகளுள் பெரிதும் முக்கியத்துவம் பெறுவது இன – மத அடிப்படையிலான சக்தியாகும். இது ஒரு புறம் இனப்பற்றையும் மறுபுறம் இனவெறுப்பையும் எழுச்சிபெறச் செய்து, பிரித்தானியர் நாட்டைவிட்டுச் சென்றதும் […]

மேலும் பார்க்க

போரும் புதிய போக்குகளும்

12 நிமிட வாசிப்பு

முதலாம் உலகப் போர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகிய அண்டைப் பிரதேசங்களிலும் நடந்த முதலாம் உலகப்போர் (1914 – 1918) யாழ்ப்பாணத்தை எந்தவிதத்திலும் தொடவில்லை என்று கூறமுடியாது. இப்போர் தென் ஆசியாவில் நடக்காவிட்டாலும் தென் ஆசியர் பிரித்தானியப் பேரரசின் படைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். பிரித்தானியர் ஆண்ட இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 160,000 போராளிகள் பிரான்ஸில் ஜெர்மன் படைகளை எதிர்த்துப் போராட அனுப்பப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. போரில் இவர்களுள் 47,000க்கு […]

மேலும் பார்க்க

நூதன உலகின் நுழைவாசலில்

13 நிமிட வாசிப்பு

நவீன உலகை அண்மித்தல் இருபதாம் நூற்றாண்டின் உதயத்தை உலக வரலாற்றில் ஒரு புது யுகம் தொடங்குவதைக் குறிக்கும் நிகழ்வாகக் கொள்ளலாம். மேற்குலகிலும் பிற இடங்களிலும் 19 ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி எவ்வளவுதான் மாற்றங்களைக் கொண்டுவந்தபோதிலும் அந்த நூற்றாண்டு 1900 இல் முடிவடைந்தபோது, இன்று நாம் நவீன வாழ்வின் அத்தியாவசியப் பொருட்களாகக் கருதும் பல முன்னேற்றமான உபகரணங்கள் புழக்கத்தில் இருக்கவில்லை. இவை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து துரிதமாகப் பெருந்தொகையான […]

மேலும் பார்க்க

பேரரசும் பெண் விடுதலையும்

7 நிமிட வாசிப்பு

வட்டுக்கோட்டையில் குடிபுகுதல் பெருமந்தத்தின் விளைவாகத் தன் வேலையை இழந்து, இளவயதிலேயே ஓய்வூதியம் பெற்ற என் தகப்பனார் பொருளாதாரப் பிரச்சினை நீங்கும்வரை மலாயாவில் தங்கி இராது, குடும்பத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார். வட்டுக்கோட்டையில் அம்மாவுக்குக் கொடுக்கப்பட்ட சீதன வளவில் இரண்டு அறைகளையுடைய கல்வீடு ஒன்றைக் கட்டி அதில் என் குடும்பத்தினர் குடிபுகுந்தனர். இது எங்கள் ஊரில் கட்டப்பட்ட இரண்டாவது கல்வீடு. மலாயாவில் இருந்து திரும்பி வந்தவர்கள் எவ்வாறு யாழ்ப்பாணத்தின் பல்வேறு ஊர்களில் வாழ்க்கைத் […]

மேலும் பார்க்க

உச்சநிலைப் பேரரசுகளை உலுப்பிய உலகப் போர்

12 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்துக்கும் மலாயா – சிங்கப்பூருக்கும் இடையில் வளர்ந்துவந்த நெருங்கிய தொடர்புகள் 1930களில் இடம்பெற்ற இரு பெரும் நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டன. ஒன்று, 1933 இல் தொடங்கிய பெருமந்தம் (Great Depression); மற்றது 1939இல் தொடங்கிய இரண்டாவது உலகப் போர். மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தவரின் எண்ணிக்கை படிப்படியாகக் கூடி, 1930களில் உச்சத்தை அடைந்தது. புலம்பெயர்வு தொடர்ந்து வளர முடியாத வகையில் பெருமந்தமும் உலகப் போரும் தடைபோட்டன. தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தவர் சிலர் ஆங்கிலேய நிர்வாகிகளால் […]

மேலும் பார்க்க

மலாயா தந்த மாற்றங்கள்

13 நிமிட வாசிப்பு

என் பெற்றோருடைய மூன்றாவது பிள்ளையாக நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். அவர்களுடைய முதல் இரு பிள்ளைகளும் கோலாலம்பூர் நகரில் பிறந்தவர்கள். என் பெற்றோருடைய திருமணமே கோலாலம்பூரிலேதான் நடைபெற்றது. நான் பிறந்தபோது என் தாயாருடைய சகோதரர்கள் ஐவர் மலாயாவில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு மூத்தவராக இருந்தவர் மலாயாவில் வேலை செய்து ஓய்வு பெற்றுத் திரும்பிவந்திருந்தார். மலாயா நாட்டுடனான இத்தகைய தொடர்பு யாழ்ப்பாணத்தில் பரவலாகப் பல இடங்களில் இருந்தது. இருபதாம் நூற்றாண்டில், இலங்கை சுதந்திரம் அடையுமுன், […]

மேலும் பார்க்க

படுவானை நோக்கி

12 நிமிட வாசிப்பு

பொ.ஆ. 1937 இனை உலக நிலையைப் பெரும் அளவில் குலுக்கும் நிகழ்வு எதுவும் நடைபெற்ற ஆண்டாகக் கணிப்பதற்கு இல்லை. உலகம் காணாத மிகப்பரந்த வல்லரசாகிய பிரித்தானியப் பேரரசும், அதனுடன் இரு நூற்றாண்டுகளுக்கு மேலாகப் போட்டியிட்ட ஐரோப்பிய வல்லரசுகளாகிய பிரெஞ்சுப் பேரரசும், ஒல்லாந்துப் பேரரசும் ஒற்றுமையாக ஐரோப்பிய ஏகாதிபத்திய வலைக்குள் தாம் கைப்பற்றிய ஆசிய, ஆபிரிக்க, ஓசியானிய நிலங்களை அடக்கி வைத்திருந்தன. உலகில் ‘பிரித்தானியாவின் அமைதிநிலை’ (Pax Britannica) மலர்ந்திருப்பதாகத் தோன்றியது. […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்