இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில், காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், கருப்பின இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தப்பியோடவிடாமல் தடுக்கும்பொருட்டு நிலத்தில் சரித்து வைத்துக் கழுத்தை முட்டிக்காலால் நசுக்கியவாறு இருந்ததால் கைதுசெய்யப்பட்ட கருப்பின இளைஞர் இறக்க நேரிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் வழமையானவை; அவற்றுக்கு எதிராக கருப்பின மக்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் அமைதி வழிப்போராட்டங்களை நடாத்தி வந்தவாறுள்ளனர். இந்தச் சம்பவம் தொலைபேசிப் பதிவாகிச் சமூக வலைத்தளங்களில் பரவலானதைத் தொடர்ந்து அமெரிக்காவெங்கும் […]