Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

அக்கபோதியின் மனைவி : அக்கபோதி கவர்ந்து சென்ற அக்கபோதியின் மகள்  

15 நிமிட வாசிப்பு

அனுராதபுரத்தை ஆறாம் அக்கபோதி மன்னன் ஆண்டு வந்த காலத்தில் (722 – 734) சுவையான ஒரு சம்பவம் இடம்பெற்றது. அவன் தன் மகள் சங்காதேவி என்பவளை அக்கபோதி என்ற பெயர் கொண்ட இன்னொரு இளவரசனுக்கு மணமுடித்து வைத்திருந்தான். ஏனோ அவர்கள் இருவருக்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. கணவன் – மனைவிச் சண்டையில் ஒருநாள் அவன் அவளை கடுமையாக அடித்துவிட சங்காதேவி தன் தந்தையிடம் சென்று முறையிட்டிருக்கிறாள். தந்தை அக்கபோதி, அவளை கொஞ்சக் […]

மேலும் பார்க்க

பொற்கொல்லன் நாகன் பற்றிக் கூறும் அனுராதபுரம் – வெஸ்ஸகிரி கல்வெட்டுகள்

10 நிமிட வாசிப்பு

அனுராதபுரம் புனித நகரில் உள்ள இசுருமுனிய விகாரையின் தெற்குப் பக்கத்தில் சுமார் 600 மீற்றர் தூரத்தில் வெஸ்ஸகிரிய கற்குகைகள் மற்றும் கட்டிட இடிபாடுகளைக் கொண்ட வளாகம் அமைந்துள்ளது. சுமார் 500 மீற்றர் நீளம் கொண்ட இவ்வளாகத்தின் மத்தியில் உள்ள நீண்ட பாறைத் தொடரில் 10 இற்கும் மேற்பட்ட கற்குகைகளும், இங்கிருந்து சற்று தூரத்தில் இன்னும் சில கற்குகைகளும் உள்ளன.   இங்கு மொத்தமாக 24 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றைத் […]

மேலும் பார்க்க

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு – பகுதி 2

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா ஆய்வு வினாவும் ஆய்வுப் புதிரும் “கண்டியின் சிங்களச் சமூகத்தில் சாதிக்கும் ஜனநாயகப்படுத்தலுக்கும் (Caste and Democratisation) இடையிலான உறவை ஆராய்வதே இக்கட்டுரையில் நான் ஆராயவிருக்கும் பிரதான ஆய்வுப் பிரச்சினையாகும் (The Key Research Question – பக். 450)” மேற்கூறியவாறு தாம் ஆராயவிருக்கும் ஆய்வுப் பிரச்சினை யாது என்பதைப் பேராசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையின் முற்பகுதியில் தெரிவிக்கின்றார். இவ்வாறு தமது […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்: இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 08

11 நிமிட வாசிப்பு

தமிழரும் சோனகரும் : ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் தமிழர்களதும், சோனகரதும் குடியிருப்புப் பகுதிகள் பெரும்பாலும் ஒரே தன்மையானதாகவே இருக்கும். அவை மணல் பாதைகளில் ஒரு தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டுப் பகுதியும் சுற்றுச்சுவர்களால் அல்லது வலிமையான கம்பி வேலிகளால் பாதுகாக்கப்பட்டு, செம்பருத்திச் செடிகள், தென்னை, பாக்கு மற்றும் மா போன்ற மரங்கள் செழிப்பாக நடப்படுகிறது. சாதாரணத் தமிழ் வீடுகள், கிழக்கே கவனமாகப் பெருக்கப்பட்ட மணல் முற்றத்தை நோக்கிய பாரம்பரியத் தரைத் திட்டத்தைப் […]

மேலும் பார்க்க

பகிர்வுப் பொருளாதாரமும் அதன் நுணுக்கங்களும்

11 நிமிட வாசிப்பு

“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை”-திருக்குறள் (758)- மு. கருணாநிதி விளக்கம் : தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது. பகிர்வுப் பொருளாதாரம் என்பது பொருட்கள், வளங்கள் போன்றன தனிநபர்கள், குழுக்களால் ஒரு கூட்டு வழியில் பகிர்ந்து கொள்ளப்படுவது. எமது மூதாதையர் பல காரணங்களுக்காக, […]

மேலும் பார்க்க

ஐந்து இலட்சம் கால்நடைப் பண்ணையாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த ‘மந்தன்’ திரைப்படம் : கூட்டுறவின் முன்னுதாரணம்

16 நிமிட வாசிப்பு

1 1949 இல் குரியன், குஜராத்தில் உள்ள ஆனந் நகருக்கு வந்தபோது அவருக்கு வயது 28. அப்போது அவர் அங்குள்ள விவசாயிகளை நம்பவைத்தார்; அவர்கள் உற்பத்தி செய்யும் பால் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது, அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவர்களின் பாலில் உரிமை கோர அதிகாரம் இல்லை என கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வழிகாட்டினார். வியாபாரிகள் மற்றும் முகவர்களால் உள்ளூர்ப் பால் பண்ணையாளர்கள் சுரண்டப்படுவதற்கு பதிலாக, அமுல் டிசம்பர் 19, 1946 […]

மேலும் பார்க்க

வடக்கு மாகாணத்திற்கு மருத்துவப் பணிகளைக் கொண்டுவரும் யாழ்ப்பாணத்தின் மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையம்

14 நிமிட வாசிப்பு

2020 கோவிட் – 19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது தான் எங்கள் மருத்துவப் பணியாளர்களின் அருமை எங்களுக்குத் தெரிந்தது. கோவிட் – 19 எவரையும் விட்டுவைக்கவில்லை என்பதால் இவர்களை நாம் நேசிக்கத் தள்ளப்பட்டோம். அது நோய்த் தொற்றின் காரணமாக அல்ல; மாறாக ஊர் முடக்கங்கள், வியாபார நிலையங்கள் இழுத்து மூடப்படுதல், சமூகச் சந்திப்புகளுக்குத் தடை, வருமான இழப்பு, பொருளாதாரச் சீரழிவு மற்றும் வீடுகளுக்குள் உறவுகளுடன் வைத்துப் பூட்டப்படுவதால் ஏற்படும் மன […]

மேலும் பார்க்க

ஷியாம் செல்வதுரையின் ‘பசித்த பேய்கள்’ (The Hungry Ghosts)

12 நிமிட வாசிப்பு
June 19, 2024 | இளங்கோ

‍’பசித்த‌ பேய்கள்’ நாவல் 1983 இனக்கலவரத்தின் பின்னர் கனடாவிற்கு வந்து சேரும் சிவனின் கதையாகும். சிவன் தனது 19 ஆவது வயதில் இலங்கையில் உயர்தரப் பரீட்சை எடுத்த கையோடு கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். அது 1984 இல் நிகழ்கின்றது. சிங்களத் தாய்க்கும், தமிழ்த் தந்தைக்கும் பிறந்த சிவன், ‘83’ கலவரத்தால் அச்சுறுத்தப்பட்டாலும், அவர்களைச் சிங்களக் கலப்பின அடையாளம் காப்பாற்றுகின்றது. இக்கலவரம் நிகழ்வதற்கு முன், சிவன் அவரது தமிழ்த் தந்தையை இழந்துவிடுகின்றார். சிவனின் […]

மேலும் பார்க்க

ஆன்மிக நாத்திகம் 

16 நிமிட வாசிப்பு

இலங்கை அரசியல் அமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருப்பதன் அடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு அரசும் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளதென அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அப்படி என்ன ஆபத்து பௌத்தத்துக்கு நேர்ந்துவிடும் அறிகுறி தென்பட்டதில் இதனை அவர் பேசும் நிலை ஏற்பட்டது? ‘அரசியலில் இருந்து மதம் விலக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்ற குரல் வலுத்து வருகிறது என்ற வகையில் இதனைக் […]

மேலும் பார்க்க

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு – பகுதி 1

18 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா இலங்கையில் சாதிக்கும் ஜனநாயக அரசியலுக்கும் (Caste and Democratic Politics)  இடையிலான உறவைக் குறித்து ஆய்வு ஒன்றினைப் பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா அவர்கள் எழுதியுள்ளார். ‘CASTE DEMOCRACY AND POST INDEPENDENCE SOCIAL TRANSFORMATION IN A KANDYAN VILLAGE – 2023’ என்னும் தலைப்பில் அவரது ஆய்வுக்கட்டுரை அமைந்தது. அதனை மேற்குறித்தவாறு தமிழில் தந்துள்ளேன். இவ்வாய்வுக்காக ரியுடர் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்