மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக (கி.மு 7 தொடக்கம் கி.மு 3ஆம் நூற்றாண்டுகள் வரை) குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய திணைகளின் இயற்கை விளைபொருட்களது வணிகமும் – வணிக எழுச்சியுடன் கைகோர்த்தவாறு கைத்தொழில் விருத்தியும் ஏற்படுத்தித் தந்த வாழ்வியல் செழிப்பு தமிழகத்தில் வீறுமிக்க பண்பாட்டு எழுச்சி ஏற்பட வழிகோலியது. தமது ஆள்புலத்தை விரிவாக்கும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை எவராலும் மேற்கொள்ள இயலாத வாழ்நிலை காரணமாக திணைகள் ஒவ்வொன்றுக்கும் இடையே சமத்துவமான பரிமாற்றங்கள் நிலவின; […]