இனப் பிரச்சினையும் அதனோடு இணைந்த யுத்தமும் எமது தமிழர் தாயகப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியை பல தசாப்தங்களுக்கு பின்தள்ளி விட்டது. குறிப்பாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்றவற்றை சூனிய நிலைக்கு இறக்கியிருந்தது எனலாம். இந்தப் பின்னடைவு இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் (GDP) வடக்கு, கிழக்கின் பங்களிப்பை புறக்கணிக்கும் அளவுக்கு மாற்றி இருந்தது. கொடிய யுத்தம் மரணங்களை ஏற்படுத்தியதோடு ஏராளமான அங்கவீனர்களையும் உருவாக்கியுள்ளது. அத்துடன் பல ஆயிரம் பெண் […]
இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது இடைக்கற்காலக் காலந்தொடக்கம் இலங்கையில் வேடர் சமூகம் வாழ்ந்து வருகின்றது என்பதனை, இலங்கை மானிடவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் தமது வரையறைக்கு எட்டியவரை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இலங்கையில் கிழக்குப்பக்கமாக திருகோணமலை தொடங்கி மட்டக்களப்பு, அம்பாறை என மிக நீண்டதான கரையோரத்துடன் அண்டியதாகக் கடலோர வேடர் குடிப்பரம்பலை இன்றும் வாழும் சாட்சிகளாகக் காணமுடிகின்றது. கிழக்கிலங்கையின் இனக்கலப்பில் இன்றும் வேடப்பூர்வகுடிகளின் அடையாளங்கள் சடங்கார்ந்த நடவடிக்கைகள் ஊடாக வெளிக்கிளம்பியபடியே […]
“தொண்டு, வீட்டில் ஆரம்பிக்கிறது” என்பார்கள். வடமாகாணத்தைத் தளமாகக் கொண்ட சிவனருள் இல்லம் என்னும் தொண்டு நிறுவனம் ஒரு குழந்தைகள் அனாதை இல்லமாகத்தான் ஆரம்பமானது. 2004 ஆழிப்பேரலையால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை எடுத்து அது பராமரித்தது. தானமாகக் கிடைத்த பணத்தில் ஆரம்பித்த இவ்வில்லம் இப்போது வருமானமீட்டும் ஒரு பெரிய நிறுவனமாக வட மாகாணமெங்கும் பரந்து நிற்கிறது. அதன் குழந்தைகள் வளர்ந்து முதியவர்களாகும்போது அவர்களுக்கும், வடக்கு-கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட இதர மக்களுக்கும், நிலையான வருமானம் […]
அறிமுகம் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதன் தன் வாழ்வில் நடைபெற்ற விரும்பத்தக்க, விரும்பத்தகாத அல்லது நன்மை, தீமையின் பாற்பட்ட அனுபவத்தின் வழி தன்னால் கட்டியமைக்க முடியாத விடயங்களை இயல்பிறந்த ஆற்றல்களாகக் கருதத் தலைப்பட்டான். ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்கும் காரணமாக தெய்வங்கள் உருப்பெறத் தொடங்கின. நன்மை செய்யும் தெய்வங்கள், தீமை செய்யும் தெய்வங்கள் என அவை உரைக்கப்பட்டன. நிலத்தெய்வம், ஐம்பூதங்களின் தெய்வம், மரத்தெய்வம், உருவம் உள்ள தெய்வம், உருவம் அற்ற தெய்வம், […]
நீரை வளிமண்டல நீர், சமுத்திர நீர், தரை மேற்பரப்பு நீர் மற்றும் தரைக்கீழ் நீர் என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். நன்னீரில் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் என்று மேலும் சில வகைப்பாடுகள் உள்ளன (Praveen et al., 2020). மேற்பரப்பு நீரானது மேற்பரப்பில் உள்ள அனைத்து வகையான நீரையும் குறிக்கின்றது. பனி மற்றும் பனிப்பாறைகள் போன்ற திடமான நீராதாரங்கள், சதுப்பு நிலங்கள், நீர்த்தேக்கங்கள், ஆறுகள், நீரோடைகள், ஏரிகள், […]
அறிமுகம் தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. இதற்கு, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கைக்கு அறிமுகமாகிய போது அம்மதத்தையும் அம்மதம் சார்ந்த அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்பவற்றின் வரலாற்றையும் வாய்மொழிக் கதையாகப் பேணும் மரபும் தோற்றம் பெற்றதே காரணமாகும். அவ்வாறு பேணப்பட்ட வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே தீபவம்சம், மகாவம்சம, சூளவம்சம் முதலான பாளி வரலாற்று இலக்கியங்கள் […]
ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம அரச அதிகாரத்தை கைப்பற்றுதல் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுதல் (CAPTURE OF STATE POWER) பற்றிய மார்க்சியக் கோட்பாடுகள் சீன-சோவியத் வாதங்களின் போது மேற்கிளம்பின. சீனா, கியுபா, வியட்நாம் ஆகிய நாடுகளின் அனுபவங்கள் மரபுவழி மார்க்சிஸ்டுகள் முன்வைத்த மாதிரியில் இருந்து வேறுபட்டதாக இருந்தன. சீனாவின் ஷங்காய் நகரின் தொழிலாளர் வர்க்கத்தின் கிளர்ச்சி கொடூரமாக அடக்கப்பட்டது. அதன் பின்னர் ‘மா ஓ சேதுங்’ யெனான் […]
கோ. நடேசய்யர் தமிழ்நாடு விழுப்புரத்தைப் பிறப்பிடமாக கொண்டு (அப்போதைய தென்னாற்காடு மாவட்டம்), வளவனூர் கோதண்டராமர் ஐய்யருக்கும் பகீரதம்மாளுக்கும் மகனாக 1887.01.14 இல் பிறந்தார். அரசுப் பள்ளியில் ஆங்கில மொழி கல்வி பயின்றார். வங்கப் பிரிவினை காரணமாகவும், தேசிய சிந்தனைகள் மற்றும் சுதேசிய சிந்தனைகள் காரணமாகவும் ஆங்கிலக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சென்னை – அரசுப் பயிற்சி நிறுவனத்தில் கைத்தொழில் பயிற்சி பெற்றார். சில காலம் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு, பின் […]
இந்தத் தொடரின் சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணப் பட்டினத்தின் நான்கு பெரும்பிரிவுகளையும் தீவுகள் சிலவற்றையும் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். இனி யாழ்ப்பாணப் பட்டினத்தின் வலிகாமப் பிரிவைத் தனியாகக் காட்டும் நிலப்படம் (படம்-1) தரும் விவரங்களை ஆராயலாம். நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பின் ஒரு பகுதியான இந்த நிலப்படம் ‘4. VELH 328.14’ என்னும் இலக்கத்தைக் கொண்டது. “வலிகாமப் […]
ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் தாபகர் வரலாறு ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் (13.6.1905 – 04.11.1989), 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சியின்போது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் மானிப்பாயில் செல்வாக்குடன் இருந்த ஒரு கிறிஸ்தவ தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் பண்டத்தரிப்பையும், தாயார் மானிப்பாயையும் சேர்ந்தவர்கள். ருவைற் (Dwight), தப்பான் (Tappan), கார்டினர் (Gardiner) குடும்பத்தினர் இவரது உறவினர்களாவர். தனது ஒன்பதாவது வயதில் தாயை இழந்த ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள், […]