பயங்கரவாதத் தடைச் சட்டமும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டமும்
29 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: சாலிய எதிரிசிங்க ஒரு முற்குறிப்பு: சென்ற இதழில் வந்த இந்தத் தொடர் தொடர்பான அறிமுகக் குறிப்பில் “இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தால் பயன்படுத்தக் கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது.” என்று குறிப்பிட்டிருந்தோம். இப்போது அந்தச் சட்டத்தை இன்றைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கமும் […]
மேலும் பார்க்க
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வி: ஆராய்ச்சியும், அறிவு உற்பத்தியும், நூல் வெளியீடும் – பகுதி 1
19 நிமிட வாசிப்பு
ஆங்கில மூலம்: ஏ.எம். நவரட்ண பண்டார, ஜயதேவ உயன்கொட சமூக விஞ்ஞானங்களில் ஒன்றான ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற கல்வித்துறை 1921 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் 80 ஆண்டுகளுக்கு மேலாக, பல்கலைக்கழக நிலையில் ஒரு கற்கைத் துறையாக வளர்ச்சியுற்ற வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக்கூறும் ‘இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞான கல்வியின் வரலாறு’ என்ற தலைப்பிலான கட்டுரை ‘எழுநா’ செப்டெம்பர் இதழில் பிரசுரிக்கப்பட்டது. அக்கட்டுரை ஏ.எம். நவரட்ண பண்டார, […]
மேலும் பார்க்க
இலங்கை மலையகத் தமிழர்களின் அடையாளப் பிரச்சினைகளும் அரசியல் அடையாளத்துக்கான போராட்டங்களும்
23 நிமிட வாசிப்பு
இலங்கையில் இன்று ‘மலையகத் தமிழர்கள்’ என அடையாளப்படுத்தப்படுகின்ற மக்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் தெற்காசியா முழுவதும் பரவியிருந்த மேலைத்தேயக் காலனித்துவத்தின் விளைவாகத் தோன்றியவர்கள் ஆவர். குறிப்பாக, பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் தவிர்க்க முடியாத ஒரு விளைவாக மலையகத்தில் குடியேற்றப்பட்டவர்கள். இம்மக்கள் தென்னிந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். வரலாற்றுத் தகவல்களின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து சுமார் 35% பேரும், சேலம் மாவட்டத்திலிருந்து 18% பேரும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 10% பேரும், மதுரையிலிருந்து […]
மேலும் பார்க்க
நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் மேம்பாடும் முகாமைத்துவமும்: யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னிப் பெருநிலப்பரப்பு, கிழக்குப் பிராந்தியம் – பகுதி 2
22 நிமிட வாசிப்பு
4.5.4 யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு பாதுகாப்பான நீரை வழங்குவதற்கான நீண்டகால நிலையான வழிகள் யாழ்ப்பாணத்திற்கு பாதுகாப்பான நீரை வழங்குவதற்கான நீண்டகால நிலையான ஒரே தீர்வு, யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வெளியே, ஆனால் வடக்கு மாகாணத்திற்குள் இருக்கும் ஆறுகள், ஏரிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், குளங்கள் போன்ற நிலப்பரப்பு நீர் மூலங்களில் இருந்து நீரைக் கொண்டு வருவதே என்பது கீழே உள்ள அட்டவணை 4.1 மூலம் எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டின் […]
மேலும் பார்க்க
வட இலங்கைப் பெருநிலத்தில் ஆதிமனிதக் குடியேற்றங்கள்
33 நிமிட வாசிப்பு
ஹோமோ இரக்டஸ் எனப்படும் ஆதி மனிதன் (பச்சை) ஆபிரிக்காவிலிருந்து ஆசியா வரை பெயர்ந்ததையும், நியண்டதல் எனப்படும் ஆதி ஐரோப்பியரின் (மஞ்சள்) பரவலையும், ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதனின் (சிவப்பு) அகில உலக இடப்பெயர்வையும் காட்டும் படம். ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆதி மனித இனங்கள் வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் வன்னிப் பகுதி முக்கியமானதொரு இடமாகும். காலவரிசை (Chronology) (இ.மு – இற்றைக்கு முற்பட்ட ஆண்டுகள்) ஒரு குறிப்பு: […]
மேலும் பார்க்க
இலங்கையை ஆக்கிரமித்த இந்தியாவும் உலகப் பேரரசுகளும்
29 நிமிட வாசிப்பு
உலகளாவிய அர்த்தத்தில் எங்கு பேரரசுகள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவை ஓர் உயிரியைப் போல தாம் வாழும் அண்டைய பிரதேசத்துக்குள் தமது கால்களை அகட்டி நகர்ந்து பரவும். அது இந்தியப் பேரரசுக்கும் விதிவிலக்கானது அல்ல. கி.மு நான்காம் நூற்றாண்டில் முதலாவதாக இந்தியாவில் எழுந்த மௌரியப் பேரரசு அண்டை நாடுகளை நோக்கிப் பரந்து விரிவடையத் தொடங்கியது. மௌரியப் பேரரசு அசோகச் சக்கரவர்த்தியின் தலைமையில் பேரரச தத்துவமாய் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பௌத்த […]
மேலும் பார்க்க
1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 2
31 நிமிட வாசிப்பு
செல்வநாயகம் பதவி துறப்பும் இடைத்தேர்தலும் புதிய அரசியல் திட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபிப்பதற்காக செல்வநாயகம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் (1973 இல்) துறந்தார். அரசாங்கத்திடம் தனது கொள்கையை முன்வைத்துப் போட்டியிடும்படி அழைப்பு விடுத்தார். அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி இடைத்தேர்தலைப் பிற்போட்டது. காசி ஆனந்தன் அரசுக்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து தனது மொழிபெயர்ப்பாளர் பதவியை இராஜினாமாச் செய்தார். இதனால் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் […]
மேலும் பார்க்க
மொழிசார் தேசியவாதத்தின் ஊற்றுகள்
18 நிமிட வாசிப்பு
அநகாரிக தர்மபால பௌத்த மக்களைத் தட்டி எழுப்பி, முன் நோக்கி வழிநடத்திச் செல்ல, பிற பண்பாட்டுப் புலங்களிலும் காலனியாட்சிக்குப் பணிந்து நடந்த சிங்கள மக்களிடையே விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதற்கு வேறு தலைவர்கள் செயற்பட்டனர். மொழியின் புது வகிபாகம் அந்நியர் ஆட்சிக்குள் அகப்பட்டிருந்த ஆசியச் சமூகங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தத்தம் பண்பாட்டு அடையாளத்தை (Cultural Identity) பேணுவதற்குச் செயற்பட்டபோது, அந்த அடையாளத்தின் ஒரு முக்கிய சின்னமாக (Marker) தம் மொழியைக் கருதினர். […]
மேலும் பார்க்க
பல்துறை ஆளுமையாக விளங்கிய கவிஞர் கா.சி. ரெங்கநாதன் எனும் வீதிப்பாடலாசிரியர்
37 நிமிட வாசிப்பு
மலையக வீதிப்பாடல்களைத் தந்த கலைஞர்கள் வரிசையில், கண்டி உக்குவளைத் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றிய காசி ரெங்கநாதன் அவர்களுக்குத் தனித்துவமான இடமுண்டு. இவர் பாடலாசிரியர், பாடகர், நாடக இயக்குநர், நாடக நடிகர் எனப் பல்துறை ஆளுமையுடன் கலைத்துறையில் முத்திரை பதித்துள்ளார். குறிப்பாக, நாடற்றவர்களாக்கப்பட்டமை தொடர்பில் உருக்கமான பல பாடல்களைத் தந்துள்ளார். மலையக வீதிப்பாடலாசிரியர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்தவராகவும் அறியப்படுகின்றார். அவற்றில் பெரும்பாலானவை இன்னமும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற தகவலும் உள்ளது. […]
மேலும் பார்க்க
ஆன்மிகமும் குணப்படுத்தலும்: இயலாமையின் இருப்பியல் – பகுதி 2
45 நிமிட வாசிப்பு
புலம்பெயர்ந்தோர் ஆதரவு: அற்புதங்களின் அரசியல் பொருளாதாரம் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், புலம்பெயர்ந்த தமிழர்கள் பின்தங்கிய சமூகங்களுக்கு நன்மை பயக்கும் தார்மீகத் திசைகாட்டியாக உருவெடுத்தனர். டொராண்டோவிலிருந்து இலண்டன் வரை, சூரிச் முதல் ஒஸ்லோ வரை, குடும்பங்கள், பாடசாலைகளுக்கு மட்டுமல்ல, கோயில்களுக்கும் ஆன்மிக இயக்கங்களுக்கும் பணம் பாயத் தொடங்கியது. ஒரு காலத்தில் உள்ளூர், கிராம அடிப்படையிலான மதமாக இருந்தவை பல்கிப்பெருகி நாடு கடந்ததாக மாறின. இது புலம்பெயர்ந்த […]
மேலும் பார்க்க