பல தசாப்தங்களைக் காவுகொண்டு 2009 இல் முடிவுக்கு வந்த இனப்போர் முடிந்து 7 வருடங்களாகியும் வடக்கின் பணியுருவாக்க முயற்சிகள் இன்னும் விவசாயம் மற்றும் பாரம்பரியத் தொழில்களோடு மட்டுமே நின்றுவிடுகின்றன. இது சிலருக்கு “ஏதோ எம் பங்கிற்கு செய்கிறோம்” என்ற எண்ணத்தையும்; இன்னும் சிலருக்கோ போருக்கு முன்னான இலட்சியக் கற்பனா பூமியைத் தாம் நிறுவிவிடப் போகிறோம் என்ற துடிப்பையும் கொடுக்கலாம். என்ன இருந்தாலும் விவசாயம், கைத்தொழில்கள் மட்டும் போதாது. இலட்சிய பூமி […]
பண்டைத் தமிழர் பல வகைப்பட்ட வழிபாட்டு மரபுகளை உடையவர்களாக விளங்கினர். இவ்வழிபாட்டு முறைகள் திணைசார்ந்த நிலையிலும் தொழில், சமூக வாழ்வியல் சார்ந்த நிலைகளிலும் அமைந்திருந்தன. அவ்வகையான வழிபாட்டு முறைமைகளிற் சில இன்று வழக்கருகிவிட்டன. சான்றுகளாக பல தேவன் வழிபாட்டினையும் வருணன் வழிபாட்டினையும் குறிப்பிடலாம். சங்க காலத்தில் பெருவழக்காக விளங்கிய இவ்வழிபாட்டு முறைகள் படிப்படியாகக் குறைந்து இன்று வழக்கற்றுப் போய்விட்டமை காணக்கூடியதாகின்றது. அவ்வாறில்லாமல் சங்ககாலம் தொட்டு இன்றளவும் தொடர்ந்து வரக்கூடிய வழிபாட்டு […]
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்” -திருக்குறள் (120)- விளக்கம் : பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும். உலகளவில் தொடக்க நிறுவனங்களை (Startup Companies) அதிகமாக உருவாக்கும் இடமான சிலிக்கன் வலியில் தொடங்கப்படும் நிறுவனங்களில் பத்தில் ஒன்பது தோல்வியடைவது உண்மையாகும். அதற்குப் பல காரணங்களை ஆராய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று; […]
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை எம் தேசத்திற்கே முன்னோடி. இதன் அனுபவங்கள், பல கூட்டுறவு வைத்தியசாலைகளை உருவாக்க உதவக்கூடியன. சமூக நலன் சார் அணுகுமுறை, சுகாதாரப் பாதுகாப்பின் தரத்தை மேம்படுத்தல், நோயாளிகளின் கவனிப்பு, மருத்துவத் தொழில்முறை மீதான அர்ப்பணிப்பு மற்றும் பரந்த சமூக அணுகுமுறை போன்றன தற்போதைய காலகட்டத்தில் அரிதாகவே காணப்படுகின்றன. தற்போதைய, மருத்துவச் சேவை பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. ஆனால் எமது முன்னோர்களின் மருத்துவச் சேவை, முழுச் சமூகத்திற்கும் பயன்படக்கூடிய […]
ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின ஒற்றையாட்சி அரசு (Unitary State), ‘நேஷன் ஸ்டேட்’ (Nation State) என்பன நவீன அரசியல் கோட்பாடுகள் சார்ந்த அரசறிவியல்துறை எண்ணக்கருக்கள் (Concepts) என்பதையும், நவீனத்துக்கு முந்தியகால அரசுகளை ஒற்றையாட்சி முறையில் அமைந்த நேஷன் ஸ்டேட்ஸ் (Nation State) என விளக்கம் கூறுவது வரலாற்றுத் திரிபு என்பதையும் பேராசிரியர் செனிவிரத்தின விளக்கிக் கூறியிருப்பதை இக்கட்டுரையின் முதலாம் பகுதியில் எடுத்துக் கூறினோம். 2500 ஆண்டுகளுக்கு மேலாக […]
‘வேட்கை கொள்வது அரசியல்’ (நோர்வேஜிய மொழியில் : Politikk er å ville) எனும் தலைப்பிலான நூல் எரிக் சூல்ஹைம் எழுதி 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது. அவர் தனது அரசியல் அனுபவங்களை முழுமையாக இந்நூலில் விபரிக்கின்றார். ஒரு வகையில் அவருடைய அரசியற் செயற்பாடுகள் குறித்த ஒரு சுயசரிதை நூல் இது. நோர்வே அரசியலில் ஈடுபட்ட நீண்ட கால அரசியற் செயற்பாட்டு அனுபவம் கொண்டவர் எரிக் சூல்ஹைம். 1970 களின் […]
200 வருடங்களுக்கு முன் தமிழகத்திலிருந்து மக்களைக் கூட்டம் கூட்டமாக அழைத்து வந்தபோது, அந்த மக்களை மனிதர்களாக நினைக்காமல் மிருகங்களை விட மோசமாக நடத்தியதன் காரணத்தினால், கடலிலும் காட்டிலும் மாண்டு போன சோகக் கதைகளில் ஆரம்பிக்கின்றது இந்த மக்கள் கூட்டத்தின் வரலாறு. ஆதிலட்சுமி என்ற கப்பலில் இங்கிருந்து தாயகம் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் கடலிலே மூழ்கி மரணித்தமை இதற்கான உதாரணமாகும். வெள்ளையர்களுக்கும் ஐரோப்பிய அரசாங்கத்திற்கும் ஏகாதிபத்திய கம்பெனிக்காரர்களுக்கும் இந்த மக்களின் உழைப்பு மாத்திரமே […]
தமிழ்ப் பண்பாட்டின் ஆரம்பம் தொட்டு மத்தியகால நிறைவு வரையான வளர்ச்சி நிலைகளைப் பார்த்து வந்துள்ளோம். நவீன யுகத் தொடக்கத்தில் ஆன்மிக நாத்திகம் என்ற புதிய கருத்தியல் நிலைப்பாடு பாரதியூடாக அறிமுகம் ஆகியிருந்தமையைச் சென்ற அமர்வில் பேசுபொருள் ஆக்கியிருந்தோம். அதன் அடுத்த பரிணமிப்பாக நாத்திகவாத அணியொன்று வெகுஜன இயக்கத்தை எழுச்சியுறச் செய்து தமிழக மண்ணில் பாரிய மாற்றத்துக்கு வித்திட்டிருந்தமையை இங்கு கவனம் கொள்ளவோம். வர்க்கப் பிளவாக்கம் நடந்தேறிய ஐரோப்பிய வாழ்நிலை சாத்தியப்படுத்தியிருந்த […]
தமிழர் – சோனகர் நேரடி சமூகத் தொடர்புக்கான மீதமுள்ள வாய்ப்புகள் பெரும்பாலும் தொழில் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களில் காணப்படுகின்றன. 1970 களில், ஈழப் போராட்டம் தீவிரமடைவதற்கு முன்பு, தமிழர்களும் சோனகர்களும் அண்டை நிலங்களில் நெல் பயிரிட்டனர். நீர்ப்பாசனக் குழுக்களிலும் ஒன்றாகப் பங்கேற்றனர். தமிழ் மற்றும் சோனக நில உரிமையாளர்கள் ஒருவர் அடுத்த சமூகத்தைச் சேர்ந்த குத்தகைதாரர்களையும், வயற் தொழிலாளர்களையும் தொழிலில் சேர்த்துக் கொள்கிறார்கள். 1980 களில் தொடங்கிய வன்முறையின் […]
கதிர்காமம் முருகன் கோயிலில் இருந்து கிரிவிகாரைக்குச் செல்லும் வீதியில் பாதையின் வலதுபக்கம் இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகிறன. இவற்றில் ஒரு கல்வெட்டு தமிழ் மன்னன் சிறிதரனின் (திரிதரன்) மகன் மகாநாகனால் பொறிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்த மித்தசேனனைக் கொன்று அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்த தமிழ் மன்னர்கள் ஆறு பேர்களில் ஒருவனே திரிதரன் என்பவனாவான். இவர்கள் பொ.ஆ. 429 – 455 வரையான 25 வருடங்கள் இலங்கையை […]