Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

காலாவதியாகும் கல்வி : சாண் ஏறி முழஞ் சறுக்குதல்

28 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் சமகால இலங்கையின் கல்வியானது ஒரு நெருக்கடியான புள்ளியில் நிற்கிறது. பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையான எமது கல்வியும், கல்விமுறையும், அதுசார் நிறுவனங்களும் பொருத்தமானவையா, பயனுள்ளவையா, வினைத்திறனானவையா போன்ற கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். குறிப்பாக, எமது பல்கலைக்கழகக் கல்வி மிகுந்த சவாலுக்குள்ளாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடியும் இலங்கையின் கல்வித்துறையை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முழுமையாகக் கல்வி தடைப்பட்டுள்ளது. இது […]

மேலும் பார்க்க

BBK: உலகிற்குக் கணக்கெழுதும் யாழ்ப்பாணத்துக் கணக்காளர்கள்

14 நிமிட வாசிப்பு

BBK Partnership Sri Lanka பற்றி நான் முதன் முதலில் அறிந்தது 2015 இல். 2018 இல் இதன் இணை நிறுவுநரான ஆனந்தன் ஆர்ணோல்டுடன் நான் பேசியிருந்தாலும் மார்ச் 2020 இல் தான் அவரை நேரடியாகச் சந்தித்தேன். மானிப்பாயிலுள்ள மருத்துவ மனையொன்றில், மிகவும் எளிமையா உடைகளுடனிருந்த அவரைச் சந்தித்தபோது, லண்டன் நகரிலுள்ள BBK பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (BBK Partnership of Chartered Accountants) ஒரு பங்காளியாக அவரைப் பார்க்க […]

மேலும் பார்க்க

‘வன்னி’ (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict): கிராபிக் நாவலை முன்வைத்து

10 நிமிட வாசிப்பு
April 26, 2025 | இளங்கோ

‘வன்னி’ (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict) என்கின்ற கிராபிக் நாவல் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்தைப் பற்றிப் பேசுகின்றது. 2004 இல், செம்பியன்பற்றில் சுனாமியால் பாதிக்கப்படும் ஒரு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த அன்ரனிதான் இதில் முக்கிய பாத்திரம். அவரின் குடும்பத்தினரும், அயலவரான சுஜி/நளாயினி குடும்பத்தினரும் செம்பியன்பற்றில் இருந்து பரந்தன், கிளிநொச்சி, விசுவமடு, No Fire Zone 1, No Fire Zone 2 […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொதுவசதிச் சேவைகளில் குடிநீர் வழங்கல் சேவை

14 நிமிட வாசிப்பு

தெற்காசியாவில், சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகள், பொது இடங்கள், பெரிய தனிமைப்படுத்தப்பட்ட அலுவலக வளாகங்கள், பாதுகாப்பு நிறுவனங்களான காவல் நிலையங்கள், படை முகாம்கள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களிலும், நகர்ப்புறக் குடியிருப்புப் பகுதிகளிலும் முறையான நீர் வழங்கல் சேவையானது அவசியமும் அவசரமுமான விடயமாக உள்ளது. இந்தவகையில் நிலத்தடி நீரின் பாதுகாப்பும், முறையான மனிதக் கழிவகற்றல் பொறிமுறையும் அதீத கரிசனைக்குரிய […]

மேலும் பார்க்க

மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் – பகுதி 2

19 நிமிட வாசிப்பு

1.2 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்      வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியவை. இந்த மாகாணங்களின் மொத்தப் பரப்பளவு 18,881 சதுர கி.மீ ஆகும்.  ‘இலங்கை பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிவரங்கள் 2018’ அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இப்பகுதிகளின் மக்கள்தொகை 27.89 இலட்சமாக இருந்தது (அட்டவணை 1.5 இல் காணலாம்). கால்நடை […]

மேலும் பார்க்க

சென்ற காலத்தின் மீதான நாட்டமும் தேடலும்

21 நிமிட வாசிப்பு

ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர்கூட ஒரு விரலசைப்பில் உலக நாடுகளை வழிக்குக்கொண்டுவர இயலுமாக இருந்த ஐக்கிய அமெரிக்காவுக்கு என்ன நேர்ந்துவிட்டது? கறாரான வரிவிதிப்பின் ஊடாகப் பிறதேசங்களை அடங்கி ஒடுங்கிப்போக வைத்துவிடலாம் என்று நினைத்தால் சொந்த நாட்டு மக்களே கிளர்ந்தெழுந்து முட்டுக்கட்டை போட்டுவிடுகிறார்களே? புதிதாய்த் தலைமையேற்ற புதுத் தும்புத்தடியாக வேகம் காட்டுகிற ஜனாதிபதியிடம் வெளிப்படும் தடுமாற்றங்களா இவை? ஐக்கிய அமெரிக்க ஆளும் அதிகாரசக்தியின் நிலைதடுமாறுகிற தளம்பல் இன்றைய அரசியல் தலைமை வாயிலாக வெளிப்படுகிறதா? […]

மேலும் பார்க்க

1833 – 1921 வரையான காலகட்டம்: தமிழ்த் தலைவர்களும் இலங்கை தேசிய காங்கிரசும்

12 நிமிட வாசிப்பு

உதவி : ஜீவராசா டிலக்ஷனா இலங்கையில் ஒரு பொதுவான நிர்வாக முறையையும், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியையும், தாராண்மை ஜனநாயக அரசாங்க முறையையும் நிலைநிறுத்துவதற்காக கோல்புறூக்கமரன் குழுவினர் 1829 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி இலங்கை வந்தனர். இவர்களில் கோல்புறூக் குழுவினர் அரசியல் சீர்திருத்தத்தையும், கமரன் குழுவினர் நீதிச் சீர்திருத்தத்தையும் சிபாரிசு செய்தனர். 1831 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி கோல்புறூக் குழுவினர் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தனர். தமது […]

மேலும் பார்க்க

இந்தியா – இலங்கை ஒப்பந்தம்: தோல்வியடைந்த ஒப்பந்தமும் கற்றுக்கொள்ளாத பாடமும்

29 நிமிட வாசிப்பு

இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியலின் வெளிநாட்டு உறவில் இந்தியா தலையான இடத்தினை வகித்துள்ளது. இலங்கையில் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் குடியேறியிருந்த இந்தியரின் அந்தஸ்து மற்றும் உரிமைகள் தொடர்பான உரையாடல்கள் அதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தன. இலங்கையின் பெருந்தோட்டங்களிலும் அரச மற்றும் தனியார் துறைகளிலும் 19 ஆம் நூற்றாண்டு முதல் தொழில்புரிந்து வந்த இந்தியரின் சனத்தொகைப் பெருக்கமும் அரசியல் பங்குபற்றலும் சுதேசிய ஆட்சியாளர்களிடையே அதிருப்திகளைத் தோற்றுவித்தன. அதனால் அவ்வாறு குடியேறியவர்களை அந்நியராக அடையாளப்படுத்திய அவர்கள், […]

மேலும் பார்க்க

பிள்ளைப்பேறும் குழந்தைகள் சார்ந்த வழக்காறுகளும்

14 நிமிட வாசிப்பு

பிள்ளைப்பிறப்பு தொடர்பாக பல்வேறு சமூகங்களிடையே பலவிதமான வழக்காறுகள் காணப்படுகின்றன. புராதன எகிப்து தொடக்கம் இச்சம்பிரதாயங்கள் காணப்பட்டுள்ளன. பிள்ளை தரிப்பதும், பிள்ளை பெறுவதும் ஒரு பெண்ணிற்கான சமூக அத்தஸ்தை உயர்த்துவதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. தமது குலத்தையும் இனத்தையும் விருத்திசெய்யும் பெண்கள், அதிக பிள்ளைபெறும் பெண்கள் நன்கு மதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிள்ளைகளைச் செல்வங்களில் ஒன்றாகக் கருதி வந்துள்ளனர். பிள்ளைப்பேறு தொடர்பான தனித்துவமான வழக்காறுகள் கிழக்கிலங்கை முஸ்லிம்களிடமும் காணப்படுகின்றன: நேர்ச்சை யாத்திரைகள்: பிள்ளைப்பேறு இல்லாதவர்களும், […]

மேலும் பார்க்க

அரைகுறை மனித உரிமை நடவடிக்கைகள்: போருக்குப் பிந்தையகாலத்தில் பொறுப்புக்கூறலைத் தவிர்த்தல் – இலங்கை – பகுதி 1

17 நிமிட வாசிப்பு

ஆங்கிலமூலம்: கேட் குரோனின் – ஃபர்மான் சுருக்கம் அடக்குமுறை அரசுகள் எதற்காக மனித உரிமை நிறுவனங்களை உருவாக்குகின்றன? தங்களுடைய பணத்தையும் மூலதனத்தையும் செலவழித்து, சர்வதேச விமர்சனங்களை அமைதிப்படுத்தத் தவறுகின்ற அமைப்புகளை ஏன் உருவாக்குகின்றன? ஐயத்துக்குரியவகையில் மனித உரிமை நடத்தையில் ஈடுபடும் இப்படியான அரசுகள் தாராளவாத மேற்கத்திய அரசுகளையும் சர்வதேச ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்த அல்லது ஏமாற்றுவதற்காக இப்படிச் செய்கின்றன என ஆய்வுகள் கருதுகின்றன. மேற்கத்திய நாடுகளில் மனித உரிமைகளை முன்னெடுத்து ஆதரிப்பவர்களை […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்