Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

சிவன் அருள் இல்லம் : உலகம் முழுவதும் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் வட மாகாண நிறுவனம்

15 நிமிட வாசிப்பு

“தொண்டு, வீட்டில் ஆரம்பிக்கிறது” என்பார்கள். வடமாகாணத்தைத் தளமாகக் கொண்ட சிவனருள் இல்லம் என்னும் தொண்டு நிறுவனம் ஒரு குழந்தைகள் அனாதை இல்லமாகத்தான் ஆரம்பமானது. 2004 ஆழிப்பேரலையால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை எடுத்து அது பராமரித்தது. தானமாகக் கிடைத்த பணத்தில் ஆரம்பித்த இவ்வில்லம் இப்போது வருமானமீட்டும் ஒரு பெரிய நிறுவனமாக வட மாகாணமெங்கும் பரந்து நிற்கிறது. அதன் குழந்தைகள் வளர்ந்து முதியவர்களாகும்போது அவர்களுக்கும், வடக்கு-கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட இதர மக்களுக்கும், நிலையான வருமானம் […]

மேலும் பார்க்க

பிரசவச் செவிலி கொத்தியாத்தை

18 நிமிட வாசிப்பு

அறிமுகம் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதன் தன் வாழ்வில் நடைபெற்ற விரும்பத்தக்க, விரும்பத்தகாத அல்லது நன்மை, தீமையின் பாற்பட்ட அனுபவத்தின் வழி தன்னால் கட்டியமைக்க முடியாத விடயங்களை இயல்பிறந்த ஆற்றல்களாகக் கருதத் தலைப்பட்டான். ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்கும் காரணமாக தெய்வங்கள் உருப்பெறத் தொடங்கின. நன்மை செய்யும் தெய்வங்கள், தீமை செய்யும் தெய்வங்கள் என அவை உரைக்கப்பட்டன. நிலத்தெய்வம், ஐம்பூதங்களின் தெய்வம், மரத்தெய்வம், உருவம் உள்ள தெய்வம், உருவம் அற்ற தெய்வம், […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் மேற்பரப்பு நீர் வளங்கள்

10 நிமிட வாசிப்பு

நீரை வளிமண்டல நீர், சமுத்திர நீர், தரை மேற்பரப்பு நீர் மற்றும் தரைக்கீழ் நீர் என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். நன்னீரில் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் என்று மேலும் சில வகைப்பாடுகள் உள்ளன (Praveen et al., 2020). மேற்பரப்பு நீரானது மேற்பரப்பில் உள்ள அனைத்து வகையான நீரையும் குறிக்கின்றது. பனி மற்றும் பனிப்பாறைகள் போன்ற திடமான நீராதாரங்கள், சதுப்பு நிலங்கள், நீர்த்தேக்கங்கள், ஆறுகள், நீரோடைகள், ஏரிகள், […]

மேலும் பார்க்க

இலங்கையில் தமிழ் அரச மரபின் தோற்றத்தை அடையாளப்படுத்திக் காட்டும் பிராமிச் சாசனங்கள்

28 நிமிட வாசிப்பு

அறிமுகம் தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. இதற்கு, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கைக்கு அறிமுகமாகிய போது அம்மதத்தையும் அம்மதம் சார்ந்த அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்பவற்றின் வரலாற்றையும் வாய்மொழிக் கதையாகப் பேணும் மரபும்  தோற்றம் பெற்றதே காரணமாகும். அவ்வாறு பேணப்பட்ட வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே  தீபவம்சம், மகாவம்சம, சூளவம்சம் முதலான பாளி வரலாற்று இலக்கியங்கள் […]

மேலும் பார்க்க

ரோஹண விஜயவீரவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களும் – பகுதி 2

24 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம அரச அதிகாரத்தை கைப்பற்றுதல் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுதல் (CAPTURE OF STATE POWER) பற்றிய மார்க்சியக் கோட்பாடுகள் சீன-சோவியத் வாதங்களின் போது மேற்கிளம்பின. சீனா, கியுபா, வியட்நாம் ஆகிய நாடுகளின் அனுபவங்கள் மரபுவழி மார்க்சிஸ்டுகள் முன்வைத்த மாதிரியில் இருந்து வேறுபட்டதாக இருந்தன. சீனாவின் ஷங்காய் நகரின் தொழிலாளர் வர்க்கத்தின் கிளர்ச்சி கொடூரமாக அடக்கப்பட்டது. அதன் பின்னர் ‘மா ஓ சேதுங்’ யெனான் […]

மேலும் பார்க்க

கோ. நடேசய்யரின் வழியில் சி.வி வேலுப்பிள்ளை எனும் இலக்கிய – அரசியல் ஆளுமை

15 நிமிட வாசிப்பு

கோ. நடேசய்யர் தமிழ்நாடு விழுப்புரத்தைப் பிறப்பிடமாக கொண்டு (அப்போதைய தென்னாற்காடு மாவட்டம்), வளவனூர் கோதண்டராமர் ஐய்யருக்கும் பகீரதம்மாளுக்கும் மகனாக 1887.01.14 இல் பிறந்தார். அரசுப் பள்ளியில் ஆங்கில மொழி கல்வி பயின்றார். வங்கப் பிரிவினை காரணமாகவும், தேசிய சிந்தனைகள் மற்றும் சுதேசிய சிந்தனைகள் காரணமாகவும் ஆங்கிலக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சென்னை – அரசுப் பயிற்சி நிறுவனத்தில் கைத்தொழில் பயிற்சி பெற்றார். சில காலம் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு, பின் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – 1

17 நிமிட வாசிப்பு

இந்தத் தொடரின் சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணப் பட்டினத்தின் நான்கு பெரும்பிரிவுகளையும் தீவுகள் சிலவற்றையும் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். இனி யாழ்ப்பாணப் பட்டினத்தின் வலிகாமப் பிரிவைத் தனியாகக் காட்டும் நிலப்படம் (படம்-1) தரும் விவரங்களை ஆராயலாம். நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பின் ஒரு பகுதியான இந்த நிலப்படம் ‘4. VELH 328.14’ என்னும் இலக்கத்தைக் கொண்டது. “வலிகாமப் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 13

21 நிமிட வாசிப்பு

ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் தாபகர் வரலாறு ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் (13.6.1905 – 04.11.1989), 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சியின்போது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் மானிப்பாயில் செல்வாக்குடன் இருந்த ஒரு கிறிஸ்தவ தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் பண்டத்தரிப்பையும், தாயார் மானிப்பாயையும் சேர்ந்தவர்கள். ருவைற் (Dwight), தப்பான் (Tappan), கார்டினர் (Gardiner) குடும்பத்தினர் இவரது உறவினர்களாவர். தனது ஒன்பதாவது வயதில் தாயை இழந்த ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள், […]

மேலும் பார்க்க

மண்முனையில் பற்சின்னம் கொணர்ந்தவளும் மல்வத்தையில் புத்தர் சிலை அமைத்தவனும்

15 நிமிட வாசிப்பு

மகாசேனனுக்குப் பின்னர் (276 – 301) அவன் மகன் மேகவண்ணன் அனுரை அரியணையில் அமர்ந்தான் (301 – 328). அவன் காலத்தில் கலிங்க நாட்டுப் பிராமணப் பெண்ணொருத்தி புத்தரின் திருப்பற்சின்னத்தை அனுரைக்குக் கொணர்ந்ததாகவும் அது மேகவண்ணன் தேவானாம்பிரிய திசையனால் அமைக்கப்பட்ட “தருமச்சக்கரம்” எனும் கட்டடத்தில் வைக்கப்பட்டதாகவும், அன்று முதல் அது “தலதா மாளிகை” என்று அழைக்கப்பட்டதாகவும்  மகாவம்சம் சொல்கின்றது (மவ. 37:90-95). ஆனால் இராசாவழி நூல் சொல்வதன்படி, அந்தப் பெண்ணின் […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 07

11 நிமிட வாசிப்பு

கிழக்குப் பிராந்தியத்தில் தமிழரும் சோனகரும் : ஒரு முக்கியமான சோதனை இன்று, தமிழ் அரசியல் தலைமையின் புறக்கணிப்பு மற்றும் அவமரியாதைச் செயல்கள் காரணமாகவும், தங்களின் அரசியல் தலைவர்களின் வழிகாட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், இலங்கைச் சோனகர்கள் தங்களை ஒரு தனித்துவமான இனம் மற்றும் மதக்குழுவினர் என்ற தெளிவான பிம்பத்தைப் பெற்றுள்ளனர். 1980 களின் முற்பகுதியில் ஈழப் போர் வெடித்ததில் இருந்து, இனவாத நலன்களைப் பிரிதிநிதித்துவப்படுத்திய சிங்கள பெரும்பான்மைக் கட்சிகள், தமிழ் பேசும் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்