வட்டுக்கோட்டையில் குடிபுகுதல் பெருமந்தத்தின் விளைவாகத் தன் வேலையை இழந்து, இளவயதிலேயே ஓய்வூதியம் பெற்ற என் தகப்பனார் பொருளாதாரப் பிரச்சினை நீங்கும்வரை மலாயாவில் தங்கி இராது, குடும்பத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார். வட்டுக்கோட்டையில் அம்மாவுக்குக் கொடுக்கப்பட்ட சீதன வளவில் இரண்டு அறைகளையுடைய கல்வீடு ஒன்றைக் கட்டி அதில் என் குடும்பத்தினர் குடிபுகுந்தனர். இது எங்கள் ஊரில் கட்டப்பட்ட இரண்டாவது கல்வீடு. மலாயாவில் இருந்து திரும்பி வந்தவர்கள் எவ்வாறு யாழ்ப்பாணத்தின் பல்வேறு ஊர்களில் வாழ்க்கைத் […]
ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன இத்தமிழ்க்கட்டுரை குமாரி ஜயவர்த்தன அவர்களின் ‘Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூலின் 19 ஆவது அத்தியாயமாக அமையும் கட்டுரையின் தமிழாக்கமாகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் சட்டசபைப் பிரதிநிதித்துவம் இன அடிப்படையிலான நியமனமுறைப் பிரதிநிதித்துவமாக (Communal Representation) இருந்தது. 1911 ஆம் ஆண்டில் தேர்தல் மூலம் சட்ட சபைக்கு ஓர் உறுப்பினர் […]
லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் சங்கானைக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம். பண்டத்தரிப்புக் கோவிற்பற்றில் பண்டத்தரிப்பு, சில்லாலை, மாதகல், பெரியவிளான், சிறுவிளான், மாகியப்பிட்டி ஆகிய ஆறு துணைப் பிரிவுகள் இருப்பதை நிலப்படத்தில் உள்ளடங்கியுள்ள பட்டியல் தெளிவாகக் காட்டுகிறது. அத்துடன், நிலப்படம் இந்த ஆறு பிரிவுகளையும் எல்லை குறித்தும் […]
ஆங்கில மூலம்: அசங்க வெலிக்கல இலங்கை மக்கள் ஜனாதிபதிமுறை தொடர்ந்திருப்பதை விரும்புகிறார்களா? 1978 அரசியல் யாப்புக் கொண்டுவரப்பட்டு 42 ஆண்டுகள் கடந்தபின் இன்று (2020இல்) ஜனாதிபதிமுறை தொடர்ந்து இருந்துவிட்டுப் போகட்டும், அதனைத் திருத்த வேண்டாம் என்ற அபிப்பிராயம் உடையவர்கள் பலர் இருப்பது உண்மையே. ஜனாதிபதிமுறைக்குப் பரவலான ஆதரவு உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆயினும் ஜனாதிபதிமுறைக்கு எதிரான மூன்று வாதங்கள் பரிசீலனைக்கு உரியனவாகும். 1978இல் ஜனாதிபதிமுறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட […]
குருநாகல் நகரில் இருந்து தம்புள்ளைக்குச் செல்லும் வீதியில் இப்பாகமுவ சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து வடக்குப் பக்கமாக புல்னாவைக்குச் செல்லும் வீதியில் சுமார் 10 கி.மீ சென்றதும் பாதையின் இடது பக்கம் அதாவது மேற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மலைத்தொடரைக் காணலாம். இதுவே தொழுகந்த எனும் மலையாகும். இம்மலையின் கிழக்குப்பக்க அடிவாரத்தில் ஹிபவுவ எனும் காட்டுப்பகுதி அமைந்துள்ளது. மலைப்பறைகள் நிறைந்த இக்காட்டுப்பகுதி நாகலேன என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஓர் இயற்கையான […]
இன்று உருவாகியுள்ள புதிய உலக ஒழுங்கில் இந்தியா, சீனா, இலங்கை என்பன இணைந்து இயங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது எனும் குரல் ஏற்கனவே வெளிவந்துள்ளது. இத்தகைய புதிய செல்நெறி துலக்கமாகத் தெரிகிறதா எனும் கேள்வி பலரிடமும் தோன்ற இடமுள்ளது. ஏற்கனவே நிலவி வந்த ஒற்றை மையமான ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கம் தளம்பல் நிலையை அடைந்து, பழைய நியமங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் மாறுநிலைக் காலம் என்பதைக் கடந்து, உறுதியான புதிய உலக ஒழுங்கு […]
ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட சிவில் சமூகம் (Civil Society) என்னும் அரசியல் விஞ்ஞானக் கலைச்சொல் இன்று சாதாரண மக்கள் மத்தியிலும் அறிமுகமாகியுள்ள சொல்லாக உள்ளது. ஆனால் இச்சொல் பற்றிய கோட்பாட்டு விளக்கங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் தமிழில் போதியளவு இல்லை. ‘சிவில் சமூகம்’, ‘சிவில் சமூக அமைப்புகள்’, ‘ஜனநாயக சமூகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் வகிபாகம்’ என்பனவற்றை விளக்கும் முறையில் ‘சிவில் சமூகம்’ (Civil Society) என்னும் தலைப்பில் […]
தொடக்கக் குறிப்புகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் 2024 டிசம்பரில் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாயகத்திற்கு அனுப்பியுள்ளனர். இது புதிய சாதனையாகும். இதற்கு முந்தைய பதிவு செய்யப்பட்ட அதிகபட்சமான தொகை 572.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது ஒரு மாதத்தில் இலங்கைக்கு தொழிலாளர்களினால் அனுப்பப்பட்ட அதிகபட்ச பணமாகும். அதேபோல் கடந்தாண்டு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். இது 2023ஆம் ஆண்டை விட 11% […]
உப்போடு புளியோடு முப்பத்து இரண்டு திருமணமாகி அடுத்த நாள் மணமகன் சந்தைக்குச் சென்று சமையலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வீட்டுக்கு வாங்கி வருவார். இதனை உப்போடு புளியோடு முப்பத்திரெண்டும் வாங்கி வருதல் என்பார்கள். உப்பு, புளி, ஏலம், கறுவா, வாசனைத்திரவியங்கள், மீன், இறைச்சி, மாசி, கருவாடு, மரக்கறிகள், அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு உள்ளிட்ட அத்தனை பொருட்களும் இதில் அடங்கியிருக்கும். இது மணமகனின் கௌரவத்தை வெளிப்படுத்துவதாக […]
பொதுவசதிகள் துறையின் கீழ் உள்ளடங்கும் ஒரு பிரதான வசதிச் சேவையாக மின்சாரம் மற்றும் எரிபொருள் வழங்கல் என்பன இருந்து வருகின்றன. நாட்டின் அனைத்துப் பிரதான பொருளாதார உற்பத்தி மூலங்களையும் இயக்கும் சக்தி வளங்களாக மின்சாரம் மற்றும் எரிபொருள் வளங்கள் இருந்து வருகின்றன. நீர் மின்வலுவும் எரிபொருள் வலுவும் இணைந்து மின்சாரம் விநியோகிக்கப்படுவதுடன் மாற்றுச்சக்தி வளங்களான காற்றாலைகள் மற்றும் சூரியப்படல்கள் மூலமும் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டு வருகிறது. மின்சார வளங்களில் நீர்வலு மூலமான […]