Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கறவை மாடு வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

16 நிமிட வாசிப்பு

இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு நுழையாத இடமே இல்லை எனலாம். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் முன்னைய காலத்தில் மனிதனால் செய்யவே முடியாது எனக் கருதப்பட்ட பல காரியங்களைச் செய்ய முடிகிறது. அதீத உழைப்புடன் செய்யப்பட்ட பல காரியங்களையும் இலகுவாகச் செய்ய முடிகிறது. இந்தக் கட்டுரை  கறவை மாடு வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவின் (Artificial intelligence – AI) இன்றைய பயன்பாட்டையும், நாளைய எதிர்பார்ப்பையும் ஆராய்கிறது. அதிகரித்துவரும் மனிதச் சனத்தொகை […]

மேலும் பார்க்க

நூலக நிறுவனம் : எதிர்காலத்திற்கான டிஜிட்டல் ஆவணகம்

17 நிமிட வாசிப்பு

தமிழில்: த. சிவதாசன் புதுமையின் பிரகாசத்தால் குருடாக்கப்பட்டு சில வேளைகளில் நாம் பழைமையின் செங்கதிர்களைப் பார்க்கத்தவறிவிடுவதுண்டு. பிரகாசமான எதிர்காலம் கொண்டுவந்து குவிக்கப்போகிறது எனக் கருதி புதையல்களையும் செல்வத்தையும் நம்பி காலக்குழிகளில் மங்கிக்கிடக்கும் எமது ஆபரணங்களை மறந்துவிடுகிறோம். எல்லோரும் இத்தவறுகளை இழைக்கிறார்கள் என நான் கூறவரவில்லை. 1990 களில் பல அமெரிக்க நிறுவனங்கள் நமது வேம்பினதும் மஞ்சளினதும் மகிமைகளை அறிந்து அவற்றினால் கொள்ளை இலாபமீட்டுவதற்காக அவற்றின் மீது காப்புரிமைகளைப் (Patent Rights) […]

மேலும் பார்க்க

காவல் தெய்வம் சேவகர்

16 நிமிட வாசிப்பு

மனிதர் ஆதிகாலத்தில் நாகரிகமுற்று நிலையான குடியிருப்புகளை அமைத்து வாழத்தலைப்பட்ட காலத்தில் அவர்களது வாழ்வு இரு அடிப்படைகளைக் கொண்டமைந்தது. ஒன்று காதல்; காமம் உள்ளிட்ட உணர்வுகளைச் சார்ந்த அகவியல் அம்சங்கள். மற்றையது வீரம்; கொடை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட புறவியல் அம்சங்கள். வீரம் என்பது பகை வெல்லல், தலைமை தாங்குதல், வேட்டையாடுதல், உடலுள வலிமை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது. இனக் குழுத்தலைவன் அல்லது வீரன் தன் இனத்திற்காக உயிர் துறக்கும் […]

மேலும் பார்க்க

பௌத்தமும் அடையாள முரண்பாடுகளும் – பகுதி 1

18 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம் (ICES) கொழும்பு, 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இனத்துவக் கற்கைகள் (Ethnic Studies) என்ற ஆய்வுத்துறை உலக அளவில் பிரபலம் பெற்று வந்த காலத்தில் இலங்கையில் நிறுவப்பட்ட இந்த ஆய்வு நிறுவனம், தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக 2002 ஆம் ஆண்டு இனத்துவமும், இனத்துவ அடையாளமும் முரண்பாடுகளும் (Ethnicity, Identity and Conflict) என்ற விடயப் […]

மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கான காரணிகள்

15 நிமிட வாசிப்பு

கடந்த தொடரிலே, வரலாற்றில் நீண்டகாலம் அபிவிருத்தியில் முன்னிலை வகித்த ஆசியாவையும்,  அதற்கடுத்த ஆபிரிக்காவையும் முந்திக்கொண்டு பிற்காலத்தில் ஐரோப்பா முன்னேறியதற்கு அங்கு ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியும் கைத்தொழில் புரட்சியும் காரணமானது என்பதைப் பார்த்தோம். இதற்கு ஆதாரமான விஞ்ஞான வளர்ச்சிக்கு, ஏனைய கண்டங்களை விட ஐரோப்பாவில் வளங்கள் குறைவாக இருந்ததும், அவற்றைத்   தேடிப் பிறகண்டங்களுக்குச் செல்லவேண்டிய தேவையின் நிர்ப்பந்தமும் ஒரு பிரதான காரணமானது என்பதனையும் பார்த்தோம். அதைவிட இன்னும் இரண்டு காரணங்கள் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – 2

14 நிமிட வாசிப்பு

சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் தொகுப்பிலுள்ள, வலிகாமத்தைத் தனியாகக் காட்டும் நிலப்படத்தில் முழு வலிகாமத்துக்கும் தொடர்பான விடயங்களைப் பற்றிப் பார்த்தோம். தொடர்ந்து இனி வரும் கட்டுரைகளில் வலிகாமப் பிரிவுக்குள் அடங்கிய யாழ்ப்பாண நகரத்தையும் ஏனைய கோவிற்பற்றுப் பிரிவுகளையும் பற்றி ஆராயலாம். இந்தக் கட்டுரை யாழ்ப்பாண நகரப் பகுதியை எடுத்துக்கொண்டு, அப்பகுதி தொடர்பாக நிலப்படம் காட்டும் விடயங்களைக் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சில வரலாற்றுத் தகவல்களைப் பற்றியும் விளக்குகிறது. யாழ்ப்பாண நகரப்பகுதி எல்லைகள் […]

மேலும் பார்க்க

வடக்கு மாகாணத்தின் எதிர்கால வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி மாற்றம்

18 நிமிட வாசிப்பு

அறிமுகம் ஒரு பிரதேசத்தின் எதிர்கால காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகள் இன்று உலகளாவிய ரீதியில் முதன்மை பெற்ற விடயங்களாக மாறி வருகின்றன. எதிர்கால காலநிலை மாற்றம் பற்றிய விடயங்களை அறிந்து கொள்வதன் ஊடாக காலநிலை மாற்றத்தை குறைப்பதற்கான அல்லது இயைபாக்குவதற்கான செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்க முடியும் என்ற அடிப்படையில், எதிர்காலக் காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகளை பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன (Hamadamin & Khwarahm, 2023). காலநிலை மாற்றத்திற்கு […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 14

21 நிமிட வாசிப்பு

ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம்  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பின்வீதியில், அமைதியான சூழலில் கம்பீரமாகக் காட்சிதந்த ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம், கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களால் 1964 இல் மறைந்துவிட்ட அவரது அன்பு மனைவி அமரர். ஈவ்லின் விஜயரட்ன இரத்தினம் அம்மையார் அவர்களின் ஞாபகார்த்தமாக 1981 இல் கட்டப்பட்டது.   கட்டடக் கலைஞர் வி.எஸ். துரைராஜா அவர்களின் ‘துரைராஜா அசோஷியேட்ஸ்’ நிறுவனத்தின் (கொழும்பு) வடிவமைப்பில் இரண்டு மாடிக் […]

மேலும் பார்க்க

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு – பாகம் 4

18 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வெலிவிற்ற கிராமத்தில் சமூக நிலைமாற்றம் (Social Transformation) நிகழ்ந்தது. அந்நிலை மாற்றம் கண்டிப் பிராந்தியம் முழுமைக்கும் பொதுவானதாக இருந்தது என ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிடுகிறார். இச்சமூக நிலைமாற்றம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, கருத்தியல் என அனைத்துக் கூறுகளையும் தழுவியதாக இருந்ததெனவும் அவர் கூறுகின்றார். வெலிவிற்றவின் பொருளாதார நிலைமாற்றத்தை எடுத்துக் கொண்டால் அது: அ) வெலிவிற்றவின் […]

மேலும் பார்க்க

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு – பாகம் 3

23 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா ஜோரஜ்.ஈ.டி. சில்வாவின் எழுச்சி கண்டிப் பிராந்தியத்தின் அரசியலில் ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவின் பிரவேசம் பற்றிக் குறிப்பிட்டோம். இப்பகுதியில் அவரின் எழுச்சியைப் பற்றி பேராசிரியர் ரியுடர் சில்வா அவர்கள் கூறியிருப்பனவற்றைத் தழுவி விளக்கிக் கூறுவோம். ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா (1879-1951) 1879 ஆம் ஆண்டு பிறந்தவர். 1951 ஆம் ஆண்டில் அவர் காலமானார். 1931-1947 காலத்தில் டொனமூர் அரசியல் யாப்பின் படி அமைக்கப்பட்ட சட்ட […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்