தொடக்கக் குறிப்புகள் ஈழத்தமிழரின் புலப்பெயர்வுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. அது வெறுமனே போருடனோ, அல்லது இலங்கையின் இன முரண்பாட்டுடனோ மட்டும் தொடர்புடையதல்ல. பிரித்தானியக் கொலனித்துவ காலத்திலேயே இந்தப் புலப்பெயர்வு தொடங்கியது. முதலில் பிரித்தானியக் கொலனிகளில் பிரித்தானியரின் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக, ஆசிரியர்களாக, பொறியியலாளர்களாக, நிர்வாகிகளாக எனப் பலதரப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஈழத்தமிழர்கள் பிரித்தானியக் கொலனியெங்கும் புலம்பெயர்ந்தார்கள். இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர், பல நாடுகளில் பிரித்தானியக் கொலனியாதிக்கம் முடிவுக்கு வரத்தொடங்கியது. […]